Saturday, March 23, 2019

புலிகள் செய்த எல்லா தவறுகளையும் குற்றங்களையும் மறைக்க ஒருவர் தேவைப்பட்டார். அவர் தான் கலைஞர்.

புலிகள் செய்த எல்லா தவறுகளையும் குற்றங்களையும்
மறைக்க ஒருவர் தேவைப்பட்டார். அவர் தான் கலைஞர்.

ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இறுதிப்போரில் (2006-2009) நடந்த உண்மைகள்
வெளிவந்துக் கொண்டுள்ளது.

உலக நாடுகள் முழுமையாக ஒன்றிணைந்து புலிகளை ஒழிக்க நடத்திய போரை தடுத்து நிறுத்த ஒரு மாநில முதல்வரால் முடியுமா?

எந்த ஒரு சூழலிலும் பிரபாகரனோ புலிகள் அமைப்போ கலைஞரால் போரை நிறுத்தமுடியும் என்று எண்ணவில்லை.

கலைஞரால் என்ன முடியும் என்பது புலிகளுக்கு தெரியும். புலிகளை தன்னால் காப்பாற்ற முடியாது என்பதும் கலைஞருக்கும் தெரியும்.

அதே சமயம் ராஜீவ் கொலைப்பழி சுமந்த கலைஞரால் புலிகளை நேரடியாக ஆதரிக்க முடியாது என்பதும் புலிகளுக்கு தெரியும்.

அவருடைய உண்ணாவிரதம் கூட அப்பாவி மக்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்பதாகவே இருந்தது.

இலங்கை அரசின் கனரக ஆயுதத்தை பிரயோகிக்கமாட்டோம் என்ற உத்திரவாதத்தை பிரணாப் முகர்ஜி கலைஞருக்கு காண்பித்த பின்னரே கலைஞர் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது. மேலும் ஈழத்தந்தை செல்வாவின் மகனிடம் உரிய விவரம் கேட்டறிந்த பின்னரே கலைஞரின் 6AM to 1PM
உண்ணாவிரதம் வாபஸ் ஆனது.

கலைஞர் அனுமதியுடன் திமுக சார்பில் புலிகளை காப்பாற்ற  எடுக்கப்பட்ட  முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதும் யாருக்கும் தெரியாது . அதற்கு புலிகள் உரிய ஒத்துழைப்பையும் அப்போது வழங்கவில்லை.

ஈழத்தமிழருக்கு கலைஞர் துரோகம் செய்து விட்டதாக பார்ப்பணர்களும் , பார்ப்பன அடிமைகளும் செய்து வருவது விஷமத்தனமான பொய்ப் பிரச்சாரம்

கலைஞர் இறந்த பின்னும் வன்மம் கொண்டு போலி தமிழ்தேசியவாதிகள் ஈழத்தமிழர் முகமூடியுடன் தூற்றிவருவதை
விபரம் தெரிந்த ஈழத்தமிழர்களே ஏற்கவில்லை.

கலைஞரின் எழுத்தும் பேச்சும்
ஈழத்தமிழர்களின் போராட்ட உணர்வை தட்டி எழுப்பியது எனினும் கலைஞரே ஈழமும் வாங்கித் தருவார் என்று நம்பி, ஈழத் தமிழர்கள் போராட்டத்தை தொடங்கவில்லை.

அவரது அரசியல் செல்வாக்கு தமிழ்நாட்டு எல்லைகளுக்குட்பட்டது என்பது அவர்களுக்கு எப்போதும் தெரிந்திருந்தது.

புலிகளால் டெலோ அழிக்கப்பட்ட சகோதர யுத்தம் காரணமாக தான் ஆதரவை விலக்கிக் கொண்டதாக
நினைக்கமுடியாது. அதன் பின்னரும் கலைஞர் புலிகளை ஆதரித்தார்.

இந்திய அமைதிப்படையை  எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளை, ஒரு இந்திய மாநில முதல்வர் ஆதரிப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அந்த ஆண்மை கலைஞரிடம் இருந்தது.

இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்து தேசத்துரோகி பட்டமும் சுமந்த கலைஞர் புலி ஆதரவு நிலைப்பாட்டால் ஆட்சியை இழந்தார். அதன் பின்னர் நடந்த ராஜீவ் படுகொலையால் 1991 தேர்தலில் மீண்டும் ஆட்சியை இழந்தது திமுக.

1991 ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தான், கலைஞர் தனது புலி ஆதரவு நிலைப்பாட்டை கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.

அன்று கொண்டு வரப்பட்ட தடா சட்டத்தால் பெருமளவில் பாதிக்கப் பட்டவர்கள் திமுக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தான்.

எந்த ஒரு காலத்திலும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட தயாராக இல்லாத ஒரு மிதவாதக் கட்சியான திமுக இடமிருந்து அதிகமாக எதிர்பார்க்க முடியாது.

அன்று நடந்த இறுதிப்போரை நிறுத்தும் வல்லமையும் கலைஞரிடம் இருக்கவில்லை என்பதே உண்மை

அன்று பதவியிலிருந்த கலைஞரும், திமுக உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்து சட்டசபையை கலைத்திருக்கலாம் .
ஆனால் எதுவும் நடந்திருக்காது.
அப்போதே ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார்.

இறுதி போரின்போது  சர்வதேச நாடுகளின் பின்புலத்தில் நடந்து கொண்டிருந்த அரசியல் மற்றும் இராணுவ திட்டங்கள் தமிழ்தேசியவாத மூடர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

ராஜபக்சே கேட்டும் சிங்கள படை தளபதி பொன்சேகா மறுத்து விட்டதை இங்கிருக்கும் மூடர்கள் அறியமாட்டார்கள்.

கடைசி சில நாட்கள்  நடந்த இறுதிப் போர் முழுமையாக இராணுவ தளபதியின் கட்டுப்பாட்டில்தான் நடந்தது.ராஜபக்சே நினைத்து இருந்தாலும் அதை தடுத்திருக்க முடியாது.

ஏனென்றால் சிங்களத் தரப்பில் முப்படையினர் தரப்பிலுமாக, நான்கு கட்ட ஈழப்போர்களிலும், 24,693 படையினர் கொல்லப்பட்டிருந்தனர் அல்லது காணாமற்போயினர்.

மேலும் ஒட்டுமொத்தப் போரிலும், 82,104 சிங்கள படையினர் காயமுற்று உடல் ஊனமுற்றதாக கூறப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது

இந்திய மத்திய அரசுக்கு கலைஞர் கொடுத்த அழுத்தத்தை விட, பல மடங்கு அதிக அழுத்தங்கள் மேற்கத்திய நாடுகளின் அரசுகள் மீது பிரயோகிக்கப் பட்டன.

கனடாவில், டொரோண்டோ நகரில் ஆயிரக்கணக்கில் கூடிய ஈழத்தமிழர்கள், நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்தை மறித்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இதை விட ஒவ்வொரு மேலைத்தேய தலைநகரத்திலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்களை, அந்நாட்டு காவல்துறையினர் தலையிட்டு அடக்குமளவிற்கு ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருந்தன.

இந்த அழுத்தங்கள் எல்லாம் இராஜதந்திர அரசியலில் தோல்வியுற்றதற்கு ஒரு பிரதானமான காரணம் இருந்தது.

இந்தியாவும், மேற்கத்திய நாடுகளும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டிருந்த பொது மக்களை விடுவித்தால் மட்டுமே மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அறிவித்திருந்தன. ஆனால், மக்களை செல்ல விடுவது தற்கொலைக்கு சமமானது என்று கருதிய புலிகள் அந்த நிபந்தனைகளுக்கு சம்மதிக்க மறுத்தனர்.

இதற்கிடையில் அப்போது நடக்கவிருந்த இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக வென்றால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று வைகோ புலிகளுக்கு தகவல் அனுப்பினார்.

அன்று புலிகள் தமக்கு நெருக்கமாக இருந்த வைகோ சொன்னதை நம்பி ஏமாந்தனர்.

புலிகளின் நம்பிக்கைக்குரிய முகவரான கேபி அனுப்பிக் கொண்டிருந்த ஆயுதக் கப்பல்கள் அனைத்தும் பிடிபட்டுக் கொண்டிருந்தது

மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலிகளின் சர்வதேச கிளைகளை சேர்ந்தவர்களும், “அமெரிக்க கப்பல் வந்து காப்பாற்றும்” என்று சொல்லி நம்ப வைத்து ஏமாற்றினார்கள்.

இதுபோன்ற துரோகங்களை மறைப்பதற்காகவே இன்று பலர் கலைஞரை வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகள் செய்த எல்லா தவறுகளையும் குற்றங்களையும்
மறைக்க ஒருவர் தேவைப்பட்டார். அவர் தான் கலைஞர்.

No comments: