Tuesday, June 29, 2021

நீட் தேர்வு விசயத்தில் தி.மு.க ஏன் தொடர்ந்து அரசியல் செய்கிறது? 

நீட் தேர்வு விசயத்தில் தி.மு.க ஏன் தொடர்ந்து அரசியல் செய்கிறது? இப்போது மட்டுமா அரசியல் செய்கிறது? இவர்கள் மூதாதையர்கள் ஜஸ்டிஸ் பார்ட்டி என்ற நீதிக் கட்சியே, விடுதலைக்கு முன்பு மருத்துவப் படிப்புப் படிக்க, "சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும்" என்ற "அந்தக் கால நீட்"டை எதிர்த்து, அரசியல் செய்து, பெண்களும், மற்ற சாதியாரும் மருத்துவம் படிக்க வழி செய்தனர். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, வெளிநாடு சென்று, சமஸ்கிருதம் பயின்று மட்டுமே மருத்துவம் படிக்க முடிந்தது. அதை உடைத்தது ஜஸ்டிஸ் பார்ட்டி. இந்தக் கால நீட் சட்டப்படி, நீட் தேர்வு தரவரிசைப்படி, admission நடப்பது, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும்தான். அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு admission வாங்கிய கடைசி மாணவன் நீட் நுழைவுத் தேர்வில் 700க்கு 512 வாங்கியிருக்கிறார் என்றால், 700க்கு 511 வாங்கிய மாணவன் மருத்துவம் admission கிடைக்காமல் வெளியே நிற்பான். 100க்கு 35 மார்க் வாங்கினால்தான் பாஸ் என்ற நடைமுறை கூட, நீட் பின்பற்றுவது இல்லை. அதாவது, நீட் நுழைவுத் தேர்வுக்கு 700க்கு 245 மார்க் வாங்கினால்தான் பாஸ் என்ற அளவுகோல் கிடையாது. வாங்கிய மார்க்கை அப்படியே கொடுப்பார்கள். அவ்வளவுதான். ஒரு கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளை 20% மார்க்தான் எடுத்தான் என்றால், அதாவது, 700க்கு 140 மார்க் மட்டுமே எடுத்தான் என்றால், அவனுக்கு ஃபெயில் என்று நீட் சொல்லாமல் விட்டுவிடும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு தரவரிசைப்படி, admission நடப்பது இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் Fees ஆண்டுக்கு 60 இலட்சம் கட்டும் வசதி படைத்தவன் மட்டுமே admission பெறமுடியும். அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத, 700க்கு 511 வாங்கிய மாணவனும், 700க்கு 140 மார்க் மட்டுமே எடுத்த மாணவனும் தனியார் மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக் கழக கல்லூரிக்கு விண்ணப்பம் செய்தால், ஆண்டுக்கு 60 இலட்சம் ஃபீஸ் கட்டமுடியாமல், 700க்கு 511 வாங்கிய மாணவனுக்கு இடம் கிடைக்காது. ஆனால் 20% கூட இல்லாத ஃபெயில் ஆன, 700க்கு 140 மார்க் மட்டுமே எடுத்த கோடீஸ்வர மாணவன், ஆண்டு ஃபீஸ் 60 இலட்சம் கட்ட, பணம் இருப்பதால், மருத்துவம் படிக்க admission பெற்று விடுவான். இப்போது சொல்லுங்கள், நீட் என்பது QUALITYயா அல்லது கொள்ளையா? நீட் நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு 3 இலட்சம் செலவு செய்தும், 20% கூட வாங்க முடியாமல் ஃபெயில் ஆன, 700க்கு 140 மார்க் மட்டுமே எடுத்த கோடீஸ்வர மாணவனுக்கு, medical admission போட்டு, தனியார் கார்ப்பொரேட் முதலாளிகள் கொள்ளை அடிக்கவே, நீட் என்ற நுழைவுத் தேர்வு நடக்கிறது. இந்தியாவில் 50% மருத்துவக் கல்லூரிகள் தனியார் கார்ப்பொரெட் முதலைகளிடம் உள்ளன. இவர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில், நீட் தேர்வில் 35 விழுக்காட்டுக்கும் குறைவாக மதிப்பெண் பெற்று, ஃபெயில் ஆனவர்களே மருத்துவம் படித்து, டாக்டர்கள் ஆகிறார்கள். இதுவா QUALITY? மேலும், நீட் பயிற்சி வழஙகும் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளை ஆண்டுதோறும் கொள்ளை கொள்ளையாய் சம்பாதிக்கவும் நீட் வழி செய்கிறது. காசு, பணம் கொண்டவன் மட்டுமே மருத்துவம் படிக்கும் புதிய திட்டம் நீட் என்பதால், திமுக நீட் தேர்வு முறையை அடிப்படையில் முழு மூச்சுடன் எதிர்க்கிறது. இது மக்களுக்கான அரசியல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு திமுக அரசு. மக்களுக்கான அரசியலை அது கட்டாயம் செய்யும். ஜல்லிக் கட்டு வெற்றி போல், வெற்றியடையும்.

No comments: