தேவதாசி முறையையும், வர்ணாசிரம தர்மத்தையும் நிறுவனமயமாக்கி
பார்ப்பனர்களுக்கு நிலத்தையும், தமிழ் பெண்களையும் அள்ளி வழங்கிய அடிமை
தரகர்தான் ராஜராஜசோழன். ஒரு இனத்தையே சாதிக்கு அடிமையாக்கிவிட்டு,
அவ்வினத்திடமே அதிக வரிக்கொள்ளையடித்து மிக அழகான, பிரம்மாண்டமான கோவிலை
எழுப்பிவிட்டால் எல்லா பாவமும் தீர்ந்துவிடுமா? சரி அதோடாவது விட்டானா?
சமண மத துறவிகளாய் மாறி இருந்த பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட பெண்களை
தேவசாதிகளாக்கி கோவிலை நிரப்பினான் அந்த அயோக்கியன். அவனை எல்லாம் தமிழ்
மன்னன் எனச் சொல்வதில் நிஜத்தில் நாம் அவமானம் கொள்ளவேண்டும். இவன்லாம்
ஒரு மன்னன், இவனுக்கு முப்பாட்டன் என புகழாரம் வேறு. இதைச் சொன்னால் இந்த
முட்டாள் தமிழ்நாஜிக்கள் கலைஞர் அரசு நடத்திய ராஜராஜசோழன் விழாவைப்பற்றி
கேட்கிறார்கள். அந்த விழாவையும், அவ்விழாவில் பத்மா சுப்பிரமணியத்தை
மேடையில் ஆடவிட்டுவிட்டு, பறையிசைக் கலைஞர்களை கீழே வாசிக்கவிட்ட அவலத்தை
அப்போதே விமர்சித்து எழுதினேன். கனிமொழி நடத்திய சங்கமம் நிகழ்ச்சியில்
பறையிசை கலைஞர்கள் முறையான மரியாதை பெறுகிறார்கள் என பாராட்டியபோதும்
அந்நிகழ்வை நினைவுகூர்ந்தேன். தப்பு யார் செய்தாலும் தப்புதான்.
நான் அடிக்கடி சொல்வதைப் போல, அண்ணாவை விட, கலைஞரை விட பெரியார் இதுமாதிரி விஷயங்களில்தான் ஒருபடி உயர்ந்து நிற்கிறார். கண்ணகி எனும் பெண்ணடிமைத்தன சின்னத்திற்கு சிலை வைத்தபோது முதல் கண்டனம் பெரியாரிடமிருந்தே வந்தது. அவர் அயோக்கியத்தனத்தை அயோக்கியத்தனம் என்பார். மொழியோ, இனமோ, நட்போ எதுவோ அவரை தடுத்ததே இல்லை. He never failed to call a spade a spade. King Rajaraja chozha was nothing but a criminal and a brahminical slave. Period.

No comments:
Post a Comment