(வட இந்தியர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள், இப்படித்தான் பதில் வரும்... ) கேள்வி: வீர மங்கை வேலு நாச்சியார் தெரியுமா...? பதில்: நோ கே: திருவள்ளுவரை தெரியுமா..? பதில் : நகி கே: சரி மருது பாண்டியர்களை தெரியுமா..? பதில் : நோ ப்ரோ கே: இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனை தெரியுமா..? பதில் : நஹி பைய்யா கே: இந்தியாவிற்காக கப்பல் கட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் ஆவது ..? பதில் : நோ ஜி. கே: சிவ பெருமான் மகன் முருகனையாவது தெரியுமா...? பதில்: சிவ பெருமானுக்கு விநாயகர் மட்டும்தானே பிள்ளை..? முருகன் யாரு? கேள்விப்பட்டதே இல்லையே...! (இப்போது ஒரு தமிழ் நண்பரிடம் இப்படி கேட்டுப்பாருங்கள்...) கேள்வி: ஜான்சி ராணி தெரியுமா..? பதில் : தெரியுமே கே: மராட்டிய சிவாஜி தெரியுமா..? பதில்: ஏன் தெரியாது மாபெரும் வீரர் கே: சர்தார் வல்லபாய் படேல் தெரியுமா..? பதில் : நல்லாவே தெரியும், டெஸ்ட் பண்றீங்களா... ஆக, உன்னையும் உன் முன்னோரையும் பற்றி வடநாட்டானுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவர்களை பற்றி நீ கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். உனக்கு அவ்வாறு தான் போதிக்கப்பட்டுள்ளது, கற்பிக்கப்பட்டுள்ளது. மொழியும் அப்படித்தான்..! உன் வரலாறு அவனுக்கு தெரியாது ஆனால் அவன் வரலாறை நீ கற்க வேண்டும்....அதேமாதிரி தான் உன் மொழி அவனுக்கு தெரியாது, ஆனால் அவன் மொழி நீ கற்க வேண்டும். எந்த மொழியும் தேவையென்றாலும் விருப்பமென்றாலும் தேடிக்கற்பது வேறு. அதையே அரசாணை மூலம் திணிப்பதென்பது வேறு. ஒரு கலாச்சாரத்தின் முதல் கூறே மொழிதான். ஒரு மொழியை அழித்தால், அந்த கலாச்சாரமே அழிந்துவிடும் ( எப்படியென்றால் மஹாராஷ்டிராவில் மராட்டியம் மறக்கடிக்கப்பட்டு இந்தி மேலோங்கியது போல்) சிந்தியுங்கள்...
No comments:
Post a Comment