Wednesday, June 14, 2017

இயற்கை விவசாயத்தின் காதலர்கள்

இயற்கை விவசாயம் என்ற நம்மாழ்வாரின் பரீட்சார்த்த முறையில் எனக்கு மரியாதைகள் உண்டு. அவருடைய இதர மூடநம்பிக்கைகளின் விரோதி நான் என்பது தனிக்கதை.
அதை அப்புறம் பார்த்துக்கலாம்.
நான் இதுவரை பார்த்தவரையில் இந்த இயற்கை விவசாயத்தின் காதலர்கள் யாரென்று பார்த்தால் பெரும்பாலும் அவர்கள் Corporate company களில் உயர் தர அடிமைகளாக அதிக கூலிக்கு அடிமை வேலை பார்த்தவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
அடிமை வேலை ஒரு கட்டத்தில் அவர்களை கிறுக்கு பிடிக்க வைக்க இதற்கு மேலும் தாக்கு பிடிக்க முடியாது என்று வரும் பட்சத்தில் அதினின்று தங்களை விடுவித்துக் கொண்டு இதுவரை சம்பாதித்த பெரும் தொகையை பாதுகாப்பாக வங்கிகள் மற்றும் வருமானம் வரும் நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு அதில் ஒரு பகுதி பணத்தில் பல ஏக்கர் விவசாய நிலங்களை வாங்கிப் போட்டு வைக்கப்போரில் கிடக்குற நாயைப் போல் அந்த நிலங்களை இயற்கை விவசாயம் என்ற பெயரில் தங்களுடைய பொழுது போக்கு கேளிக்கைகளுக்காக பயன்படுத்துபவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
அவர்களுடைய பொழுதுபோக்கு கேளிக்கைகளிலும் ஒரு வியாபார நலன் இருக்கும். அவர்களுக்கு ஒரு ஏக்கரில் ஆயிரம் கோழிகளை வளர்ப்பதை விட இயற்கை விவசாயம் என்ற பெயரில் ஆயிரம் ஏக்கரில் ஒரு கோழியை வளர்க்கிற புத்திசாலித்தனம் தான் அது.
அவர்களுடைய குறி பசியில் வாடும் லட்சக்கணக்கானவர்களாக இருக்க மாட்டார்கள். கோடிகளில் புரளும் செல்வச் சீமான்களாகத் தான் இருப்பார்கள். ஒரு ஏக்கரில் ஆயிரம் கோழிகளை வளர்த்து அவற்றின் முட்டைகளை நான்கு ரூபாய் என்று விலை வைத்து விற்பதை விட. ஆயிரம் ஏக்கரில் வளர்க்கப்படும் ஒற்றைக் கோழியின் முட்டையை பல்லாயிரக் கோடிக ளை வைத்திருக்கும் சீமான்களிடம் லட்ச ரூபாய்க்கு விற்று நோகாமல் நோன்பு குடிக்கும் வித்தை தெரிந்தவர்கள்

No comments: