Monday, June 04, 2018

மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி?

"மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி?
இந்த கேள்வி பிடித்தவர்கள் முழுவதும் படிக்கவும்...
குப்பையில் இருந்து மின்சாரம் கிடைக்கின்றதாம். அதற்காக குப்பையை அள்ளி தலையிலே போட்டுக்கொள்ள முடியும்?
கலைஞர் ஒரு மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் எறி திருவாரூரில் இருந்து வந்து இன்று கோடீஸ்வரன் ஆனது எப்படி என அரைத்த மாவை அரைக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதனால் தான்.
அது என்ன மஞ்சள் பை, திருட்டு ரயில், ஆதாரம் என்ன என அவர்களிடம் கேட்டோமானால் உடனே கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்னும் புத்தகத்தை சொல்வார்கள். கண்ணதாசன் என்ன இந்திய சட்டம் எழுதிய அண்ணல் அம்பேத்காரா? அல்லது சத்திய சோதனை வடித்த மகாத்மா காந்தியா? உலகில் ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என ஒரு உதாரணம் மிகச்சிறந்த கவிதை வடித்திருக்கின்றாரே என கேட்போர்களுக்கு ஒரே வரி பதில் சொல்வேன். குப்பையில் இருந்து மின்சாரம் கிடைக்கின்றதாம். அதற்காக குப்பையை அள்ளி தலையிலே போட்டுக்கொள்ளவா முடியும்? கலைஞரே ஒரு முறை சொல்லிவிட்டார். நான் ரயிலில் வரும் போது பக்கத்து இருக்கையில் அமர்ந்து வந்தவர்கள் போல பேசுகின்றனர், என அந்த பேச்சுகளை புறம் தள்ளிவிட்டு போய்விட்டார்.
அவர்களிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி. கலைஞர் மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட தன் மூளையை கழட்டி திருவாரூர் கமலாலயத்தில் வீசி விட்டா வந்தார். அவர் பிறந்தது 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி. 1944ல் தன் இருபதாவது வயதில் ஜூபிடர் பிக்சர்ஸ்ல் கதாசிரியராக வேலைக்கு சேர்ந்து விட்டார். இன்றைக்கு இதே கலைஞரை வசைபாடும் கழுதைக்கூட்டத்தில் யாராவது தன் 20 வயதில் சுய சம்பாதித்யம் சம்பாதித்தது உண்டா என தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். தன் அப்பன் காசில் வாழும் ஊதாரிகள் வசைபாட கலைஞர் தான் கிடைத்தாரா?
அவர் அரசாங்க உத்யோகத்தில் வேலைக்கு சேர்ந்த அண்டு 1957ம் ஆண்டு தான். ஆம் சட்ட மன்ற உறுப்பின்ராக. ஒரு அரசாங்க உத்யோகத்தில் சேருபவர் மிக அதிக பட்சமாக மிக மிக அதிக பட்சமாக 42 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். ஆனால் 1957ல் அரசாங்க சம்பளம் வாங்க ஆரம்பித்த இவர் இன்று தன் 90 வயது ஆகிவிட்ட நிலையில் கூட கிட்ட தட்ட அர நூற்றாண்டுகள் கடந்தும் 56 வருடங்களாக அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டுள்ளார். இதில் ஐந்து முறை முதல்வராக சட்ட மன்ற சம்பளத்தில் அதிகப்படியன சம்பளம் வாங்கியுள்ளார். இவர் வாங்கும் அரசாங்க சம்பளம் என்பது இன்று ஐடி துறையில் பணி செய்வோர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம். ஒரு வருடத்தில் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களே உடனே ஒரு கார், சொந்த வீடு என சுபிட்சமாக இருக்கும் போது 56 வருடங்கள் அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டு இருக்கும் இவர் கோடீஸ்வரனாக இருக்க கூடாதா என்ன?
சரி போகட்டும். அரசாங்க உத்யோகம் இவருக்கு கைகூடும் முன்னர் என்ன செய்தாரெனில் அந்த பொறாமை கொண்ட வசவாளர்கள் சொல்வது போல மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட இவர் தன் 20 வது வயதில் திரைத்துறைக்கு வந்து தன் 24 வது வயதில் ராஜகுமாரி என்னும் படத்துக்கே வசனம் எழுத ஆரம்பித்து விட்டார். அது தான் எம் ஜி ஆர் அவர்களுக்கும் முதல் படம். தன் 28 வது வயதில் இவர் எழுதிய பராசக்தி படம் திரையுலகில் ஒரு திருப்பு முனை படம். அந்த படத்தின் சம்பளம் எல்லாம் வாங்கி எல்லாம் முடிந்த பின்னர் அதன் வசனங்கள் மட்டும் சிறிய புத்தகமாக போட்டு விற்பனை செய்யலாம் என ஏ வி எம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்து இவரிடம் அனுமதி கேட்ட போது இவர் அதற்காக கேட்ட தொகை என்பது முழு பத்தாயிரம் ரூபாய். அப்போது ஒரு சவரன் 20 ரூபாய் என்னும் போது இப்போது அந்த பத்தாயிரம் ருபாய்க்கு என்ன மதிப்பு என கணக்கிட்டு கொள்ளுங்கள். அப்போது ஒரு ப்யூக் கார் விலையே 7000 ரூபாய் மட்டுமே. அப்போதே கார் வாங்கி விட்டார். எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோர் கதாநாயகனாக அப்போது நடித்துக்கொண்டு இருந்த போதே அத்தனை சம்பளம் வாங்கியது இல்லை. தான் 1957ல் சட்ட மன்ற உறுப்பினர் ஆகும் முன்னரே 30000 (முப்பதாயிரம் ரூபாய்)க்கு தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார். (அதையும் இப்போது தன் 87ம் பிறந்த நாளின் போது தன் காலத்துக்கு பின்னர் ஏழைகளுக்கான மருத்துவமனையாக ஆகும் படி அஞ்சுகம் ட்ரஸ்டுக்கு எழுதி வைத்து விட்டார்)
இவர் திரைத்துறையில் சம்பாதிக்க பணம் எடுத்துக்கொண்டு திருவாரூரில் இருந்து வரவேண்டும் என்பதில்லையே. அந்த மஞ்சள் பையில் ஒரு பேனாவும் அதில் நிறைய இங்க்ம், தன் மூளையும் மட்டுமே மூலதனமாக போதுமே. 1960ல் மேகலா பிக்சர்ஸ் என்னும் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ஆக 1944 முதல் 1960 வரை தன் மூளையை மூலதனமாக கொண்டு சம்பதித்ததை மேலும் அதிகரிக்க சொந்த பட தயாரிப்பு நிறுவனமே தொடங்கி விட்டார். பின்னர் பூம்புகார் புரடக்ஷன்ஸ். இதும் அவரது சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தான். பின் ஏன் அவர் கோடீஸ்வரன் ஆக மாட்டார்? கலைஞர் திரைப்பட துறையில் மட்டுமா சம்பாதித்தார். இல்லை. தன் எழுத்துகளை புத்தகமாக்கினார். நாடகம் ஆக்கினார். அவர் தொட்ட துறை எல்லாமே நிதியை அள்ளி கொடுத்தன. அவர் அன்று மட்டுமல்ல. தன் 90 வது வயதில் எழுதிய இரு புத்தகங்கள் ஒரே நாளில் இவர் புத்தக வெளியீட்டு மேடையை விட்டு இறங்கும் முன்னரே 15 லட்சத்தில் 74 ஆயிரத்துக்கு விற்று தீர்ந்தது. அவர் ஏன் கோடீஸ்வரர் ஆக கூடாது...
இனியாவது உருப்படியான வரலாறை தெரிந்து கொண்டு பேசுங்கள் மனிதர்களே...

No comments: