Monday, June 04, 2018

ராஜராஜ சோழனின் சிலையை கடத்தவும் மறைக்கவும் உதவிய பார்பனர்கள்

தஞ்சை பெரிய கோயிலில் இருந்து ராஜராஜ சோழனின் சிலையை கடத்தவும் மறைக்கவும் உதவிய பார்பனர்கள் சீனிவாச கோபாலாச்சாரி & இரா. நாகசாமி..
ராஜராஜ சோழன் சிலை மீட்பு - சில உண்மைகள்
காணாமல் போன வருடம் - 1960 (காங்கிரஸ் ஆட்சி காலம்)
திருடவும் விற்கவும் - ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி
திருட தூண்டியவர்கள் - குஜராத்தை வியாபாரிகள்
திமுகவின் முயற்சியும் நாகசாமியின் சூழ்ச்சியும்..
திமுக ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் தனியார் அருங்காட்சியத்தில் இருந்து இராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளை மீட்க முயற்சி நடந்தது. அப்போழுது குஜராத் முதலமைச்சர் மோடி. தமிழ்நாட்டில் இருந்து அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலா துறைச் செயலர் இறையன்பு, தொல்லியல் துறை இயக்குநர் நாகசாமி, தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழு குஜராத் சென்று மோடியை சந்தித்தது. அப்பொழுது சிலைகளை ஒப்படைக்க மோடி ஒப்புக் கொண்டார். ஆனால், குஜராத் தொல்லியியல் துறை உயரதிகாரி ஒருவர் இது இராஜராஜ சோழன் சிலைதான் என்று நாகசாமி சொன்னால் சிலைகளை ஒப்படைக்கிறோம் என்று கூறிவிடுகிறார். ஆனால், இது இராஜராஜ சோழன் சிலை இல்லை, கண்டேஸ்வரர் சிலை என்று நாகசாமி அறிக்கை அளித்தார். இதனால், அப்போழுது இந்தச் சிலைகளை மீட்க முடியாமல் போனது. இன்னொன்று, நாகசாமியையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
இந்த நாகசாமிக்கு பத்மபூஷன் விருதை அளித்து, தமிழுக்கு மாபெரும் துரோகம் செய்த்து மத்திய பிஜேபி அரசு..
தமிழைச் செம்மொழியாக வளர்த்தது சமஸ்கிருதம்தான் என்றும், இலக்கியம், இலக்கணம், அறம், அரசுச் சட்ட திட்டங்கள் என அனைத்தையும் சமஸ்கிருதத்திடமிருந்துதான் தமிழ் பெற்றது என்றும் தமிழை சிறுமைபடுத்தி, ஆரிய சமஸ்கிருதத்தை சார்த்து தான் தமிழ் உள்ளது என, "தமிழ் சமஸ்கிருதத்தின் கண்ணாடி (Mirror of Tamil and Sanskrit)" நூலில் எழுதிய இரா. நாகசாமி என்னும் ஆரிய சம்ஸ்கிருத, சங்கர மட ஆதரவாளருக்கு பத்மபூஷன் விருதை அளித்துள்ளது மத்திய பிஜேபி மோடி அரசு...
திருக்குறள் சமஸ்கிருத வேதங்களின் காப்பி, தமிழ் மொழி எழுத்து முறையைப் பிராமணர்களிடமிருந்து பெற்றது, தொல் காப்பியம், புறநானூறு, அகநானூறு சிலப்பதிகாரம் முதலியவை சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை, தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலே இல்லை, அசோகர் காலத்தில் தமிழுக்கு எழுத்து வடிவம் இல்லை, செம்மொழிக்கான தகுதிகள் எவை எவை என்று வரையறுக்கப்பட்டுள்ளனவோ அவை யாவும் தமிழுக்கு இல்லை, பழங்குடிகளின் ஒரு கிளைமொழியாக (Dialect) இருந்த தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றுதான் செம்மொழியாக வளர்ந்தது... இப்படியெல்லாம் தமிழை தாழ்த்தி, இழிவுப்படுத்தி தன்னுடைய Mirror of Tamil and Sanskrit நூலில் நாகசாமி எழுதியுள்ளார்.
இப்படியான தமிழ் மொழியின் எதிரிக்கு, இந்தியாவின் உயரிய பத்மபூஷன் விருதை அளித்து மகிழ்ந்துள்ளது மத்திய பிஜேபி மோடி அரசு...

No comments: