Wednesday, June 13, 2018

பெந்தேகோஸ்தே நாடார் சாதி பாஸ்டர் பால் தினகரன்கள் செய்வது கிறிஸ்தவ ஊழியமல்ல, கோடிகளை கொட்டிக் கொடுக்கும் மத வியாபாரம்



மோடிதான் மீண்டும் பிரதமராக வருவார் என இயேசு என்னிடம் கூறினார்
-பால் தினகரன்
இப்படியொரு செய்தி உலா வருகிறது உண்மையா பொய்யா தெரியாது. ஆனால் இவ்வாறு பால் தினகரன் பேசவில்லை என்றாலும் கூட மோடியை அவர் ஆதரிப்பார். , காரணம் சாதியும் சுயநலமும்.
கிறிஸ்தவத்தில் இரண்டே பிரிவுகள் தான். ஒன்று கத்தோலிக்க வழிபாடு. மற்றொன்று கத்தோலிக்க முறையை எதிர்த்து அதிலிருந்து வெளியே வந்து தனி வழிபாட்டு முறை கண்ட ப்ராடஸ்டண்ட்.
ப்ராடஸ்டண்டில் இந்தியாவில் முதலாவதாக உருவானது லுத்தரன் சபை (TELC). அதை தொடர்ந்து தென்னிந்திய திருச்சபை (CSI). பிற்காலத்தில் இவைகளிலிருந்தும் பெந்தேகோஸ்தே வழிபாட்டு முறைகள் தோன்றின.
இதில் கத்தோலிக்கம் (RC), லுத்தரன் (TELC) மற்றும் தென்னிந்திய திருச்சபை (CSI) ஆகியவை, நிறுவன அமைப்பாக செயல்படுபவை. இந்த சபைகளில் உள்ள போதகர்கள் ஊதியத்திற்கு வேலை செய்பவர்கள். ஆதலால் காணிக்கையை ஆட்டய போட முடியாது. பணம் கவுன்சில் போர்டால் நிர்வகிக்கப்படும். பெரும்பகுதியான பணம் இந்த சபைகள் நடத்தும் ஆதரவற்றோர் காப்பகங்கள், மாணவர் விடுதிகள், முதியோர் இல்லங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், இலவச முகாம்கள், உதவித்தொகை, பயிற்சி பள்ளிகள் மற்றும் சம்பளம் ஆகியவற்றுக்காக செலவிடப்படுகின்து சமூக நல நோக்கத்தோடு.
ஆனால் பெந்தேகோஸ்தே சபைகள் தனி நபர்களால் நடத்தப்படுவதாகும்.
இதில் பால் தினகரன்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்வோம்.
டிஜிஎஸ்.தினகரன், பால் தினகரன், ஆல்வின் பால், ஏஜி மோகன், மோகன் சி லாசரஸ், விஜிபி குடும்பத்தினர், விஜய் நாடார், சாம் ஜெபராஜ், ஆல்வின் தாமஸ் என்று பெந்தேகோஸ்தே சபைகளை நடத்தும் இவர்கள் எல்லோருக்கும் ஒரு தொடர்பு உண்டு, சம்பந்தம் உண்டு, ஒற்றுமை உண்டு.
அது தான் சாதி.
ஆம் உண்மை தான். இவர்கள் எல்லோரும் நாடார் சாதியை சேர்ந்தவர்கள்.
தமிழகத்தில் பெந்தேகோஸ்தே சபைகளை நடத்தும் பெரும்பாலான பாஸ்டர்கள் நாடார் சாதியை சேர்ந்தவர்கள். நாடார் சாதி பாஸ்டர்களின் ஆதிக்கம் தான் பெந்தேகோஸ்தே சபைகளில் நிறைந்திருக்கிறது
பெந்தேகோஸ்தே சபைகள் பொது அறக்கட்டளையாக நடத்தப்பட வேண்டும் என்பது விதி. பொது அறக்கட்டளை என்றால் அறங்காவலர்கள் ரத்த உறவுகளாக இருக்க கூடாது. அந்த அறக்கட்டளையின் சொத்தும் பொதுவான சொத்தாக இருக்க வேண்டும். பாஸ்டர்கள் தனிப்பட்ட முறையில் சொத்துக்களின் சொந்தம் கொண்டாட கூடாது.
ஆனால் நடைமுறையில் இருப்பதோ வேறு. இந்த பெந்தேகோஸ்தே சபைகளை நடத்தும் நாடார் சாதியை சேர்ந்த பாஸ்டர்கள் தங்களுக்கு உடன்படும் தலையாட்டி பொம்மைகளையோ அல்லது தங்களது ரத்த உறவுகளையோ அறங்காவலர்களாக போட்டு சபை சொத்துக்களை தனிப்பட்ட லாபங்களுக்காக பயண்படுத்தி, சொத்தை சொந்தம் கொண்டாடிக் கொள்கின்றனர். இவர்கள் சமூக சேவை செய்வது போல பாவ்லா காட்டி அரசாங்கத்தை ஏமாற்றி வருகிறார்கள்.
டிஜிஎஸ் தினகரன், பால் தினகரன் தாங்கள் நடத்திய “இயேசு அழைக்கிறார்” பொது அறக்கட்டளை சார்பாக நடத்திய ஜெப நிகழ்ச்சிகள் மூலம் திரட்டிய பல கோடி ரூபாய்களை வைத்து தான் ஜெப கோபுரம், அதன் கிளைகள், வெளிநாட்டு சொத்துக்களையும், காட்டை அழித்து காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தையும் நிறுவினார்கள். இது தற்போது அவர்களது குடும்பத்தினுடைய தனிப்பட்ட சொத்தாக விளங்குகிறது. டிஜிஎஸ் தினகரன் பால் தினகரன் குடும்பத்தாரின் சொத்துக்கள் பல்லாயிரம் கோடிகள் என்பது ஊரறிந்த உண்மை.
இப்படித்தான் நாடார் சாதியை சேர்ந்த பாஸ்டர்கள் பொது அறக்கட்டளையின் மூலம் சபைகளை நடத்தி பண மோசடியில் ஈடுபட்டு ஏமாற்றி வருகிறார்கள். இதில் முன்னோடிகள் நாடார் சாதியை சேர்ந்த பாஸ்டர்கள் என்பதே என்னுடைய குற்றச்சாட்டு.
“கொடுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும்” என்ற பைபிள் வசனத்தை கூறி தசமபாகம், ஆராதனை காணிக்கை, சிறப்பு காணிக்கை, கட்டிட நிதி என்று சபை மக்களிடம் பிடுங்கிக் கொண்டே இருக்கிறார்கள் இந்த நாடார் சாதி பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள்.
மற்ற மத வழிபாட்டில் வழங்கப்படும் உணவை தவிர்க்கச் சொல்லி பிரிவினைவாதத்தை இவர்களது பெந்தேகோஸ்தே சபைகளில் போதிக்கிறார்கள்.
இசை ஆல்பங்கள் வெளியிட்டு நஷ்டம் அடைந்ததாகவும், ஜெப கூட்டம் நடத்தி செலவு செய்ததாகவும் நஷ்ட கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்து அரசாங்கத்தை ஏமாற்றி வரும் மலைமுழுங்கிகள் இந்த நாடார் சாதி பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள்
சரி, இந்த மோசடிக்காரர்களை மலைமுழுங்கிகளை மதவாதம் பேசும் பாஜக எப்படி விட்டுவைத்துள்ளது என்று சந்தேகம் எழும் தானே.
2013ல் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது, மோடியின் ஆட்சியில் குஜராத் அடைந்த பயணங்கள் இந்தியா முழுமைக்கும் நீட்டிக்கப்பட வேண்டும், மோடி பிரதமராக வேண்டும் என்று மோடிக்கே வக்காலத்து வாங்கிய பரம யோக்கியன் தான் இந்த பால் தினகரன்.
தற்போது காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பாஜக ஆட்சியில் நீட்டிப்பு ஒப்புதல் பெற்றிருப்பதாக தகவல்
இந்த நாடார் பாஸ்டர்களுக்கு எந்த பாதிப்பும் வராதபடி பாஜக நாடார் லாபி பார்த்துக் கொள்கிறது. சாதிப் பாசம் வேடிக்கை பார்க்குமா என்ன.!?
மேலும் கத்தோலிக்க லுத்தரன் சிஎஸ்ஐ போதகர்கள் இந்தியாவிலுள்ள இறையியல் கல்லூரியில் தான் படிப்பார்கள். ஆனால் நாடார் சாதி பெந்தேகோஸ்தே பாஸ்டர்களோ பல லட்சங்கள் செலவு செய்து இங்கிலாந்து லிவர்பூலிலுள்ள இறையியல் கல்லூரியில் தான் படிப்பார்கள் காரணம் வெளிநாட்டு இறையியல் பட்டம் பெற்ற ரெவரெண்ட் என்றால் எளிதாக விசா கிடைக்கும், வெளிநாடுகளுக்கு சென்று ஜெப கூட்டம் நடத்தி வசூல் வேட்டை நடத்த வசதியாக இருக்கும்.
இன்னோர் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் லுத்தரன் மற்றும் சிஎஸ்ஐ போதகர்கள் குறைந்த வருமானத்திற்கு வேலை செய்வதால், அவர்களுடைய குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஆனால் நாடார் சாதி பெந்தேகோஸ்தே பாஸ்டர்களோ தின்று கொழுத்து திரிகிறார்கள்.
நாடார் சாதி பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் விமான பயணத்தை தான் பிரதானமாக பயண்படுத்துகிறார்கள் சபை மக்களின் காசில்
மேலும் இதை தட்டிக் கேட்கும் அரசாங்கத்திற்கு எதிராக சபை மக்களிடம் தவறான பிரச்சாரம் செய்து ஓட்டு போட கூடாது என்று அறிவுறுத்தி சபை மக்களை தவறான ஓட்டு வங்கியாக பயண்படுத்துகிறார்கள் இந்த நாடார் சாதி பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள்.
கூடங்குளம் அணுவுலை, ஒக்கி புயல் பாதிப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட், குளச்சல் துறைமுக எதிர்ப்பு, காவிரி நதிநீர் உரிமை போராட்டங்களில் வெள்ளை அங்கி அனிந்து கொண்டு மக்களுக்காக போராடிய போதகர்கள் கத்தோலிக்க, லுத்தரன், சிஎஸ்ஐ சபைகளை சேர்ந்தவர்கள் தான். பெந்தேகோஸ்தே நாடார் பாஸ்டர்கள் அல்ல
மக்களே, இதை வாசிக்கும் நீங்கள் உண்மையில் திட்ட வேண்டுமானால் கிறிஸ்தவத்தில் ஊழல் பெருச்சாளிகளாக விளங்கும் இந்த நாடார் சாதி பெந்தேகோஸ்தே பாஸ்டர்களை தான் திட்ட வேண்டும். புறக்கணிக்க வேண்டுமானால் இவர்களைத் தான் புறக்கணிக்க வேண்டும்.
நீங்கள் உண்மையில் நன்கொடையோ காணிக்கையோ செலுத்த வேண்டுமென்றால் அதை கத்தோலிக்கம் அல்லது லுத்தரன் அல்லது சிஎஸ்ஐ திருச்சபைக்கு கொடுங்கள். அது திரும்ப மக்களுக்கே போய் சேரும். இவர்கள் தான் மக்களுக்கு சேவை செய்கிறார்கள்
பெந்தேகோஸ்தே நாடார் சாதி பாஸ்டர் பால் தினகரன்கள் செய்வது கிறிஸ்தவ ஊழியமல்ல, கோடிகளை கொட்டிக் கொடுக்கும் மத வியாபாரம். இவர்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் போதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

No comments: