முன்பெல்லாம் தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும்போதிருந்தே வெடிச்சத்தம் அப்படி இருக்கும். காலேலயே தொலைதூரத்தில் வெடிக்கப்படும் வெடிகளின் சத்தத்தில் துவங்கி பக்கத்துவீட்டு வெடி வரை தொடர்ச்சியாக ஒரு அலையைப்போல சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இன்னைக்கு ஒரு சத்தத்தையும் காணோம். காலையில் இருந்து ஒரே ஒருமுறை கேட்ட பெரும் சத்தமும்கூட பக்கத்துவீட்டு தாத்தா பிரித்த காற்றுச் சத்தம் என பிறகுதான் தெரிந்தது. தமிழகத்தில் என்ன பட்டாசுக்கு தடையா? இல்லை. அப்புறம் ஏன் சத்தமே இல்லை? எல்லோரும் இந்துமத விரோதி ஆகிவிட்டார்களா? அதுவும் இல்லை. மோடி ஆட்சி புண்ணியத்தில் எவன் கையிலும் காசு இல்லை என்பதே உண்மை.
மோடி ஆட்சி என்பது பயங்கரவாத ஆட்சி. மத பயங்கரவாதிகள் வைக்கும் வெடிகுண்டுகள் எப்படி அந்த மதம் இந்த மதம் என்றில்லாமல் எல்லா மதத்தினரையும் உயிர்காவு வாங்குமோ, அதுபோல மோடியின் ஆட்சி எல்லோர் பொருளாராத்திலும் அமிலத்தை ஊற்றி உள்ளது. உணவு வாங்கவும், மருந்து வாங்கவுமே ஆயிரம் முறை யோசிக்கவேண்டிய நிலையில் மக்கள் இருக்கும்போது எங்கே போய் கொண்டாட்டத்திற்காக காசை கரியாக்குவார்கள்?
மோடியும், பாஜகவும் இந்துமதவாதிகளாக இருக்கலாம், இந்துக்களுக்காக, இந்துமதத்திற்காக போராடுகிறவர்கள் போல நடிக்கலாம். ஆனால் அவர்களின் நிர்வாக சீர்கேடு யாரையும் விட்டுவைக்காமல், இந்துக்களையும், இந்துமத பண்டிகைகளையும் சேர்த்தே காவு வாங்கியிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மோடி/பாஜக ஆட்சி இருக்கும்வரை நமக்கெல்லாம் தீபாவளி மட்டுமல்ல எந்த பண்டிகையுமே கிடையாது. இழவு வீடுதான்.
No comments:
Post a Comment