Monday, November 28, 2022

சாதுவான பார்ப்பனர்களை ஜாதி வெறியர்களாக தூற்றுவது சரியா

 ஜாதியை இன்று

தூக்கி பிடித்து காப்பாற்றும் இடைநிலை சாதி

வெறியர்களை விட்டு விட்டு எப்போது பார்த்தாலும் சாதுவான

பார்ப்பனர்களை 

ஜாதி வெறியர்களாக

தூற்றுவது சரியா


#நண்பரின் பதில்

 நான் நம்புவது அவர்களுக்காக அல்ல!அவர்கள் ஜாதியத்தை பெரிதாக வளர்ப்பதில்லை 

நம் திராவிட கட்சிகளே ஜாதியத்தை வளர்க்கிறது.

நான் வெகு அரிதாகத்தான் கோவிலுக்கு செல்வேன்.


அர்ச்சனைகள் தட்டில் காசு கூட வெகு சில சமயத்தில்தான் இடுவேன்.


ஐயர்கள் மேல் எனக்கு பெரிய கோபம் ஏதும் இல்லை.


எனக்கும் கடவுளுக்கும் நடுவில் புரோக்கர்கள் யாரும் தேவையில்லை ஏன கருதுகிறேன்.


உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.


நான் பார்த்தவரையில் பிராமணர்கள் மூலம் ஏற்படும் ஜாதிய வேறுபாடுகளை விட ஆதிக்கஜாதிகள் செய்யும் ஜாதிய வேறுபாடுகளே அதிகம்.


அதை எதிர்த்து குரல் கொடுக்க யாரும் வருவதில்லை.


திகவினர் கூட ஜாதியத்தை வளர்கின்றனர்.


#என்பதில்

Mano Haran 

எரிவதை பிடுங்கினால்

கொதிப்பது அடங்கும்


ஜாதிக்கு விறகும் வைத்து

நெய்யும் ஊற்றுவது

பிராமணர்கள்

அவர்களின் மனுநீதி தர்மங்கள்


மூலம் எது என்று

அறியாத மூடர்கள்தான்

இடைஜாதி வெறியர்களை

குறை கூறுவார்கள்


இடைசாதி வெறியர்கள்

கல்வி அறிவு இல்லாமல்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக 

அரசர்கள் மூலம்

பார்ப்பனியம் வழி நடத்தப்பட்டதால்தான்


அவன் ஜாதி வெறியானக

இருக்கிறான்


அவனுக்கு முதலில் கல்வி

கொடுக்கவேண்டும்

என்பதை பெரியார் புரிந்தே.... 

காமராஜர் மூலம் பல ஆயிரம்

கல்வி கூடங்களை திறந்தார்/

திறக்க வைக்க துணை நின்றார்


அண்ணா இது மட்டும் போதாது

நம் மக்கள் 

ஆட்சிக் கட்டிலில்

ஏறினால்தான்

பார்ப்பனீயம் அடங்கும்

என்று தேர்தல் அரசியலுக்குள்

வந்தார்... 


அண்ணா எதிர்பார்த்தது போலவே

 பார்ப்பனீயம்

காமராஜரை அரசியலில் இருந்து இந்திராவை பிடித்து

ஒதுக்கியது... 


அண்ணாவுக்கு

தன் திட்டத்தை நிறவேற்ற

ஆயுள் இல்லை... 


அடுத்து வந்த கலைஞர்

கட்சியை காப்பாற்ற

பல தில்லு முல்லுகளை

செய்யவேண்டியதாகிவிட்டது


இதை வைத்து திராவிடத்தை

உடைக்க இந்திரா திட்டத்தில்

உதித்தவர் எம்ஜிஆர்


ஆனால் அவர் நேராக பார்ப்பனீய இந்திரா காங்கிரசில் இணையாமல்


தனி தவில் வாசித்தார்


அவரிடம் அதிகம் இருந்தவர்கள் ஜாதி மத வெறியர்கள்தான்


போலி திராவிட கொள்கையை

வைத்து மக்களை முட்டாளாக்கி

ஜாதி சனாதனம் வளர உதவியது

அதிமுக 


நாம் என்ன ஆயுதம்

எடுக்க வேண்டும் என்பதை

எதிரி தீர்மானிக்கிறான்


என்ற தத்துவப்படி

கலைஞரும் ஜாதி சாக்கடையில் இறங்கினார்


சூழ்நிலைக்கு தக்க தன்னை

தகவமைத்த உயிரே

நிலைத்து வாழும்


அப்படித்தான் திமுக 

இன்று வரை

உயிர்ப்போடு இருக்கிறது

ஜாதி சனாதனத்தை

எதிர்த்து போராடுகிறது


காரணம் கலைஞர்

ஒரு MBC தழ்ந்த ஜாதி பிரிவில்

பிறந்தவர்

அந்த வலி அவருக்கு தெரிந்திருந்தது.

No comments: