Thursday, July 01, 2021

மறக்காம கல்யானத்துக்கு வந்திடுங்கோ

 பெண் வயது 18 -  

என் பொண்ணு ப்யூர் வெஜிடேரியன். வெங்காயம் கூட எங்காத்துல இல்ல. பி.இ. முடிச்சிட்டு அப்ராட் போனாள்னா என்ன பண்ண போறாளோ தெரியலை!

பெண் வயது 21 -  

பொண்னு பிரமாதமா பாடுவா. எட்டு வருஷம் சாங்கித்யம். பரத நாட்டியம் அரங்கேற்றத்துக்கே மூணு லட்சம் ஆச்சு. அவ்ளோ பிரமாதமா ஆடுவா. எங்கப்பா வேத வித்து. ரிக் வேத ஞானி. தாத்தா நித்ய அக்கினிஹோத்ரி. ஜாதகமா குவியறது. இப்ப ஒன்னும் அவ்ளோ அவசரம் இல்லன்னு சொல்லி திருப்பி அனுப்பிண்டு இருக்கேன்.

பெண் வயது 23 -

தென்கலை வரன்லாம் கூட  நெறைய வற்றது. நாங்க தான் வேண்டாம்னுட்டோம். வடகலைதான் வேணும்ங்கறார் என் ஆத்துக்காரர்.

பெண் வயது 25 -  

ஜாதகமா கொட்றது...நான் நீன்னு ஒரே போட்டா போட்டி. முந்தாநேத்து வந்த வரன் கூட  நல்லா படிச்சிருக்கான். ஆனா ஒரு ஸ்மார்ட்னெஸ் இல்ல, மத்து மாதிரி இருக்கான்.  
ஸ்மார்த்தாவாம். நமக்கு சரிப்பட்டு வராதுனு சொல்லிட்டோம். நல்ல ஐயாங்கார் வரனா பாருங்கோனுட்டோம். எங்க பொண்ணு பி.இ. பையன் வெறும் எம்.எஸ்.ஸி தான். அது ஒத்து வராது.

பெண் வயது - 28

இத பாருங்கோ, பையன் நல்லா சம்பாதிக்கரான், ஓகே. ஆனா மாமனார் மாமியார் கூட இருக்கப்படாது. என்ன பன்றது, அவள இண்டிப்பெண்டெண்டா வளர்ந்துட்டோம். இன்னைக்கு ஐ.டி. இண்டஸ்ட்ரில யார் பொட்டு வெச்சுக்கரா மாமி ?  பையனுக்கு கூடப் பிறந்தவ ஆத்துக்காரர் வைதீகம் பன்றாராம். அந்த சம்பந்தம் வேணாம். பையன் இப்பதான் அறுபதாயிரம் வாங்கரானாம். சொத்துனு மடிப்பாக்கம் தாண்டி ஒரே ஒரு அபார்ட்மென்ட் தான் வெச்சிருக்கா. நமக்கு சரிப்பட்டு வராது.

பெண் வயது 31 -

பையனுக்கு 34 ஆச்சாம்.
3 வயசு வித்யாசம். வேண்டாம்னுட்டோம். மேக்ஸ்மிமம் 33 இருந்தா ஓகே. யு.எஸ் ஜாதகமா இருந்தா க்ரீன் கார்ட் இருக்கணும், ஏற்கனவே அமெரிக்க காரன் துரத்திண்டிருக்கான். வயசாறதுன்னு கண்டவனோட அனுப்பிட முடியுமா ?

பெண் வயது 34 -  

பையன் பேரு மைக்கேலாம். நல்ல டாலா ஹேண்ட்ஸம்மா இருக்கான். ஆன் சைட் பிராஜெக்ட் போயிருந்த போது இவளுக்கு  பழக்கமாம். என்ன பண்றது மாமி? அவ விருப்பம் முக்கியமோல்லியோ? உலகம் இன்னிக்கு மாறிண்டே இருக்கே? நாமதான் நெக்ஸ்ட் ஜெனரேஷனுக்கு ஏத்தா மாதிரி அட்ஜெஸ்ட் பண்ணிக்கணும். அவா வழக்கப்படி Churchலதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னுட்டா.
சரி விட்டுப் புடிப்போம். கொழந்தைக்கு என்ன தெரியும்?  மறக்காம கல்யானத்துக்கு வந்திடுங்கோ

No comments: