Saturday, November 26, 2022

EWSReservation Must Read

 Thread!
#EWSReservation
Must Read!

facebookல் ஒரு நண்பரின் பதிவு. கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று👇

நேத்து ஒரு அதிமுக நண்பன் கிட்ட பேசிட்டிருந்தேன். மிக நெருங்கிய நண்பன் அவன். #EWS ஆதரிச்சு ரொம்ப ஆவேசமா பேசிட்டிருந்தான். இட ஒதுக்கீட்டால SC/STதான் எல்லா வாய்ப்புகளையும்..

..பறிச்சு முன்னேறிட்டதாகவும்  தன் சமூகம் பின் தங்கிவிட்டதாகவும் அடிச்சு பேசினான். அவன் MBC

"குப்பை அள்ளுபவர்களுக்கு 75 ஆயிரம் சம்பளம், அவர்கள் 2 கோடியில் வீடு கட்டுகிறார்கள்" என்றெல்லாம் WhatsAppல் வந்த தகவல்களையெல்லாம் பேசிக் கொண்டிருந்தான். அதெல்லாம் பொய்கள் என்று..

..சில Dataக்களைச் சொன்னேன். இதுதான் உங்ககிட்ட இருக்கிற பிரச்சனை.. சும்மா Bookக்க படிச்சிட்டு, Data படிச்சிட்டு பேசுவீங்க. அதெல்லாம் உண்மையில்ல. Data எல்லாமே பொய்னு ஒரே அடியா அடிச்சிட்டான்.
 
திடீர்னு "இதுக்கெல்லாம் திமுக ஆட்சிதான் காரணம், தீபாவளி வாழ்த்து ஏன் சொல்லல?.."

"..ஆ.ராசா இந்துக்கள இழிவு படுத்திட்டாரு, திருமா நாடககாதலை ஊக்குவிக்கிறாரு, இந்து முஸ்லிம்.. ப்ளா ப்ளா ப்ளா"ன்னு பாஜக குரல்ல சங்கித்தனமா பேச ஆரம்பிச்சான்.

இவன் இப்டி பேசற ஆள் இல்லையே.. என்னடா இவ்வளவு எமோசனலா பேசறான்னு குழப்பமா இருந்துச்சு.

கடைசியா அதற்கான பதில் அவனே சொன்னான்.

"அம்பது வருஷமா இட ஒதுக்கீட்டால SC/ST பயனடஞ்சாங்கள்ல.. இந்த 10% EWSனால நாங்க பயனடையக் கூடாதா?"ன்னு கேட்டான்.
 
"அடேய்..  EWSல உனக்கும் பங்கு கிடைக்கும்னுதான் இவ்ளோ நேரம் பேசிட்டிருந்தியா?"னு கேட்டேன்.

Basically அவன் நல்லவன் தான்..

..வெளிப்படையா 'ஆமா'னு ஒத்துக்கிட்டான். அவன் தன்னையும் அரியவகை ஏழையா நெனச்சுட்டு இருந்திருக்கான்.

உயர்ஜாதி ஏழைகள் என்கிற வார்த்தை எவ்வளவு நுட்பமானது, சூழ்ச்சிகரமானது என்று அப்போதான் புரிஞ்சுது எனக்கு. சமூகத்தில் தன்னை உயர்ஜாதியாக கருதிக்கொள்கிற BC, MBCயில் இருக்கும்..

..பலரை கூட இந்த EWS இடஒதுக்கீடு தமக்கானது என நம்ப வைக்கப்பட்டிருப்பது ஆபத்தானது. இதற்கெதிரான பெரிய எதிர்ப்புக்குரல் எதுவும் வராததன் பின்னணியில் இந்தச் சூழ்ச்சிதான் இருக்கிறது

இந்த EWS என்கிற வழிப்பறிக்கெதிராக பேசாமல், ஜாதியை உயர்த்திப்பிடிக்கும் ஜாதிக்கட்சி தலைவர்களின்..

..சூழ்ச்சிகரமான அமைதிக்குப் பின்னால் இருக்கும் ஆதாய கணக்கீடுகளில் பலியாக்கப்படுவது இவனைப்போன்ற அப்பாவிகள்தான்

ஜாதி உளவியல், தனக்கு மேலடுக்கில் உள்ளவர்களின் ஆதிக்கம் குறித்து கவலையோ வெட்கமோ கொள்வதில்லை. ஆனால் தனக்குக் கீழடுக்கில் இருப்பவர்களின் குறைந்தபட்ச...

..முன்னேற்றத்தைக்கூட சகித்துக்கொள்ள இயலாதபடி இரக்கமற்ற முறையில் சூழ்ச்சிகரமாக வார்க்கப்படிருக்கிறது

இந்த WhatsApp வதந்திகள் மனிதர்களின் சிந்தனையை மலினப்படுத்தி, சக மனிதர்களின் மீதான கண்ணோட்டத்தை எவ்வளவு தூரம் ஊனப்படுத்திவிடுகிறது என்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது

எதார்த்தத்தில் அவன் படித்தவன். சிந்திக்கும் தன்மையுடையவன் தான். சிந்திக்க விடாமல் தடுத்திருக்கும் பார்ப்பனியக் கருத்தியலையும் வாட்சப் பல்கலைக்கழகத்தையும் தாண்டி என்றாவது வெளியே வந்து தன்னைச்சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் வலையைப் புரிந்துகொள்வான் என்று நம்பிக்கை இருக்கிறது

ஆனால் எவ்வளவு நாள் காத்திருப்பது. அதற்குள் மீண்டும் நம்மை பழைய நிலைக்கு கொண்டு செல்வார்கள். ஒரு 100வருடங்கள் பின் தங்குவோம்.

இந்த ஆபத்தை புரிந்துகொண்டு அனைத்து ஜனநாயகவாதிகளும் ஒன்றிணைந்து இந்த சமூக அநீதிக்கு எதிராக போராட வேண்டும். எதிர்கால சந்ததியினரை காப்பாற்றவேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments: