திருமாவும் தமிழ் தேசியமும்:
தேசப் பற்று, இந்திய உணர்வு என்கிற உணர்ச்சிப் பெருக்கான வாதங்களைப் புறந்தள்ளிவிட்டு வெறும் யதார்த்தமான வாதங்களை அதுவும் பொருளியல் நோக்கில் மட்டும் பார்த்தால் இந்தியா ஒன்றியமாக இருப்பதே தமிழக தலித்துகளுக்கு நல்லது.
தேசியம் என்பது பலி பீடமல்ல. உங்கள் உரிமைகளுக்குப் போராடவும் பேசவும் உங்களுக்கு இந்திய அரசியல் சாசனம் அநேக உரிமைகளைக் கொடுக்கிறது. ராமதாஸும் மற்ற சமூகத்தினரும் அம்பேத்கரின் அரசியல் சாசனம் கொடுக்காத எதையும் கொடுக்க மாட்டார்கள் என்பதோடு கொடுக்கப்பட்டதில் ஒரு சிறு விழுக்காடைத் தான் கொடுப்பார்கள் என்பதும் நிதர்சனம்.
நவோதயா பள்ளிகளை கோருங்கள். இந்தியையும் படியுங்கள். ஆங்கில வழிக் கல்வியை வற்புறுத்துங்கள். ஹைதராபாத்தும், பெங்களூருவும், தில்லியும், சென்னையும் உங்கள் நகரங்கள்.
மேடையேறி ‘Welcome to Republic of Tamil Nadu’ என்று ‘குடியரசு’ என்பது என்னமோ லாலாக்கடை மிட்டாய் என்கிற அளவில் பேசி கைத்தட்டல் வாங்குவது எளிது. பிரிவினைப் பேசுபவர்களில் இருக்கும் நேர்மையாளர்களை விட ஒற்றும்ப் பேசுபவர்களில் எதார்த்தவாதிகள் அதிகம்.
இன்னும் சொல்லப்போனால் பரந்த உலகில் உங்களுக்கான வாய்ப்புகளை அடையக் கூடிய எதார்த்தங்களைத் தேடுங்கள். திமுகவினரிடமும் பாஜகவினரிடமும் நீங்கள் கற்றுக் கொள்ள்லாம். ஒரு சாரார் தேசியம் பேசிவிட்டு அமெரிக்க தூதரகத்தின் முன் அணிவகுப்பவர்கள். இன்னொரு சாரார் தமிழ் என்றுப் பேசிவிட்டு தங்கள் பிள்ளைகளுக்கு நகரத்தில் இருக்கும் கான்வெண்டுகளுக்கு எம்.எல்.ஏ சிபாரிசோடு போய் நிற்பவர்கள்.
இதை இந்து ராஜ்ஜியமாக ஆக்குவோம் என்பதில் உள்ள அதே எரிச்சல் , தமிழ்நாட்டை தனிநாடாக்குவோம் என்பதிலும் வருகிறது.
நமது உரிமைகள் புறக்கணிக்கத்தான் படுகிறது. பறிக்கப் படவில்லை. சரியான புத்திசாலித்தனமாக , strategical லாக இயங்கும் தலைவர்களே இங்கு தேவை....
நமது உரிமைகள் புறக்கணிக்கத்தான் படுகிறது. பறிக்கப் படவில்லை. சரியான புத்திசாலித்தனமாக , strategical லாக இயங்கும் தலைவர்களே இங்கு தேவை....
No comments:
Post a Comment