Wednesday, June 14, 2017

டுபாக்கூர் நம்மாழ்வார்

டுபாக்கூர் நம்மாழ்வாரின் மக்களை மூடர்களாக்கி அவர்களின் உடல்களை கெடுக்கும் முயற்சி !
இந்த காணொளியை பாருங்கள் ..
https://www.youtube.com/watch?v=oqjA4HUr_Uc&feature=youtu.be ...
இதில் நம்மாழ்வார் வழக்கம் போல் மக்களை மூடர்கள் ஆக்க உளறி கொட்டுகிறார் ..இதற்கு இவர் வழிகாட்டியாக எடுத்துகாட்டுவது பிராட் நம்பர் 1 ஹீலர் பாஸ்கர், இல்லுமினாட்டி பைத்தியத்தின் தந்தை.
அதாவது இந்த "சமூக விஞ்ஞானி" நம்மாழ்வார் (சிரிக்க வேண்டாம்) நாற்காலியில் கூட காலை மடித்துதான் உக்காருவாராம் ... ஏன் என்றால் காலை கீழ போட்டு உக்கார்ந்தால் சக்தி வீணாக கீழே செல்கிறது ...கால் மடித்து உக்கார்ந்து கொண்டால் அந்த சக்தியை U டர்ன் போட்டு மத்த உறுப்புகளுக்கு திருப்பி விடலாம் என்று உளறுகிறார் (அடடே என்ன ஒரு அறிவு !) அதையும் அப்பாவி மக்கள் உக்கார்ந்து கேட்டு கொண்டு இருக்கிறார்கள் ...இல்ல தெரியாம தான் கேக்கறேன் இடுப்பு கீழ கால் மட்டும்தான் தொங்குதா ?
இதுல தாகம் எடுத்தால் மட்டும் தண்ணி குடி என்று இன்னொரு உளறல், தாகம் எடுத்தாலும் எடுக்காட்டியும் உடம்பில் வாட்டர் லெவல் மைண்டைன்செய்வது மிக முக்கியம் , இல்லாட்டி பல பிரச்னைகள் வரும் ..
இதை கொஞ்சம் விரிவாக விளக்குகிறேன் ..
மனித உடம்பில் 60% நீர்தான் இருக்கிறது. இந்த நீர் யூரின்,வேர்வை, கழிவு,அழுகை மற்றும் மூச்சு விடும்போது நம் உடம்பில் இருந்து தினமும் இப்படி சென்று விடும். இதை உடனடியாக நாம் உடம்பிற்கு திரும்ப கொடுக்க வேண்டும். அதாவது நம் மனித மூளையானது நம் உடம்பை மின் உந்துவிசை (Electric Impulse) மூலியமாக மின்பகுளிகளை (electrolytes) வழியாக நம் செல்களில் இருக்கும் உப்பை பயன்படுத்தி கட்டுப்படுத்தும்.
இப்போது நம் உடம்பில் நீர் குறையும்போது மின்பகுளின்(electrolytes) சமன் நிலை தடுமாற்றம் அடையும். இதனால் நம்மால் சிந்திக்க,பார்க்க, நகர கடினம் ஏற்படும் . ஓர் கட்டத்தில் உயிரே போய்விடும்.
உடம்பில் நீர்நிலை சமன் இல்லாமல் செல்லும்போது நமது மூளை ரத்தத்தில் அதிக உப்பு தன்மையை உணரும், உடனடியாக நம் மூளை இருக்கும் நீயூரோன்கள் மிக மிக வேகமாக செயல் பட ஆரம்பிக்கும், அதுதான் திர்ஸ்ட ரெஸ்பாண்ஸ் என்று சொல்ல கூடிய தாகம். உடனடியாக நாம் தண்ணீர் அருந்தும்போது நம் உடலில் இருக்கும் ரத்த நிலை சமன் அடைய சிறிது நேரம் ஆகும். ஒரு வேலை அதிக தண்ணீர் குடித்து விடாமல் தடுக்க மனித மூளையில் subfornical organ என்று இடம் உண்டு. இது உடனடியாக நம் ஓரல் ஸ்டிமுலேஷன் என்று சொல்ல கூடிய வாயில் உள்ள உணர்வுக்கு பதிலளிக்கும். அதில் இருக்கும் நியூரான்கள் நம் உடம்பில் இருக்கும் (Fluid level) ரத்த சமன் நிலையையும், நம் வாயில் எவ்வளவு உணவு மற்றும் நீர் உள்ளது என்பதை வைத்து எதிர்கால நீர்நிலையை கணித்துவிடும். அது போதுமான அளவு என்று வந்தவுடன் நியூரோன்கள் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும், இப்படிதான் நம் தாகமும் தணிகிறது. இந்த நியூரான்கள் ஈரபதத்திற்கு மட்டும் செயல் படாமல் வெப்ப நிலைக்கும் செயல்படும். இதனால்தான் ஐஸ் வாட்டர் குடித்தால் தாகம் உடனடியாக தணிக்கிறது, மற்றும் தண்ணீரே இல்லை என்றால் கூட நீங்கள் குளிர்ந்த காற்றை உள்வாங்கினால் கூட அதற்கு நீயூரோன்கள் ரெஸ்பான்ஸ் செய்யும்.
இந்த நிலைகளுக்கு எல்லாம் எடுத்து செல்லாமல், தாகம் இல்லை என்றாலும் கொஞ்சம் நீரை நீங்கள் பருகி கொள்ள வேண்டும், அது உங்களின் உடலில் இருக்கும் நீர் சமன் நிலையை சரியாக வைத்து கொள்ளும். உங்கள் செயல்,பார்வை,வேகம் மற்றும் அனைத்தும் சரியாக சீராக இருக்கும்.
இதை விட்டுட்டு தாகம் வந்தால்தான் தண்ணீர் குடிப்பேன் என்று சொன்னால் சாவு மணி அடித்தால்தான் சுதாரிப்பேன் என்று சொல்வதற்கு சமம்.
நீங்கள் காலை எழுந்தவுடன் பல சமயங்களில் உங்களுக்கு தாகம் எல்லாம் இருக்காது ஆனால் கொஞ்சம் தூக்கமாக சோம்பலாக இருக்கும் ..ஆனால் தண்ணீர் குடித்தவுடன் எனர்ஜி வந்து விடும் ..இதுதான் காரணம்...
எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் இந்த டுபாக்கூர் நம்மாழ்வார் உளறல்களை நம்பி உடலை கெடுக்காமல், ஒழுங்கா தண்ணிய குடி போ !
பி.கு : இந்தமாறி பல உளறல்களை கொட்டி மக்களை மூடர்காளாக்கி அவர்களின் உடல் நலத்திற்கும் ஆபத்து வர முற்பட்டு இருக்கிறார் ...ஒவ்வொரு விடியோவாக பிரித்து மேய்யப்படும் ..மக்களின் நலனிற்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு புனித பிம்பமாக இருந்தாலும் அடித்து நொறுக்கபடும் !

No comments: