Sunday, May 21, 2017

புலிகளின் அரசியல் தத்துவம்

Q:
புலிகளுக்கு அரசியல் தத்துவம் இல்லை,
என்னது?.
தத்துவம், தத்துவம், தத்துவமில்லை...

டேய், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்க்குள்ளயே நொழஞ்ச ஆளுங்கடா, உலக அளவில் மிக வலிமையானதுடா புலிகளின் உளவு அமைப்பு, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து லத்தீன் அமெரிக்க நாடுகள் வரைக்கும் புலிகளின் ராஜ்ய உறவு இருந்ததுடா, நீதி நிர்வாகம்னு ஒரு தேச அரசையே தற்சார்புள்ளதா கட்டி எழுப்பி ஆண்டவங்கடா, புலிகளின் சோஷலிச தமிழீழம் மேனிபெஸ்டோ பாத்திருக்கியா?.. நடைமுறையில் சாதி ஒழிக்கப்பட்ட, பூரண பெண் விடுதலையடைந்த ஒரு தேச அரசு இந்து சமூகத்தில் ஈழத்தை தவிர எங்காவது பாத்திருக்கியா?..
அரசியல் தத்துவம்னு உங்கட்ட உருப்படியா இருந்தது மாநில சுயாட்சிதானே அதையும் மார்வாடி அரசுக்கிட்ட வித்து தின்னுட்டிங்கதானே?.
இத்தனை வருசத்துல கர்நாடகா ஆந்திராவுல தாக்கப்படுற தமிழர்களையே காப்பாத்த துப்பு இல்லைல, இந்த லட்சணத்துல 20 நாட்டு ராணுவத்தை எதிர்த்து சண்டைபோட்டு மடிந்த போராளிகள பார்த்து மக்களை காப்பாத்தலைன்னு சொல்லலாமா?..
நாம வாங்குற 5, 10 அரசியலுக்கு அந்த மாபெரும் போராளிகள இழுக்கலாமா?
உங்க ரேஞ்சுக்கு அரசியல் பண்ணுங்க தல?
ஒரு அதிமுக, ஆளுநர் சந்திப்பு, சட்ட பேரவைய உடனே கூட்டணும் ஊழல் ஆட்சி அப்டி ஏதாவது பேசுங்க அதுல ஒரு நியாயம் இருக்கு..
அரசியல் தத்துவத்தை பத்தியெல்லாம் நாம பேசலாமா?..


A:

ஆம் தத்துவம் இருந்தது!
1. அமைதி கொடி அசைத்து நார்வேகாரன் வந்தாலும், நாயை அடித்து விரட்டுவதுப்போல் விரட்டும் வெற்று வீராப்பு இருந்தது!
2. வால் சிடீரீட் வரை வால் நீட்டியிருந்தாலும், போரை கட்டி புலம் பெயர்ந்த தமிழகர்களிடம் புடுங்கியதையெல்லாம் அமெரிக்கார
ன் கட்டியெழுப்பியை சர்வதேச பண பரிவர்த்தனை தடங்களையே பிரயோஜப் படுத்திய மடத்தனம் தத்துவமாய் இருந்தது.
3. எந்த ராஜாங்களோடு நட்பு பாராட்டியிருக்க வேண்டும், எந்த ராஜாங்கத்தோடு வெறுப்பு வளர்த்திருக்க வேண்டும் என்று விவஸ்த்தை இல்லாமல் உதவிக்கு வர முடியாத மேற்கு ஆப்ரிக்க நாடுகளோடும், லத்தீன அமெரிக்க நாடோடு தொடர்பு வைத்திருந்தற்கு பதிலாக சீனாக்காரனோடு நட்பு பாராட்டியிருந்தால் அமெரிக்கா, இந்தியா, சிங்களம் என எல்லோரும் பொத்திகொண்டு இருப்பார்களே, இதுவும் தத்துவம்.
4. ஈழத்திலே கூட தமிழ் பேசும் முஸ்லீம்களை காத்தான்குடியில் கொலை செய்து தூரமாக்கியது மிக பெரிய தத்துவம்.
5. தமிழீழ சோஷலீச அரசாங்க இரண்டாண்டில் சாதித்தது என்று பெருமை பீத்துபவர்களை தமிழகத்தில் ஒரு சொட்டு ரத்தமில்லாமல் தமிழகத்தை இந்தியவில் முதன்மை மாநிலமாக மாற்றிய திராவிட தலைவர்களிடம் உங்களைப்போல் தத்துவமில்லாமல் இருக்கலாம், ஆனால் சூட்சமம் இருக்கிறது.

நாங்கள், இன்னும் உயிரோடு இருக்கிறோம். எங்கள் உரிமைகளை அரசியலில் முண்டி பெற பயிற்சி பெற்றிருக்கிறோம். நீங்கள் ஒன்றரை லட்ச மக்களை காவு கொடுத்துவிட்டு 'மான் கராத்தே' ஆடும் சீமார்களை நம்பி பழம்பெருமை பேசி கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் 30 வருடத்திற்கு முன்னால் தொடங்கிய புள்ளியிலிருந்து தொடங்கும் அவலம் உங்களுக்கு.



point:

கலைஞரின் உண்ணாவிரத்திற்கு பிறகு சீஸ்ஃபயர் அறிவிப்பு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து இலங்கை அரசு அனுப்பிய ஃபேக்ஸ் செய்தியைக் காட்டுகிறார். காலை 7 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதத்தை 2 மணியளவில் முடிக்கிறார் கலைஞர்.

ஆனால் அடுத்த மூன்று நாட்கள
ில் மீண்டும் போர் துவங்கியது எப்படி??

கலைஞரின் உண்ணாவிரதத்திற்கு அடுத்த தினத்திற்கு அடுத்த தினம் புலிகளின் அரசியல் ஆலோசகராய் அப்போது இருந்த திரு.நடேசன் "நாங்கள் செய்வது பின் வாங்கும் தந்திரோபாயம்! கருணாநிதி எங்கள் வெற்றியை மழுங்கச் செய்கிறார் என்று அறிக்கை வெளியிட்டார். "இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்துவிடும், பிஜேபி நிச்சயம் வெல்லும். அதுவரை தாக்குப் பிடியுங்கள்" என்று தமிழக அரசியல்வாதிகள் குடுத்த யோசனையைக் கேட்டே புலிகள் போரை நீடித்ததாக நார்வே குடுத்த அறிக்கை இப்போதும் இணையத்தில் இருக்கிறது!

போர் நிறுத்தம் என்றால் இரு தரப்பும் நிறுத்த வேண்டும். ஒருவர் மட்டும் நிறுத்தி மறு தரப்பு நிறுத்தாமல் அடிப்பதற்கு பெயர் போர் நிறுத்தம் அல்ல.

கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார். அறிவிப்பு வந்தது. ஆனால் நாங்கள் தொடருவோம் என்று சொன்னவர்கள் யார்????????????

அன்றைக்கு மொத்த மீடியாவும் திமுகவுக்கு எதிராக இருந்த நிலையில் பல செய்திகள் மக்களிடம் மறைக்கப்பட்டது. சமூக வலைதளத்தின் வீச்சும் இந்த அளவிற்கு இல்லை அப்போது.

ஆனால் அதையும் மீறி மக்களிடம் சொல்ல ஒரு வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்து அநியாயமாகக் கோட்டை விட்டார். எப்படி?

"போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று சொன்ன பிறகும் போர் நடக்கிறதே?" என்று கலைஞரிடம் கேட்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். பெரிய இலக்கியத் தரமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு இந்த மனுசனும் " மழை விட்டும் ( அதாவது இலங்கை நிறுத்தியும்) தூவானம் விடவில்லை ( புலிகள் விடவில்லை) என்றார். இதற்கு பதிலாக நேரடியாக " இலங்கை நிறுத்திருச்சு. அவங்க நிறுத்தலையே! என்னைய என்ன பண்ண சொல்றீங்கன்னு? பாமரத்தனமாகக் கேட்டு இருந்தால் அது மக்களுக்கு எளிதில் புரியும் செய்தியாகி இருக்கும். இலக்கிய வாயால் அதைக் கோட்டை விட்டார் தலைவர் கலைஞர். இந்த விசயத்தில் எனக்கு அவர் மேல் தீராத கோபம் உண்டு.

இனி புலிகளின் கதையும், ஈழமும் மொத்தமாய் முடிந்தது என்பதை உணர்ந்த ஜெயலலிதா...தன் வாழ்நாள் முழுவதும் புலிகளை ஈழத்தை எதிர்த்த ஜெயலலிதா போர் முடிவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் தனி ஈழமே தீர்வு என்று..நடக்காது என்று உறுதியாகத் தெரிந்த விசயத்திற்கு பல்டி அடித்து பேசி ஈழத்தாய் ஆனார். கலைஞர் துரோகியானார்.

இன்றைக்கு புலிகள் வாழ்க ஈழம் வாழ்க என்று யார் வேண்டுமானாலும் பேசலாம். ஈழம் என்று வாயை அசைத்தாலே பொடாவிலும் தடாவிலும் தள்ளிய அன்றைய நேரத்தில் பிரபாகரன் வாழ்க தமிழ் ஈழம் வெல்க என்று எழுதிய யுவகிருஷ்ணாக்களும் அப்துல்லாக்களும் நரேன்களும் இன்று திடீர் குபீர் டாலர் வசூல் போராளிகளுக்கு இன்று தமிழின விரோதியாகிப் போனோம். மகிழ்ச்சி .

No comments: