Saturday, May 23, 2020

இதில் A போனா என்ன! B போனா என்ன! இழப்பு திமுகவிற்கு இல்லை.

கலைஞர்,

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றினார்,
விளைவு.....
பார்ப்பனர்கள் (திராவிடரல்லாதார்) திமுகவை எதிரியாக பார்த்தனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார்,
விளைவு.....
பார்ப்பனர்கள் (திராவிடரல்லாதார்), பிள்ளைகள், முதலியார்கள் திமுகவை எதிரியாக பார்த்தனர்,

BC Category 50% இடஒதுக்கீடு தொகுப்பிலிருந்து 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (வன்னியர், பரமலைக் கள்ளர்) வழங்கினார்,
விளைவு.....
வெள்ளாளர்கள், தேவர்கள், உடையார்கள், கோனார்கள் திமுகவை எதிரியாக பார்த்தனர்.

சமத்துவபுரம் அமைத்து அனைத்து சாதியினரும் ஒரே ஊரில் பிறந்து, ஒரே சுடுகாட்டில் எரிக்கப்பட வேண்டும் என்றார்.
விளைவு.....
முன்வரிசையில் முண்டியடித்துக் கொண்டு  நின்று வீட்டை வாங்கி கொண்ட முதலியார்கள், வெள்ளாளர்கள், தேவர்கள், உடையார்கள், கோனார்கள், பார்ப்பனர்கள் எல்லாம் இந்த கருணாநிதி பய, நம்மையெல்லாம்  .......  .......களோட வாழ சொல்றான் என்று திமுகவை, கலைஞரை எதிரியாக பார்த்தனர்.

அய்யோ,
கலைஞர் அவர்களே, எங்களுக்காக எல்லா சாதியினரும் உங்களை கை விட்டு விட்டனர். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்.
மற்ற கட்சிகளில் Reserve தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தகூட முடியாத அளவுக்கு 100% தாழ்த்தப்பட்ட மக்களும் உங்கள் பின்னாடி உள்ளோம் என்று எத்தனை தலைவர்கள் கலைஞரின் கரத்தை வலுப்படுத்தினீர்கள்!!!???

ராமச்சந்திரன் கட்சியை உடைத்துக் கொண்டு போனதிலிருந்து இன்று வரை 30% தாழ்த்தப்பட்ட மக்கள் தானே திமுகவிற்கு வாக்களிக்கின்றனர்.

இதில் A போனா என்ன! B போனா என்ன!

இழப்பு திமுகவிற்கு இல்லை.

No comments: