Friday, December 14, 2018

சிந்துவெளி நாகரீகம்

ஆரியர்களை பற்றி தெரிந்து கொள்ளும் முன் சிந்துவெளி மக்களை குறித்து நாம் பார்ப்போம் ஏனெனில் இது ஒரு ஆரிய பண்பாடு என்று RSS கூட்டம் கூறிவருகிறது.
சிந்துவெளி நாகரீகம் என்பது சாரத்தில் பாலைவன நாகரிகம் ஆகும்.
அதாவது உலகில் தோன்றிய முதல் நாகரிகங்களான சிந்து வெளி நாகரீகம் சீனாவின் மஞ்சள் நதி மற்றும் யாஞ்சி நாகரீகங்கள் . எகிப்தின் நைல்நதி நாகரீகம். மெசபடோமியாவின் டைகிரீஸ் யுப்ரடீஸ் நாகரீகங்கள் அனைத்தும் ஏறத்தாழ சமகாலத்தில் தோன்றிய நாகரிகங்களாகும்
இந்த நாகரீகங்கள் அனைத்தும் சமகாலத்தில் தோன்றியவை அதுபோல் வேறொரு ஒற்றுமையும் உண்டு இவை அனைத்தும் கற்கால மனிதன் செம்பையும் வெண்கலத்தை கற்கருவிகளோடு இணைத்து பயன்படுத்திய காலமாகும்
இந்த நாகரீகங்கள் தோன்றிய பகுதிகள் அனைத்தும் பால நிலம், சார்ந்த ஆற்று பாசன பகுதிகள் ஆகும் அதாவது அக்கால மனிதன் தனது எளிய கற்கருவிகளைக்கொண்டு எளிமையாக வேளாந்தொழில் செய்ய தேர்வு செய்த இடங்களே பாலை சார்ந்த வண்டல் மண் கொண்ட நிலமாகும்
ஏனெனில் கற்கருவிகளசிக்கொண்டு அவனுக்கு இங்குதான் தோண்டுவதும் மண்ணை பதப்படுத்துவதும் மிக எளிதாக இருந்தது இதன் வளர்ச்சிப்போக்கில் நல்ல வருமானத்தையும் கொடுத்தது
இவை சுரங்கத்தொழில் மற்றும் பட்டரைகள் கைவினைத்தொழில் ஆகிய தொழில்களில் ஈடுபடும் அளவுக்கு வருமானம் பெருகியது
இப்படி வளர்ந்த இந்த நாகரீகங்களின் உச்சத்தில்தான் பொதுவாக மனிதன் பயிர்தொழிலை விரிவாக செய்ய ஆரம்பித்தான்
இதுஆரம்பத்தில் பெண்களால்தான் மேற்கொள்ளப்பட்டது என பழைய பதிவுகளில் கூறியுள்ளேன் நினைவில் கொள்க எனவே வேளாண் தொழிலை அடிப்படையாக கொண்ட இம்மக்கள் தாய் தெய்வத்தையே வணங்கினார்கள்
ஆனால் சுரங்கம் வர்த்தகம் பட்டரைத்தொழில் பெரிய படகுகளை செய்வது வெண்கலகருவிகளை ஏற்றுமதி செய்வது தந்த பொருட்கள் முத்துமாலைகள் மாணிக்க மாலைகள் போன்ற தொழில்கள் பரவலாக விரிவடந்தது
இந்த தொழில் பிரிவினை இயல்பாகவே ஆணாதிக்கத்தையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கி இருந்தது
இக்காலத்தில் மெசபடோமிய ஊர் பகுதியில் கிடைத்த தடயங்கள் அங்கு இறந்த ஆண்டையின் உடலின் நான்கு திசைகளிலும் 70 போர் வீரர்களும் பணியாளர்களும் அப்பென்ணின் உடலுக்கு காவலாக புதக்கப்பட்டு இருந்ததும் இது அடிமை சமூக அமைப்பு முறை என்பதையும் தெளிவாக்கியது
இதுபோல் எகிப்திய பிரமிடுகளும் அடிமை உழைப்பால்தான் கட்டப்பட்டன இதன் காலம் கிமு 2500
மேற்கண்ட இந்த உதாரணங்கள் வேலை பிரிவினையுடன் சேர்ந்து அடிமை முறையும் உருவானதைக்காட்டுகிறது
ஆனால் சிந்து வெளியில் இவ்வளவு கொடுமையான அடிமை முறை நிலவியதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை
ஆனாலும் சாதிய வேலை பிரிவனை முறையோ அல்லது சற்று நெகிழ்வான அடிமைமுறையோ இங்கு இருந்து இருக்கவே வேண்டும்
சிந்துவெளி மக்கள் மாடு,ஆடு,கழுதை நாய் ஒட்டகம், யானை குதிரை போன்ற விலங்குகளை வீட்டு விலங்காக வளர்த்துவந்தனர்
குதிரைகளை ஆரியரே இந்தியாவுக்கு கொண்டுவந்தனர் என்பது தவறாகும் கிமு 2000க்கும் முன்பே இந்தியாவில் பல்வேறுபகுதிகளில் குதிரைகள் வளர்த்து இனப்பெருக்கம் செய்யப்பட்டன என்பதை மொகஞ்சதாரோ,ஹரப்பா லோதல் சுர்க்கோட்டடா, கலிபங்கன் குண்டாசி ஆகிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட குதிரைகளின் எலும்புகள் பற்றிய நீண்ட பட்டியலே இருக்கிறது
இவர்கள் மத்திய ஆசிய ஈரான் எகிப்து சீனா ஆகிய உலகின் பெரும் பகுதிகளுடன் வாணிப தொடர்பு கொண்டிருந்தனர்
