Friday, June 29, 2018

ஜீன் - 30 -1997 - ஈன சாதி பயலுக்கு தலைவர் பதிவி கேட்குதா


கடந்த 1997 ம் ஆண்டு சூன் 30ந் தேதி மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்கா மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் பதவி தாழ்த்தபட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த ஊரில் வசித்த ஆதிக்க சாதி வெறியர்கள் அம்பலகார்ர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகாரத்திற்க்கு வருவதை இரண்டு முறை யாரும் போட்டியிடாதவாறு தடுத்து நிறுத்தினார்.இதை மீறி துணிச்சலாக முருகேசன் என்பவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மேலவளவு பஞ்சாயத்து தவைவரானார்.இதை பொருத்து கொள்ள முடியாத சாதிவெறியர்கள் பேருந்தில் பயணித்து கொண்டிருந்த முருகேசன் உள்ளிட்டவர்களை வெட்டி சாய்த்தனர்.


ஜீன் - 30 -1997
அன்றொரு நாள் இப்படித்தான் அமைதியாக விடிந்தது
மேலவளவு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தை 50 க்கும் மேற்பட்ட ஜாதி வெறி மிருகங்கள் அரிவாள், கத்திகளோடு மறித்தன. இதை பார்த்ததும் பேருந்தின் நடத்துனரும் ஓட்டுநரும் தலை தெறிக்க ஓடுகின்றனர்.
மக்கள் அலறி அடித்து கொண்டிருக்கையில் அந்த சம்பவம் நடைபெறுகிறது. 7 பேர் பட்டப் பகலில் வெட்டி கொலை செய்யப்படுகிறார்கள்..
என்ன நடந்தது ??? - வாக்குமூலம்
"ஈன சாதி பயலுக்கு தலைவர் பதிவி கேட்குதா " என்றபடி, தான் பதுக்கி வைத்திருந்த (அருவாள்) ஆயுதத்தால் அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் வெட்டினார். பேருந்திலிருந்த பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினார்கள்.



அழகர்சாமி முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையோடு மேற்கு நோக்கி ஓடினார்” (சாட்சி கிருஷ்ணன்).
2. “மார்க்கண்டன் முருகேசனின் வயிற்றில் குத்தினார். அய்யாவு முருகேசனின் வலது உள்ளங்கையை வெட்டினார். அழகர்சாமியோ முருகேசனின் தலையைத் துண்டித்து, துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு வடமேற்கு திசை நோக்கி ஓடினார்” (சாட்சி ஏகாதெசி).3.
“முருகேசனின் துண்டிக்கப்பட்ட தலை, பேருந்தின் படிக்கட்டில் வந்து விழுவதைப் பார்த்தேன். அழகர்சாமி அந்தத் தலையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்” (சாட்சி மாயவர்).4.
“சக்கரமூர்த்தி முருகேசனின் கைகளை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனை சரமாரியாக வெட்டினார்” (சாட்சி கல்யாணி).5.
"அழகர்சாமி முருகேசனை அருவாளால் வெட்டினார். அழகு முருகேசனின் இடது கன்னத்தை வெட்டினார்; பாரதிதாசன் முருகேசனின் இடது கையை வெட்டினார்; நாகேஷ் முருகேசனின் இடது மணிக்கட்டை வெட்டினார். கதிர்வேல், தங்கமணி, கணேசன், மணி ஆகியோரும் முருகேசனின் வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் வெட்டினார்கள். அழகர்சாமி முருகேசனை வெட்டுவதைப் பார்த்தேன். முதல் வெட்டு முருகேசனின் வலது தோளில் விழுந்தது. பின்னர் முருகேசன் இழுக்கப்பட்டு மற்ற அம்பலக்காரர்களும் முருகேசனை வெட்டினார்கள், குத்தினார்கள்” (சாட்சி பழனி).6.
“அழகர்சாமி முருகேசனின் வலது தோளில் அருவாளால் வெட்டினார். பேருந்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினார்கள். அப்போது மேலும் சில அம்பலக்கார சாதியினர் அங்கு வந்து, ஆதி திராவிடர்களைத் தாக்கினார்கள். இத்தாக்குதல்களினால் முருகேசன், மூக்கன், ராஜா, பூபதி, செல்லத்துரை, சேவகமூர்த்தி ஆகியோர் செத்துவிட்டனர். நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, முருகேசனின் தலையில்லா உடல் பேருந்திலிருந்து வெளியே வீசி எறியப்பட்டது” (சாட்சி கணேசன்)
இப்படி ஒரு கொடூரம் எதற்காக நடந்தது ??
1997 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படுகிறது அதில் மேலவளவு ஊராட்சி தனித்தொகுதியாக அறிவிக்கப்படுகிறது.
சாதி இந்துக்கள் ஊர் மந்தையில் கூட்டம் போட்டு தலித்துகள் யாரும் போட்டியிடக்கூடாது மீறி போட்டியிட்டால் கொலை செய்யவும் தயங்கமாட்டோம் என சபதமிட்டார்கள்....

நமது பகுதியில் நாம் பெரும்பான்மையாக இருக்குமிடதில் நாம் இவர்களின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் சரியா வராது என எண்ணி மேலவளவு திமுக கிளை செயலாளர் முருகேசன் அவர்கள் திமுக சார்பில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு பிறகு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்....
மீண்டும் ஊர் மந்தையில் சாதி இந்துக்கள் ( கள்ளர் சமூகம்) கூடினார்கள் மீண்டும் எச்சரிக்கை செய்தார்கள் வேண்டாம் முருகேசா மனுவை வாபஸ் வாங்கிவிடு இல்லையென்றால் சொன்னபடி செய்வோம் என எச்சரிக்கை செய்தார்கள்...
எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நான் போட்டியிடுகிறேன் உங்களுக்கு தெரிந்ததை பார்த்துகொள்ளுங்கள் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்...
பல்வேறு குளறுபடிகளுக்கு நடுவில் தேர்தல் நடந்து (அப்போது வாக்குச்சீட்டு முறை)வாக்குகள் எண்ணப்பட்டன மேலவளவு ஊராட்சி மன்ற தலைவராக பெரியப்பா முருகேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்....
சாதி இந்துக்களுக்கு ஒரே தலைகுனிவாய் போனது...
வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாச்சு...
இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஊராட்சி பணிகள் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் மதுரை மாவட்ட கலெக்டர் அவர்களை சந்திக்க முருகேசன் உள்ளிட்ட ஒரு பத்து பதினைந்து பேர் கிளம்பி சென்றார்கள் இந்த தகவலை ஓர் உளவாளி மூலம் பெரும் பணம் கொடுத்து சாதி இந்துக்கள் தெரிந்து கொண்டனர்...
அதே கயவனை உளவாளியாக அமர்த்தி எப்போது எங்கே வருகிறீர்கள் என்கிற தகவல்களை சொல்லசொல்லி அனுப்புகிறார்கள் அப்போது அவர் சாதி இந்துக்களிடம் கேட்கிறான் என்னை ஒன்றும் செய்துவிட மாட்டீர்களே என்று அதற்கு சாதி இந்துக்கள் நீ நம்மபயயா உன்னை ஒன்றும் செய்யமாட்டோம் தகவலை சரியாக சொல்லிவிடு என்று அனுப்பி வைத்தார்கள்...
காலையில் மதுரை சென்று கலெக்டர் அவர்களை சந்தித்து விட்டு வந்து உணவருந்தும் போது பொது தொலைபேசியில் சாதி இந்துக்களை அழைத்து சாப்பிட்டு விட்டு சற்று நேரத்தில் கிளம்பி விடுவோம் என தகவல் சொல்லி விட்டார்.
மதுரையில் இருந்து கிளம்பி மேலூர் வந்து இறங்கியவுடன் மீண்டும் அவர்களுக்கு தெரியாமல் பொது தொலைபேசியில் மூலம் அழைத்து இந்த பஸ்ஸில் ஊருக்கு வந்து கொண்டிருக்கிறோம் என தகவல் சொல்லி விட்டார்....
அந்த பஸ்ஸின் ஓட்டுனர் நடத்துனர் எல்லாம் சாதி இந்துக்கள் அவர்களுக்கு ஏற்கனவே தகவல் சொல்லியாச்சு பஸ்ஸை எங்கே நிறுத்த வேண்டும் என்று பஸ் கிளம்பி மேலவளவு நோக்கி சென்று கொண்டிருக்கிறது அப்போது ஊருக்கு முன் உள்ள வளைவில் பஸ் நிறுத்தப்படுகிறது.
பஸ்ஸை நிறுத்தி விட்டு ஓட்டுனரும் நடத்துனரும் இறங்கி ஓட்டெமடுத்தார்கள் சாதி இந்துக்கள் கும்பலாக கையில் பயங்கரமான ஆயுதங்களோடு பஸ்ஸின் இருவாயில்களிலும் நின்றார்கள் பொதுமக்களை விரட்டியது அக்கும்பல் முருகேசன் உள்ளிட்ட உறவுகள் தப்பிக்க முற்படும் போது முதல் வெட்டு உளவு சொன்ன கயவனுக்கு விழுந்தது பணத்துக்காக இனத்தானையே காட்டி கொடுத்த நீ நாளை எங்களை காட்டி கொடுக்க மாட்டைனு என்னடா நிச்சயம் என...
அவரோடு சேர்த்து 7 பேர் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டனர்....(அவர்தான் உளவாளி என யாருக்கும் தெரியாமல் போயிருக்கும் அவரின் மனைவி அழுகும் போது ஒரு ப்புளோவில் உன்னை வெட்டமாட்டாங்கனு சொன்னியே ஆனா உன்னைதான் முதல்ல வெட்டியிருக்காங்க என அழுததால் அனைவருக்கும் தெரிந்தது)
படுகொலையை கண்டித்து மேலூர் மதுரை என தென்மாவட்டங்களில் கலவரம் மூண்டது பட்டியலின மக்களின் உடமைகள் சிதைக்கப்பட்டன மேலூரில் பெரும் கலவரம் மூண்டது...
பின்பு எல்லாம் அடங்கிய பிறகு 7பேரின் உடல்கள் அடக்கம் செய்ய கொண்டுவரப்பட்டது ...

ஒரு ஊராட்சி மன்ற பதவியில் கூட பட்டியலினத்தவர் அமரக்கூடாது - என்று கள்ளர் ஜாதி வெறி பிடித்த மிருகங்களால் நடத்தப்பட்ட பச்சை படுகொலை
இந்த ஜாதி வெறியை, ஆதிக்கத்தை வீழ்த்தத்தான் புரட்சியாளர் அம்பேத்கரும் ,தந்தை பெரியாரும் தன் வாழ் நாள் முழுதும் போராடினார்கள்
ஜாதி ஒழிப்பே சமூக விடுதலை
மேலவளவு போராளிகளுக்கு வீர வணக்கம்



No comments: