Tuesday, November 22, 2022

போராட்டம் என்றால் கொள்கை உறுதி என்றால் என்ன தெரியுமா?!

 ஆதார் அட்டை கேட்டதற்கு பேரணியே வேண்டாமென்று ஓடிய கயவர்களைக் கண்டிருக்கிறோம் ..


போராட்டம் என்றால் கொள்கை உறுதி என்றால் என்ன தெரியுமா?! 




நவம்பர் 26 1957

சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரிக்க வேண்டும் என பெரியார் போராட்டத்திற்கு அழைக்கிறார்.


அழைத்தவர் பெரியார்...

திராவிடர் இயக்கத் தொண்டர்கள் 10000 பேர் அரசியல் சட்டத்தில் சாதியைப் பாதுகாக்கும் பக்கங்களைக் கொளுத்தினர்.



 தமிழக காவல்துறை 

பெண்கள் சிறுவர்கள் உட்பட போராட்டத்தில் கலந்து கொண்டாரில் 3000 பேரை கைது செய்தனர். 


சென்னையில் – 35 இடங்கள், வட ஆற்காடு மாவட்டம் – 30 இடங்கள், தென் ஆற்காடு மாவட்டம் – 26 இடங்கள், சேலம் மாவட்டம் – 41 இடங்கள், கோவை மாவட்டம் – 14 இடங்கள், இராமநாதபுரம் மாவட்டம் – 4 இடங்கள், மதுரை மாவட்டம் – 13 இடங்கள், நெல்லை மாவட்டம் – 8 இடங்கள், தர்மபுரி – 18 இடங்கள், செங்கல்பட்டு – 9 இடங்கள், கன்னியாகுமாரி – 5 இடங்கள், திருச்சிராப்பள்ளி – 107 இடங்கள், தஞ்சாவூர் – 161 இடங்கள், புதுச்சேரி – 6 இடங்கள், பெங்களூர் மற்றும் ஆந்திரா – 1 இடம்.


பெரியார் போராட்டத்தை அறிவித்த பின்னர்தான் அரசு சட்டத்தை எரிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை என்று எச்சரித்து புதிதாக ஒரு சட்டத்தையும் இயற்றியது . அதுவரை அரசியலமைப்புச் சட்டத்தை எரிப்பவர்களுக்கு என்ன தண்டனை என ஒரு சட்டமே இல்லை .


அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுடைய தியாகத்தைப் பற்றி சொல்வதானால் தனி புத்தகம் எழுத வேண்டும்.


அவர்களுடைய உறுதியை பற்றி சொல்வதானால் பேனாவில் மை நிரப்பக் கூடாது . எரிமலை குழம்பு தான் நிரப்ப வேண்டும்.


இன்றைக்கு சாதி ஒழிப்புக்கு திராவிடர் இயக்கம் என்ற செய்தது எனக் கேட்கத் துணிவோர் தம் காலாணிகளை எடுத்து தங்களையே அடித்துக்கொள்ள வேண்டும்.


திராவிடர் இயக்கத்தினரின் தியாகங்கள் அத்தனையும் சொல்ல என் எழுத்தால் சொல்ல முடியாதால் ஒன்றை மட்டும் சொல்கிறேன்.


வாளாடியைச் சார்ந்த 16 வயது சிறுவன் பெரியசாமி. கருஞ்சட்டை தொண்டர். இன்னும் இளமை முழுதும் தொடங்காத அந்த உள்ளம் பெரியாரின் உரைகள் கேட்டு இரும்பின் இன்னொரு பிம்பமாய் நின்றது.


போராட்டத்தில் கைதாகி சிறைத் தண்டனை பெற்றவர்களில் ஒருவர்.

 பெரியசாமி க்கு விதிக்கப்பட்டது தூத்துக்குடி தட்டப்பாறை சிறை இரண்டு ஆண்டுகள் .


சிறைச்சாலையில் பார்வையிட வந்திருந்த அன்றைய ஆளுநர் விஷ்ணுராம் மேதி,. இளம் வயதில் ஒரு சிறுவன் அடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து என்ன என்று விசாரிக்க ...

உடனிருந்தோர் பெரியாரின் போராட்டம் அதில் பெரியசாமியின் பங்களிப்பு அத்தனையும் கூற 

இந்தச் சிறு வயதில் இப்படி ஒரு போராட்டத்தில் எப்படி ஈடுபட்டார் என்று அதிர்ந்து போயிருந்தார். பெரியசாமியை அழைத்துக் கேட்கிறார்.. இந்தச் சிறுவயதில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாமா?! நான் உன்னை மன்னித்து விடுதலை செய்ய ஏற்பாடு செய்கிறேன். மீண்டும் சட்டத்தை எரிக்க மாட்டேன் என்று எழுதிக் கொடுப்பாயா என்று கேட்கிறார் அன்றைய ஆளுநர் விஷ்ணுராம் மேதி....



“என் தலைவர் பெரியார் இந்தப் போராட்டத்தை அறிவித்தபோது நான் மட்டும் தான் சட்டத்தை எரித்தேன், வெளியே அனுப்பினால் என் தோழர்களைக் கூட்டி மீண்டும் எரிப்பேன்.” என்கிறார் அந்தப் பெருந்தொண்டர் பெரியசாமி என்கிற சிறுவன்.


மலைத்துப் போய் வாய் பேச முடியாத விஷ்ணு ராம் மேதி..மெல்ல தன்னைத் தேற்றி . கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் என்று சொல்லிவிட்டு போகிறார்..


ஏற்கனவே சிறை... விடுதலை செய்கிறேன் என்ற உறுதி.. இன்னலில் இருந்து தப்பி விடலாம் என்று எவரேனும் நினைக்கக்கூடும்... திராவிட இயக்கத்தின் சீர்மிகு தொண்டன் பெரியசாமி மீண்டும் போராடத்தான் செய்வேன் சட்டத்தை எரிப்பேன் என்று காட்டிய உறுதி எங்கே....



ஆதார் அட்டை கேட்டவன் பேரணியே வேண்டாம் என்று கலைந்து போன ஆர்எஸ்எஸ் கயவர் கூட்டம் எங்கே ..?!..





சொல்லாமல் விடமுடியுமா ...


 கீழ்வாளாடி பெரியசாமி‌ என்கிற திராவிட இயக்கத்தின் சமராளி...

22.12.58ல் சிறையிலே நோயுற்று இறந்தே போனார். பெரியாரும் மணியம்மையாரும் அந்த கொள்கை மறவனுக்கு கண்ணில் நீரொழுக அஞ்சலி செலுத்திய படம்

No comments: