சிரியாவில் என்ன நடக்கின்றது என்பதன் சுருக்கம் இதுதான்
சிரியாவில் ஆட்சியினை மாற்றலாம் என கருதி போராளிகளை உருவாக்கியது அமெரிக்கா. ஆனால் சிரியா மக்கள் அரசை எதிர்க்கவில்லை, அதிருப்தி உணரவில்லை இதனால் போராளிகளுக்கு வரவேற்பில்லை
போராளி குழுக்களில் ஒன்றான அல் நுஸ்ரா என்னவென்று நினைக்கின்றீர்கள்? அல் கைதாவின் ஒரு பிரிவு.
பின் எப்படி ஆதரவு கிடைக்கும்?
இந்நிலையில் ஐஎஸ் இயக்கத்தின் அட்டகாசம் பெருகி சிரியாவில் குழப்பம் வெடித்தது. அமெரிக்கா ராக்கா நகரில் வீசிய குண்டில் செத்த குழந்தைகள் கணக்கில்லாதவை, அதெல்லாம் பற்றி பேசமாட்டார்கள்
காரணம் அது தீவிரவாததிற்கு எதிரான போர்
இப்பொழுது சிரிய அரசு படை முன்னேறுகின்றது, கிழக்கு பகுதியினை தீவிரவாதிகளிடமிருந்து மீட்கின்றது. ஆனால் அவர்கள் புலிகள் முள்ளிவாய்க்காலில் மனித கேடயம் வைத்திருந்தது போல் வைத்திருக்கின்றார்கள் அந்த கொடூர தீவிரவாதிகள்
அறிந்து சொன்னாரோ அறியாமல் சொன்னாரோ சீமான், அதே நிலைதான் இங்கேயும்
தீவிரவாதிகளை ஒழித்து கட்ட சிரிய அரசு எடுக்கும் நடவடிக்கையில் பலர் சாகின்றனர், அந்த தீவிரவாதிகளும் மக்களை விடுவதாக இல்லை
இந்த பகுதி அமெரிக்க சவுதி ஆசிபெற்றவர்கள் கட்டுபாட்டு பகுதி என்பதால் எல்லா படங்களும் உலகிற்கு கிடைக்கின்றன
முன்பு அமெரிக்க படுகொலைகளை வெளியிட்ட அல் ஜசீராவும் அதற்கு அடைக்கலம் கொடுத்த கத்தாரும் எதிர்கொண்ட சிக்கல் கொஞ்சமல்ல, கத்தார் சிக்கல் வர முதல் காரணமே இதுதான்
அமெரிக்கா செய்தால் தீவிரவாதத்திற்கு எதிரான போர், ஆனால் சிரியா செய்தால் மானிட கொடூரம்
சிரியாவிற்காக அழுபவர்கள் எவனாவது அமெரிக்க படையால் கொல்லபட்ட சிரிய மக்களுக்ககாகவும், இஸ்ரேலால் கொல்லபடும் பாலஸ்தீன சிறுவர்களுக்காகவும் அழமாட்டான்
ஏமனில் சவுதியால் கொல்லபடும் சிறுவர்களுக்காக அழமாட்டான்
மாறாக அமெரிக்க பிடி சிரியாவில் சரியும்பொழுது மட்டும் அழுவான் அல்லது அழவைகபடுவான்
ஏனெனில் சிரியா செய்தால் "மானிட படுகொலை" மற்றபடி அமெரிக்கா, துருக்கி, சவுதி எல்லாம் செய்தால் அது "போர்"
No comments:
Post a Comment