Tuesday, October 17, 2017

கொண்டாடுங்க

கொண்டாடுங்க..!
மகா வீரர்..மகா வீரர்ன்னு ஒருத்தரு இருந்தாரு.மனுசன் பெரிய்ய அறிவாளி. சமணக் கொள்கைகளையெல்லாம் ஊரூரா சொல்லிக்கிட்டு திரிஞ்சாரு. தனக்குன்னு சொத்துபத்து எதுவும் சேர்த்துவைக்காத ஆளு.ஜனங்களுக்கும் அவருமேல கொள்ள பிரியம். திடீர்ன்னு ஒருநாளு அவரு செத்துட்டாரு.ஜனங்கலாம் ரொம்ப ஃபீலாயிட்டாங்க.
அவர் செத்து ஒரு வருசம் ஆயிப்போச்சி.அவர் நினைவு நாளு வந்துச்சி.நம்மளுக்கு நல்லதுபொல்லது சொல்லிக்குடுத்த மனுசனாச்சேன்னு ஜனங்க அந்த நாள்ல வீட்டுல அகல்விளக்கு ஏத்திவச்சி பலகார பட்சணமெல்லாம் செஞ்சிவச்சி அவருமாதிரியே இருந்த சாமியாருங்க ஏழபாழைங்களுக்கெல்லாம் குடுத்து கொண்டாடுனாங்க.
கொஞ்சநாள்ல இந்த அசோகருன்னு ஒரு ராசா,சண்டைபோட்டு சண்டைபோட்டு வெறுத்துபோயி...எந்த ஆசையும் வாணாம்டான்னு பெளத்த மார்க்கத்துக்கு வந்துட்டாரு.அப்பாலிக்கா..மகாவீரரு நினைவு நாளு வந்துச்சி.அந்த சமயம் பார்த்து சீனாவுலயிலயிருந்து வியாபாரிங்க வந்திருந்தாங்க.அவங்க ராசாவுக்கு கையோட கொண்டாந்த பட்டாசு வெடியயெல்லாம் குடுத்தாங்க.அப்ப பார்த்து மருத்துவம் பார்க்குற பண்டிதரு ஒருத்தரு ஆமணக்கு கொட்டையிலயிருந்து எண்ணெய்ய புழிஞ்சி எடுத்தாந்து ராசாகிட்ட குடுத்தாரு. இது ரொம்பநேரம் நின்னு எரியும் ராசான்னு சொன்னாரு.சரிதான்னு ராசா ஜனங்கள கூப்புட்டு மகாவீரரை கும்புடுற நாளு வருதில்லே..அப்ப இந்த எண்ணெய்ல வூடு வாசலு பூராம் தீபம் ஏத்தி இந்த பட்டாசை வெடிச்சி சந்தோசமா கொண்டாடுங்கன்னாரு.ஜனங்களும் அப்பிடியே செஞ்சாங்க.ஊரே ஜெகஜோதியாயி ஒரே குஷியா பூடுச்சாம்.
அந்த சமயம் பார்த்து அம்மா தாயே பிக்‌ஷாந்தேகின்னு பூணூலு போட்ட கும்பலு ஒன்னு ஊருக்குள்ள வந்துச்சி.கொஞ்ச நாள்லயே அவுங்களுக்கு ராசாங்ககூட பழக்கம் ஏற்பட்டு நிலபுலம்ன்னு பெரிய ஆளுங்களாயிட்டாங்க அவங்களுக்கு இந்த தீவாளிய பாத்து வயித்தெரிச்சலு.கொஞ்சநாள்ல அந்த மகாவீரரு யாருமில்ல..அவந்தான் நரகாசூரன்னு ஒரு கதைய கட்டிவுட்டு கங்கஸ்நானம் பண்ணுங்கோன்னு தஸ்புஸ்ன்னு புரியாத பாசையில சொல்லவும் நம்மாளுங்க அப்புடியே நம்பிட்டாங்க . அப்பறம் மகாவீரரு யாருன்னே மறந்துபோயி..நரகாசூரனை இவங்களே வதம் பண்றதா நெனச்சிக்கிட்டு தீவாளிய கொண்டாடிக்கிட்டிருக்காங்க.
மக்களுக்கு எதையாவது கொண்டாடிக்கிட்டே சந்தோசமா இருக்கணும்..அம்புட்டுதான்.கொண்டாடுங்க...தப்பில்லே...ஆனால் ஏன்... எதுக்கு...எப்படி..கொண்டாடுறோம்ன்னு புரிஞ்சிக்கிட்டு கொண்டாடணும்தான் சொல்றேன்.
மகிழ்ச்சி.

1 comment:

ஆக்ஞா said...

அசோகரு துறவறம் பூண்டு புத்த மதத்த தலுவுனாறு. மகாவீரரு சமண மதத்த சேர்ந்தவரு. ஏன் இப்படி உளரனும்? உனக்கு இந்துக்கள் கொண்டாடும் தீபாவளிய எதாச்சு சொல்லி அது வேற மதக் கொண்டாட்டமாவோ அல்லது இந்துக்கள் எல்லாரையுமே கொச்சையாவோ காட்டனும் அதான குறிக்கோள்?