என்பதற்கு அங்கெல்லாம் கிடைத்த ஹரப்பன் பொருட்கள் சான்றாக விளங்குகிறது
சிந்து வெளி பண்பாடு என்பது ஏதோ ஒரு இனத்துக்கான பண்பாடு அல்ல
அது இப்பகுதிகளில் வாழ்ந்த பல்வேறு மக்கள் சமூகங்களின் பொதுப்பண்பாடு ஆகும்
இதில் ஏற்றதாழ்வுகளும் இருந்தன சில பகுதிகளில் ஏர்கலப்பயும் சில பகுதிகளில் சூலம் போன்ற கருவிகளும் மன்ணை கிளர பயன்படுத்தப்பட்டது சில பகுதிகளில் ஆரம் கொண்ட சக்கரங்களும் சில பகுதிகளில் வட்ட சக்கரங்களும் பயன்பாட்டில் இருந்தன
இவை அந்த சமூகங்களுக்கு இடையில் நிலவிய வேறூபாட்டை கூறுகின்றன
சிந்து வெளி நாகரீகம் என்பது ஆப்கன் பாகிஸ்தான் முதல் குஜராத் உபி வரை ஏறத்தாழ 15 லட்சம் சதுர கிலோமிட்டர் தூரம் பரவி இருந்தது இவை இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் பாதியாகும் இந்த அளவு நிலப்பரப்பில் எந்த குறிப்பிட்ட இனங்களோ தேசிய இனங்களோ இதுவரை உருவானதே இல்லை
எனவே எந்த இனமோ அல்லது குறிப்பிட்ட மொழி சார்ந்த மக்களோ இது எங்கள் நாகரீகம் எனக்கூறுவது அவர்களின் அறியாமையே ஆகும்
இந்த நாகரீகத்தின் பெரும்பகுதி கிமு 1900 வாக்கில்; அழிந்து விட்டது
இதை ஆரியர்கள் அழித்தார்கள் என நம்புவதற்கு சில காரணகள் உண்டு அவை ரிக் வேதத்தில் இந்திரன் தஸ்யூ தாசர்களின் கோட்டைகளை அழித்தான் எனும்பாடல்கள் அடிக்கடி வருவது ஹரப்பா பகுதிகளின் தெருக்களில் பிணக்குவியல்கள் கிடைத்ததும் ஆகும்
இவை இரண்டையும் இணைத்து புரிந்து கொண்ட ஆங்கிலேய ஆய்வாளர் மார்சல் ஆரியர்களே இந்நாகரீகத்தை அழித்ததாக முடிவு செய்தார்
மேலும் ரிக்வேதத்தில் ஹரியூப்பிரியா நதிக்கரையில் நடந்த போரை பற்றிய பாடல்களும் வரலாற்று ஆய்வளார் DD கோசாம்பி இன்றைய ஹரப்பாதான் ரிக்வேத ஹரியூப்பிரியா என நம்பி விட்டார்
ஆனால் உண்மையில் புதையுண்ட நகரம் எனும்பொருளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஹரப்பா எனும் பெயர் சூட்டப்பட்டதை அவர் அறியவில்லை
மேலூம் ஹரப்பாவில் காண்ப்பட்ட பிணக்குவியல் பல்வேறு கால கட்டங்களை சேர்ந்தவை என்பதும் அவர்கள் அனைவரும் கடும் தொழு நோயாளும் காச நோயாளும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது
மேலும்,ஹரப்பா நாகரீகம் ஆரியருடையது இல்லை இவர்கள் தந்தை வழி தனித்தெய்வங்களையே வணங்கினர் சிந்து மக்களோ தாய்வழி தெய்வங்களை வணங்கிய நகர்புறத்தை சேர்ந்த வேளாண்தொழில் சுரங்கத்தொழில் அனைத்திலும் திறமை வாய்ந்தவர்கள்
ஆரியர்களோ மேய்ச்சல் தொழில் மட்டுமே அறிந்த நிலையான இருப்பிடம் அற்ற நாடோடி வாழ்வினர் இவர்களுக்கு விவசாயமோ ஏர்கலப்பை பற்றிய எந்த அடிப்படையும் அறியாதவர்கள்
மேலும் ஹரப்பா அழிந்த காலத்தில்தான் எகிப்திய மெசபடோமிய நாகரீகங்களும் அழிந்தன காரணம் மழை 200 ஆண்டுகள் பொய்த்துபோனதே காரணம் என பல்வேறு சான்றுகள் நிறூபிக்கின்றன
அக்ல்கால சிப்பி நத்தை ஓடுகளிள் கன ஆக்சிஜனும் கன ஹைட்ரனும் கலந்துள்ளது அப்பகுதியில் நிலவிய வரட்சியை சுட்டுகிறது மேகாலய குகை ஆய்வுகளும் மழைபெய்யாததை உறுதிசெய்கிறது
மேலும் ஹரப்பா நாகரீகம் அழிந்து 500. 600 ஆண்டுகளுக்கு பின்பே ஆரியர்கள் சுந்து வெளியில் குடியேறினார்கள்
கடைசியாக கிடைத்த தகவல்கள் சிந்து பகுதியை சுற்றி இப்போது வாழும் மக்களிடம் சிந்து மக்களின் ஜீன்கள்காணப்படுவதையும் அவர்களின் உடல் காசம் மர்றும் மலேரியா ஆகிய நோய்களை எதிர்க்கும்திறன் குறைந்தவர்களாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது
ஹரப்பா மக்களை தாக்கி அழித்த நோய்களில் மலேரியாவும் ஒன்று தொடரும்

No comments: