Sunday, May 21, 2017

குஷ்பூ தைரிய நாயகி

முன்பெல்லாம் பிரபாகரன் மீது பெரும் பிம்பம் இருந்தது, கலைஞரே பட்டும் படாமல்தான் விமர்சித்து கொண்டிருந்தார்
சோ ராமசாமி மட்டும் துணிச்சலாக விமர்சித்தார், ஜெயகாந்தனும் முழங்கிகொண்டிருந்தார் ஆனால் ஒரு மாதிரியாக விமர்சித்து நிறுத்துவார்கள், ஊடக வெளிச்சமும் பாயாது
2009ல் பிரபாகரனை பெரும் தெய்வம் அளவிற்கு சிலர் உயர்த்தினர், விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனித பிம்பமாக சித்தரிக்க கிளம்பினார்கள், பெரும் அழிச்சாட்டியம்
பிரபாகரனை தூக்கில்போடவேண்டும் என முதலில் என்றோ சொன்ன தமிழக குரல் ஜெயலலிதா, அவர் முதல்வராகவும் எதிர்கட்சி தலைவராகவும் இருந்ததால் யாரும் எதிர்த்து பேசவில்லை மாறாக அவர் கண்ணசையில் கலைஞரை திட்டினார்கள்,
அதனை ரசித்த ஜெயலலிதா பின் புலிகளை விமர்சிப்பதை நிறுத்திகொண்டார்.
அதன் பின் ஒரு குரல் 2010 வாக்கில் மிக துணிச்சலாக "புலிகள் தீவிரவாத இயக்கம்" என்றது, எதிர்ப்புகள் கிளம்பின, அவர் வீட்டின் மீது கல் எறியும் அளவிற்கு சென்றார்கள்
ஆனால் அந்த குரல் கொஞ்சமும் பின்வாங்கவில்லை, இன்றும் காங்கிரசில் கம்பீரமாக ஒலித்துகொண்டிருக்கின்றது,
அது குஷ்பூவின் குரல்
அவருக்கு பின்னால்தான் தமிழகத்தில் புலிகளை போட்டு சாத்த ஆரம்பித்தார்கள், இன்று பின்னி எடுக்கின்றார்கள், பிரபாகரன் புலிகள் என்ற மொத்த பிம்பமும் சரிந்து நொறுங்கி கிடக்கின்றது
சர்வ சாதரணமாக புலிகளையும், பிரபாகரனையும் காரிதுப்ப தொடங்குகின்றார்கள் தமிழக மக்கள்
"பிரபாகரனா? உருப்படியாக என்ன செய்தான்? ராஜிவை கொல்ல பெண் மீது குண்டு கட்டி விட்டானே அவனா? .." என்ற ரீதியில் கடும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன, புலிகள் என்றாலே ஓட அடிக்க கிளம்பிவிட்டார்கள்
இந்த துணிச்சலான காரியத்தினை தமிழகத்தில் குஷ்பூதான் தொடங்கி வைத்தார்.
ஆனால் அதே காங்கிரசின் திருநாவுக்கரசர் இன்று ரஜினிக்கு அழைப்பு விடுத்துகொண்டிருக்கின்றார்.
ராஜிவை இழந்த காங்கிரசில் இருந்து புலிகளை மிக தைரியமாக விமர்சித்த குஷ்பூ எல்லாம் இருக்கும்பொழுது, கொஞ்சமும் தைரியமில்லா ரஜினியினை ஏன் அழைக்கவேண்டும் என தெரியவில்லை
இன்று புலிகளையும் பிரபாகரனையும் மானாவாரியாக எல்லோரும் மண்வாரி இறைக்கும்பொழுது, அன்று தனி மனுஷியாக புலிகளை சாடிவிட்டு தனியொருத்தியாக அவர்களை எதிர்கொண்ட குஷ்பூவின் தைரியம் கண்ணில் வரத்தான் செய்கின்றது
அன்று குஷ்பூ புலிகள் தீவிரவாதிகள் என சொன்னதற்கு சாடியவர்களை இன்று காணவே இல்லை, பங்கர் பிரபாகரன், கொலைகாரன் பிரபாகரன் என கடும் சொற்கள் வீசபடும் காலத்திலும் அவர்களை காணவில்லை
தைரியமாக களத்தில் நிற்கின்றார் குஷ்பூ
நிச்சயம் குஷ்பூ தைரிய நாயகி..

No comments: