Wednesday, June 14, 2017

நம்மாழ்வார் பேத்தல்கள்

நம்மாழ்வார் பற்றி உங்களது நிலைப்பாடு என்ன என்று ஒருத்தர் கேட்கிறார். எனக்கு அவரது இயற்கை விவசாய முறைகளைப்பற்றி எந்த விமர்சனமும் கிடையாது. ஏனென்றால் அதுகுறித்து எந்த அறிவும் எனக்குக் கிடையாது.
விவசாயம் தவிர்த்து அவருடைய பேச்சுகள் பல சுத்த பேத்தல்களே. மாட்டு மூத்திரத்தை குடிச்சா கண்ணாடி போட வேண்டாம், கேன்சர் உள்ளிட்ட எல்லா நோயும் குணமாகிவிடும் என்கிறார். நான் மருத்துவ அறிவியல் மாணவன் . என்னால் இதுபோன்ற முட்டாள்தன கருத்துகளை எப்படி ஏற்றுக்கொள்ளவியலும்?
ஹீலர் பாஸ்ரகர் னு யாரோ ஒரு ஆளாம். அவர் சொல்றாராம் : நாற்காலியில கால நீட்டி உட்காருவதால் உடலின் சக்தி கால் வழியாக தரையில் வீணாக போய்விடுகிறதாம். அதனால் சப்பணமிட்டு உட்காரவேண்டுமாம். நான் அதனால் தான் அப்படி உட்காருகிறேன் என்று கூறுகிறார் நம்மாழ்வார். கொஞ்சமாவது பகுத்தறியும் திறனும் புத்தியும் உள்ள ஒருவன் இதைக்கண்டு நகைக்கமாட்டானா?
சில மாதங்கள் முன்பு வாட்சப் வதந்தி பற்றி ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். அதில் ஐஐடி பத்தமடையில் கண்டுபிடித்ததாக சொல்லி ஒரு பெண்மணி மாட்டு மூத்திரத்தின் பெருமைகளையும் அதன் சர்வரோக நிவாரணத்தன்மை பற்றியும் அளந்து விட்டார். அந்த லேடி பேசியதைக்கண்டு கோபிநாத் உள்பட அனைவரும் சிரித்தனர். நம்மாழ்வார் பேசாததை எதுவும் அந்த லேடி பேசிவிடவில்லை..!

No comments: