Friday, December 14, 2018

ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள்

இன்றோடு 14 ஆண்டுகள் ஆகின்றன, இந்த நாளில்தான் புலிகளுக்கு நாள் குறிக்கபட்டது
அது ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள்
உறுதியாக சொல்லலாம், சூடமேற்றி சத்தியம் அடித்து சொல்லலாம், எல்லா சிக்கலிலிருந்தும், புலிகள் செய்த எல்லா அட்டகாசங்களிலிருந்தும் புலிகளையும், பிரபாகரனையும் காத்தவர் பாலசிங்கம் மட்டுமே
அவரின் வாதமும் வல்லரசுகள் முன்னால் அவர் செய்த தர்க்கமுமே. பாலசிங்கமே புலிகளின் முகம், பிரபாகரன் என்பவன் முகமூடி
யாழ்பாண வம்சம், லண்டன் கல்வி, அங்கே பேராசிரியர் எனினும் ஈழபோராட்டம் அவரை அழைத்தது, புலிகளின் ஆதரவாளராக மாறினார்
அவர் புலிகளுடன் இணைந்தபின்பே புலிகளின் வீரியமான போராட்டம் தொடங்கிற்று, சர்வதேச ஆதரவினை புலிகளுக்கு பெற்று கொடுத்தவர் அவரே, அந்த ஆதரவில்தான் ராஜிவ் கொலை முதல் பல சிக்கல்களை தாண்டி புலிகளால் நிற்க முடிந்தது
பிரபாகரனுடன் நேருக்கு நேர் விவாதித்த ஒரே புலி இறுதிவரை பாலசிங்கம் மட்டுமே, இந்த கடிவாளம்தான் அதுகாறும் புலிகளை காத்தது
அமைதிபடை காலம், சந்திரிகா காலம் என எல்லா ஆபத்துக்களிலிருந்த்தும் புலிகள் அவரால்தான் காப்பற்றபட்டனர், பிரேமதாசா முதல் இறுதியாக நார்வே குழு வரை அவர் புலிகளை காக்க பட்டபாடு கொஞ்சமல்ல‌
உலக நிலை மாற, பாலசிங்கத்திற்கும் சில விஷயங்கள் புரிந்தன, இனி தனிஈழம் என்பது சாத்தியமல்ல, இந்தியாவும் ராஜிவ் கொலை என்பதை தாண்டி வராது, ஆனால் பிரபாகரனோ தனிஈழம் இல்லை என்றால் யாரையும் கொல்ல கூடியவர்
ஆனால் அமெரிக்க எச்சரிக்கையோ இனி யுத்தமென்று வந்தால் புலிகள் இருக்கவே மாட்டார்கள் எனும் ரீதியில் இருந்தது
பாலசிங்கம் தவித்தார், நார்வேயிடம் தனியாட்சி பரிசீலிக்கின்றோம் என சொல்லிவிட்டு பிரபாகரனை அவரால் சந்திக்க முடியவில்லை,
பிரபாகரன் உலகம் புரியாதவராய் இருந்தார், புரிவதற்கு அறிவு கொஞ்சமாவது வேண்டும்
பாலசிங்கத்தோடு முரண்பட்டார் பிராபரன், 2002ல் பாலசிங்கம் சுயாட்சி முடிவுக்கு வந்திருந்தார், ஆனால் பிரபாரகன் வரவே இல்லை.
சில இடங்களில் அவர் இறுதியில் பிரபாகரனால் அவமானபடுத்தபட்ட இடங்களும் உண்டு என்பார்கள்
2004ல் கருணா விலகும்பொழுதே , ஆண்டன் பாலசிங்கமும் விலகினார், உடல்நலம் காரணம் காட்டி விலகுவதாக சொன்னாலும், அவர் மனம் நொந்தது கொஞ்சமல்ல‌
உலகில் எல்லா நாட்டையும் பகைத்துவிட்டு ஒரு இயக்கம் நாடு அடைய முடியாது என அவர் சொன்னது யார் காதிலும் ஏறவில்லை
அந்த பாலசிங்கம், இறுதியில் புலிவால் பிடித்த கொடுமையால் ஏதும் யாரிடமும் பேசமுடியாமல் தவித்தார்
இந்தியாவுடன் அவர் நட்புறவினை ஏற்படுத்த முயன்றாலும், இந்தியா புலிகளை நம்ப மறுத்தது, காரணம் 1983 முதல் புலிகள் காட்டிய நன்றிகடன் அப்படி
இந்தியாவினை இழுத்து பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர விரும்பினார் பிரபாகரன், இந்தியா போங்கடா .... என்ற நிலைப்பாட்டில் இருந்தது, அதன் நிலைப்பாடு அப்படி
பிரபாகரனுக்கும் உலகிற்கும் இடையில் தவியாய் தவித்தார் பாலசிங்கம்
எப்படியாவது இந்தியாவினை இழுத்து தன் நோக்கத்தில் வெல்ல வேண்டும் என்ற பிரபாகரனுக்கு எப்படி இந்தியா வரும் என நம்புகின்றாய்? என சொல்லிபுரியவைக்க முடியா சோகத்தில் அவர் இருந்தார்
எதையுமே யோசிக்காத பிரபாகரன் ஒருபக்கம்
தனக்கு செவிமடுக்கா பிரபாகரனை மொத்தமாக ஒழித்துவிட மேற்குநாடுகள் ஒருபக்கம்
இதில் கொல்லபடபோவது லட்சகணக்கான மக்கள், இதுதான் பாலசிங்கத்தின் வேதனை
நார்வே தூதுகுழு என்பது அமெரிக்காவின் மென்மையான முகம், இஸ்ரேல் என்பது அவர்களின் கொடுமையான முகம் என்பது உலக அரசியல் தத்துவம்
அந்த நார்வே வந்து பேசுகின்றது என்றால் அது அமெரிக்காவின் குரல் என்றே அர்த்தம். 1987ல் ராஜிவினை வெளியே போ என சொன்ன பிரபாகரன், எரிக் சோல்ஹிமினையும் கழுத்தை பிடித்து தள்ள தயங்கவில்லை
பாலசிங்கத்திடம் இனி பிரபாரனின் சாவு தவிர்க்கமுடியாதது என்பதை சொன்னார் எரிக்சோல்ஹிம், ஏன் அமெரிக்க இலங்கை தூதரே "இனி புலிகள் யுத்தமென்று வந்தால் கேவலமாக தோற்பார்கள்" என சொன்னார்.
நார்வே தூதர் எரிக் சோல்ஹிமிடம் " லட்சகணக்கான சனம் சாக போகுது எரிக், அதனை நினைத்தால்தான் கடும் வேதனை" என இறுதியாக சொன்னதுதான் ஆண்டன் பாலசிங்கத்தின் வார்த்தை
அவர் காலமானதும், பாய்ந்துவந்த மேற்குலக கட்டளைகள் புலிகளை குதறி எறிந்து முடித்தும் விட்டன‌
எங்கோ காட்டுக்குள் சுட்டுகொண்டிருந்த இயக்கம், பாலசிங்கத்தின் வருகைக்கு பின்னே உச்சம் அடைந்தது, அவர் காலமெல்லாம் அது தன் கொடியினை பறக்கவிட்டுகொண்டே இருந்தது
சுருக்கமாக சொன்னால் அப்போரின் கிருஷ்ணபரமாத்மா சாட்சாத் பாலசிங்கமே, அவர் சொற்படி கேட்டிருந்தால் இந்நேரம் ஈழ வரலாறு மாறி இருக்கலாம்.
தர்மன் தவறு செய்தான், அதனால் பொறுத்திருப்போம் என்ற கிருஷ்ணனின் வார்த்தைகளுக்கு பாண்டவர் கட்டுபட்டனர்,
என்மீது தவறே இல்லை, அர்ச்சுணா யுத்தம் தொடங்கு என தர்மன் வனவாசம் போகாமல் யுத்தகளம் வந்திருந்தாலோ
கிருஷ்ணா உன் புல்லாங்குழலை தூக்கி நட, கர்ணனையும், பீஷ்மரையும் வெல்லும் வழி எனக்கு தெரியும் என அர்ச்சுணன் பேசி இருந்தாலோ பாரதம் என்னாயிருக்கும்?.."
அதுதான் ஈழத்தில் நடந்தது
புலிகளின் பெரும் தவறு ராஜிவ் கொலை, அடுத்த பெரும் தவறு பாலசிங்கத்தையும், கே பத்மநாபனையும் ஒதுக்கியது.
இதனால் ஏற்பட்டதே பெரும் அழிவும் முடிவும்
உனக்கு தெரியாது, இந்தியாவும் கலைஞருமே ஈழபோருக்கு காரணம்,என சீமானிய வைகோயிச அடிப்பொடிகள் சொல்லிகொண்டிருந்தால், அவர்களுக்கெல்லாம் ஒரே பதில்
பாலசிங்கத்தின் மனைவி அடெல் ஆஸ்திரேலியா பெண்மணி, வெள்ளைகாரிதான், ஆனால் கிட்டதட்ட சோனியா சாயல். கணவனுக்காக தமிழ் கற்றார்
ஈழபோராட்டத்தின் ஆரம்பம், சிக்கல், எது தடை?, எது பிடிவாதம் என்பது நம் எல்லோரையும் விட அடேலுக்கு நன்றாக தெரியும், காரணம் எல்லா பேச்சுவார்த்தைகளிலும் அவரும் பங்குபெற்றிருந்தார்
ஈழப்போர் முடிந்து எங்காவது அவர் பேச கண்டிருக்கின்றோமா?
சீமான், வைகொ, இன்னும் சம்பந்தமில்லா பலபேர் டிவிக்களில் பிரபாகரன் அப்படி, இப்படி என பேசிகொண்டிருக்க, பிரபாகரனிடம் ஒரு மூத்த சகோதரி போல பழகிய அடேல் அமைதி காக்கின்றார்.
அவருக்கு எல்லா ரகசியமும் தெரியும், ஈழமுடிவின் காரணமும் தெரியும், ஆனால் பேசவிட மாட்டார்கள், பேசவிட்டால் பலர் முகத்தில் கரி பூசப்படும்
அப்படி அது அரசியலாக்கபட்டுவிட்டது, அவர் பேசினால் பலபேர் ஓடவேண்டி இருக்கும், இந்த புலிபெருமை எல்லாம் தூரவீசபடும்.
அதனால் அவர் வாய்திறக்க கூடாது என்பதில் பலருக்கு ஆர்வம்
ஈழபோராட்டம் 30 ஆண்டுகள் நடைபெற்றது என்றால், உலகளாவிய ஒரு பார்வை பெற்றது என்றால் அதற்கு ஒரே காரணம் பாலசிங்கம்
அவர் வந்தவுடன் இயக்கம் விஸ்வரூபமெடுத்தது, அவர் இல்லாத இயக்கம் சீட்டுகெட்டென சரிந்தது
இன்று அந்த ராஜதந்திரியின் நினைவு நாள்,
திம்பு பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியாவிலிருந்து அவர் நாடுகடத்தபட்டதும், பின் அமைதிபடை மோதலின் போது அவர் பிரேமதாசாவோடு போஸ் கொடுத்ததும் நினைவுக்கு வருகின்றன‌
அதே பாலசிங்கம் பின் ராஜிவ் கொலைக்கு பின் கிட்டுவுடன் லண்டனில் போஸ்கொடுத்த காலமும் உண்டு
பின்னாளில் பிரபாகரனை திருந்தமுடியாது என அவர் அறிந்த கால்ங்களில் இந்தியாவுடன் தன் தொடர்பினை ஏற்படுத்த முயன்றதும், இந்தியா கையினை தட்டிவிட்ட காலமும் கண்ணுக்குள் வந்தது
ஒருவகையில் பிரபாகரனுக்கு அஞ்சிய வாழ்வுதான் அவர் வாழ்ந்திருக்கின்றார், படித்தவர், பெரும் ராஜதந்திரி ஆனால் ஒரு முரடனுக்கு முக மூடியாக இருந்ததுதான் பெரும் சோகம்
ஆங்கில புலமையில் தன்னிர்கற்றவர் பாலசிங்கம், அதற்கு எடுத்துகாட்டு கிளிநொச்சி மாநாடு, உலக பத்திரிகையாளர் ஆங்கிலத்தில் கேள்விகளை அள்ளி வீச, அனாசயமாக பதிலளித்தார் பாலசிங்கம்
அதனை கவனித்தவர்களுக்கு ஒரு விசித்திரம் பிடிபடும்
கேள்விக்கான பதிலை வாய்வரை கொண்டுவருவார் பாலசிங்கம், அதற்குள் பிரபாகரன் முகம் மாறும், உடனே கேள்வியினை பிரபாகரனிடம் மொழிபெயர்ப்பார், பிரபாகரன் திருதிருவென விழித்துகொண்டே ஆஆஆஆ..ஈஈஈஈ,, அது.. என எதாவது முணகுவார், பிரபாகரன் பதிலுக்கு சம்பந்தமே இல்லாமல் ஆங்கிலத்தில் பதிலளிப்பார் பாலசிங்கம்
பிரபாகரனுக்கு ஒன்றும் புரியாது, இப்போதிருக்கும் அதிமுக எம் எல் ஏக்கள் போல முழித்துகொண்டே இருந்தார்
ஆனாலும் ஒரு கேள்விக்கு பிரபாரன் முட்டாள்தனமாக பதில் சொல்ல, உலகின் சுருக்கு கயிறு இறுகியது, அது ராஜிவ் கொலையினை பற்றி நிரூபர்கள் சுருக்கு போட, பாலசிங்கள் கேள்வியினை திருப்ப, கொஞ்சமும் யோசிக்காமல் "அது ஒரு துன்பியல் சம்பவம்" என்றார் பிரபாகரன்
அவரை பொறுத்தவரை அது பிரபாகரன் செய்த ஏராளமான கொலையில் ஒன்று, இந்தியர் வருந்தும் துன்பமா? சரி துன்பமான சம்பவம் என சொல்லிவிட்டார்
ஆனால் பால்சிங்கம் ராஜதந்திரமான வார்த்தைகளால் அதனை மறைத்தாலும், துன்பியல் சம்பவம் முத்திரையாயிற்று, அது பால்சிங்கத்தின் வார்த்தை அல்ல,
மாறாக பிரபாகரனின் வார்த்தை
பிரபாகரனை பக்கத்தில் வைத்து ஒரு பேட்டி கூட கொடுக்கமுடியா பாலசிங்கம், 30 ஆண்டுகளாக இயக்கம் நடத்தினார் அல்லவா? அதுதான் ராஜதந்திரம்
ஈழம் அமைவதில் 1991லே மண் அள்ளி போட்டாயிற்று, பின் பின்லேடன் ஆட்டத்தில் அதற்கு சமாதியும் கட்டியாயிற்று
பாலசிங்கம் சொற்படி கேட்டிருந்தால் இன்று ஈழத்தில் ஒரு சுயாட்சியாவது அமைந்திருக்கும், இத்தனை பெரும் அழிவு நடந்திருக்காது என்பதில்தான் பால்சிங்கத்தின் முத்திரை ஈழபோராட்டத்தில் பதிந்திருக்கின்றது.
ஈழ புலிகளுக்கு உண்மையான காவல்காரன் அந்த பாலசிங்கமே என்பதைத்தான் 2009 முள்ளிவாய்க்கால் உலகிற்கு உணர்த்தியது.
இதில் மகா விசித்திரம் என்னவென்றால், 30 வருடம் பழகிய அந்த பாலசிங்கத்திடம் சொல்லாத பல ரகசியங்களை பிரபாகரன் என்னிடம் சொன்னார் என சீமான் என்றொருவர் சொல்லிகொண்டிருக்கின்றார் அல்லவா?
அதுதான் மகா விசித்திரம்
பீஷ்மரிடம், கர்ணனிடம் கூட சொல்லாத ரகசியத்தை துரியோதனன் ஒரு வழிப்போக்கனிடம் சொன்னான் என்பதை நீங்கள் நம்புவீர்களானால், சீமானையும் நம்பிகொள்ளுங்கள்.
அங்கே திருமுருகன் காந்தி என்பவன் மே 17 அன்றுதான் ஈழம் அழிந்தது என சொல்லிகொண்டிருக்கின்றான் , இந்த டிசம்பர் 14 பற்றி எல்லாம் அவன் பேசமாட்டான்.
உண்மையில் ஈழதமிழரின் நம்பிக்கை அழிந்தது 2009 முள்ளிவாய்க்காலில் அல்ல, அது ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் அடைந்த டிசம்பர் 14.

No comments: