Tuesday, December 11, 2018

கடந்த தேர்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெற வைத்ததற்கு காரணம்

கடந்த தேர்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெற வைத்ததற்கு காரணம், காங்கிரஸ் மீது சுமத்தப்பட்ட 2G ஊழல் குற்றச்சாட்டும், பாஜக அமைத்த பலமான கூட்டணிகளும், மீடியாக்களின் ஓயாத விளம்பரங்களுமே.
பாஜகவோ தனது வெற்றிக்கு காரணம் இந்துத்துவ கொள்கையும், மோடியுமே என தவறாக புரிந்து கொண்டு அதை தீவிரமாக நம்பவும் ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் நலனை மறந்து விட்டார்கள்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் மக்கள் அவதியுறும்போது, மக்களே தியாகம் செய்யுங்கள் என இரக்கமில்லாமல் சொன்னார்கள் ஆட்சியாளர்கள். 100க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள்.
லட்சக்கணக்கான விவசாயிகள் கடன் தொல்லையால் அவதிப்பட்டும் பலர் தற்கொலை செய்துள்ள போதும் அவர்களின் 3000கோடி ருபாய் கடனை தள்ளுபடி செய்யாமல் , 20 கோடீஸ்வரர்களின் 3லட்சம்கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது பாஜக அரசு.
சிறுபான்மை மக்களை எதிரியாக்கி 50மேற்பட்ட முஸ்லிம்கள் மாட்டின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட போதும் மவுனம் காத்து , கொலைகாரர்களை ஊக்குவித்தது பாஜக.
மக்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு இருக்கும் போது ராமர் கோவில் கட்ட அவசரத் தீர்மானம் போட்டனர் பாஜக.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் போது நடிகர் குடும்ப விழாக்களில் சந்தோழமாய் இருந்தனர்.
மக்கள் தங்களது வாக்குகளின் பலம் அறிந்து ஜாதி மதம் பார்க்காமல் மக்களுக்காக உண்மையாக உழைக்கும் அரசியல் தலைவர்களுக்கு வாக்களித்தால்தான்,
அண்ணல் அம்பேத்கர் , பண்டிட் நேரு கண்ட உண்மையான ஜனநாயகம் மலரும்.
ஜெய் ஹிந்த்

No comments: