Monday, July 23, 2018

கந்தசஷ்டி ஒரு காமசஷ்டி - கடவுள பாக்க சொல்ற வேலையாடா இது... த்து...

கந்தசஷ்டி ஒரு காமசஷ்டி - கடவுள பாக்க சொல்ற வேலையாடா இது... த்து... இந்..தூ..

கோயிலுக்கு போனா, நம்ம நல்லா இருக்கணும் நம்ம குடும்பம் நல்லாருக்கனுமுனு வேண்டுரதத்தான் பாத்துருப்போம். இன்னும் கொஞ்ச பேரு சொந்தக்காரங்க நல்லாருக்கணும், ஊருக்கு மழை தண்ணி வரணும் னு கூட வேண்டுவாங்க. 

ஆனால், வேண்டுதலுல இப்படி கன்ராவித்தனமா கூட வேண்டுவாங்கனு, தமிழ்கடவுள் முப்பாட்டன் முருகன் கோயிலுல கந்தசஷ்டி பாடுர தமிழ் பக்தாள பாத்து தான் தெரிஞ்சிக்கணும்.

மக்கள் வேண்டுதல்ங்கிற பெருல முருகனுக்கு கொடுக்கும் வேலைய பாருங்க...

“பேசிய வாய் தனை பெருவேல் காக்க

செப்பிய நாவை செவ்வேல் காக்க

பிட்டம் (குண்டி) இரண்டும் பின்வேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க...”

(நல்லவேளை "கீழே விழும் மலத்தை கீழ்வேல் காக்க"னு எழுத மறந்துட்டானுக போல)

“சேர் இள முலைமார் செவ்வேல் காக்க

ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க”

அதாவது..., இந்த பக்தாள்க முப்பாட்டன் முருகன்ட்ட கந்தசஷ்டி மூலமா என்ன வேண்டுதல் வைக்கிறாங்கனா.., கந்தா நீங்க உங்க வேல கைய புடிச்சிக்கிட்டு, என்னையும், என்னோட சாமனையும், அப்பறம் என்னோட மனைவி குழந்தைகளோட யதையும் காத்துக் கொண்டிருனு சொல்லுராங்க.

கோமாதாவ ஏறுரவன் தான் இப்படி ஆபாசமா பாட்ட எழுதி வச்சிருக்கானா.., உங்களுக்கு எங்கடா புத்தி போச்சு..

முருகன் கோயிலுல சிலைய காணோம், வேல காணோம் னு கொடுத்த கம்ப்ளெண்டும், வழக்கும் நிலுவையில இருக்கு. முருகனாலேயே அவனோட சிலைய காப்பத்திக்க முடியல. உண்மையில நீங்க "கந்தன் வேல் தனை காவல்துறை காக்க” னு தான் பாடனும்.

நீங்க என்னடானா.., சூத்த காப்பாத்து, சூணா பூனா காப்பாத்துனு கந்தசஷ்டி மூலமா வேண்டுல வைகுறாங்க.. இத குமரி பொண்ணுங்களுல இருந்து கிழவி வரைக்கும் கோயிலுல பாட்டிட்டு திரியுதுங்க.

உங்களோட, உங்க மனைவியோட அதுக்கு பாதுகாப்பு வேணுமுனா 4 ஜட்டிய வாங்கி போடு, உன் குழந்தைகளுக்கு டையப்பர வாங்கி போடு பாதுகாப்பு கிடைக்கும். அதவிட்டு முருகன்ட்ட சொன்னா.., உங்க சூத்துக்கு பின்னாடியே வேல கையில இடிக்கிக்கிட்டு சுத்துறதுதான் உங்க கடவுளுக்கு வேலையாடா..?

இதுல ஒரு குரூப்., முருகா நீதான் எனக்கு நல்ல சுகத்த கொடுக்கணுமுன்னு தொப்புன்னு படிவாசலுலயே விழுந்து கும்புடுவாங்க.. உங்களுக்கு சுகத்த கொடுக்குறதுக்கு முருகன் என்ன பிரஸ்ட்யூஷன் வச்சா நடத்துறான்.

உங்களுக்கு உண்மையிலேயே சுகம் வேணுமுனா நைட் 11மணிக்கு மேல எல்லா சேனல்லயும் லேகியம் விப்பாங்கா, வாங்கி சாப்புடுங்கடா..

உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் நீங்க திருந்தபோறதில்ல... கந்தசஷ்டி பாடும் போது அதோட அர்த்தத்தையாவது கேளுங்கடா.. இல்ல எப்படியும் போங்கடா...

தமிழகத்தில் RSS ன் நுழைவு - மீனவமக்களை அடித்து விரட்டி கட்டப்பட்ட குமரி விவேகானந்தன் மண்டபம்..

தமிழகத்தில் RSS ன் நுழைவு - மீனவமக்களை அடித்து விரட்டி கட்டப்பட்ட குமரி விவேகானந்தன் மண்டபம்..
தமிழகத்தில் பெரியாரின் தாக்கத்தினால் வளரமுடியாமல் தேங்கியிருந்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு, பார்ப்பனரல்லாத இந்து மதப் பிரச்சாரகர் விவேகானந்தனுக்கு பொதுவில் இருந்த இரசிகர் பட்டாளம் நம்பிக்கையளித்தது. இதையே அடித்தளமாக வைத்து தமிழகத்தில் RSS நுழைய திட்டம் போட்டது. அதன் விளைவுதான் குமரியில் கட்டப்பட்ட விவேகானந்தன் நினைவாலயம்.
பார்ப்பனரல்லாதோரையும் உள்ளிழுக்கும் வகையில் வருண சாதி அமைப்புக்கு பங்கம் வராமல் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவன் விவேகானந்தன். காங்கிரசு மட்டுமல்ல போலி கம்யூனிஸ்டுகள் கூட விவேகானந்தனை ஏற்றுக் கொள்பவர்கள் தான்.
பொதுவாக ஆர்.எஸ்.எஸ் தனது வளர்ச்சிக்கு மக்களிடம் இயல்பாக இருக்கும் மதநம்பிக்கைகளையும் விழுமியங்களையும் கவர்ந்து கொண்டும், அவற்றுள் ஊடுருவிக் கைப்பற்றியும் அவற்றின் உள்ளடக்கத்தை தமக்கேற்றவாரு மறுசீரமைத்து மதவெறியூட்டுவதையும் தமது செயல் தந்திரங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் ஊடுறுவுவதற்கு ஆர்.எஸ்.எஸ் முயன்றது. காலம் காலமாக குமரி மாவட்ட கரையோர மீனவர்கள் கடலாடி வந்து உணவருந்தி ஓய்வெடுக்கவும், தமது வலைகளைக் காய வைக்கவும், ஆண்டுக்கொரு முறை சிலுவை வைத்து ‘குரூஸ்’ எனும் வழிபாடு நடத்தப் பயன்படுத்தி வந்த பாறையை ஆர்.எஸ்.எஸ் விவேகானந்தனுக்கு மணிமண்டபம் கட்ட குறிவைதத்து.
விவேகானந்தனோ நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பல இடங்களில் தங்கி தியானம் செய்திருக்கிறான், சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறான். அங்கேயெல்லாம் நினைவாலயம் காட்டாமல், RSS குறிப்பாக அந்தப் பாறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அதைப் பயன்படுத்தி வந்த மீனவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததும், அம்மாவட்ட மக்கள் தொகையில் அவர்கள் கணிசமான அளவில் கிறஸ்துவர்களா இருந்ததும் தான்.
அவர்கள் எல்லாம் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை, புறக்கணிப்பு காரணமாக மதம் மாறியவர்கள். அதே போல நாடார்களில் கணிசாமானோரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். மிச்சமிருக்கும் இந்து நாடார்களையும் ஏனைய சாதி இந்துக்களையும் திரட்டுவதற்கு இந்த விவேகானந்தர் நினைவு சின்னம் வழி செய்யும் என்றும்,
மேலும் இந்தியா முழுவதிலும் இருந்துவரும் மக்களுக்கு இந்த நினைவுச் சின்னம் ஒரு இந்துதுத்வ சுற்றுலாவாக இருக்கும் நன்மையையும் ஆர்.எஸ்.எஸ் கணித்தது.
ஆர்.எஸ்.எஸ் மீனவர்களுக்குறிய பாறையில் நினைவாலயம் அமைக்கப்பட்டால் தமது வாழ்வுரிமை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த மீனவர்களும், மக்களும் அந்நடவடிக்கைகளை தம்மால் இயன்ற அளவில் கடுமையாக எதிர்த்தார்கள்.
அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் RSS இந்துவெறியர்களுக்கு பலமில்லாத காரணத்தால், கேரளாவில் இருந்து இரகசியப் படகுகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் குண்டர்களையும், தமிழக போலீசையும் வைத்து மீனவர்களை அடித்து விரட்டி விட்டு இந்த ஆக்கிரமிப்பை வெற்றிகரமாகச் செய்தனர்.
மீனவர்களுக்கு அந்தப் பாறை மேல் இருந்த பாரம்பரிய உரிமையை மூடி மறைத்து, அவர்களிடம் இருந்து அதைத் தட்டிப் பறித்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு துணையாக மத்தியில் ஆட்சியிலிருந்த சாஸ்திரியும், மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பக்தவத்சலமும் பக்கபலமாய் இருந்துள்ளனர். காஞ்சி சங்கராச்சாரி மறைமுகமாகத் துணை நின்றான்.
இறுதியில் 1970ஆம் ஆண்டு விவேகானந்தர் நினைவாலயம் திறக்கப்பட்டது. கூடவே கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ்இன் நச்சுப்பணிக்கான தளவேலையும் ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் மாண்டக்காடு கலவரத்தை தூண்டிவிட்டு குளிர்காய்ந்தது இந்த RSS கும்பல்.

நாசிக் கும்பமேளா : அம்மண குண்டி சாமியார்களும் ஆணுறை சப்பளைகளும்..

நாசிக் கும்பமேளா : அம்மண குண்டி சாமியார்களும் ஆணுறை சப்பளைகளும்..
வேத காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒற்றுமையாக இருந்தானுகலாம். அந்தசமயம்அவனுக ரெண்டு குரூப்பும் பாற்கடலை கட கட னு கடஞ்சிருக்கானுக, கடல்ல இருக்குற மீனு, நண்டு குஞ்சி நத்த பூச்சி எல்லாம் மிக்ஸ் ஆகி அமிர்தத்த எடுத்திருக்கானுக,
அமிர்தம் இருந்த கிண்ணத்தை அசுரர்கள் திருடிட்டு போயிருக்கானுக, அவனுகள துரத்தி போன தேவர்கள் 12 நாளா ராப்பகலா சண்டையை போட்டு கிடந்துருக்காணுக.
அப்ப போட்ட சண்டையில வானத்தில இருந்து அமிர்தம் கொஞ்சம் கொட்டியிருக்கு, அது பூலோகத்தில் நாளு இடத்தில விழுந்திருக்கு.
அந்த நாளு இடம் தான் அலகாபாத் (உத்தரபிரதேசம்), ஹரித்துவார் (உத்தரகாண்ட்), நாசிக் (மராட்டியம்) மற்றும் உஜ்ஜைன் (மத்திய பிரதேசம்) அதனால இந்த பகுதிகளில் 12 ஆண்டுக்கு ஒருமுறை அதை நினைவு கூறும் விதமாக கும்பமேளா விழா நடைபெறும்.
இப்ப மேட்டருக்கு வருவோம்..
இந்த நான்கு பகுதிகளில் கும்பமேளா நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி, கடைசியாக 2015ம் ஆண்டு நாசிக் கும்பமேளா நடந்தது.
நாசிக் கும்பமேளாவையொட்டி நாசிக்கில் 8 லட்சம் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திது.
நாசிக் கும்பமேளாவிற்கு வந்த அம்மணச் சாமியார்களின் கூட்டுக் களியாட்டம் நடைபெறும் இந்த நிகழ்வை ஒட்டி நாசிக் முழுவதும் 8 லட்சம் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மும்பை நகரைச் சேர்ந்த பிரபல ஆணுறை விநியோகிக்கும் ஜே.கே.அன்ஷீல் மற்றும் ஜோய் லைஃப் லோடக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற இரண்டு நிறுவனங்களும், எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பும், நாடு முழுவதும் விநியோகிக்கும் ஆணுறையில் அளவை 60 விழுக்காடு குறைத்துவிட்டு கும்பமேளா அம்மண சாமியாகளுக்கு விநியோகம் செய்துள்ளனர்.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மகராஷ்டிரா நகரமான நாசிக்கில் மகாகும்பமேளா நடைபெற உள்ளது இந்த கும்பமேளாவிற்காக எங்களது உற்பத்தில் 47 விழுக்காடு நாசிக் நகரத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆகவே முன்னேற்பாடான இதர மாநிலங்கள் அதிகமாக இருப்பு வைத்துக்கொள்ளவேண்டுகிறோம் என்று அனுப்பி இருந்தது.
அதே நேரத்தில் நாசிக் நகருக்கு அருகில் உள்ள பெருநகரங்களான மாலேகாவ் சிரிடி சங் கம்னேர் கோபர்காவ் உமர்காவ் போன்ற நகரங்களில் பலமடங்கு ஆணுறைகள் வாங்கி இருப்பு வைத்தனர்.
எல்லாவற்றையும்விட மகராஷ்டிர அரசு பாலியல் தொற்றுநோய் தடுப்புத் துறை வழக்கத்திற்கு மாறாக 8 லட்சம் ஆணுறைகளை நாசிக் மாவட்டம் முழுவதும் இலவசமாக வழங்க அனுப்பியுள்ளது.
இதுதெல்லாம் விழா நடக்கும் இடத்திற்கு எதற்கு.?
இந்த கும்பமேளா விழாவிற்கு வரும் அம்மண குண்டி சாமியார்களை எல்லாம் மனித இனத்தில் சேர்க்கமுடியாது. இவர்கள் மிருகங்களை விட கேவலங்கெட்ட வக்கிர அகோரிகள். இவர்களை சாசிக்கு சென்றால் பார்க்கலாம். கங்கையில் எரிக்கும் பிணங்களை தின்று கொண்டு, கஞ்சாவை இழுத்துக்கொண்டும் அம்மணமாக ஆசி வழங்குவார்கள். யாரை வேண்டுமானாலும் கொலைசெய்வார்கள், காமத்திற்கு கிடைத்த பெண்களை அடித்து தூக்கிக்கொண்டு போய் கற்பழிப்பு, பாலியல் கொலைகளும் நடைபெறும். இப்படிப்பட்ட மிருக பிறவிகளிடம் அமைச்சர்கள், மந்திரிகள் ஆசி வாங்க தவறுவதில்லை.
ஊருக்குள் நாய், பன்றி தொல்லை அதிகமானால் அதை சுட்டு பிடித்துச்சென்று அப்பறப்படுத்தும் அரசு இந்த கொடூர மிருகங்களை ஒன்றும் செய்வதில்லை. இவர்கள் இந்த பூமியில் வாழ தகுதியற்றவர்கள் என்று கொல்லப்படவேண்டியவர்கள். ஆனால் இந்த மானங்கெட்ட நாட்டில் இதை பெருமை என்று பீத்திக்கொள்கிறார்கள்.
உலகமே உண்ணும் உணவு மாட்டுக்கறி. அதை தின்றதுக்கெல்லாம் கொலைகள் செய்யும் இந்த முட்டா பு...... நாட்டில் மனிதக்கறி தின்பவர்களை சாமியாரென்று புடுக்கை தொட்டு கும்புடுவார்கள்.
இந்த பலவற்றை பரதேசிகளிடமிருந்து நோய் தொற்று வராமல் பாதுகாக்கவே இந்த ஆணுறை சப்பளை..

இவர்தான் மகாத்மா.... இவர்தான் கல்வியின் அன்னை.. இவர்கள் தான் சீர்திருத்த போராளிகள்..

மகாத்மா ஜோதிராவ் பூலே - இவர்தான் மகாத்மா.... இவர்தான் கல்வியின் அன்னை.. இவர்கள் தான் சீர்திருத்த போராளிகள்..
பிராமண ஜாதியைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு அழைக்கப்பட்ட ஜோதிராவ், திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அதைப் பார்த்த நண்பரின் உறவினர், “சூத்திரனான நீ பிராமண கல்யாணத்தில் பிராமணர்களுக்கு இணையாக ஊர்வலத்தில் வருவதா? எங்களை அவமானப்படுத்திவிட்டாய் நீ” என்று கோபமாக திட்டி, நண்பரின் திருமண ஊர்வலத்திலிருந்து விரட்டிவிட்டார்.
அவமானப்படுத்தப்பட்ட ஜோதிராவ் ஆழ்ந்து சிந்தித்தார். அரசியல் அடிமைத்தனத்தை விட மோசமானது சமூக அடிமைத்தனமும், அதை வலியுறுத்தும் ஜாதி அமைப்பும். அதற்கு எதிராக புரட்சிக் கொடியை உயர்த்தினார். சமூக விடுதலைக்கு வழிவகுக்க அனைவருக்கும் கல்வி, குறிப்பாக பெண்களுக்கு கல்வி தேவை என்று முடிவெடுத்தார்.
1848-ல் பூனாவில் புதன்வார பேட்டையில் தனது நண்பர் பீடே என்பவரது வீட்டில் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார், ஜோதிராவ். இவர்தான் பெண்களுக்காக பள்ளியைத் துவங்கிய முதல் இந்தியர்.
பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த சிறுவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே கஷ்டம். அதிலும் பெண்கள் என்றால் மிகவும் கடினம். எனவே, பள்ளியைத் துவங்கி எட்டு மாதம் கூட நடத்த முடியவில்லை.
இதனிடையே தீய சக்திகள் ஜோதிராவின் தந்தையின் மனதைக் கெடுக்க, அவர் மகனையும் மருமகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். பிழைப்புத் தேடி ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்தார் ஜோதிராவ்.
ஆரம்பத்திலிருந்தே தன் மனைவிக்கு கல்வியறிவு கொடுத்த ஜோதிராவ், கல்வித் துறையிலிருந்த தன் நண்பரின் உதவி கொண்டு சாவித்ரிக்கு ஆசிரியர் பயிற்சியும் கொடுத்தார்.
தனக்கும் இரண்டாண்டுக்கும் மேலாக கல்வித் துறையில் கிடைத்த அனுபவத்துடன் மீண்டும் 1851 ஜூலை மாதம் 5-ம் நாள் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார். 8 பேர்களுடன் துவங்கி சில மாதங்களிலேயே மாணவிகளின் எண்ணிக்கை 48- ஆக உயர்ந்தது.
பூலே தொடங்கிய பள்ளியில் ஆசிரியையாக சேவை செய்ய துவங்கினார் சாவித்ரி பாய். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் இவர்தான். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் கல்வி கற்று கொடுத்ததை அறிந்த உயர் ஜாதி மக்கள் கலவரம் செய்தார்கள்.
சாவித்திரி பாய் பள்ளிக்கு நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர். சாவித்திரி பாய் ஜோதிராவ் பூலே விடம் புலம்பியதும் “பள்ளிக்கு போகும் போது அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ.. பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் ”என்றார் அவ்வாறே செய்தார்.
தன் கணவர் ஜோதிராவ் புலே செய்யும் சமூகப் பணிக்கு தன்னையும் ஒப்புக் கொடுத்து, ஒரு சக பயணியாக பயணித்து பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை போதித்து சமூக சீர்திருத்தத்தின் பெண் ஆளுமையாக களத்தில் நின்று போராடியவர் சாவித்திரி புலே.
பழமைவாதம் நிறைந்த சமூகத்தில் பெண்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியரான சாவித்திரி பட்ட பாடுகள் அளவிட முடியாதவை. சமூகத்தில் இருந்து வரும் எதிர்ப்புகளை எதிர் கொள்ளும் அதே வேளையில், குடும்பத்தில் இருந்து வரும் எதிர்ப்புகளையும் சமாளித்து அவர்களுக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை புரிய வைத்து சமூகப் பணியாற்றியவர் சாவித்திரி.
சமூகப் பணிகளில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்ட சாவித்திரி, உடல் நலமில்லாமல் தனது தாய்வீட்டில் தங்கி மருத்துவம் பார்த்து கொண்டார். அப்போது சாவித்திரி தனது கணவர் ஜோதிராவ் புலேவிற்கு எழுதும் கடிதத்தில் தனது சகோதரருக்கும் தனக்கும் நடந்த உரையாடல்களை பதிவு செய்கிறார்.
அதில், சகோதரர் தன்னை நன்றாக கவனித்து வருகிறார் என்று எழுதும் சாவித்திரி, “கணவன் மனைவி ஆகிய நீங்கள் இருவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலைகளை செய்து குடும்பத்திற்கே கெட்டப் பெயரை ஏற்படுத்தியுள்ளீர்கள். சமூகத்தில் என்ன பழக்க வழக்கம் இருக்கிறதோ அதனை பின்பற்றுங்கள்.” என்று தனது சகோதரர் சாவித்திரியிடம் கடுமையாக பேசியதை குறிப்பிட்டுள்ளார்.
“ஆடு மாடுகளிடம் நீங்கள் தீண்டாமை கடைபிடிப்பதில்லை. அவற்றை நேசிக்கின்றீர்கள். பாம்புத் திருவிழாவின் போது, பாம்புகளைப் பிடித்து பால் புகுட்டுகின்றீர்கள். ஆனால், உங்களைப் போன்ற மனிதர்களான தாழ்த்தப்பட்ட மக்களிடம் தீண்டாமை கடைபிடிக்கின்றீர்கள். இதற்கு என்ன காரணம் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? பிராமணர்கள் உங்களை அசுத்தமானவராகவும் தீண்டத்தகாதவராகவும்தான் நடத்துகிறார்கள். நீங்கள் அவர்களைத் தொட்டால் அவர்கள் தீட்டுப்பட்டுவிட்டதாக கருதுகிறார்கள். தாழ்ப்பட்டவர்களையும் உன்னையும் அவர்கள் வெவ்வேறாக நடத்துவதில்லை” என்று சகோதரின் பேச்சுக்கு சாவித்திரி கோபப்படாமல் பதில் உரைத்ததையும் கடிதத்தில் பதிவிடுகிறார்.
“பெண்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு கற்பிக்கிறோம். இதனால் பிராமணர்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்று அவர்கள் நினைப்பதால்தான், அவர்கள் நம்மை எதிர்கிறார்கள். என் கணவரின் இந்த செயல்பாடுகளுக்கு ஆங்கிலேய அரசு அவரை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. கடவுளின் வேலையை அவர் செய்து கொண்டு இருக்கிறார். அவருக்கு நான் துணையாய் இருக்கிறேன். இந்த வேலைகளை நான் செய்வதன் மூலம் அளவிடமுடியாத மகிழ்ச்சியை அடைகிறேன்” என்று சாவித்திரி தனது சகோதரருக்கு சமூகப் பிரச்சனைகளை புரிய வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதையும் தனது கணவருக்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
.
ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே கடந்து போனது. இந்த சீர்திருத்த தம்பதிகளுக்கு. ஒவ்வொரு மூடப்பழக்கத்தையும் ஒழிக்க களத்தில் நின்று போராடினர்.
பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது. அந்தப் பணியை செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்க செய்தார் பூலே.
ஆங்கிலேய அரசாங்கம் எண்ணற்ற மதுக்கடைகளை திறந்து விட உரிமம் கொடுத்த பொழுது அது எளிய மக்களை பாதிக்கும் என்று அதை தீவிரமாக எதிர்த்தார். ஒருமுறை ஆங்கிலேய கனவான்களுக்கான நிகழ்வில் கலந்து கொள்ள ஏழை விவசாயிப்போல ஆடை அணிந்து போனார். “இந்தியாவின் உண்மையான சூழலைப்புரிந்து கொள்ள இந்த மாளிகைகளில் விருந்து உண்ணாதீர்கள் ! கொஞ்சம் கிளம்பி வந்து கிராமங்களை பாருங்கள் !” என்று முழங்கினார்.
பெண்கள் கல்வியறிவு பெறுவது சாத்தியமாக ஆரம்பித்தது 1851 ஜூலையில் நல்புதாவர் பேத்திலும், 1851 செப்டம்பரில் ராஸ்தா பேத்திலும், 1852 மார்ச்சில் விதல் பேத்திலுமாக பெண்கள் கல்விக்கூடங்களை நிறுவினார் ஜோதிராவ்புலே.
பள்ளியை தனியாக துவங்காமல் தன்னுடைய நண்பர்களையும் சேர்த்து ஒரு அமைப்பை (டிரஸ்ட்) ஏற்படுத்தி அதன் மூலம் பள்ளியை நடத்தினார்.
பள்ளி மாணவியர்களின் கல்வி அறிவை ஆங்கில அரசு அதிகாரிகள் பொதுமக்கள் முன்பாக சோதித்தனர். மாணவியரின் பதில் அவர்களை மகிழ்ச்சிகொள்ள வைத்தது. எனவே அரசு மானியமாக ரூ. 75-ஐ கொடுக்கத் துவங்கியது. மேலும் வேறு சில இடங்களில் பள்ளியைத் துவங்கினார் ஜோதிராவ். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக ஒரு பள்ளியும் துவங்கப்பட்டது.
ஜோதிராவின் பணியின் வளர்ச்சியும் அதனால் பெண்களிடையே கல்வியறிவு ஏற்படுவதையும், தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்களிடையே கல்வியறிவும் விழிப்புணர்வும் ஏற்படுவதையும் சகிக்க முடியாத தீய சக்திகள் அவரைக் கொல்ல முடிவெடுத்தன.
ரமோஷி, கும்பார் என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் (அந்தக் காலத்திலேயே) கொடுத்து ஜோதிராவை கொலை செய்ய அனுப்பினர். இரவில் சத்தம் கேட்டு எழுந்த ஜோதிராவ், அவர்களை யார் என்று கேட்டார். விஷயத்தைத் தெரிந்துகொண்ட அவர், ‘என்னுடைய மரணம் தாழ்த்தப்பட்ட உங்கள் வாழ்வில் வளத்தைச் சேர்க்கும் என்றால் அதுவும் நல்லதே ’என்று வெட்ட வசதியாக தலையை நீட்டினார். அவரது பேச்சும் செயலும் கொலையாளிகளின் உள்ளத்தை மாற்றின.
பின்னர் அவர்கள் ஜோதிராவ் நடத்திய மாலைப் பள்ளியில் சேர்ந்து கல்வியறிவும் சமூக விழிப்புணர்வும் பெற்றனர். அதில் ஒருவரான ரமோஷி பின்னர் ஜோதிராவின் பாதுகாவலராக மாறி அவருடனே இருந்தார். கும்பார் பின்னர் பல நூல்களை எழுதி வெளியிட்டார். ஜோதிராவ் ஆரம்பித்த ‘சத்யசோதக் சமாஜம்’ அமைப்பின் தூணாக விளங்கினார்.
பெண்கல்வி மட்டுமன்றி விதவா மறுமணம் போன்ற புரட்சிகரமான கொள்கைகளை முன்னோடியாக நடைமுறைப்படுத்திக்காட்டிய ஜோதிராவ் இப்புரட்சி கருத்துக்களை பரப்ப சத்யசோதக் சமாஜத்தை 1873 செப்டம்பர் 24-ல் துவங்கினார்.
தொழிலாளர்களையும் விவசாயிகளையும் முதன்முதலில் அமைப்பு ரீதியாகத் திரட்டி, சங்கம் அமைத்துப் போராடி உரிமைகளை பெற்றுத்தரக் காரணமாக இருந்தவர் ஜோதிராவும், அவர் ஆரம்பித்த சத்ய சோதக் சமாஜமும் தான்.
சமூகப் புரட்சிக்கு வித்திட்ட ஜோதிராவுக்கு பெரிதும் கடன்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது 60-வது வயது நிறைவின்போது 1888-ல், மிகப் பெரிய மாநாடு நடத்தி அதில் அவரை ‘மகாத்மா’ என்று போற்றி வணங்கினர்.
சமத்துவம், அறிவு, மனித நேயம் என்ற மூன்றையும் வலியுறுத்தி வாழ்ந்து காட்டி, மக்களால் மகாத்மா என்று போற்றப்பட்ட ஜோதிராவ் புலே 1890, நவம்பர் 28-ம் நாள் மறைந்தார்.
1954-இல் டாக்டர் அம்பேத்கர், மகாத்மா புலேவின் வாழ்க்கை வரலாற்றை தான் எழுத விரும்புவதாக, தனஞ்செய் கீரிடம் தெரிவித்துள்ளார். தனஞ்செய் கீர் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.
டாக்டர் அம்பேத்கர் அவ்வாறு கூறக் காரணம், மகாராஷ்டிர மாநிலத்தில் அரிஜனங்களுக்காகவும் பெண்களுக்காகவும் முதன்முதலில் பள்ளிக்கூடம் துவங்கி, சமூகப் புரட்சிக்கு, மாற்றத்துக்கு வித்திட்டவர் அவர்.
பிராமண எதிர்ப்பாளன், இந்துமத விரோதி, சண்டாளன், பண்பாடு தெரியாதவன் என்றெல்லாம் அவர் வாழ்ந்த காலத்தில் உயர்சாதி மக்களால் தூற்றப்பட்டவர். பெண் கல்வி, பெண்களின் முன்னேற்றம், அரிஜனர் கல்வி, வேலைவாய்ப்பு, அவர்களது சமூக மேம்பாடு ஆகியவற்றுக்காக பாடுபட்ட முன்னோடி.

எவன் சுதந்திர போராட்ட வீரர் - ஆங்கில அதிகாரி ஆஷ் படுகொலை - வாஞ்சிநாதனின் பார்ப்பன சாதிவெறி

எவன் சுதந்திர போராட்ட வீரர் - ஆங்கில அதிகாரி ஆஷ் படுகொலை - வாஞ்சிநாதனின் பார்ப்பன சாதிவெறி - காவிகளால் மறைக்கப்பட்டுவரும் வரலாறு....
இந்த 21-ம் நூற்றாண்டிலே இந்துத்துவ சக்திகள் இந்தியத் திருநாட்டை ஆட்சி செய்யும் தருவாயிலே மத்தியப் பிரதேசத்திலே ஒரு உயர்சாதி இந்து ஒருவரின் மீது தலித் சிறுமியின் நிழல் பட்டதற்காக அவள் அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கிறாள். இது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று எண்ணுகிறேன்.
அரசியல், அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த தருணத்திலே கூட இப்படிப்பட்ட இழிவுகளைக் காண முடிகிறது என்றால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலைமை எப்படி இருந்திருக்கும்.?
பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை, அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை சமமாக மதித்தார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதி பாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதை உறுதி செய்யும் விதமாக ஆஷ் இறந்த ஒரு வார காலத்திற்குள் தனது "தமிழன்" பத்திரிக்கையில் "சகல சாதி மனுஷரையும் சமமாக பாவித்தவர் கலெக்டர் ஆஷ்.!” என்பதாக அயோத்திதாச பண்டிதர் குறிப்பிட்டதை கவனிக்கலாம்.
.
''குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும் “பிராமணர்களும்” மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. குற்றலாத்தில் சூத்திரர்கள் குளிக்க தடை இருந்தது. சூத்திரர்கள் என்றால் இப்போது ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை என்று பீற்றிக்கொள்கிறார்களே.. அவர்களையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன்.
பிராமணர்கள் மட்டும் குளிக்கலாம் என்ற வழக்கத்தை மாற்றி அனைத்து சாதி ஜனங்களுக்கு குளிக்கலாம் என்ற ஆணையை பிறப்பித்து சாதி தடையை நீக்கினார் ஆஷ்.
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி, குற்றாலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட செய்தி அறிந்து தானும் குளிக்க மறுத்தார் என்கிறது வரலாறு.
ஆஷ் துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைப்பயிற்சி போகும் போது காதில் ஏதோ அலறல் கேட்கிறது. ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை. அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். ஏன் என்று வினவிய துரைக்கு, "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை'' என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும் கூறுகிறார்.
பின்பு, நானே சேரிக்குள் சென்று என்ன விசயம் என்று அறிந்து வருவதாக சொல்லிய முத்தா ராவுத்தர் திரும்பி வந்து கூறுகிறார் "மொத பிரசவம் துரை. சின்ன பொண்ணு. ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம் எங்கிட்டு துரை பொழைக்க போகுது.!" என்றான்.
"ஏன். மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே.!" என்று துரை கேட்க , "அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க. அய்யா பின்ன எப்படி வண்டி கட்டி டவுணுக்கு கொண்டு போறது.?" என்றார் முத்தா ராவுத்தர். ஆனால் மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார்.
அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை. ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்கு பகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பனர் வழிமறிக்கிறான். என்ன விடயம் என்பதைச் சொல்லி விட்டு ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வருகிறார்.
மருத்துவமனை செல்ல அக்கிரஹாரத்தை தாண்டி தான் வண்டி சென்றாக வேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டு வண்டி மறிக்கப்படுகிறது. ஒரு சக்கிலிக்குடி பெண்ணை இந்த வழியே கொண்டு செல்லக்கூடாது போகக்கூடாது என்று பார்ப்பனர்கள் வழிமறித்து பிரச்சினை செய்தனர். மீறி சென்றால் வண்டி கொடுத்த வண்டி கொடுத்தவன் முதற்கொண்டு ஊர் நீக்கம் செய்து விடுவோம் என எச்சரித்தனர்.
இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார். குதிரையோட்டியின் பக்கத்திலேறி அமர்ந்து கொண்டார். வண்டி அக்கிரஹாரம் நுழையும் போது மீண்டும் பார்ப்பனர்கள் கூட்டமாய் வழிமறித்து "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது" என்று பிரச்சினை செய்தனர்.
ஆஷ் கோபமாக வழி விட சொல்லி வண்டியைக்கிளப்பு என்று உத்தரவிடுகிறார்.
மீறி மறித்த பார்ப்பனர்களை அடித்து விரட்டிவிட்டு அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுசென்று காப்பாற்றினார். ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் தான் வாஞ்சிநாதன். அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது.
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை மணியாச்சி என்ற ஊரின் ரயில் நிலையத்தில் சாதி வெறிபிடித்த வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த வரலாறு இன்று வரை பார்ப்பனர்களால் மறைக்கபட்டு வருகிறது. இந்த வரலாற்றை பற்றி திருநெல்வேலி மாவட்டத்தில் மணியாச்சியில் (தற்போது பார்ப்பன தேவிடியாமகன்லால் வாஞ்சிமணியாச்சி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது) தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களிடம் கேட்டுப்பாருங்கள். அனைத்தும் கூறுவார்கள்.
மேலும் இதுபற்றிய விபரம் laan venish எழுதிய Ash Official Notes எனும் குறிப்புகள் அரசு ஆவணக்காப்பகங்களில் இன்றும் உள்ளது.
இது தவிர்த்து இந்த படுகொலைக்கு ஆதாரமாக வாஞ்சிநாதன் எழுதி வைத்திருந்த கடிதம் குறித்த தகவலும் உள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது....
("ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.
எங்கள் ராமன், கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ(பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.
அவன் (ஜார்ஜ்) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்”)
1911-ம் ஆண்டு ஜீன் 17-ம் தேதி காலை 10.30 மணியளவில் திருநெல்வேலி மாவட்டத்தின் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து கலெக்டர் ஆஷ்-ஐ சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட வாஞ்சிநாதன், ஆஷ் கொலைக்கான காரணமாக தன் சட்டைப்பையில் எழுதி வைத்திருந்த ஆவணமே மேற்கண்ட கடிதம்.
ஆக, இந்தக் கடிதம் ஆஷ் துரை கொல்லப்பட்டது தேசபக்தியின் பொருட்டு அல்ல, இந்து மதத்தின் வர்ணாசிரமத்துக்கு ஆஷ்துரையால் ஏற்படுத்தப்பட்ட அவமானத்தைப் போக்கவே என்று உணர்த்துகிறது.
மாபெரும் வீரனாக, புரட்சியாளனாக, பூலுத்தியாக, சுதந்திர தாகம் கொண்டவனாக விடுதலைப் போரில் வெள்ளையரின் அநீதி கண்டு கொதித்தெழுந்தவனாக வாஞ்சிநாதனை உருவகப்படுத்தி இது நாள் வரையிலும் பார்ப்பன பரதேசிகளால் வரலாறுகள் எழுதப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
தென்னிந்தியாவை பொறுத்த வரையில் ஆஷ்-ன் கொலையே முதலும் கடைசியுமானது.
இக்கடிதத்தின் பின்னணியில் பார்த்தோமானால் சுதந்திரம் என்பதை விட சனாதனமும், ”எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில்” எனும் வரிகள் வெள்ளையர்களின் ஆளுகையிலிருந்த இந்த தேசத்தை மீண்டும் பிராமணீய ஆட்சிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்கிற வேட்கையே முன்னணியில் நிற்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
இதைத்தான் ராமராஜ்ஜியம் என்ற பெயரில் தற்போது இந்துத்துவா வெறியர்களும், RSS பிஜேபி அரசும் இந்த நாட்டில் செயல்படுத்த துடிக்கின்றனர்.
இந்த இந்துத்துவா சதி வேலைகளை கண்டு கொதித்தெழுந்து நீங்கள் பார்ப்பனர்களை கருவருக்காமல் இருந்தாலும் பரவாயில்லை, இதைப் பற்றி புரிந்துகொல்லவாவது முயற்சி செயுங்கள் நண்பர்களே..

கோல்வால்கரும் RSS சித்தாந்தமும் - ஒரு கேவலமான பிறவிகள் தான் RSS காவிகும்பல்

கோல்வால்கரும் RSS சித்தாந்தமும் - ஒரு கேவலமான பிறவிகள் தான் RSS காவிகும்பல்..
ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தங்களின் வேத புத்தகம் என்று கூறிக்கொள்வது அவர்களது தலைவரான கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts எனும் புத்தகம். இதை அவர்களால் மறுக்க முடியாது. மறுப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்களாகவும் இருக்க முடியாது. ஒருபோதும் மறுக்கவும் மாட்டார்கள்.
அப்படிப் பட்ட அந்த புத்தகத்தில் அவர்கள் கனவு காணக்கூடிய இந்து ராஷ்டிரத்தைப் பற்றி எழுதுகிறான். எப்படிப்பட்ட இந்து ராஷ்டிரம்? கோல்வாக்கர் சொல்லும் இந்து ராஷ்டிரத்தின் லட்சணம் என்ன தெரியுமா? இதோ படியுங்கள்.
“தென்னாட்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கிலேய அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர்.
ஒருநாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது ‘பிராமண’ பியூன் பின் தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு சமுதாயத்துக்காரர் வந்தார். ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்து கைகுலுக்கினார். ஆனால் பிராமண பியூனைப் பார்த்தவுடன் காலைத்தொட்டு வணங்கினார்.
அதைப்பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி ‘நான் உன்னுடைய பெரிய அதிகாரி. என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால் என்னுடைய பியூனின் காலைத்தொட்டு கும்பிடுகிறாயே. இது என்ன பிரச்னை?’ என்று கேட்கிறார்.
அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார். நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் ஒரு பியூனாக இருக்கலாம். ஆனால் நாங்கள் வணங்கக்கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழவேண்டியது எனது கடமை என்று பதில் சொன்னார். இதுதான் இந்து தர்மம்”
கல்வியறிவில் குறைந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. தன்னைவிட குறைவான பொறுப்பில் பணிசெய்பவராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் வணங்குவதற்கான தகுதியுடையவர் என்கிறான். கோல்வாக்கர். அது மட்டுமல்லாமல் அதுதான் இந்து தர்மம் என்கிறான். இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும். இதை பின்பற்றுபவர்கள் தான் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும், சாதிய அமைப்பிற்கு எதிராக போராடுபவர்கள் என்று சொன்னால் நம்மால் சிரிப்பதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?
ஆதாரம் - (கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts நூல் பக்கம் 138-139)

நம்பர் ஒன் கோழை தான் வீர் சாவக்கர்

நம்பர் ஒன் கோழை தான் வீர் சாவக்கர் - வீரனாக வரலாறு திரிக்கும் காவி கும்பல்...
இவனை போன்ற ஒன்னா நம்பர் கோழையை வரலாற்றில் எங்கு தேடினாலும் காண முடியாது.
1883 மே மாதம் 28ஆம் நாள் மகாராட்டிராவில் நாசிக் அருகில் உள்ள பாகூர் என்ற கிராமத்தில் சித்பவன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவன் தான் வினாயகத் தாமோதர் சாவர்க்கர்தான். இன்று காவிஇந்துமதவெறி கூட்டத்தினாரால் வீரசாவர்க்கர் என்று அழைக்கப்படுகின்றான்.
இல்லாத கடவுள்தான் எல்லாவற்றையும் இயக்குகிறது என்பான்.
அய்ந்துபேரின் மனைவியை அழியாத பத்தினி என்பான்.
இந்து ராஷ்டிரம் என்பதை வரையறுத்து இந்து முஸ்லிம் கலவரத்திற்கு காரணமானவன் இவன் தான்.
காந்தியை கொல்ல வெப்பன் சப்பளையும், செயல்திட்டமும் இவனுடையதுதான்.
அதேபோல், ஆங்கிலேயர்களிடத்தில் கெஞ்சி மண்டிபோட்டு மன்னிப்பு கடிதம் எழுதுவதில் , இவனை யாரும் மிஞ்ச முடியாது. இவனை மன்னிப்பு கடித மன்னன் என்றே சொல்லலாம். இப்படிப்பட்டவனைத்தான் இந்து வெறியர்கள் வீரசாவர்க்கர் என்கிறார்கள்.
இவனை பற்றிய உண்மையை தெரிந்தித்தவர்கள் ஒருமுறையாவது காரித்துப்பாமல் இருக்கமுடியாது.
கல்லூரிப் படிப்பை இந்தியாவில் முடித்துவிட்டு, பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக இலண்டன் சென்றிருக்கிறான். அங்கு பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் பலருடன் தொடர்புகொண்டான்.
1909ஆம் ஆண்டு, இலண்டனில் சர் கர்சன் வைலி என்ற ஆங்கில அதிகாரியைச் சுட்டுக் கொல்லும்படி மதன்லால் திங்ரா என்பவரைத் தூண்டிவிட்டார்.
அதே ஆண்டு இறுதியில் நாசிக் கலெக்டர் எ.எம்.டி.ஜாக்சன் என்பவரைச் சுட்டுக் கொன்றவனுக்கு துப்பாக்கி சப்பளை செய்தது இவன்தான்.
ஜாக்சன் என்பவர் இந்திய மக்களை நேசித்தார், அறிவியல் மனப்பான்மை உடையவர். மூடபழக்கத்து எதிராக சட்டம் கொண்டுவர முன்மொழிந்தவர்.
இந்த இரண்டு குற்றச் செயல்களிலும் அடுத்தவரை மாட்டவிட்டு தந்திரமாக தப்பித்துக்கொண்ட கோழை இந்த வீர் சாவுக்கார். இவனின் குற்றச்செயல்பாடுகளைக் கண்டறிந்த பிரிட்டிஷ் அரசாங்கம், இவரது அண்ணனைக் கைது செய்து அந்தமான் சிறையில் அடைத்துவிட்டு, பாரிசில் இருந்த சாவர்க்கரையும் கைதுசெய்யத் தேடியது. 1910இல் கொலைக்குற்றமும், தேசத் துரோகக் குற்றமும் சாட்டப்பட்டு, இலண்டன் விக்டோரியா இரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டான். அவனை இந்தியாவிற்கு ஏற்றிவந்த கப்பல் பிரான்ஸ் நாட்டின் மார்ஸெ நகரில் நின்றபோது, கப்பலின் ஜன்னல் வழியாகத் தப்பித்து ஓடிவிட்டான்.
ஆனால், பிரெஞ்சு நாட்டில் மீண்டும் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டார். இரண்டு குற்றங்களுக்கும் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்தமான் சிறையில் 04.07.1911 அன்று அடைக்கப்பட்டான்.
ஆனால் இவன் சிறைக்கு வந்த ஆறு மாத்தத்திலேயே பிரிட்டிஷ் அரசுக்குக் கருணை மனு போட ஆரம்பித்துவிட்டான். ஆனால் பிரிட்டிஷ் அரசு கருணை காட்டவில்லை.
24.11.1913இல் அப்போதைய கவர்னர் ஜெனரலின் நிர்வாகத்தில் உள்துறை பொறுப்பிலிருந்து ரெனினால்ட் கிராட்டோக் என்பவருக்கு, மண்டிபோட்டு மன்றாடி இரண்டாவது கருணை மனு போட்டான்.
அந்த கடிதத்தில் அவன் கூறியிருப்பதாவது ...
“1906-_1907இல் நிலவிய கொந்தளிப்பான, நம்பிக்கையற்ற சூழ்நிலைமை எங்களை சமாதானம், முன்னேற்றம் என்ற பாதையில் செல்லமுடியாமல் வஞ்சித்து விட்டது. இந்தியாவிலும் மனித குலத்தினதுரும் நன்மையை மனத்தில் கொண்டுள்ள எந்த மனிதரும் குருட்டுத்தனமாக அந்தப் பாதையில் இனி அடியெடுத்து வைக்கமாட்டார். எனவே, பல்வகையிலும் நல்லெண்ணமும் கருணையும் கொண்ட அரசாங்கம் என்னை விடுதலை செய்யுமானால், அரசியல் சட்டவகையான முன்னேற்றத்திற்கும் ஆங்கிலேய அரசாங்க விசுவாசத்திற்கும் மிக உறுதியான ஆதரவாளனாக மட்டுமே இருப்பேன்.
மேலும், அரசியல் சட்டவகையான மார்க்கத்திற்கு நான் மாறி வந்துள்ளது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரு காலத்தில் என்னைத் தங்களது வழிகாட்டியாகப் பார்த்துவந்த, வழிதவறிப் போன இளைஞர்களை மீட்டுக் கொண்டுவரும். எந்த வகையில் நான் அரசாங்கத்திற்குப் பணிபுரிய வேண்டும் என்று அது விரும்புகிறதோ அதற்குத் தகுந்தபடி நான் பணிபுரிவேன். ஏனெனில் எனது மனமாற்றம் எப்படி உணர்வுபூர்வமானதாக உள்ளதோ அதே போலவே எனது எதிர்கால நடத்தையும் இருக்கும் என நம்புகிறேன்.
என்னை சிறையில் வைத்திருப்பதன் மூலம் பெறப்படுவது, வெளியில் விடுவதனால் கிடைப்பதை ஒப்பிடுகையில் ஒன்றுமேயில்லை.
வலிமையுடையோரே கருணையுடையவராக இருக்க முடியும். எனவே, பாதை தவறிப் போன மகன் அரசாங்கம் எனும் பெற்றோர்களின் கதவுகளுக்குத் திரும்பிவராமல் வேறு எங்கு செல்வான்? இந்த விசயங்களை மாண்புமிக்க தாங்கள் அன்புடன் கருத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.’’
இப்படி கெஞ்சிக் கூத்தாடி மண்டிபோட்டு மன்னிப்பு கடிதம் எதுதியவன்தான் வீரராம்.
இவன் அந்தமான் சிறையில் என்ன செய்தான் தெரியுமா?
அந்தமானில் சாவர்க்கரின் சக கைதிகளிலொருவராக இருந்தவர் சக்ரவர்த்தி. சாவர்க்கரும் அவரது சகோதரர் கண்பதியும் சிறைக் கொடுமைகளைக் கண்டனம் செய்து, சிறையில் வழங்கும் உணவை உட்கொள்ளக் கூடாது, சிறையதிகாரிகள் சொல்லும் வேலைகளைச் செய்யக் கூடாது என்ற கைதிகளைத் தூண்டிவிடுகின்றனர்.
ஆனால், வேலை நிறுத்தத்தில் சேரவேண்டிய தருணத்தில் மோடி போல் அழத் தொடங்கிவிடுகிறான். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் தனிமைச் சிறையில் அடைக்கப்பட வேண்டியிருக்கும், வயதான காலத்தில் தன்னால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று.
ஆனால், அவரைவிட அதிக காலம் சிறையிலிருந்த, அவரைவிட வயதில் மூத்தவர்களாக இருந்த கைதிகள் பலர் மூன்ற வாரங்களுக்கு மேல் உணவு உட்கொள்ளாமல் இருந்தனர். கைதிகளின் போராட்டம் வெற்றியடைந்தது.
1921இல் அந்தமானிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, முதலில் ரத்தினகிரி சிறையிலும் பின் ஏர்வாடி சிறையிலும் அடைக்கப்பட்டான்.
அப்போது இவர் தன் குடும்பத்தவரை ஒன்றுதிரட்டி தனது விடுதலைக்கு பலவகையில் முயன்றான்.
சிறையிலிருந்து வெளியே வருவதற்காக “அய்ந்தாண்டுக் காலத்திற்கு அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் எவ்வகையான அரசியல் நடவடிக்கைகளிலும் அந்தரங்கமாகவோ அல்லது பகிரங்கமாகவோ ஈடுபடப் போவதில்லை’’ என்றும் “அய்ந்தாண்டுக் காலத்திற்குப் பிறகும் அரசாங்கம் விரும்பினால்இந்தக் கட்டுப்பாட்டைப் புதுப்பித்துக் கொள்ளலாம்’’ என்றம் ஒரு உறுதிமொழி எழுதித் தருகிறான். இந்த உறுதிமொழியைப் பதிவு செய்யும் அரசாங்கத் தீர்மானம் கூறுகிறது:
சாவர்க்கர் இந்த நிபந்தனைகளுக்கான ஒப்புதலை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். இது அவரது விடுதலைக்கான நிபந்தனையாக இருக்காது என்ற அவரிடம் எடுத்துச் சொல்லப்பட்டபோதிலும் அவர் கீழ்க்கண்ட அறிக்கையை சமர்பித்துள்ளார் “என்மீது நடத்தப்பட்ட விசாரணையும் அளிக்கப்பட்ட தண்டனையும் நீதியானதும் நியாயமானதும் என்பதை இதன் மூலம் ஏற்றுக் கொள்கிறேன். கடந்த காலத்தில் நாடியது போன்ற வன்முறை வழிமுறைகளை மனதார வெறுக்கிறேன். சட்டத்தையும் அரசமைப்பையும் எனது முழுச் சக்திக்கும் ஏற்ற வகையில் உயர்த்திப் பிடிப்பது எனது கடமை என்று உணர்கிறேன். எதிர்காலத்தில் எந்த அளவுக்கு எனக்கு அனுமதி வழங்கப்படுகிறதோ அந்த அளவிற்கு (அரசியல்) சீர்திருத்தத்தை வெற்றிகரமானதாக்க விருப்பம் கொண்டிருக்கிறேன்.’’
1924இல் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் ஏரவாடா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டான்.
அவனுக்கு அளித்த நிபந்தனை 1.ரத்னகிரி மாவட்டத்தை விட்டு அரசாங்கம் அல்லது மாவட்ட நீதிபதியின் அனுமதியின்றி எங்கும் செல்லக் கூடாது.
2. அய்ந்தாண்டுக் காலத்திற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் எத்தகைய அரசியல் நடவடிக்கைகளிலம் ஈடுபடக் கூடாது. இந்தக் காலக் கெடுவை அரசாங்கம் விரும்பினால் தொடர்ந்து நீட்டிக்கலாம்.
“எத்தகைய அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை’’ என்ற உறுதிமொழியின் பேரில் விடுதலையான சாவர்க்கர் ‘சும்மா’ இருக்கவில்லை. ரத்னகிரியில் அவரைச் சந்தித்து அவரது ஆதரவைப் பெற்ற பிறகே டாக்டர் எச்.பி.ஹெட்கெவர், 1925இல் ஆர்.எஸ்.ஆர். அமைப்பை நிறுவினான்.
இதே ஆண்டில்தான் சாவர்க்கர் நான்காவது முறையாக பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் வெடித்த வகுப்புக் கலவரம் தொடர்பாக புனெவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘மராத்தா’ என்ற பத்திரிகையின் மார்ச் 1925 இதழில் முஸ்லிம் விரோத - இந்து வகுப்பு வெறிக் கட்டுரையொன்றை சாவர்க்கர் எழுதியிருந்தான். அதனைக் கண்டித்து அரசாங்கம் அவரது விடுதலையை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்ததுதான் தாமதம், உடனே, 6.4.1925இல் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், ஒரு நீண்ட தன்னிலை விளக்கம் கொடுக்க வாய்ப்புத் தரப்பட்டதற்காக நன்றி செலுத்தும் சாவர்க்கர்’’.
“எனது கட்டுரையில் ‘சுயராஜ்யம்’ என்ற வார்த்தை வருகிற ஒரே இடம், மூன்றாவது பத்தியின் இறுதியில்தான். அந்த வார்த்தை அங்கு குறிப்பிடப்படுவது நானோ அல்லது மற்றவர்களோ ‘சுயராஜ்யம்’ என்பதைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதைக் காட்டவோ சுட்டவோ செய்வதில்லை என்பது வெளிப்படை’’ என்று எழுதினார்.
‘சுயராஜ்யம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்ட ‘வீர’ சாவர்க்கர் மீது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் 1937 வரை நீடித்தன. 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி நடந்த முதல் மாகாண சட்டசபைத் தேர்தல்களில் பம்பாய் மாகாணத்திலும்கூட காங்கிரஸ் பெரும் வெற்றி கண்டிருந்தபோதிலும், உடனடியாக அரசாங்கப் பொறுப்பை மேற்கொள்ள முன்வரவில்லை.
இந்து மகா சபையின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவை 10.5.1937இல் சாவர்க்கரை விடுதலை செய்தது.
இந்தியா விடுதலை அடைந்தபின் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவன்., 22.2.1948இல் பம்பாய் நகரக் காவல்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதுகிறான். அதில், “நான் ஒருபோதும் வெறுப்பை ஊக்குவிக்கவோ முகமதியர்களை முகமதியர்கள் என்பதற்காக அவர்களை வெறுக்கும்படியோ அல்லது அவர்கள்மீது வன்முறைச் செயல்களைப் புரியும்படியோ இந்துக்களை ஒருபோதும் தூண்டிவிட்டதில்லை’’ என்று பச்சைப் பொய் கூறினான். ஆனால் அனைத்து செயத்திட்டமும் நீட்டியது இவன்தான். இந்த செய்தி இவன் செத்த பிறகுதான். நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதாவது ஜெயலலிதா வழக்கு போல்.
எனக்கு இப்போது 65 வயதாகிறது. கடந்த மூன்றாண்டகளாக, நெஞ்சுவலி, நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக அடிக்கடி படுத்தப் படுக்கையாக இருக்கிறேன். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நமது புதிய தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டு அதனை என் வீட்டில் ஏற்றிவைத்தேன். இது எனது ஆதரவாளர்கள் சிலருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது...
எனவே, சந்தேகம் அனைத்தையும் களையும் பொருட்டும் எனது கோரிக்கை மனுவிற்கு வலுச் சேர்க்கும் பொருட்டும் அரசாங்கம் விரும்புகிற எத்தனை காலத்திற்கும் வகுப்பு அல்லது அரசியல் சார்ந்த பொது நடவடிக்கை எதிலும் பங்கேற்க மாட்டேன் என்ற உறுதிமொழியை _ இந்த நிபந்தனையுடன் எனக்க விடுதலை வாங்கப்படுமேயானால் _ தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றான்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நடந்த கொடூரமான வகுப்புக் கலவரங்களின் காரணமாக அந்தநத நாடுகளில் உள்ள மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தியப் பிரதமர் நேருவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்குமிடையே 1950இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை இந்துமகாசபை எதிர்த்ததால், நாட்டில் வகுப்புக் கலவரம் மூளும் அபாயம் இருப்பதாக மத்திய அரசாங்கம் கருதியது. சாவர்க்கரும் வேறு முக்கிய இந்துமகா சபைத் தலைவர்களும் ‘1950ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்’ கீழ் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் வைக்கப்பட்டவுடனேயே வழக்கம்போல சாவர்க்கரின் கோழைத்தனம் தலைதூக்கியது. 21.4.1950 அன்று பம்பாய் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் “அரசாங்கம் நிர்ணயிக்கிற எத்தனை காலத்திற்கும் நடப்பு அரசியலில் எந்தவிதப் பங்கும் மேற்கொள்ளாமல் இருப்பதாக’’ உறுதிமொழி எழுதித் தருவதாகக் கூறினார். மேலும், “அரசியல் களத்திலிருந்து தான் விரைவில் ஒய்வு பெறப் போவது அனைவரும் அறிந்த விசயம்’’ என்றும் கூறினார். நீதிமன்றத்தில் அவர் சார்பில் வழக்கறிஞர் கே.என்.தாரப் என்பார் கொடுத்த உறுதிமொழிகள் பேரில் விடுதலை செய்யப்பட்டார்.
இப்படிப்பட்ட கடைந்தெடுத்தக் கோழையைத்தான் வீர சாவர்க்கர் என்கிறது ஆரியப் பார்ப்பனக் கூட்டம். இவருக்குத்தான் நாடாளுமன்றத்தில் சிலை வேறு.. இந்த மயிரு என்ன செய்துவிட்டான் என்று இவனுக்கு சிலை.? இந்து மகா சபை அமைப்பை ஏற்படுத்தி சுதந்திர போராட்டத்துக்கு எதிராகவும், ஆங்கிலேயர்களுக்கு சாதகமாகவும் இருந்ததை விட இவன் இவன் நாட்டுக்கு செயத தியாகம் என்ன?
இவன் அமைத்த இந்து மகாசபை தான் இன்று உள்ள அனைத்து இந்துத்துவா இயக்கங்களின் தாய் அமைப்பு. இந்த யோகியனை தான் வீர் சாவுக்கார் என்றும் சுந்ததிர போராட்ட வீரர் என்றும் காவிகள் கூவி திரிகிறார்கள். கோழைகள் எல்லாம் இந்த காவிகளுக்கு விரர்களாக தெரிகிறார்கள். எந்த அடிப்படை பிரச்னைக்கும் போராடத இனம் தான் பார்ப்பன இனம். கோட்சேவுக்கே சிலைகள் வைக்கும்போது அவனின் குருஜியான சாவக்கரை வீரர் என்று காவி கும்பல் கூறித் திரிவத்தில் ஆச்சரியமில்லை.

கருப்பு ஜூலை 02

அந்த கலவரம் பெரும் கொடியவன்முறை, நாட்டின் குடிமக்களை அரசே கொன்றுகுவித்த பயங்கரம். அதுதான் உண்மையில் "இனபடுகொலை", நடந்த கொடூரங்கள் அப்படி.
தமிழர்களின் வீடுகள், அரசின் வாக்காளர் அடையாள பட்டியலின் நகலாக எல்லா ரவுடிகளின் கையிலும் கொடுக்கபட்டது, பெட்ரோல்கள் ரகசிய இடங்களில் சேமிக்கபட்டது. பாதாள உலக குண்டர் தலைவர்கள் எல்லாம் சிங்கள அமைச்சர்களோடு பேசிகொண்டே இருந்தார்கள்.
அதாவது கொஞ்சகாலமாகவே முன் தயாரிப்புகள் மிக கடுமையாக நடத்தபட்டிருந்தது. முதல் ஆயுதபோராளியான குட்டிமணிகுழு சிறையில் இருந்தது, அவர்களையும் கும்பல் மனதில் வைத்திருந்தது.
ஜூலை 23 அன்று, கிட்டதட்ட 50 வருடங்களாக அனாரிகா தர்மபால ஊட்டிய அந்த ஈழதமிழர் வெறுப்பு, அன்று மொத்தமாக கொழும்பில் தீயாக இறங்கியது. பாதிக்கபடாத தமிழர் இல்லை. எரியாத தமிழர் சொத்துக்கள் இல்லை.
தமிழர் எரிந்துகொண்டிருக்கும் பொழுது வழியில் சென்ற சிங்கள்ருக்கு எல்லாம், தமிழரின் பணமும்,நகையும் அள்ளிகொடுக்கபட்டன. அந்த உற்சாகத்தில் அவர்கள் 2 லிட்டர் பெட்ரோலை கூடுதலாக ஊற்றிவிட்டு சென்றார்கள்.
வெலிக்கட சிறையில் குட்டிமணி குழு கொடூரமாக சிதைக்கபட்டு கொல்லபட்டது, இன்னும் ஏராள படுகொலைகள். இந்திய தூதரே கொழும்பில் அபூர்வமாக உயிர்தப்பிய பின் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?
ஆயினும் ஏராளமான சிங்கள மக்கள் அப்பாவி தமிழர்களை தங்கள் வீடுகளில் வைத்து காப்பாறியதையும் மறக்கமுடியாது, உண்மையான பவுத்தர்கள்.
கிட்டதட்ட 10,000 தமிழர்களுக்கு மேல் இறந்திருக்கலாம், ஆனால் அவர்களின் சொத்துக்கள் முழுமையாக அழிக்கபட்டன, தமிழ்பெண்களின் நிலை, இரண்டாம் உலகபோரில் சீனபெண்களின் நிலையில் இருந்தது.
உலகம் கொந்தளித்தது, ஜெயவர்த்தனே அமைதியாக சொன்னார் "புலிகள் வடக்கில் எமது மக்களை கொன்றதன் சிங்கள எழுச்சி இது, அரசு என்ன செய்யமுடியும்?"
உண்மையில் ஜெயவர்த்தனேவும் கைதியாக்கபட்டுதான் இருந்தார், காரணம் அரசியல், அடுத்த சிங்களமக்களின் நம்பிக்கையை பெறுவது யார்? எனும் இரண்டாம் தலைவர்களின் அரசியல் விளையாட்டு.
மனிதாபிமான அடிப்படையில் இந்தியா களமிறங்கியது, களமிறக்கபட்டவர் அந்நாளைய வெளியுறவுதுறை அமைச்சர் நரசிம்மராவ். ஆனாலும் கிட்டதட்ட அவமானபடுத்தபட்ட நிலையில் திரும்பினார். கொழும்பு எரிவதை நேரில் கண்டவர் அவர், காரணம் கலவரம் 1 வாரம் நீடித்தது.
இனி அழிக்க ஒன்றுமில்லை என்பதால் கொழும்பில் கலவரம் ஒய்ந்தது அல்லது கொன்று கொன்று சிங்களர் களைத்துவிட்டார்கள், ஆனாலும் பின்னர் உயிர்தப்பிய தமிழர்களை வடக்கே அனுப்ப அரசு தயாரானாது.
நரசிம்மராவிற்கு நடந்த அவமானத்தை, தனக்கே நடந்ததாக பொறுமினார் இந்திரா, விளைவு போராளிகளுக்கு பயிற்சிகள் இந்தியாவில் பயிற்சிகொடுக்க உத்தரவிட்டார்.
இந்தியா இலங்கையில் நுழைய ஆரம்பித்த தருணமிது, ஒருபடிமேலே சென்று "இனியும் தமிழருக்கு எதிரான‌ தாக்குதல்களை இந்தியா பொறுக்காது" என மிரட்டியவர் இந்திரா, அதன்பின் கலவரங்களை நடத்த சிங்களம் அஞ்சியது.
போராளிகளுக்கு இந்திய பயிற்சியும், புலிகளின் முணுமுணுப்பும் ஆனாலும் இந்திரா காலம்வரை அவர்கள் அமைதியும் ரகசியம் அல்ல. அதன்பின் இந்திரா மிரட்டிய மிரட்டலில் அவர்காலம் வரை எந்த கலவரமும் இல்லை
ஆனால் இந்திரா அகாலமரணமடைந்தபின் பெருமூச்சுவிட்ட ஜெயவர்த்தனே, ஆட்டத்தை மாற்றினார், இம்முறை கொழும்பு அல்ல வடமராட்சி.
புலிகளை ஒடுக்குகிறேன் என யாழ்பாண பகுதியை முற்றுகையிட்டு 3 லட்சம் தமிழரை கொல்ல தயாரான பொழுதுதான், ராஜிவ் காந்தி இலங்கை அனுமதியே இல்லாமல் போர்விமானங்களை அனுப்பி உணவுகளை வீசி இலங்கையை மிரட்டினார்.
இது இந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸ், இல்லாவிட்டால் ஜூலை கலவரம் போல அடுத்த கலவரம் யாழ்பாணத்தில் நடந்திருக்கும்.
சிங்களன் திருந்தமாட்டான் ஒவ்வொருமுறையும் இந்தியா காப்பாற்ற வரமுடியாது என்றுதான், இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தபட்டது.
ஜூலை பெரும் கலவரத்தினை தொடங்கிவைத்த அந்த குண்டுவெடிப்பினை நடத்தியபுலிகள் இதனை காதில் வாங்கவில்லை, எமது மக்கள் எமது மண்ணிற்காய் சாவதில் என்ன தவறு? என்றார்கள். அகதியாய் ஓடுவதுபற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் அகதிகளை பராமரித்துகொண்டிருந்த இந்தியாவிற்கு தார்மீக கடமை இருந்ததை யார் மறுக்கமுடியும்?
ஆனால் புலிகள் சிங்கள ராணுவத்தை தாக்க தாக்க, மற்ற அப்பாவி தமிழர் கலவரங்களில் கொல்லபடுவர் என்பதை தடுக்கத்தான் இந்திய அமைதிபடை அனுப்பபட்டது.
அதுவும் கண்ணியில் சிக்கவைக்கபட, அவமானத்தோடு திரும்பியது இந்தியா 1500 வீரர்களையும் இழந்து. அங்கே தந்திரசாலி பிரேமதாசாவும் புலிகளின் பெரும் பலமான ஆண்டன் பாலசிங்கமும் சிரித்துகொண்டிருந்தார்கள். உச்சமாக ராஜிவும் கொல்லபட்டார்.
ஆனால் அதுலத்முதலியும், ஜெயவர்த்தனேயும் 1983ல் ஜூலையில் சொல்லிகொடுத்த அந்த பாடத்தை சிங்களம் மறக்கவே இல்லை. வாய்ப்புகிடைத்தால் மொத்தமாக நொறுக்குங்கள்.
1983க்கு பின் சர்வதேச அழுத்தத்தால் கொழும்பிலோ அல்லது மற்ற பகுதிகளிலோ பெரும் கலவரம் இல்லை. ஆனால் புலிகள் ராணுவம் மோதிகொண்டே இருந்தனர்.
வாய்ப்புக்காக காத்திருந்த சிங்களம், முள்ளிவாய்க்காலில் சுத்திகொண்டது.
காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என குரலொலிகள் எழுப்பபட்டன, யாரை காப்பாற்ற குரலொலி எழுப்பபட்டது என்பது இந்தியாவிற்கு புரிந்தது. சென்னை பாண்டிபஜாரில் காப்பாற்றி, வடமராட்சியில் காப்பாற்றி, இன்னும் எங்கெல்லாமோ இந்திய அரசு காப்பாற்றிய "அவரை" காப்பாற்றத்தான், அவர் படத்தோடு லண்டனில் ஊர்வலம் சென்றதை உலகமும் புரிந்துகொண்டது.
ஜூலை கலவரத்தில் வெகுண்டெழுந்த இந்தியா, வடமராட்சியில் இலங்கையை மிரட்டிய இந்தியா இம்முறை அமைதியானது, காரணம் எல்லோருக்கும் புரியும்.
ஜூலை 23 கலவரத்திற்கு பின்னால்தான், ஈழத்தில் இந்தியா நுழைய தமிழகம் ஈழ எதிர்பினை தீவிரமாக்கியது, அகதிகள் தமிழகம் வந்தனர். பிரச்சினை கூடியது, உச்சமாக அமிர்தலிங்கம் சென்னை வந்தார். அவரை வரவேற்பதில் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் பலத்தபோட்டி, வழக்கம்போல எம்ஜிஆர் ஜெயித்தார்.
அதுவரை திராவிடம்,அண்ணாயிசம், தமிழ், வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு மேல்சபை, மதுக்கடை, என சண்டைபோட்டுகொண்டிருந்த இருவரும் மிகவும் விரும்பியது இந்திரா காந்தியுடனான நல்லுறவு.
அதற்காக இருவரும் தீவிர ஈழ ஆதரவை எடுத்து அவரை மகிழ்ச்சிபடுத்திகொண்டனர். எம்ஜிஆர் ஒருபடிமேலே சென்று பிரபாகரனை இந்திய பயிற்சியில் சேர்த்து இந்திராவின் "குட்புக்"கில் இடம்பிடித்தார்.
ஆனால் இந்திரா மறைவும், பின் அமைதிபடை காலத்தில் எம்.ஜி.ஆரும், ராஜிவ் மரணம் தொடர்ந்து கலைஞரும் அமைதியாயினர். அதன்பின் வை.கோவும் , நெடுமாறனும், ஆரம்பகால புலிகள் அமைப்பின் ஆதரவான திராவிட அமைப்புக்களும் ஈழபிரச்சினையை ஒரே வார்த்தைக்குள் அடக்கின‌
"ஈழம் ‍அதாவது பிரபாகரன்"
கொழும்பில் நடந்த மனிதவெடிகுண்டில் பள்ளிகுழந்தைகள் கொல்லபட, ஐரோப்பிய அமைப்பு புலிகளை தடை செய்தது, தாக்குதலில் உயிர்தப்பிய பொன்சேகா, அமெரிக்கா அனுப்பிய கோத்தபக்சே என சகலரும் சேர்ந்து முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்தாகிற்று.
அப்படியாக ஜூலை 23 இதேநாளில் 1983ல் தொடங்கிய கலவரம் மூலம் தமிழகத்தில் வலுவான ஈழ அரசியல், இந்திராவிற்கு பயந்த இரு தலைவர்களால் பெரும் தீயாக பற்றவைக்கபட்டு பின் அணைந்தும் விட்டது.
சேகுவாராவோடு சேர்ந்து உலகெல்லாம் தமிழருக்காக உழைத்துவிட்டு, துரதிருஷ்டமாக மிக தாமதமாக தமிழகம் வந்த ஒரு செந்தமிழன் அணைந்துவிட்ட அந்தபெரும் காட்டின் கரிகட்டையை ஊதி தீ வரும் என சொல்லிகொண்டிருக்கின்றார்.
அது கரிகட்டை என்றாலும் பரவாயில்லை அது கல், அட அது தீ பிடித்தாலும் பரவாயில்லை, அந்த தீயை கொண்டு இந்துமாக்கடலை எரித்து கொழும்பை பிடிப்பேன் என்கின்றார் பார்த்தீர்களா? அதுதான் விஷயம்.
மே 17 பெயரில் ஒரு டஜன் இயக்கங்கள் சுற்றும் தமிழகம் இது, ஆனால் உண்மையில் மிக கொடூரமான ஈழ இழப்புக்கள் இரண்டு. ஒன்று யாழ்பாண நூலக எரிப்பு, இன்னொன்று ஆடிமாத அதாவது ஜூலை 23 இனபடுகொலை
இதனை எல்லாம் பற்றி ஏன் இவர்கள் நினைவுகூறபோகின்றார்கள்? அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அவர் மட்டுமே, அவர் கொல்லபட்ட முள்ளிவாய்க்கால் மட்டுமே.
இதனை விட எல்லாம் விஷமான விஷயம் உண்டு, 2002 முதல் 2005 வரை பலர் காவடி எடுத்து சென்று பிரபாகரனை தரிசித்தனர். அதில் உலக அரசியலை பேசும் துறவியும் உண்டு, ஜெகத் கஸ்பர் என அவருக்கு பெயர்
அவரிடம் பிரபாகரன் சொன்னாராம் "1983க்கு பின் கொழும்பில் கலவரம் இல்லை பார்த்தீர்களா? காரணம் எம்மேல் உள்ள பயம்"
அப்பாவியல்ல "பாவி" துறவியும் அதனை சொல்லி வியக்கின்றார் " அதன்பின் இந்திய தலையீட்டில் கலவரம் இல்லையா? அல்லது புலிகளுக்கு பயந்தா? புலிகளுக்கு பயந்தால் ஏன் உங்களை வடமராட்சியில் சுற்றிகொள்ள போகின்றார்கள்??" என இவர் கேட்கவுமில்லை, கேட்டால் இவரை அங்கேயே சிலுவையில் அறைந்திருப்பார்கள் என்பது வேறுவிஷயம்.
அவ்வளவு பயந்திருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் கொள்ளிகுடம் உடைக்கபோகிறான் சிங்களன்.
பரப்பபட்ட பொய்கள் அப்படி, தமிழக பத்திரிகைகளும் இதனை கொட்டை எழுத்தில் வெளியிட்டன, இப்படியாக இவர்கள் உருவாக்கும் பிம்பம் இப்படி பொய்யானது, மகா ஆபத்தானது.
சீமானை போலவே இந்த போலிசாமியார் ஜெகத் கஸ்பர் என்பவரும் மகா ஆபத்தானவர், மனிதர் இப்பொழுது கொஞ்சம் அடங்கியிருக்கின்றார், அது அவருக்கு நல்லது. ஆனால் சொன்ன பொய்களுக்கு அவர் இன்னும் பாவ சங்கீர்த்தனம் செய்யவில்லை
சீமான் போன்ற நரிகள் இந்த நாளுக்கெல்லாம் அஞ்சலி செலுத்தவராது, அவர்கள் இன உணர்வு பிரபாகரனை மட்டும் பிடித்து தொங்கிகொண்டிருக்கும்.
அம்மக்கள் சாவதை கண்ட இந்தியா, எப்படி எல்லாம் துடித்து சென்று அவர்களை காப்பாற்றி, அவர்களுக்காக துணை நின்றது என்றெல்லாம் நினைக்க வேண்டிய நாள் இது, உலகமே கண்டுகொள்ளாத அந்த கொடூரத்தை கண்டித்து இலங்கையினை மிரட்டி களமிறங்கியது இந்தியாதான்
இந்த தமிழக ஈழ அல்ட்ராசிட்டிகள் இந்த நாளை மறைக்க காரணமும் அதுதான், அதனை சொன்னால் இந்தியா கலவரத்தை நிறுத்திய விஷயங்களையும், இலங்கை தமிழருக்கு துணை நின்ற விவகாரங்களையும் சொல்லவேண்டி வரும்.
இவர்கள்தான் இலங்கை தமிழர்களின் பாதுகாவலர் என சொல்லிகொள்பவர்கள்.
முள்ளிவாய்க்காலை விட ஆயிரம் மடங்கு கொடூரமானது ஜூலை 23 கலவரம். அந்த மக்களுக்காக அன்னை இந்திரா விட்ட கண்ணீர்போல நாமும் கண்ணீர் விடுவோம்.
அந்த மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், மறக்கவே முடியாத ரணம் அது.
தர்மங்கள் தோற்பதில்லை, காலம் மாறும்.

கருப்பு ஜூலை 01

சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே ஏன் அதற்கு முன்பே சிலோன் என அழைக்கபட்ட பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அவ்வளவு சுமூக உறவு என சொல்லமுடியாது.
ஒரு கட்டத்தில் சிலோனின் தலமையகத்தை சென்னைக்கு பிரிட்டிசார் மாற்றிய பொழுதே, "ஐயகோ இது இந்திய இணைப்பின் முன்னோட்டம்" என வரிந்துகட்டி பிரித்து சென்றவர்கள் இலங்கையர், உபயம் அனாரிகா தர்மபாலா எனும் அவர்களின் புத்தனின் தூதுவன் + யாழ்பாணதமிழர்கள்.
நேருகாலத்தில் 5 லட்சம் இந்தியா வம்சாவழி தமிழரை திரும்ப அனுப்பியதிலிருந்து இலங்கை இந்தியா உரசல் தொடங்கியது, அதாவது இந்திய தரப்பில் முணுமுணுப்பு,இலங்கை தரப்பில் மாபெரும் வெற்றி. யாழ்பாணர் தரப்பில் ஒரு திருப்தி.
படிப்பறிவில்லை,நாகரீகமில்லை பஞ்சம் பிழைக்கவந்த பரதேசி வம்சம் விட்டால் மக்கள்தொகை கூடி வோட்டுவங்கிக்கு வந்து நமக்கு சரிக்கு சரியாக அமர்ந்தால் எப்படி? சீ சீ விரட்டியாயிற்று. நாகரீகம் முக்கியம், கல்வி முக்கியம் தமிழரவாது? தொப்புள்கொடியாவது? வெட்டிவிட்டாயிற்று.
நேரு அப்போது இந்தியபிரதமர், ஆசிய ஓற்றுமை, பஞ்சசீலம் என என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருந்தார். சீனா பின்மண்டையில் அடிக்கும்வரை அவருக்கு உரைக்கவில்லை, அடிபட்டதும் அப்படியே கோமா நிலை.
அதன்பின் இந்திய தலையீடு இலங்கையில் இல்லை, ஆனால் வாய்ப்பு கம்யூனிஸ்டுகள் வடிவில் வந்தது.
உலகெல்லாம் கம்யூனிசதாக்கம், இலங்கையிலும் வந்தது. கட்சியின் பெயர் சிங்களத்தில் ஜனதா விக்தி பிரமுணா சுருக்கமாக ஜேவிபி , தமிழில் மக்கள் விடுதலை கட்சி. கட்சி 1971ல் திடீர் புரட்சி செய்து கொழும்பை முடக்கியது. பெயருக்கு ஒரு ராணுவம் இருந்த இலங்கை கையை பிசைந்து நின்றது, உலகநாடுகளுக்கு உதவிகரம் கேட்டது.
இந்தியபடைகள் அனுப்பபட்டன, முதல் முறையாக இந்தியராணுவம் இலங்கைக்குள் கால்பதித்து, கிளர்ச்சியை அடக்கி மறுபடியும் பண்டாரநாயகாவினை ஆட்சியாளராக்கிவிட்டு திரும்பியது, எந்த இலங்கையரும் அப்போது அதனை ஆக்கிரமிப்புபடை அல்லது கற்பழிப்புபடை என சொல்லவே இல்லை.
கலவரம் ஓய்ந்ததும் வாழ்த்தி அனுப்பினர் இந்தியபடைகளை.இந்தியா நேரடியாக இலங்கையில் தலையிட்ட முதல் நடவடிக்கை இதுதான், ஆனாலும் அந்த கிளர்ச்சி அடக்குவதில் பாகிஸ்தானும் படைகளை அனுப்பியிருந்ததால் லங்கா பாகிஸ்தான் உறவும் வலுத்தது.
சிங்களம் பாகிஸ்தானுடனேதான் உறவாடியாது. இந்தியா கச்சதீவை கொடுத்து வேறுமாதிரி உறவினை வளர்க்க நினைத்த காலமிது.
அதன் பின் இலங்கையில் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் சிங்களருக்கு சலுகைகள் அள்ளிகொடுக்கபட ( அதேதான் நமது ஊரில் தாழ்த்தபட்ட மாணவனுக்கும் பிராமண மாணவனுக்கும் இட ஒதுக்கீடு உண்டல்லவா? அப்படித்தான் புரியவில்லை என்றால் மருத்துவகல்லூரி அட்மிசனை சென்றுபார்க்கவும்) தமிழ் மாணவர்கள் போராட கிளம்பினர்.
அதுவரை சாத்வீகமாக நடந்த எதிர்ப்புகள் அதன்பின் வன்முறையாக மாறின, அதனை ஈழதமிழ் அரசியல்வாதிகளும் பயன்படுத்திகொள்ள அதுபெருநெருப்பாக வளர்ந்தது.
போராளிகுழுக்கள் தோன்றின, 30க்கும் மேற்பட்ட குழுக்கள் தொடக்கத்தில் இருந்தது. போராளிகள் என்றால் பகலில் ஒழுங்காக வேலைக்கு சென்றுவிட்டு வார இறுதியிலோ அல்லது நள்ளிரவிலோ போராடமுடியாது. அவர்களுக்கு பணம் வேண்டும், ஆயுதம் வாங்க, பதுக்க,உண்ண, உறங்க,அறிக்கை விட, பேப்பர்வாங்க என ஏராளமான‌ பணம்வேண்டும்.
அதற்காக அரசுவங்கிகளை குறிவைத்தார்கள். அக்கால வசதியான பகுதி யாழ்பாண பகுதி, வங்கிகள் எல்லாம் கொள்ளைஅடிக்கபட்டன, அரசு கருவூலம் கொள்ளையடிக்கபட்டது இன்னும் ஏராளம்.
அடகுகடைகளும் தப்பவில்லை. இதில் பெரியகொடுமை என்னவென்றால் திருடர்களும் தாதாக்களும் திடீர்போராளிகளாகி கொள்ளையடித்துவிட்டு, அப்பணத்தில் பென்ஸ்காரில் போய்கொண்டிருந்தார்கள்.
அன்று வெள்ளையர் விட்டுசென்ற ஆட்சிமுறைபடி சிங்களர்பகுதியில் தமிழ் போலிசாரும், தமிழ்பகுதியில் சிங்களபோலிசாரும் அதிகம். வங்கிகொள்ளை என்றால் போலீஸ்தானே காவலுக்கு வரும். போராளிகளின் அடுத்தகுறி காவல்நிலையம் மீது திரும்பிற்று, சிங்கள போலிசார் பலியாக ஆரம்பித்தனர்.
இது சிங்களர் அதிகம்வாழும் பகுதிகளில் ஆத்திரத்தை கிளப்பிற்று, கொஞ்சம் கொஞ்சமாக பதற்றம் கூடிற்று. ஆனால் போராளிகளோ காவல்துறையினர கிட்டதட்ட முடக்கும் நிலைக்கு வந்தாயிற்று. போலீஸ் என்றால் எத்தனை திருடர்களுக்கு, கடத்தல்காரர்,சாராயவியாபாரிகளுக்கு கசக்கும், அவர்களும் போலீசாரை தீர்த்துகட்டிவிட்டு நாங்கள் போராளி என சொல்லிகொண்டனர்.
போலீஸ் முடியாவிட்டால் ராணுவம்தான் வரும், வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ராணுவம் மேல் தாக்குதல் நடந்தது. ஒன்றும் உருப்படியில்லை. கண்ணிவெடி ராணுவத்திற்கு வைத்தால் செம்மறிஆட்டு கூட்டம் சிதறும், என்னசெய்ய உப்புகண்டம் போடவேண்டியதுதான்.
இந்நிலையில் புலிகள் அமைப்பு பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டது, பெரும் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை கொலைவழக்கில் தப்பிசென்ற செல்லகிளி பம்பாயிலிருந்து யாழ்பாணம் திரும்பியிருந்தார், அவர்தான் தாக்குதலுக்கு தலமை பொறுப்பு.
கொழும்பில் அமைச்சர்கள்,சிங்கள ரவுடிகள் எல்லாம் ஒரு கூட்டம்போட்டு முடிவெடுத்தனர். அதாவது இனி வடக்கில் சிங்கள் மீது தாக்குதல் நடந்தால் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் பெரும் தாக்குதலை நடத்தவேண்டும், அது தமிழரின் வாழ்வில் மறக்கமுடியாத அடியாக அமையவேண்டும். ஆனால் முந்தகூடாது ஆனால் வாய்ப்பு வரும்பொழுது விடவும்கூடாது.
அப்படி அடிக்காவிட்டால் சிங்கள மக்களின் அபிமானத்தை இழந்துவிடுவோம், பெரும்பான்மை இனம் சிறுபான்மையினரிடம் அடிவாங்கினால் அது தற்கொலைக்கு சமம் அல்லவா? என்றெல்லாம் வெறியேற்றிகொண்டார்கள்.
இருபக்கமும் அடிப்பதில் தீர்மானமானமானர்கள், புலிகளுக்கோ ஏராளமான ராணுவத்தினரை கொன்று கவனத்தை திருப்பும் நோக்கம். சிங்களருக்கோ கொழும்புவாழ் தமிழரை மொத்தமாக கொல்லும் பயங்கரதிட்டம், காரணம் போலீஸ் பிணங்களாக சிங்களபகுதிக்கு வந்துகொண்டிருந்தன.
போராளிகுழுக்களில் ஒன்றான டெலோ அமைப்போ வெலிக்கடை சிறையில் இருந்த குட்டிமணி குழுவை எப்படி தப்பவைப்பது என திட்டமிட்டு மேப் வரைந்துகொண்டிருந்தது.
தமிழகத்திலோ ஈழ அரசியல் அப்போது அறவே இல்லை, கச்சதீவு பிரச்சினை இல்லை. எம்.ஜி.ஆர் முதல்வர், கலைஞர் எதிர்கட்சி. காங்கிரஸ் இந்திரா புண்ணியத்தில் உயிரோடு இருந்தது. கலைஞரும் எம்ஜிஆரும் அறிக்கையில் மோதுவார்கள், மக்கள் பார்த்துகொண்டு எம்ஜிஆருக்கு வோட்டளிப்பார்கள், கருணாநிதி கடுப்பில் "தமிழன் சோற்றுபாணை", "பிண்டம்" என முரசொலியில் தீட்டிகொண்டிருப்பார்.
மொத்த இந்தியகவனமும் பஞ்சாபில் இருந்தது, பிந்திரன்வாலே குழு அப்படி அட்டகாசம் செய்துகொண்டிருந்தது.
இந்திராகாந்திக்கோ இலங்கைமேல் திரிகோணமலை விவகாரம் தொடர்பாக கடுப்பு இருந்தது, வாய்ப்பு கிடைத்தால் ஆட்டம் ஆட தயாராக இருந்தார்.
புலிகள் தாக்குதலுக்கு நாள்குறித்தனர் ஜூலை 23 என முடிவெடுத்தனர் (தயாராக பாறைகளை உடைக்கும் வெடிமருந்தை சிங்கள சிமெண்ட் ஆலையிலிருந்து கடத்தினர்). தலமை செல்லகிளி
கிட்டு,மாத்தையா,விக்டர்,பிரபாகரன் என ஆரம்பகால புலிகளின் டீம் களத்தில் இறங்கியது. ராணுவதாக்குதலில் நேரடியாக
பிரபாகரன் பங்கெடுத்த ஒரே தாக்குதல் இதுமட்டுமே. அதன் பின்பு எல்லாம் பங்கர்
பின்னாளில் திட்டம் மட்டும் அவருடையது, யாராவது தளபதிகள் திறமையாக தாக்குவார்கள்.
யாழ்பாணம் திருநெல்வேலி சந்திப்பில் டெலிபோன் டிபார்ட்மெண்ட் வெட்டிவைத்த குழியில் கன்னிவெடி வைத்து காத்திருந்தார்கள். இரவில் இரு ராணுவ வாகனங்கள் ரோந்துவந்தன, எல்லா புலிகளும் பொசிஷனில் தயாராக இருந்தார்கள், கையில் இருந்த விசையை ( நமது ஊரில் கிணறுதோண்ட வெடி வைப்பார்கள் அல்லவா? அதே கருவி) செல்லகிளி இயக்க முதல்வாகனம் தப்பி இரண்டாம் வாகனம் சிக்கியது.
குறிவைத்தது முதல்வாகனத்திற்கு, சிக்கியதோ இரண்டாம் வாகனம், ராணுவத்தார் சுதாரிப்பதற்குள் புலிகள் தாக்கினர், 13 பேர் பலி இருவர் ஓடிவிட்டனர்.
(ஆச்சரியமாக ராணுவம் எதிர்தாக்குதல் நடத்தா நிலையிலும் செல்லகிளி குண்டுபாய்ந்து இறந்திருந்தார். எப்படி சாத்தியமானது என இன்றுவரை தெரியவில்லை. பெரும் மர்மம் அவர் சாவு, ஆனால் பிரபாகரன் தனது ஒரு உரையில் கூட தைரியம் மிக்க இவரைபற்றியோ அவரது மர்ம மரணம் பற்றியோ சொல்லாதது கூடுதல் மர்மம்.
இவரது சடலமும் மிக அவசரமாக எரியூட்டபட்டது, மாவீரர் கல்லறை எல்லாம் இவருக்கு இல்லை, ஏன் என்று கேட்டால் கேட்டவர் "இனதுரோகி" ஆகிவிடுவார்.)
வாய்பினை எதிர்பார்த்திருந்த சிங்கள குழு நெட்டிமுறித்து கிளம்பினர், சும்மா அல்ல 13 பேர் உடலும் ரத்தம் வடிய வடிய மேலும் சிதைக்கபட்டு மக்களின் பார்வைக்கு வைத்தனர், இன்னும் சிங்கள் உடல்கள் வருவதாக பிரச்சாரமும் நடந்தது, ஜெயவர்த்தனே சிக்னல் கொடுத்துவிட்டு அமைதியானர், சிங்கள வெறிகூட்டம் கிளம்பிற்று
உலகின் அனைத்து தெய்வங்களும் கண்களை மூடிகொள்ள, அந்த பயங்கரம் தொடங்கியது, யூதர்களுக்கு நாசிகள் செய்ததற்கும், பிரிவினை காலத்தில் இந்திய எல்லையில் நடந்த ரத்தகளறிக்கும் கொஞ்சமும் குறையில்லா கொடுமை அங்கு தொடங்கிற்று.
இலங்கை தமிழருக்கு கருப்பு நாட்கள் அவை. அந்த கருப்பு ஜூலை நெருப்பாய் எரிய ஆரம்பித்தது.

ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே

'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'
- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.
ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாக பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை.
இந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.
ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்துவந்தது.
மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள் கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்துவந்த நீரை மனிதன் தட்டிப்பறித்துக்கொண்டான்.
இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.
ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.
அதைவிட முக்கியமாக கடற்கரையோட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.
சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும் அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சாளாற்று கழிமுக பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப்படியுங்கள்.
நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாக போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.
இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா?
'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் உள்ள 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று?
முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்கு சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமான பகுதியாக மாறியிருக்கிறது.
ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது'என.
காவிரி நீர் என்பது கர்நாடக தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.
மனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படபோவது நாம்தான்.
நேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளை பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர்வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்த தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.
காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.
முதலில் ஒரு அணையை கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.
பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும் நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.
மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளை கட்டமுடியாது. ஏரி, குளங்களைதான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.
சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா என கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.
அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி.
காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.
நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.
நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளை பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.
இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்.
“தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை
மெலிக்கும் காவிரிப் பேரியாற்று"
என்கிறது அகநானூறு (126 : 4-5)

காம காட்டுமிராண்டி கதைகளையெல்லாம் இந்து புராணத்தில் தான் அதிகம்

இந்துமத சாஸ்திரத்தில் உலகம் பாராட்டத்தக்க பதிவிரதையாக (பத்தினி) அய்ந்து பேரைக் குறிப்பிட்டுள்ளது..
இவர்கள் சீதை, அகல்யை, தாரை, துரோபதை, அருந்ததி இவர்களை நினைத்தால் புண்ணிய பாவம் எல்லாம் போய்விடும் என்று எழுதப்பட்டுள்ளது.
பெண் தெய்வங்கள் என்று கூறிக்கொண்டு இந்த பார்ப்பினர்கள் ஆண் கடவுள்களால் கற்பழிக்கப்பட்டதாகவும், புருஷன் கடவுள் பத்தாதென்று வேறொருவருடன் திரட்டு உறவு வைத்துக்கொண்டதாகவும் புராணங்களை எழுதியுள்ளனர்.
பெண் கடவுள்களுக்கே இந்த சோதனை என்றால் அக்கால பெண்களின் நிலை என்னவென்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்
இவர்கள் புராணத்தில் இந்த ஐந்து பேரும் முதல் நம்பர் விபசாரிகள் என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் மட்டும் அல்ல, அந்தக் காலத்து ரிஷிகள், தேவர்கள் என்பவர்களும் இவர்கள் போன்ற விபச்சாரத்தில் ஈடுபட்ட அயோக்கியர்கள்தான்.
அகல்யை: இவள் இந்திரனும் திருட்டுத்தனமாகக் கலவி செய்ததை புருஷன் கண்டு இருவருக்கும் சாபம் கொடுத்து இருக்கின்றான். அவள் பத்தினியாகிவிட்டாள்; அவன் தேவர்களுக்குத் தலைவன் ஆகிவிட்டான்.
தாரை : இவள் தன் புருஷனிடம் படிக்க வந்தவனிடம் சோரத்தனம் பண்ணி பிள்ளையும் பெற்றுவிட்டாள். பிள்ளையைக் கண்டு புருஷன் தன்னுடையது என்றான். சந்திரன், நான்தானே கொடுத்தேன், எனக்குத்தான் சொந்தம் என்று ரகளை பண்ணினான். புருஷன், நீ கொடுத்தாலும் என் நிலத்தில் விளைந்தது ஆகையால், எனக்கே சொந்தம் என்றான். இந்திரன் பஞ்சாயத்து பண்ணினான். பிள்ளை சந்திரனுடையது என்று அவனிடம் ஒப்படைக்கத் தீர்ப்பு செய்துவிட்டான்.
துரோபதை : இவளுக்கு தனி பதிவே போட்டுருக்கிறேன் . இவள் அய்ந்து பேருக்கு மனைவியாக இருந்தவள், அதுவும் பற்றாமல் ஆறாம் பேர்வழியாக கர்ணன் மீதும் ஆசைப்பட்டாள் என்று கூறப்படுகின்றது.
அடுத்து சீதை: இவள் இராவணனுக்கு கர்ப்பமானவள். காட்டில் வசிக்கும்போது வேண்டுமென்றே இராவணனுடன் போனவள். இராவணன் தன்னை விரும்பாத பெண்ணைத் தொட்டால் தலை வெடிக்கும் என்று சாபம் இருந்தது. ஆனால், அவளைத் தூக்கித் தொடைமீது வைத்துப் போகும்போது அவன் தலை வெடிக்காததனால், அவள் விரும்பியே அவன் பின் போய் இருக்கிறாள். பிறகு இராவணனைக் கொன்று இவளை மீட்டுக் கொண்டு வந்த பின் இவள் நான்கு மாத கர்ப்பம் என்று தெரிந்து இவள் கணவன் ராமன் இவளை காட்டுக்கு விரட்டி இருக்கின்றான். அங்கு போய் அவள் பிள்ளை பெற்றதும் அல்லாமல், மேற்கொண்டும் ஓர் பிள்ளை பெற்றுக் கொண்டு இரண்டு பிள்ளையோடு வந்திருக்கின்றாள்.
இப்படிப்பட்ட விபசாரிகள் எல்லாம் இந்து பதிவிரதைகளாக (பத்தினி) - கடவுள்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதுபோன்ற காம காட்டுமிராண்டி கதைகளையெல்லாம் இந்து புராணத்தில் தான் அதிகம் காணலாம்..