Tuesday, September 24, 2019

இரயில்வே தேர்வில் தமிழக இளைஞர்களின் பங்கேற்பு குறைவு என்பது அப்பட்டமான "பொய்"

இரயில்வே தேர்வில் தமிழக இளைஞர்களின் பங்கேற்பு குறைவு என்பது அப்பட்டமான "பொய்"

இரயில்வே தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 10%க்கும் குறைவாகவும்.. 90% வட இந்தியர்கள் தேர்ச்சி என்பது முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பதாகும்.

தமிழர்கள் முயச்சிக்கவில்லை சோம்பேறிகள், நடிகர்கள், கிரிக்கெட் பின் செல்பவர்கள் மட்டமாக பதிவிடுவை முதலில் நிறுத்துங்கள்.

தமிழர்களை மட்டமாகவும் வட இந்திகாரர்களை உயர்வாகவும் இந்திய அசுக்கும் கூஜா தூக்கி நக்கல் அடித்து பதிவிடுபவர்கள் தமிழர்கள் தானா என்பது சந்தேகமாக உள்ளது.

கல்வியில் அறிவில் தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட 40 ஆண்டுகள் பின் தங்கியுள்ள இந்திகாரர்கள் 10ம் வகுப்பு தேர்வில் அருகருகே அமர்ந்து பார்த்து எழுதியும் தங்கள் தாய் மொழி இந்தியிலே தேர்ச்சியாகாத இலட்சக்கணக்கானவர்கள் தான் முறையாக இரயில்வே RRB/RRC தேர்வில் வெற்றி பெற்றனர் என்பதை
கேட்பதற்கே நகைப்பாக உள்ளது.

தமிழக இரயில்வேயில் பணிபுரியும் வட இந்திய  அதிகாரிகள் மூலம் ஆள் மாராட்டம், பிறப்பு, கல்வி, சாதி போன்ற போலி சான்றிதழ்கள் கொண்டு முகவர்கள் மூலமாக பல முறைகேடுகள் செய்து தேர்வு எழுதி மாடி கொண்டதை நாமே கடந்த காலங்களில்  பார்தோம்.

சரிவர எழுத படிக்க தெரியாத தகுதியற்ற இவர்கள்   பயிற்சி மைய முகவர்கள் மூலமாக பணம் செலுத்தி முறைகேடாக பணியை பெற்றனர் என்பதே உண்மை.

தமிழகத்தைச் சேர்ந்த   10வகுப்பு, 12 வகுப்பு மாணவர்கள், கல்லூரி பட்டதாரிகள் அரசு வேலைக்காக 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் பலர் TNBC/ UPS/ NEET தேர்வுகளுக்கு முயற்சி செய்து வருவதை போல் இரயில்வே RRB/RRC தேர்வுக் முயற்சி செய்து வருகின்றனர்.

குறிப்பாக இரயில்வேயில் இதற்காகவே பயிற்சி பெற்ற அப்ரண்டிசு மாணவர்கள் (20% உள் இட ஒதுக்கீடு பெற்ற) தெற்கு இரயில்வே, ஐ.சி.எஃப் மாணவர்கள் 20,000க்கும் மேற்பட்டோர்  பலர்  இத்தேர்வில்  கலந்து கொள்ள பயிற்சி வகுப்புகள் சென்று  தொடந்து 15 ஆண்டுகள் ஆர்.ஆர்.பி/ ஆர்.ஆர்.சி யில் முயற்சி செய்து வருகின்றனர் ஆனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தேர்ச்சி பெறவில்லை.

 தமிழர்கள் பணியிடங்கள் வட இந்தியர்கள் பெறுவதற்கு முக்க காரணம் இந்திய அரசும் அதன் இந்திய மயம் என்ற கொள்கை மட்டுமே.

இந்தியை திணிக்க முடியாத இந்திய அரசு இந்திகாரர்களை வேலைவாய்ப்பின் மூலமாக திணிக்கின்றது.

தமிழர் விரோத இந்திய அரசின் செயலை தடுக்க கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா சட்டம் உள்ளது போன்று தமிழக அரசு மண்ணின் மைந்தர்களுக்கே 90% வேலைவாய்ப்பு என்ற சட்டம் இயற்ற வேண்டும்.

No comments: