Wednesday, February 28, 2018

சிரியா போரினை உற்று கவனியுங்கள். அந்த அழிவுகளை பாருங்கள்

சிரியா போரினை உற்று கவனியுங்கள். அந்த அழிவுகளை பாருங்கள்
காஷ்மீரில் ஏன் இந்தியா மூன்றாம் நாட்டு தலையீட்டை ஏற்கவிலை என்பதும், பாகிஸ்தான் ஏன் அப்படி வேண்டும் என அடம்பிடிப்பதும் புரியும்
மூன்றாம் நாட்டை அனுமதித்தால், நான்காம் நாடு ரகசியமாக வரும், பின் கூடவே ஆயுதமும் வரும். பின் என்ன மாபெரும் அழிவுதான்
காஷ்மீரில் அந்த அழிவினை கூடுமானவரை தவிர்த்தே இந்தியா தக்கவைத்து வருகின்றது, இதனால் இந்திய ராணுவம் சந்திக்கும் இழப்பும் அதிகம்
எப்படியாவது மூன்றாம் நாடு அதில் தலையிட வேண்டும், அச்சூழல் வரவேண்டும் என பாகிஸ்தானை தூண்டிவிட்டு சிலநாடுகள் செய்யும் சூழ்ச்சியினை நம் வீரர்கள் உயிர்கொடுத்து முறியடிக்கின்றனர்
ஈழத்தில் இன்னொரு நாட்டுபடை வந்து குதறிபோட்டிருக்கும் நிலையில்தான் இந்தியபடை சென்றது. சர்ச்சைகள் கூட புலிகள் மோதலுக்கு பின்பேதான்
அதுவும் இந்திய ராணுவம் பொறுப்போடு இருந்தது, அங்கு அன்றே முள்ளிவாய்க்காலை நிகழ்ந்த்த இந்திய ராணுவத்திற்கு சில நொடி ஆகியிருக்காது , ஆனால் மக்கள் அழிவை எண்ணி கைகளை கட்டிகொண்டு அடிவாங்கியது
இதனை எல்லாம் பின்பு முள்ளிவாய்க்காலில் சிங்களன் மொத்தமாக கொள்ளிவைத்தபொழுதுதான் எல்லோருக்கும் புரிந்தது
சில கணக்குகளை புரிந்துகொள்ள தகுந்த உதாரணம் வேண்டும்
சிரியாவினை நன்கு பாருங்கள், கவனியுங்கள். ஈழ விவகாரம் முதல் காஷ்மீர் வரை இந்தியா எவ்வளவு நிதானமாக அழிவுகளை குறைக்க பாடுபடுகின்றது எனபது புரியும்
இந்த தேசத்தின் பெருந்தன்மையும், அதன் மாபெரும் முன்னெச்செரிக்கையும், தியாகமும் புரியும்.
ஜெய் ஹிந்த்.

No comments: