Wednesday, June 13, 2018

யாழ் வரணியில் சாதி வெறி முற்றி

யாழ் வரணியில் சாதி வெறி முற்றியதால் சிட்டிபுரம் கண்ணகி அம்மன் கோயில் தேர் இழுத்த கனரகவாகனம்( JCB digger).
👉சில ஆண்டுகளிற்கு முன் யாழில் தாழ்ந்த சாதியினர் தேரிழுக்கக்கூடாது என இராணுவத்தினரை வைத்து தேரிழுத்தகதை தெரிந்ததே (ஏற்கனவே முகநூலிலும் பதிவிடப்பட்டது). அப்போது தேரிழுத்த இராணுவத்தினரில் ஒருவர் பின்பு தம்மில் பலர் கூட தாழ்த்தப்பட்டவர்கள்தான் எனக்கூறியிருந்ததும் தெரிந்ததே. அதனால்தானோ என்னவோ இன்று வரணி அம்மன் கோயிலில் கனரகப்பொறியினைப் (JCB digger) பயன்படுத்தித் தேரிழுத்துள்ளனர் (படம்1 காண்க). 



👉இப்போது இந்துக்களின் உரிமைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் சிவசேனா, இலங்கை இந்துமகா சபை என்பன இந்துக்களில் ஒரு பகுதியினரிற்கு இழைக்கப்பட்ட இவ் வழிபாட்டுரிமை மறுப்பிற்காக குரல் எழுப்புவார்களா? உறுதியாக மாட்டார்கள், ஏனெனில் இந்துமதத்தில் சாமியினை விடச் சாதியே பெரிது. இந்த வழிபாட்டுரிமை மறுப்பினை இசுலாமியர்கள் செய்திருந்தால் இன்று நிலமை?
👉👆இறுதியாக இங்கு சண்டையிட்டுக்கொள்ளும் இரு பகுதியினரையுமே இந்துமதம் சூத்திரர் எனவே கூறுகிறது(ரிக்வேதம் புருச சூத்திரம் 10, பகவத்கீதை 18 இயலின்44-47 வது பாடல்கள்) . சூத்திரர் என்றால் என்னபொருள் என்பதனை மறைமலை அடிகளார் தமிழரின் மதம் எனும் நூலின் 52வது பக்கத்தில் கூறுகிறார் (படம்2). “பார்ப்பனர்கள் ஏனைய அனைத்து வகுப்பினரையும் அடிமைகள், வைப்பாட்டி மக்கள் எனப்பொருள்படும் சூத்திரர் எனும் இழிசொல்லால்.....” என்கின்றார் மறைமலை அடிகள்.
👆இத்தகைய பெருமைமிகு சூத்திரர்கள் பின்பு தமக்குள் சாதிப்பெருமை பேசிச் சண்டையிட்டு, இராணுவம், கனரகப் பொறிகள் மூலம் தேரிழுக்கும் கேட்டினை என்னவென்பது!


No comments: