Wednesday, December 27, 2017

இந்துக்களிடமிருந்து இந்துக்களின் உரிமையை மீட்போம்

சில நண்பர்கள் என் மீது கோபப்படுகிறார்கள். இந்து மதத்தை போற்றி வளர்க்கும் பிராமனர்களை திட்டுகிறேன். பிற சமய நண்பர்களிடம் நட்பு பாராட்டுகிறேன் என்று. ஆம். ஏனென்றால் அதுவும் உங்களுக்காகத் தான் இந்து நண்பர்களே. சிலர் உங்களை அடியாட்களாக பயன்படுத்துகிறார்கள். நீங்கள் எந்த இந்து கோவிலைப் பெருமையாக என்னுகிறீர்களோ அனைத்து கோவில்களின் கருவறைக்குள் உங்களால் செல்ல முடியுமா?. இல்லை இறைவனுக்கு கற்பூர தீபம் தான் காட்ட முடியுமா? இல்லை சாமியை தான் சுமக்க முடியுமா? ஏன். நீங்கள் தூய்மை இல்லாதவரா?. ஆச்சாரம் அற்றவரா?. சைவமாக உள்ள மக்கள் எல்லா சாதியிலும் இருக்கிறார்கள். அவர்களை கூட இறைவன் ஏற்கமாட்டாரா. சரி உங்கள் வீட்டில் பார்பனை நீர் அறுந்த சொல்லுங்கள் பார்ப்போம். வேதம் எழுதியது பிரகஸ்பதி எனும் தச்சன் ஒரு பிராமணர் ஆவார் .. சரி மற்ற சாதியினர் கோவிலுக்குள் நுழைய கூடாது. சாமியை வணங்க கூடாது. கடவுளே இல்லை என்றும் சொல்லக் கூடாது. சரி ஏதாவது ஒரு கடவுளை வணங்குவோம் என்று பிற சமய கடவுளை வணங்க மதம் மாறுவதும் தவறு இதை தான் நண்பர்களே பார்பணன் உங்களை வைத்து செய்துக் கொண்டிருக்கிறான். இந்து கோவில்களை மீட்க போராடும் நாம். ஏன் கோவில் கருவரைக்குள் செல்ல இன்னும் போரடவில்லை. அதை தான் மற்ற மதத்தினர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு மதமாற்றம் செய்கின்றனர். நீங்கள் ஏன் மதம் மாறினீர்கள் என ஒருவரையாவது கேட்டிருப்பீர்களா?. கேட்டுப்பாருங்கள் உண்மை புரியும். முதலில் நாம் திருத்த வேண்டியது பார்பனனை தான். முதலில் இந்துக்களிடமிருந்து இந்துக்களின் உரிமையை மீட்போம். இந்தியாவில் உள்ள மற்ற சமூக மக்களின் முன்னோர்கள் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்தவர்கள் தான். நான் சொல்வது சரிதானே நண்பர்களே!

No comments: