Friday, December 14, 2018

சில ஆதி திராவிட தோழர்கள் திராவிடர் இயக்கம் எங்களுக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள்

சில ஆதி திராவிட தோழர்கள் திராவிடர் இயக்கம் எங்களுக்கு என்ன செய்தது என்று கேட்கிறார்கள் அவர்களுக்கு நான் பதில் அளிப்பதற்கு முன்பு இந்தியா முழுவதும் ஆதிதிராவிர் நிலை வப்படி இருந்தது என்பதைக் கூறிவிட்டு பிறகு சென்னை மாகாணத்தில் என்ன மாறுதல் செய்தார்கள் என்பதைக் கூறுகிறேன்.
நான் பதிவிட்ட இந்த நுல் எம்.சி.ராசா வாழ்க்கைச் சுருக்கமும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளும் ஜெ.சிவசமுகம் பிள்ளை அவர்கள் 1930 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டது.
இந்திய அரசு ஆதிதிராவிடர்கள் நிலையை அறிந்து கொள்ள 1928 ஆம் ஆண்டு எம்.சி,ராசா தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்தது. அவர் இந்திய அரசுக்கு தொகுத்து அளத்ததை சிறு சிறு பகுதியாக தொடர்ந்து பதிவிட உள்ளேன்.
வாலாசா வல்லவன்.
இயல் - 7
இந்திய அரசின் மத்தியகுழு அறிக்கைக்கு ராவ்பகதூர் எம்.சி. ராசா எழுதிய குறிப்பு:
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் இந்திய நாட்டின் அரசியல் மற்றும் சமுதாய மாறுதலில், வளர்ச்சியில் ஒரு திட்டவட்ட மான பிரச்சினையாக உருவாகிவிட்டனர். அந்தப் பிரச்சினைகள் வரலாற்று சக்திகளால் மத, பொருளா தார மற்றும் சமுதாய சக்திகளின் விளைவாக உருவானவை. தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையே தோன்றிய மாற்றங்கள் சமுதாயத்தில் நிலவுகின்ற, சமுதாய கருத்துக்களை வெடித்து சிதற வைத்தன.
பூர்வீக இந்து சமுதாயத்தை உருவாக்கியவர்கள் விதித்த நிபந்தனைகளின் காரணமாக, அவர்கள் விதித்த கட்டுப்பாடுகளின் காரணமாக நீண்ட நெடுங்காலமாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் கள் தனிமைப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டனர். அவர்கள் உருவாக்கிய விதம் அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளின் காரணமாகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களிடையே விழிப்புணர்ச்சி எற்பட்டு அவர்கள் தங்கள் வாழ்வு மேம்படவும் பொருளா தாரம், கல்வித்துறைகளில் முன்னேற்றம் ஏற்படவும் அரசியல் பிரச்சினையாக அதை உருவாக்கினார்.
அவர்களிடையே தங்கள் வகுப்புக்களைப் பற்றிய உள்ளுணர்வுகள் வளர்ந்தன, தாழ்த்தப்பட்ட வகுப்புக்களை சார்ந்தவர்களது பூர்வீகம் வரலாற்று அடிப்படையில் ஆய்வுக்குரியது. அரசாங்கத்தின் அனுதாபம் காரணமாகவும், இந்து சமுதாயத்தில் மிக தாமதமாக சமூக விழிப்புணர்வு உருவான காரணத்தினாலும் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அப்படியிருந்தும் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய சக்திகளுக்கு பழைமைவாதிகள் ஒருபக்கமும் அறியாமை இன்னொரு பக்கமும் அணிதிரண்டு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தாழ்த்தப்பட்டோர் பிரச்சினைகளை ஒப்புக் கொள்கின்றன மற்றும் அவர்களுக்காக சிறப்பு நிவாரண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்கின்றன

No comments: