1997 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள், அன்றைய காங்கிரஸ் தலைவர் சீத்தாராம் கேசரிக்கு 10, ஜன்பத் இல்லத்தில் இருந்து ஒரு குறிப்பு வந்தது . அதை வாசிக்கும் போதே அவர் முகம் மாறியது " It is all over... She is coming " என்று அந்த குறிப்பை சோகமாக வாசித்து முடித்தார். அந்த எட்டு வரி குறிப்பு தான் சோனியா காந்தியின் அரசியல் வாழ்க்கையின் முதல் புள்ளி. அந்த குறிப்பில் 1998ஆம் ஆண்டு பாராளமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்யப் போவதாக அவர் அறிவித்தார். தன்னுடைய கனவர் இறப்புக்கு பின் ஏழு ஆண்டுகள் அமைதியாக இருந்த சோனியா காந்தியின் இந்த முடிவை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அப்படி தான் அவர் அரசியல் வாழ்க்கை தொடங்கியது.அதற்கு அடுத்து சில மாதங்கள் கழித்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டார்.
கட்சியின் தலைவராக அவர் பொறுப்பேற்ற போது அவருக்கு சொந்த கட்சியிலே பல எதிர்ப்புகள் குறிப்பாக, ஷரத் பவார், மறைந்த லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மா இவர்கள் எல்லாம் கட்சியை விட்டு விலகினார்கள். அத்தனை எதிர்ப்புகளையும், சவால்களையும் தனி ஒரு நபராக அவர் எதிர் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு மிகச் சிறந்த தலைமையை வழங்கினார். தலைவராக பொறுப்பேற்று ஆறு ஆண்டுகளில் மத்தியில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர வைத்தார். பதினொரு மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இருபத்து நான்கு மாநிலங்களில் ஆட்சியை கைபற்றியது. காங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலே 19 ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஒரே நபர் அவர் மட்டுமே.
நேரடியாக அரசியலில் களம் இறங்காத போதும் 1970களிலும், 80களிலும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி களின் அரசியல் நடவடிக்களையும், அதிகாரத்தில் இருக்கும் போது அவர்களது செயல்பாடுகளையும் அருகில் இருந்து பார்த்தவர். கட்சியை வழி நடத்துவதில் இந்திராவும் சோனியா காந்தியும் ஒரே அனுகுமுறையை கையாண்டதில்லை. கட்சியில் மூத்த தலைவர்கள் தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினால் இந்திரா காந்தி அத்தனை பேரையும் அதிரடியாக நீக்கி விடுவார் அல்லது கட்சி இரண்டாக உடையும். சோனியா காந்தி அப்படி அல்ல அவர்களே கட்சியை விட்டு விலகும் வரை அமைதியாக இருப்பார். 1994ல் நரசிம்ம ராவ் சோனியா காந்தியை ஓரம் கட்ட நினைத்த போதும் கூட அவர் கட்சியை பிளக்க முயற்ச்சிக்கவில்லை. பெரும்பான்மையான மத்திய அமைச்சர்களும் , மாநில முதல்வர்களும் அப்போது சோனியாவை தலைவராக்க விரும்பினார்கள் எனினும் அவர் மறுத்து விட்டார். 2004ல் கூட பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டார். 1975ல் அலாகாபாத் உயர் நீதி மன்றம் அன்னை இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவித்த போது அதை ஏற்க மறுத்து அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். ஆக தலைமை பொறுப்பை பொருத்தவரை அடிப்படையிலேயே இந்திரா காந்திக்கும் சோனியா காந்திக்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு. சோனியா எப்போதும் ஒரு democrat leader தான்.
சோனியா காந்தியின் வாழ்க்கையை நான்கு காலக் கட்டங்களாக பிரிக்கலாம் .முதல் காலக் கட்டம் அவருடைய திருமண வாழ்க்கை , காதல் கனவர், தன்னுடைய அத்தையான அன்னை இந்திராவின் முழுமையான அன்பும் அரவனைப்பும் பெற்ற ஒரு நிறைவான திருமண வாழ்க்கை. எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த போது அன்னை இந்திராவின் படுகொலை அவரை பெரும் சோகத்தில் தள்ளியது.
இரண்டாம் காலக் கட்டம் அவருடைய வாழ்க்கையை தலை கீழாக புரட்டி போட்டது. ராஜீவின் மரணம் அவருடைய வாழ்க்கையில் பேரிடியாக வந்து விழுந்தது. ராஜீவ் காந்திக்கு அரசியல் மீது நாட்டமே இல்லை. அன்னை இந்திரா பிரதமராக இருந்த போதும் அவர் பைலட் ஆகவே இருந்தார். சஞ்சய் காந்தியின் மரணத்திற்கு பிறகு அன்னை இந்திராவின் வற்புறுத்தலால் அரசியலில் நுழைந்தார் ராஜீவ். அன்னை இந்திராவின் மறைவுக்கு பிறகு காங்கிரஸ் காரியக் கமிட்டி ராஜீவை தலைவராக தேர்ந்தெடுத்த போது அதை கடுமையாக எதிர்த்தார் சோனியா. அன்னை இந்திரா போல் தன் கனவரும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. எல்லா பொதுக் கூட்டங்களுக்கும், வெளிநாடு பயணங்களுக்கும் ராஜீவ் உடன் சோனியா எப்போதும் இருப்பார். 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி சோனியாவின் வாழ்க்கையில் இடி விழுந்தது. தன்னுடைய அன்பு கனவரை தீவிரவாதத்துக்கு பலி கொடுத்தார். அதில் இருந்து மீண்டு வர அவர் மிகவும் சிரமப்பட்டார்.
மூன்றாவது காலக் கட்டம் 1991 முதல் 1998 வரை அந்த ஏழு ஆண்டுகள். வாழ்க்கையை வெறுத்து தனிமையில் இருந்தார். அவர் இத்தாலிக்கே திரும்பப் போகப் போவதாக அப்போது பேசப் பட்டது. இந்த காலக் கட்டத்தில் தான் அவரை அரசியலுக்கு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வற்புறுத்தினார்கள். அதை முற்றிலுமாக நிராகரித்து விட்டார். டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் வந்த போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து " சோனியா , சோனியா " என்று கத்தினார்கள். பத்து நிமிடத்திற்கும் மேலாக கைதட்டல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. காரியக் கமிட்டி உறுப்பினர் ஒருவர் சோனியாவிடம் வந்து மேடைக்கு வர அழைத்த போது, இந்த ஆர்பாட்டத்தை இப்போது நிறுத்தா விட்டால் நான் கூட்டதில் இருந்து வெளியேறுவேன் என்று எச்சரித்தார். இந்த காலக்கட்டத்தில் தான் Rajiv Gandhi Foundationஐ தொடங்கினார். மேலும் Nehru Memorial Fund , Indira Gandhi Memorial trustஐ தலைமையேற்று பல சர்வதேச மாநாடுகளை டெல்லியில் நடத்திக் காட்டினார்.
நான்காவது காலக் கட்டம் அவருடைய அரசியல் பயனத்தின் தொடக்கம். 1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார். அன்றிலிருந்து இன்று வரை இந்திய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்து வருகிறார். 1998 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினரானார். பிறகு 2004ல் காங்கிரஸ் அதிக இடங்களை கைபற்றியபோது ஐக்கிய முற்போக்கு கூட்டனி என்று ஒன்று உருவானது அதன் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா தான் பிரதமராக வேண்டும் என்று முதல் ஆளாக சொன்னவர் கலைஞர், அனைவரும் அவர் தான் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்த்தார்கள். சோனியா அது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. அன்றைய குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாமை சந்தித்து ஆட்சி அமைக்க தமக்கு போதுமான MPக்கள் இருப்பதாக தெரிவித்தார், அப்போது MPக்களின் ஆதரவு கடிதத்தை அவர் எடுத்துச் செல்லவில்லை. MPக்களின் ஆதரவு கடிதத்துடன் அதற்க்கு அடுத்த நாள் கலாமை சந்தித்தார். இரண்டாம் நாள் கலாமை சந்திக்க சென்ற போது சோனியா தன்னுடன் மன்மோகன் சிங்கை அழைத்துச் சென்றார்.
அந்த ஒரு நாள் இரவில் தான் சோனியா தான் பிரதமராக போவதில்லை என்ற முடிவை எடுத்தார். ஆதரவு கடிதத்தை திரு.அப்துல் கலாமிடம் கொடுத்து விட்டு குடியரசு தலைவர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது Madam , Are you the next PM ? என்று ஒருவர் கேட்ட போது " I think our country will be safe in the hands of Dr.Manmohan Singh " என்று கூறினார். சோனியா காந்தியின் இந்த முடிவை யாரும் எதிர்பார்க்க வில்லை. காங்கிரஸ் கட்சியினர் இதை நிராகரித்தார்கள், நாடு முழுவதும் அன்று சுஸ்மா ஸ்வராஜ்ன் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது காரணம் சோனியா பிறப்பால் ஒரு இத்தாலியர், அவர் பிரதமரானால் நான் மொட்டை அடித்துக் கொள்வேன் என்று சொன்னார்.இன்றும் சங்கிகள் அப்துல் கலாம் அவருக்கு பதவி பிரமானம் செய்து வைக்க மறுத்து விட்டார் என்று பொய்யை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சர்ச்சை பற்றி அப்துல் கலாம் தன்னுடைய Turning Points புத்தகத்தில் எழுதியிருக்கிறார் from Turning Points " While this communication was in progress, I had a number of emails and letters coming from individuals, organizations and parties that I should not allow Mrs Sonia Gandhi to become the prime minister of our country. I had passed on these mails and letters to various agencies in the government for their information without making any remarks. During this time there were many political leaders who came to meet me to request me not to succumb to any pressure and appoint Mrs Gandhi as the prime minister, a request that would not have been constitutionally tenable. If she had made any claim for herself I WOULD HAVE HAD NO OPTION BUT TO APPOINT HER " சுருக்கமாக " சோனியாவை பிரதமராக்க கூடாது என்று எனக்கு பல தரப்பில் இருந்து அழுத்தங்கள் தரப்பட்டது. அந்த கோரிக்கை அரசியல் அமைப்பு சாசனத்துக்கு எதிரானவை . ஒருவேளை சோனியா பிரதமராக வேண்டும் என்று அவரே நினைத்திருந்தால், அவருக்கு நான் பதவி பிரமானம் செய்து வைப்பது தவிர வேறு வழியில்லை "
அதற்கு பிறகு காங்கிரஸ் பாராளமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய போதும் அவர் பிரதமர் பதவி தனக்கு வேண்டாம் என்று தெளிவாக சொன்னார். அவருடைய பேச்சுகளில் மிகச் சிறந்த பேச்சு அது. காங்கிரஸ் MP ரேனுகா சௌத்ரி அவர் பேச்சை கேட்டு கதறி அழுதார். நான் youtubeல் பலமுறை பார்த்த வீடியோ அது, குறிப்பாக இந்த வரிகள் இன்றும் என் மனதில் இருக்கிறது " The people of India choosen us for their aspirations not for ours. I must be humble to decline this post" நாட்டின் உயரிய பதவியை இந்த இரண்டு வரிகளில் தூக்கி எறிந்தார்.
அதற்கு பிறகு காங்கிரஸ் பாராளமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய போதும் அவர் பிரதமர் பதவி தனக்கு வேண்டாம் என்று தெளிவாக சொன்னார். அவருடைய பேச்சுகளில் மிகச் சிறந்த பேச்சு அது. காங்கிரஸ் MP ரேனுகா சௌத்ரி அவர் பேச்சை கேட்டு கதறி அழுதார். நான் youtubeல் பலமுறை பார்த்த வீடியோ அது, குறிப்பாக இந்த வரிகள் இன்றும் என் மனதில் இருக்கிறது " The people of India choosen us for their aspirations not for ours. I must be humble to decline this post" நாட்டின் உயரிய பதவியை இந்த இரண்டு வரிகளில் தூக்கி எறிந்தார்.
எச் ராஜா போன்ற ஈன பிறவிகளுக்கு அவர் இத்தாலியராக தெரியலாம். மோடி போன்ற தற்குறிகள் அவரை விதவை என்று அழைக்கலாம்.
ஆனால் அவர் இந்திராவின் மருமகள், இந்தியாவின் மகள்.
No comments:
Post a Comment