Friday, June 29, 2018

பௌத்த விஹாரையே அபேஷ் பண்ணுனதுக்கு என்ன செய்யிறதாம்?

திருப்பதி ஜீயருக்கு ஆண்டுக்கு 1.5 கோடி சம்பளம் என்று சொன்னதற்கே ஆச்சரியப்படுறீங்க.
பௌத்த விஹாரையே அபேஷ் பண்ணுனதுக்கு என்ன செய்யிறதாம்?
கி.பி.7 ம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் பரவிய காலத்தில் தான் இந்த நிலப்பரப்பில் கோவில்கள் கட்டப்பட்டன.
ஆழ்வார்களும்-நாயன்மார்களும் கடுமையான மதமாற்றப் பணிகளை செய்து முடித்தனர்.
அவர்களுக்கு இணையான மதமாற்றத்தை உலகில் இதுவரை எவரும் செய்ததில்லை.
கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் என்ற ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதற்கு ஒரே உதாரணம் ஆண்டாண்டு காலமாக கிறிஸ்தவ மக்கள் தொகை 4% சதத்தை தாண்டாதது தான்.
கிறிஸ்தவம் இந்திய நிலப்பரப்பில் வளராமல் போனதற்கு அடிப்படையான காரணம் ஒன்று உண்டு.
அது யாதெனில் கிறிஸ்துவின் பிறப்பு குறித்ததும் கிருஷ்ணரின் பிறப்பு குறித்ததும் ஒன்றுதான்.
மதமாற்றம் செய்வது வேறு
மதம் மாறுவது என்பது வேறு.
இங்கு அதிகாரம் மூலம் மட்டுமே மதம் மாற்றப்பட்டார்கள்.
மதம் மாறுவது என்பது தனிநபர் மனம் சார்ந்த தேடல் மட்டுமே.
ஒரு நடிகனின் ரசிகனாக இருப்பவனை
மற்றொரு நடிகனின் ரசிகனாக மாற்ற முடியாது எளிதில்.
பௌத்தமும்-சமணமும் அதிகாரத்தின் துணை கொண்டே அழிக்கப்பட்டு
வைதீகம் வந்து சேர்ந்தது.
வைதீகத்தின் வசங்கெட்ட செயலால் அதிலிருந்து பிரிந்ததே சைவமும்-வைணவமும்.
வைணவத்தின் இருகிய தன்மையை உடைத்ததே ராமானுஜரின் தென்கலை வைணவம்.
வடகலை இன்றும் வக்கிரங்களோடு வாழ்கிறது.
ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை வடகலை வைணவர்களே.
இந்த நிலப்பரப்பெங்கும் இருந்த பௌத்த ஆலயங்கள் கி.பி.7 க்குப் பிறகு அப்படியே சைவ-வைணவ பங்குளாக பிரிக்கப்பட்டன.
திருப்பதி பெருமாள் கோவிலும் பௌத்த ஆலயமே.
இன்றுள்ள பெருமாள் சிலையின் அலங்காரத்தை அகற்றினால் உள்ளே புத்தரே இருப்பார்.
எந்த பெருமாள் கோவிலிலும் மொட்டையடிக்கும் வழக்கம் கிடையாது.
பௌத்த வழக்கமே மொட்டையடித்தல்.
நேற்று ஒரு நண்பர் இதைப்பற்றி கடந்த பதிவில் கேட்டார்.
அவருக்காக இந்தப் பதிவு.
உங்களுக்கு பயன்பட்டாலும் கூட.
புத்தரை தூக்கி எறிந்த சந்தோச முழக்கமே கோவிந்தா.கோவிந்தா.
கோ என்றால் அரசன் என்ற பொருள் உண்டு.
அந்த அரசன் புத்தனே.
இந்திய வரலாறு என்பது
பௌத்தத்திற்கும்-பார்பபனியத்திற்கும் நடந்த யுத்தமே என்ற அண்ணல் அம்பேத்கரின் கருத்து நினைவில் கொள்ளத்தக்கது.
இதுவே அங்குள்ள சிலை.

No comments: