Monday, October 16, 2017

யாழ்பாண இளைய தலைமுறை சினிமா மோகம்

உலகின் அறிவான இனம் என 3J சொல்வார்கள்,
Jews, Japanese , Jaffna (யாழ்பாணம்)
அதில் நாங்களும் ஒன்று என மார்தட்டிகொண்டிருந்தது யாழ்பாணம்
அதில் கொஞ்சம் உண்மையும் அன்று இருந்தது, கல்வியில் அவர்கள் சிறந்து விளங்கினார்கள், உலகெல்லாம் பெரும் பதவியில் அமர்ந்தார்கள், இன்றும் உலக பெரும் கோடீஸ்வரர்களில் ஈழதமிழர் உண்டு
நினைத்தால் பணம் கொடுத்தே இஸ்ரேலிய லேண்ட் பேங்க் பாணியில் அவர்கள் ஈழம் வாங்கியிருக்கலாம், சாத்தியம் இருந்தது. ஆனால் ஏனோ செய்யவில்லை
அப்படிபட்ட பெரும் தமிழ்பற்றும், கல்வியும், செல்வமும் கொஞ்சம் கர்வமும் நிரம்ப இருந்த யாழ்பாணம் புலிகள் காலத்தில் நாசமாயிற்று
படித்தவர்களையும் சிந்தனையாளர்களையும் குறிவைத்து கொன்ற புலிகளின் ஆட்சியும் வீழ்ச்சியும் அந்த யாழ்பாணத்தை நாசமாக்கிவிட்டது.
கடும் யுத்தம் விட்டுசெல்லும் சுவடான போதை, கூலிப்படை, வெட்டு குத்து இன்னபிற விவகாரங்களில் சிக்கி தவிக்கின்றது யாழ்பாணம்
இனி மீண்டும் யாழ்பாணம் தன் பொற்காலத்தை எட்ட நெடுநாட்கள் ஆகலாம் எனும் நிலை இருக்கும்பொழுது இப்பொழுது ஒரு விவகாரம் அந்த நம்பிக்கையிலும் மண் அள்ளி போடுகின்றது
அதாகபட்டது யாழ்பாண இளைய தலைமுறை சினிமா மோகத்தில் திரிகின்றதாம், இது அங்கு தம் பழம்பெருமையினை எண்ணி கண்ணீர் விடும் சில நல்ல தமிழர்களின் கண்களில் மிளகாய் தூவியிருக்கின்றது
ஆம், அஜித்திற்கும் விஜய்க்கும் இப்ப்பொழுது அங்கு ரசிகர் மன்றங்கள் திறந்திருக்கின்றார்களாம்
விரைவில் அவர்கள் மோதிகொள்ளும் அளவில் நிலமை தீவிரமாகின்றதாம்
சிங்களனோடு ஈழத்திற்கு மோதிய காலம் போய், இப்பொழுது யாழ்பாணத்தில் அஜித் கொடி பறப்பதா விஜய் கொடி பறப்பதா என சண்டை வருகின்றது.
இதில் விஜய் யாழ்பாண மருமகன் என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகமாம்.
இதனை எல்லாம், இந்த திருமா வளவன்,வைகோ, வேல் முருகன், திரு முருகன் எல்லாம் கண்டிக்க மாட்டார்கள்
இங்கு "இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை" என கத்தி, செங்கொடி, விக்னேஷ், முத்துகுமார் என பல உயிர்களை உசுப்பேற்றி இழக்க வைத்தவர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
அவர்களே விஜய், அஜித் என கைதட்டி குத்தாட்டம் ஆட கிளம்பிய பின் என்ன போர்குற்றம்? என்ன ஈழம்? என்ன மண்ணாங்கட்டி
அவர்கள் அஜித் படத்திற்கு கைதட்டும்பொழுதுதான் இங்கு திருமுருகன் காந்தி மெரினாவில் மெழுகு கொழுத்தபோனார், எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா?
அங்கிள் சைமன் இந்தியா என்றால் பொங்குவாரே அன்றி, சினிமா விஷயம் என்றால் மகா சைலண்ட்.
அதுவும் ஈழ தமிழ்பிள்ளைகள் பற்றியெல்லாம் ஹிஹிஹிஹீஹிஹ்
இதுபற்றி மனம் கனத்த ஒரு ஈழநண்பர் சொன்னார்
"எப்படி இருந்த நாங்கள் எப்படி நாசமாகிவிட்டோம் பார்த்தீர்களா?
அந்த ராமசந்திரன் முதல் இந்த சைமன் வரை சினிமாக்காரர்கள் எங்கள் பிரச்சினைகளை பேசியதுதான் இன்று இப்படி விபரீதம் எல்லாம் வர காரணம், சினிமாக்காரன் பேசி பேசி ஈழமும் தமிழகம் போல சினிமாதனமாகிவிட்டது
கொஞ்சம் கவனியுங்கள்
புலிக்கொடி பறந்த இடத்தில் விஜய் கொடி, அஜித் கொடியா? வெட்கமாக இல்லை என ஒரு குரல் தமிழகத்திலிருந்து வருகின்றதா இல்லை
ஈழத்திற்கு குரல் கொடுக்கின்றோம் என தமிழக சினிமாக்காரன் நடிக்க, அதனை நம்பிய ஐரோப்பிய ஈழதமிழன் படம் தயாரிக்க இப்படி எல்லாம் வியாபாரம்
இனி யாழ்பாணமும் அவர்களுக்கொரு மார்கெட் அவ்வளவுதான்,
யாழ்பாண தமிழன் தயாரிப்பாளனாகவும் இந்திய தமிழன் சினிமா உருவாக்கத்திலும் இணைந்து இப்பொழுது ஈழபோராட்டம் முழுக்க வியாபாரமாகிவிட்டது
உங்களுக்கு தெரியுமா தம்பி, திராவிட முன்னேற்ற கழகம் அக்காலத்தில் பெரும் எதிர்பார்ப்பை கொடுத்தது. ரஷ்ய புரட்சி இயக்கம் போல கருதபட்டது
ஆனால் சினிமாக்காரர்களை உள்ளே விட்டு அது இன்றைய தமிழக வீழ்ச்சிக்கு அடிகோலியது
துரதிருஷ்ட வசமாக ஈழபிரச்சினையும் அதில் சிக்கிவிட்டது.
தமிழகத்தை மோசமாக்கிய சினிமா இனி யாழ்பாணத்தின் மிச்ச மீதியினையும் நாசமாக்க வந்தாகிவிட்டது
ஈழம், தொப்புள் கொடி இப்படி எல்லாம் சினிமாகாரன் பேசுறது எல்லாம் மோசடி தம்பி, எல்லாமே நாடகம்.
பணம் ஒன்றே பிராதானம்"
ஆக யாழ்பாணத்தானே அஜித், விஜய் படங்களுக்கு கைதட்டிகொண்டு நான் இலங்கையன் என சொல்லிகொண்டிருக்கும்பொழுது இங்கு சைமன் கோஷ்டி, கவுதமன் கோஷ்டி, திருமுருகன் கோஷ்டி எல்லாம் இந்தியா ஈழத்தை அழித்தது, இந்தியா நம் இன எதிரி என சொல்லிகொண்டிருந்தால் அவர்களை தூக்கி போட்டு மிதிக்க வேண்டாமா
எவண்டா அது "இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை" என கத்தியது?
எதற்கு விடுதலை? விஜயினை இன‌ முதல்வராக்கவா?

No comments: