முஹம்மது பல பெண்களை திருமணம் செய்தது ஏன்?
.
.
.
.
உலக மக்கள் அனைவருக்கும் உலகம் அழியும்வரை வழிகாட்துவதற்காக அனைத்தையும் அறிந்த, யாவற்றையும் படைத்த இறைவனான அல்லாஹ் அனுப்பிய இறுதித் தூதர் என்று சொல்லப்படும் முஹம்மது அவர்கள் தனது வாழ்க்கையில் பதினோரு பெண்களை திருமணம் செய்து அவர்களுடன் வாழ்ந்தார் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஆதாரபூர்வமான அறிவிப்புகள் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் ஆகும்.
.
.
.
முஹம்மது அவர்கள் ஒரே தடவையில் அதிகப் படியாக பத்து மனைவிகளுடன் வாழ்ந்து இருக்கின்றார், மரணிக்கும் வரை அவருடன் பத்து மனைவிகள் இருந்துள்ளார்கள். அவர் மணமுடித்த பதினொருவரில் பத்துப்பேரை பருவமடைந்தவர்களாகவும், ஒருவரை சிறுமியாகவும் திருமணம் செய்திருக்கின்றார். இந்த பதினோரு பேருக்கு மேலதிகமாக சரியாக கணக்கிட முடியாத எண்ணிக்கையில் ‘வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்’ என்ற பெயரில் பாலியல் அடிமைகளையும் வைத்து இருந்தார். (இவை அனைத்தும் இஸ்லாமிய மூலாதாரங்களில் உள்ள விடயங்களாக இருந்தாலும் பதிவின் நீளம் கருதி ஆதரங்கள் தவிர்க்கப் படுகின்றன.)
.
.
.
எல்லா விடயங்களிலும் அழகிய முன்மாதிரி (உஸ்வதுல் ஹசனா) உள்ளவர் என்று குரான் சான்றிதழ் வழங்கும் முஹம்மது அவர்கள் தன்னைப் பின்பற்றும் முஸ்லிமான ஆண்களுக்கு ஒரே தடவையில் அதிகபட்சமாக நான்கு மனைவிகளை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கிவிட்டு, அந்த அதிகபட்ச அனுமதிக்கு முரணாக தான் மாட்டும் 10 மனைவிகளை ஒரே தடவையில் வைத்துக்கொண்டாலும், தான் எதற்காக ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கின்றேன் என்பது குறித்து எங்கேயும் விளக்கம் வழங்கியதாக விபரங்கள் இல்லை..
.
.
.
முஹம்மதிற்கு மிகவும் பிற்பட்ட காலத்தில் யுத்தங்கள் குறைவடைந்து கருத்தியல் ரீதியாக இஸ்லாத்தை பிரச்சாரம் செய்து பரப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்ட பொழுது இஸ்லாத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் முக்கியமானவையாக முஹம்மது நபியின் பலதார திருமணங்களும், சிறுமியை திருமணம் செய்ததும் அமைந்திருந்தன. இந்நிலையில் திருமணங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து இஸ்லாத்தை காப்பாற்றுவதற்காக பிற்காலத்தவர்களால் பல நூல்கள் மற்றும் விளக்கங்கள் எழுதப்பட்டன. இராஜதந்திரம், கோத்திரங்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படுத்துதல், பெண்களுக்கு வாழ்வு கொடுத்தல் என்று முஹம்மது அவர்களின் திருமணங்களுக்கு புத்திசாலித்தனமாக விளக்கம் கொடுக்க முற்பட்ட பிற்கால இஸ்லாமிய அறிஞர்கள், முஹம்மது அவர்கள் இச்சைக்காகவோ, பெண்ணாசைக்காகவோ காமத்திற்காகவோ திருமணம் செய்யவில்லை என்று நிறுவுவதற்கு பகீரதப் பிராயத்தனங்களை மேற்கொண்டு இருப்பதை தாராளமாகக் காணலாம். எனினும் முஹம்மது அவர்களின் நெருங்கிய பணியாளராகிய அனஸ் இப்னு மாலிக் அவர்களோ “முஹம்மது அவர்களுக்கு முப்பது ஆண்களின் பாலியல் சக்தி வழங்கப்பட்டு இருந்தது” என்று அறிவிக்கும் ஹதீஸ் புஹாரி கிரந்தத்தின் பாகம் ஒன்று நூல் 05 இல் 268 ஆவது ஹதீஸாக இடம்பெற்றுள்ளது. இதே ஹதீஸ் மேலும் பல இடங்களிலும் பதிவாகி உள்ளமையானது பிற்கால அறிஞர்களின் சப்பைக்கட்டு விளக்கங்களை குப்பைத்தொட்டியின் வாசலுக்கே தள்ளிவிடுகின்றது.
.
.
.
இது மட்டுமின்றி இப்னு ஷாத் உடைய கிதாப் அல் தபகாத் அல் கபீர் பாகம் ஒன்றின் 438 ஆவது பக்கத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் “அல்லாஹ்வின் தூதர் கூறினார், ஜிப்ரீல் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்ததை நான் அருந்தியதிலிருந்து எனக்கு நாற்பது ஆண்களின் பாலியல் பலம் கிடைத்து விட்டது.” என்று அமைந்துள்ளது. இது மட்டுமின்றி மேற்குறிப்பிட்ட கிதாபின் 469 ஆவது பக்கத்தில் ஆயிஷா அறிவிக்கும் ஹதீஸ் “நபிக்கு உலகில் மிகவும் பிரியமான பொருட்கள் வாசனைத் திரவியங்கள், பெண்கள் மற்றும் உணவு ஆகியவையாம். அவர் உணவைத் தவிர மற்ற இரண்டையும் அடைந்துகொண்டார்” என்று அமைந்துள்ளது. மேலும் நஸயி 3939 இல் பதியப்பட்டுள்ள அனஸ் இப்னு மாலிக் அறிவிக்கும் இன்னொரு ஹதீஸ் “பெண்களும் வாசனைத் திரவியங்களும் எனக்கு உலகில் பிரியமானவையாக ஆக்கப்பட்டுள்ளன” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் என்று அமைந்துள்ளது.
.
.
.
உலகம் அழியும்வரையான உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டுவதற்காக இறைவனால் அருளப்பட்ட வழிகாட்டி என்று சொல்லப்படும் இஸ்லாமிய புனித நூலான குரானில் முஹம்மதிற்கும், அவரது மனைவிகளுக்கும் இடையில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளுக்கு பஞ்சாயத்து பண்ணுவதற்காக மட்டுமே பல வசனங்கள் இடம்பெற்று இருப்பதை காணலாம். முஹம்மதின் திருமணங்களின் நோக்கம் என்னவாக இருந்தது என்கின்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தை என்று முஸ்லிம்கள் நம்பும் குரான் முற்றுப்புள்ளி வைக்கும் வசனம் சூரத்துல் அஹ்ஸாப் இன் 53 ஆவது வசனமாக இடம்பெற்றுள்ளது. “(நபியே) வேறு பெண்களின் அழகு உம்மைக் கவர்ந்த பொழுதும் அவர்களை திருமணம் செய்வதற்கோ அல்லது உமது மனைவிகளை மாற்றிக்கொள்வதற்கோ உமக்கு அனுமதியில்லை, எனினும் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களின் விடயத்தில் உமக்கு விலக்களிக்கப் பட்டுள்ளது.” என்ற வகையில் குறித்த வசனத்தின் மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. இந்த வசனத்தின் வெவ்வேறு மொழிபெயர்ப்புக்களை https://goo.gl/dFYmzc என்ற இணைப்பில் காணலாம். இந்த வசனம் ஏற்கனவே குப்பைத் தொட்டியின் வாசலுக்கு தள்ளப்பட்டுவிட்ட அறிஞர்களின் சப்பைக்கட்டு விளக்கங்கள், சமாளிப்புகளை எட்டி உதைத்து குப்பைத் தொட்டிக்குள் தள்ளிவிடுவதாக அமைந்துவிட்டது. ஆக, பலபேர் பலவாறு விளக்கங்கள், சமாளிப்புகள் செய்தாலும், பெண்களை போகப் பொருளாகப் பார்த்த முஹம்மது அவர்கள் பல திருமணங்களை செய்ததன் காரணம் பெண்களின் அழகு மற்றும் காமம் போன்றவைதான் என்றுதான் குரானும், ஹதீஸ்களும் தெளிவான ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளன.

இப்பொழுது சொல்லுங்கள் : “முஹம்மது நபி பல பெண்களை திருமணம் செய்தது ஏன்?”.
No comments:
Post a Comment