Thursday, December 28, 2017

தமிழர்களை இழிவுபடுத்த, வடவர்களை உயர்த்த எழுதிய காப்பியமே ராமாயனம்

அந்த காலகட்டத்தில் இராவணன் என்பவன் பறந்து வந்திருக்கவும் முடியாது, அவன் பறவையும் அல்ல
மனித பிறவியில் மனிதனுக்கு பத்து தலைஎன்பதும் அறிவியலுக்கு பொருந்தாதது,
இராமயன காலம் 17லட்சம் ஆன்டுகள் என்று கூறப்படுகிறது ,
அந்த காலகட்டத்தில் மனித இனமே பரினாம் அடையவில்லை என்கிறது அறிவியல்,
இராமர் கட்டியதாக சொல்லப்படுகிற இடத்தில் 10000 ஆண்டுகளுக்கு முன்பே கடல் இல்லை அது இந்தியாவுடன் சேர்ந்து இருந்த குமரிக்கண்ட திட்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்,.
உண்மை இப்படி இருக்க,!
ராமன் சீதையை திருமனம் செய்ய வெற்றி பெற கலந்துக்கொன்ட போட்டியில் ராமன் பயன்படுத்திய 60000வீரர்கள் எடுத்துவந்து ராமனிடம் கொடுத்ததாகவும் ;
அந்த வில்லை வளைத்து படக்கொன உடைத்தாகவும் கதை இருக்கிறது,
அதிலும் திருமனத்தின் போது ராமனின் வயது12சீதையின் வயது7என்கிறது புராணம்.!
இதற்கு எல்லாம் யார் விடையளிப்பது?
ராமாயனம் உண்மை என்பவர்கள் தான் பதிலளிக்க வேன்டும் பதில் வருமா?
ஆக உண்மையில் வடவர்கள் தமிழர்களை வென்றதுமில்லை,
தமிழர்களை ஆட்சி செய்யவும் இல்லை ,
வரலாற்றில் ஆரிய படைகடந்த பான்டிய நெடுஞ்செழியன்,
இமயத்தில் கொடி நாட்டிய ராஜேந்திர சோழன் போன்ற தமிழ் மன்னர்கள் வேன்டுமானால் இருக்கிறார்களேயொழிய
தமிழ்நாட்டை ஆன்ட வட நாட்டு அரசன் இதுவரையில் இல்லை,
தமிழர்களை இழிவுபடுத்த,
வடவர்களை உயர்த்த எழுதிய காப்பியமே ராமாயனம் !
இதைதான் கம்பரும் கூட மனவருத்தத்துடன் வருங்காலதமிழர்களை என்னை இகழ்ந்தாலும்,
அதனால் மாசு வந்து சேர்ந்தாலும் வடமொழியில் இருக்கும் காவியத்தை தமிழில் தருகிறேன் என்று பின்வரும் பாடலில் எழுதுகிறார்,
பாடல்:
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது எனின்
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிவிக்கவே

No comments: