Friday, June 29, 2018

டாக்டர் சி.நடேசனார் (1875 - 1937)

டாக்டர் சி.நடேசனார் (1875 - 1937)
1875- ல் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவரான சி.நடேசனார் மருத்துவம் பயின்றவர். பிராமணரல்லாத மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் மறுக்கப்பட்ட காலகட்டத்தில், அவர்களுக்காக ' திராவிடர் இல்லம்' விடுதியை 1914- ல் தொடங்கியவர் இவர். அவர்களின் உணவு, உடை, தங்குமிடம் ஆகிய தேவைகளை மட்டுமன்றி, அவர்களின் கல்வி வளர்ச்சிக்குமான செலவுகளையும் ஏற்றவர். இது தவிர, ' சென்னை ஐக்கிய சங்கம்' என்ற அமைப்பையும் நடேசனார் உருவாக்கினார். கல்வி, வேலைவாய்ப்புகளில் பிராமணரல்லாதோர் சமூகம் ஏற்றம் காண, அரசியல் அதிகாரம் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்த நடேசன் ஏனைய முன்னோடிகளுடன் கைகோத்தன் விளைவே நீதிக் கட்சி. 1923-ல் மதறாஸ் மாகாணச் சட்ட மன்றத்தில் அவர் காலடி எடுத்துவைத்தார். ' சென்னை பப்ளிக் சர்விஸ் கமிசன்' அமைக்கப்பட்டதில் முக்கியமான பங்கு இவருக்கு உண்டு. ஆதிதிராவிடர்களின் உரிமை, தீண்டாமை ஒழிப்பு, ஆலயப் பிரவேச உரிமை ஆகியவற்றைக் குறித்து 1918 லேயே பேசிய நடேசன், தன்னுடைய பதவிக் காலத்தில் பிராமணரல்லாதோர் மேம்பாட்டுக்கான எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பெரும் உந்துசக்தியாக இருந்தார்.




No comments: