Thursday, July 01, 2021

மின்வெட்டு புகார்

 

மறதி ஒரு தேசிய வியாதி. தமிழ் நாட்டல் 10 வருடமா மின் தடை இல்லங்கர மாதிரியான புருடா முட்டு ரொம்ப ஓவர். 10 வருடமா ஐரோப்ப நாடுகள் மாதிரியா தமிழ் நாடு இருந்தது?

JJ வந்தப்புறம் 4-5 மணி நேரம் இருந்த மின் தடை 12-16 மணி நேரம் ஆனது, மறந்துட்டுதா எல்லாருக்கும்!

https://www.ndtv.com/south/power-less-in-tamil-nadu-no-electricity-for-16-hours-in-many-parts-502427

https://www.ndtv.com/india-news/days-after-jayalalithaas-no-power-cut-deadline-tamil-nadu-still-in-the-dark-576791

https://www.livechennai.com/detailnews.asp?newsid=9060

2006-2011 திமுக ஆட்சிக்கு முன் இருந்த ஜெ அரசு வளர்ந்து வரும் மின்சார தேவைக்கேர்ப்ப புதுசாக எந்த மின் உற்பத்தி நிலையங்கலும் அமைக்கவில்லை. பின்னர் வந்த திமுக அரசின் போது தான் அதான் விளைவு தெரிந்தது. 2,3,4 மணி நேர மின்சாரம் தடை வந்தது. அதனால் திமுக மிக மும்முறமாக புது மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்க தொடங்கியது. அவை அனைத்தும் உற்பத்தி தொடங்கிய வருடங்கள் 2012, 2013 போல். அதனால் தான் ஜெ ஆட்சிக்கு வந்து முதல் 3-4 நான்கு வருடங்களுக்கு மின் தடை மிக மோசமாகி 16 மணி நேரம் வரை அதிகம் ஆகியது. அந்த வருடங்களில் வந்த பத்திரிக்கையை படியுங்கள் உண்மை புரியும்.

திமுக 2006-2001இல் அமைத்த மின் உற்பத்தி நிலையங்கள் பற்றிய தரவுகள்: 1.2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தொடங்கப்பட்ட எண்ணூர் அனல் மின்நிலைய இணைப்பு திட்ட (600 மெ.வா.) 2013 ஆகஸ்டு மாதம் உற்பத்தியை மாதம் தொடங்கியது. 2.மேட்டூர் அனல் மின்நிலையம் (600 மெ.வா.) 2011 ஜுலை மாதம் உற்பத்தியை தொடங்கியது. 3.வடசென்னை அனல் மின்நிலையம் (600 மெ.வா.) 2011 செப்டம்பர் மாதம் உற்பத்தியை தொடங்கியது. 4.உடன்குடியில் பி.எச்.ஈ.எல். மற்றும் தமிழ்நாடு மின்வாரியம் இணைந்து தலா 800 மெ.வா. உற்பத்தி செய்யக்கூடிய 2 திட்டங்கள் 2013 மார்ச் மாதம் உற்பத்தியை தொடங்கியது. 5.வடசென்னை அனல் மின்நிலையத்திலேயே மேலும் 600 மெ.வா. தயாரிக்கக்கூடிய ஒரு திட்டம் 2011 ஆகஸ்டிலும் உற்பத்தியை தொடங்கியது. 6.ரூ.1,126 கோடியில் தொடங்கப்பட்ட கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலிருந்து, 183 மெ.வா. இணை மின்சாரம் தயாரிக்கக்கூடிய திட்டம் 2011 ஜுலையில் தொடங்கும். மொத்தம் 4183 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டன. 2010-2011ல் 1400 மெ.வா. மின்சாரமும், 2011-2012ல் 3316 மெ.வா. மின்சாரமும், 2012-2013ல் 1222 மெ.வா. மின்சாரமும், 2012-2013ல் 1222 மெ.வா. மின்சாரமும், 2013-2014ல் 1860 மெ.வா. மின்சாரமும் ஆக மொத்தம் 7798 மெகவாட் மின்சாரமும் பல்வேறு மின் திட்டங்களின் முலமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

கலைஞர் கருணாநிதி சட்ட மன்றதில் மின்வெட்டு புகார்க்கு ஜெ.க்கு பதில் அளித்தது:

“தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அதிக தொழிற்சாலைகளை தொடங்காமல் இருந்திருந்தால் மின்வெட்டு வந்திருக்காதுதான். அதற்காக தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்காமல் ஓர் அரசு இருக்க முடியுமா? அ.தி.மு.க. ஆட்சியிலே மின் உற்பத்தி திட்டங்களை அதிகமாகத் தொடங்காத காரணத்தால் தி.மு.க. ஆட்சியிலே மின் பற்றாக்குறை ஏற்பட்டது. திமுகவிற்க்கு இது பாதகமாக அமையும் என்று தெரிந்தும் பின்னர் தான் மக்களுக்காக இந்த மின்சார திட்டத்தை கொண்டு வந்தேன்.அ.தி.மு.க. ஆட்சியினர் தங்கள் திறமையால்தான் தமிழகத்திலே மின் பற்றாக்குறை இல்லாத நிலையை ஏற்படுத்தியதாக தற்பெருமை கொள்ளலாம். எப்படியோ; மக்களுக்கு மின்சாரம் கிடைத்தால் போதும்! வாழ்க தமிழும் தமிழ் மக்களும்”

– கலைஞர் கருணாநிதி.

No comments: