இங்கே ஆளாளுக்கு கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் வாழ்க என சொல்லிகொண்டிருக்கின்றார்கள், டிரம்ப் கூட ஜெருசலேமிற்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றுவேன் என சொல்லிகொண்டிருக்கின்றார்
ஆனால் அங்கே நிலை என்ன?
கிறிஸ்துவை யூதர்களுக்கு கொஞ்சமும் இன்றுவரை பிடிக்காது, அவர் தங்கள் பெருமையினை கெடுக்க வந்த கோடாரி காம்பாகவே கருதுகின்றார்கள். தாங்கள் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் இயேசு எனும் குட்டிசாத்தானே முழு காரணம் என்பது அவர்களின் மனமார்ந்த நம்பிக்கை
அதனால் ஜெருசலேமில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களை எல்லாம் கண்டுகொள்வதில்லை, சிலவற்றை பல்லை கடித்துகொண்டு பொறுத்துகொள்கின்றார்கள்
ஆனாலும் அவ்வப்போது பழிவாங்க தவறவில்லை, இப்பொழுது இயேசு கல்லறை அமைந்த ஆலயத்தில் வில்லங்கத்திற்கு வந்தாயிற்று
அந்த ஆலயம் இன்று ஒரு இஸ்லாமிய குடும்பத்தால் நிர்வகிக்கபடுகின்றது, அவர்கள்தான் அந்த பாரம்பரிய புனிதமான இடத்தின் தற்போதைய அதிகாரம் கொண்டிருப்பவர்கள்,சாவி அவர்களிடம் தான் உண்டு
அவர்களால் இன்றுவரை ஒரு சிக்கலும் இல்லை
இஸ்ரேல் அரசு அந்த புனிதமான ஆலயத்தை ஆலயம் என்ற வரிசையில் கொண்டுவராமல், வியாபார நிலையம் என்ற வரிசையில் கொண்டு வந்து பெரும் வரிகளை சுமத்திற்று
இது ஆலயம், கர்த்தராகிய தேவன் உயிர்த்தெழுந்த ஆலயம் , இதுவா வியாபார நிலையம் என கிறிஸ்தவர்கள் கேட்டும் இஸ்ரேல் இறங்கவில்லை அவர்கள் கிறிஸ்தவ வெறுப்பு அப்படி
இதனால் கோவில் பூட்டபட்டது, சுற்றுபயணிகள் பாதிக்கபட்டனர், விஷயம் கொஞ்சம் வெளியில் வந்தது 3 நாட்களில் விஸ்வரூபமெடுத்தது
மேற்கு நாடுகள் எங்களிடமே உங்கள் வேலையினை காட்டுவீர்களா என முறைக்க இப்பொழுது வரிவிலக்கு அளித்துள்ளது இஸ்ரேல் இதனால் ஆலயம் திறக்கபட்டுள்ளது
இயேசு வாழ்ந்த காலத்தில் யூத ஆலயம் வியாபார தலமானதை எதிர்த்து எல்லோரையும் அடித்து விரட்டினார். அதற்கு 2030 வருடம் கழித்து அவர் கல்லறையினை வியாபார தலம் என அறிவித்து பழிவாங்குகின்றார் இஸ்ரேலியர்
இங்கு இது தெரியாமல் பல கிறிஸ்தவர் "இஸ்ரேல் வாழ்க, தேவன் இஸ்ரேலை பாதுகாத்தார் அல்லேலூயா.." என அழிச்சாட்டியம் செய்கின்றார்கள்
பரிதாபத்திற்குரிய கூட்டம் இது
No comments:
Post a Comment