Tuesday, February 20, 2018

அமெரிக்க இந்தியர்கள் corruption

அமெரிக்க இந்தியர்கள் தாங்கள் புழங்கும் அனைத்து இடங்களையும் தங்களால் முடிந்ததைவிடச் சற்று கூடுதலாகவே corrupt செய்து வைத்துள்ளனர்...
இங்குக் கடைகளில் வாங்கும் பொருட்கள் பிடிக்கவில்லையென்றால் குறிப்பிட்ட நாட்களுக்குள் திரும்ப கொடுத்து முழு பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இது வாடிக்கையாளர்களுக்கு நிறுவனங்கள் அளிக்கின்ற வசதி. இதைப் பயன்படுத்தி எவ்வளவு தவறுகள் செய்யமுடியுமோ அவ்வளவு தவறுகளை செய்துவருகின்றனர். விடுமுறை பயணங்களுக்கு தேவையான காமிரா , டென்ட் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்திவிட்டு விடுமுறை முடிந்ததும் திரும்ப தந்துவிடுவது. கலை நிகழ்ச்சிகளுக்குத் தேவையான விலையுயர்ந்த ஆடைகளை வாங்கி நிகழ்ச்சி முடிந்தவுடன் திரும்ப தருவது போன்ற பல தவறுகளை செய்துவிட்டு அதை மிகப்பெரிய சாதனையாகவும், அறிவார்ந்த செயல்போல பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.
இந்தியர்கள் அதிகம் புழங்கும் IT துறையைப் பற்றி கேட்கவேண்டாம். fake resume , fake experience , fake company , fake interview என்று ஊழலின் உச்சத்தைத் தொட்டுள்ளனர்.
கடந்த வாரம் என் மனைவியின் ITIN (Individual Taxpayer Identification Number ) விண்ணப்பிக்க IRS (Internal Revenue Service ) சென்றிருந்தோம். இணையம் வழியாகவே விண்ணப்பித்திருக்கலாமே எதற்காக நேரில் வர வேண்டும் என்று கேட்டதற்கு , விண்ணப்பித்திருக்கலாம் ஆனால் நிறையப் பேர் இணையர் இங்கில்லாமலே இங்கிருப்பதாக விண்ணப்பித்து வரி ஏய்ப்பு செய்தனர். அதைத் தடுக்கவே நேரில் வரச் சொல்கிறோம் என்றனர். இதிலும் இந்தியர்களின் பங்கு கணிசமாக இருப்பதாகவே மூத்தவர்கள் சொல்கின்றனர்.
இப்படிப் பல இடங்களில் நம் இந்தியர்கள் அவர்களால் முடிந்தவரை ஊழல் செய்து வருகின்றனர் ஆனால் அரசியல் தலைவர்கள் மட்டும் கறைபடியாத கரத்துக்குச் சொந்தக்காரராக இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு.
காக்க பிரியாணி துன்னா காக்கா குரல் வராம உண்ணி கிருஷ்னண் குரலா வரும் !

No comments: