Monday, July 30, 2018

நாம் தமிழர் கட்சியில் இருந்து முழுவதுமாக விலகிக்கொள்கிறேன் - செ பிரபாகரன் மற்றும் வேல்முருகன்...... திருப்போரூர் தொகுதி

நாம் தமிழர் கட்சியில் இருந்து  முழுவதுமாக விலகிக்கொள்கிறேன்.
இது அவசரத்தில் எடுத்த முடிவும் அல்ல..
கணக்கு கேட்டதாக பொய் குற்றச்சாட்டு சாட்டியும் என்னையும் (நகர செயலாளர் திருக்கழுக்குன்றம்) என் பகுதி தம்பி
வேல்முருகன் சீமானின் தம்பி
(நகர துணை செயலாளர்)தொகுதி பகிரி குழுவில் வேட்பாளரை கேட்காமல் இணைத்தற்காவும்
திருப்போரூர் தொகுதியில் இருந்து சூலை 7 தேதி என்னை நீக்கிவிட்டார் வேட்பாளர் யூசுப்..
இதை முகநூலில் பதிவிட்டதற்காக என்னையும் என் பகுதி தம்பியையும் கேவலமாகவும் எங்களை பற்றி தொகுதி பகிரி குழுவில் தவறாகவும் பதிவிட்டு கொண்டும் வருகிறார்
தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வருகிறது திருப்போரூர் தொகுதி செயலாளர் மோகன்ராஜ் எங்களுக்கு அலைபேசியில் கொலை மிரட்டலும் விடுக்கிறார் (அதற்கான ஆதாரங்களை பதிவு செய்தும் வைத்திருக்கிறேன்)
மேற்படி எங்கள் உயிருக்கு ஏதேனும் நடந்தால் அந்த இருவருமே முழு பொறுப்பு...
1.திருப்போரூர் தொகுதியில் கட்சியை வளர்பதற்கு எந்த ஒரு முயற்ச்சியையும் தொகுதி பொறுப்பில் இருப்பவர்கள் செய்வதில்லை..
2. 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஒரே ஒரு கலந்தாய்வு மட்டுமே நடந்துள்ளது அதுவும் 17 உறுப்பிரை‌ மட்டுமே வைத்து
3. இந்த தொகுதியில் தொடர்ச்சியாக பழைய உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் புறந்தள்ளபடுகின்றனர்
மற்றும் கட்சியை விட்டு நீக்கபடுகின்றனர்.
4. இந்த தொகுதியில் கட்சியில் சேரும் போது பலருக்கும் தொகுதி துணை செயலாளர், நகர செயலாளர் , ஒன்றிய செயலாளர்
நகர மற்றும் ஒன்றிய தலைவர்கள் பொறுப்பும் முறை தவறி வழங்கப்படுகிறது இதனால் பழைய உறுப்பினர்கள் தொடர்ச்சியாக செயல்படாத நிலையில் கட்சியை விட்டு ஒதுங்கி கொண்டே வருகிறார்கள்
5 . தேர்தல் நடந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொகுதி அலுவலகம் திறக்கப்பட கூட இல்லை..
6.கடந்த சனவரி மாதம் 7 நாட்கள் உறுப்பினர் முகாம் நடத்தி 140 உறுப்பினரை கட்சியில் நான் இணைந்தேன் 180 நாட்கள் கடந்தும் இன்னும் அவர்களுக்கு உறுப்பினர் அட்டை சென்றடையேவே இல்லை இதற்காக கேட்டு வேட்பாளர் கண்டு கொள்ளவும் இல்லை 200 பேருக்கு மேல் உறுப்பினர் அட்டை கொடுக்காமல் நிலுவையில் உள்ளது..
7. தெருமுனை கூட்டம் நடத்த உறுப்பினர்கள் கொடுக்கும் பணம் முறையாகவும் கையாளவில்லை கையாடல் செய்யப்படுகிறது
8 திருக்கழுக்குன்றம் தெருமுனை கூட்டத்திற்கு சாலூர் பொறுப்பாளர் கொடுத்த பணத்தை தொகுதி செயலாளர் மோகன்ராஜ் தன் வங்கி கணக்கில் வாங்கினார் இன்று வரை தரவேஇல்லை...
9.. திருப்போரூர் தொகுதி இணையதள பாசறை செயல்படுவதே இல்லை
பல பகுதிகளில் எங்களால் நடத்தப்பட்ட புதிய உறுப்பினர்கள் பதிவுசெயப்படவுமில்லை...
10.ஒவ்வொரு கட்சி போராட்ட சுவரொட்டிகளும் தலைமையில் இலவசமாக கொடுகப்பட்டும் தொகுதி அருகில் இருந்தும் இதுவரை அதை வாங்கி கொடுக்கும் முயற்சியில் வேட்பாளர் என்றும் ஈடுபட்டதே இல்லை
பல முறை கூறியும் கண்டுகொள்வதில்லை...
11. கடந்த மூன்று வருடங்களாகவே தொகுதியில் எப்போதாவது போராட்டம் நடந்தால் வெறும் 15 உறுப்பினர்கள் மட்டுமே வருகிறார்கள் ஆனால் செயல்பாட்டில் 800 உறுப்பினர்கள் வரை இருக்கிறார் முறையாக யாரையும் அழைப்பதில்லை அதற்கான முயற்சிகளையும் வேட்பாளர் ஈடுபடுவதில்லை கண்துடடைப்புக்கு 15 பேரை மட்டுமே வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்.
12. 2015 தலைவர் பிறந்தநாள் நவம்பர் 26 சீமான் இந்த தொகுதியில் பேசினார் கடைசியாக அதன் பிறகு நான்கு வருடம் கடந்தும் இந்த தொகுதியில் அண்ணனை அழைத்து வந்துகூட்டம் நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை நிர்வாகிகள் பலமுறை கூறியும் வேட்பாளர் யூசுப் கண்டுகொள்வதில்லை
13. தொகுதியை விட்டு பக்கத்து தொகுதி கூட்டங்களில் கலந்து கொண்டாலும் அங்கு சென்று வேலை செய்தாலும் துரோகி என்கிறார் வேட்பாளர் யூசுப்.
இதுதான் இந்த வேட்பாளர் இலட்சணத்திற்கு பெரிய எடுத்துக்காட்டு..
14. நகர ஒன்றிய கலந்தாய்வில் பக்கத்து தொகுதிகளை குறிப்பிட்டு இலங்கை பணம் , வெளிநாட்டு பணம் வருதாம் தனக்கு வருவதில்லை எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் ‌இது புதிய உறுப்பினர்கள் மனதில் தவறாக என்ன நினைக்கிறது மேலும் கட்சியை தவறாக புரிந்து கொள்ளவும் தான் என்ன வைக்கிறது இப்படி பட்ட வேட்பாளர் இந்த கட்சியை எப்படி சீர்குலைக்கிறார் உங்கள் பார்வைக்கு விட்டுவிடுகிறேன்..
15. துண்டறிக்கையில் இவர் பெயர் சிறியதாக இருந்தாலோ சுவரொட்டியில் இவர் படம் சிறியதாக இருந்தாலோ கட்சியை விட்டு நீக்கிவிடுவேன் எனவும் மிரட்டுகிறார் இதனால் மன உளைச்சலில் என்னை போல பல நிர்வாகிகள்
16.இத்தொகுதியில் நடக்கும் போராட்டம் தெருமுனை கூட்டத்திற்கு பக்கத்து தொகுதியில் இருந்து தான் கட்சி கொடிகள் வாங்கி போராட்டம் தெருமுனை கூட்டம் நடந்தம் நிலை உள்ளது இது ஒன்றே போதும் இத்தொகுதியை அவர் எந்த நிலையில் வைத்திருக்கிறார் என
17. கடந்த 2016 தேர்தல் நேரத்தில் ஒருமாதம் 15 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை தேர்தல் வேலைக்கு அமர்த்தி வேலை வாங்கினார் தேர்தல் முடிந்த பிறகு அவர்களுக்கு தனித்தனியாக வாழ்வதாரத்திற்கு பணி அமைத்தும் மற்றும் கடைவைத்தும் தெரிந்த நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்து தேர்தல் வேலை வாங்கினார் ஆனால் தேர்தல் பிறகு கைவிட்டு விட்டதாகவும் இன்று வரை பலமுறை கேட்டும் அவர்களை கண்டுகொள்வதில்லை எனவும் பாதிக்கப்பட்ட அந்த உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகிய நிலையில் குற்றச்சாட்டை எங்களிடம் அடிக்கடி கூறிவருகின்றனர்
18. வேட்பாளர் யூசப்பால் சேரும் போதே தொகுதியில் தலைமை பொறுப்பு வாங்கி வந்த நிர்வாகிகள் எங்களை போல பழைய உறுப்பினர்களிடம்
நீங்கள் என்ன சாதி என்ன ஆளுங்க என தெருமுனை கூட்டங்களில் நகர கலந்தாய்வுகளில் கேட்டு மன ரீதியான அழுத்தத்தை தருகிறார்கள் இதனால் புதிய உறுப்பினர்கள் பலரும் தொடர்ச்சியாக நகர ஒன்றிய கலந்தாய்வுகளுக்கே வருவதை நிறுத்திக் கொண்டார்கள்
19.. 2015 திருக்கழுக்குன்றம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதையும் துணை போன காவல் துறை அதிகாரிகளையும் எதிர்த்தும் ஐயா வியனரசு தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினான் வேல்முருகன் சீமானின் தம்பி அந்த சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளரை செய்யூர் தொகுதிக்கு மாற்றிய நிலைக்கு காரணமான அவனை காவல்துறை மூலமும் அதிமுக கட்சியினராலும் வீட்டில் சென்று மிரட்டப்பட்டு ஒன்றை வருடம் சென்னையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து மீண்டும் கட்சியில் இணைந்து என்னுடன் கட்டமைப்பு செய்து வருகிறான் ஆனால் கடந்த தேர்தலில் இவருக்கு வாக்கு செலுத்தாத காரணத்தால் இவனை மனநோயாளி எனவும் மெண்டல் எனவும் ஓடுகாளி எனவும் என்னிடமும் மற்ற நிர்வாகிகளிடமும் தொடர்ச்சியாக கூறிவருகிறார் வேட்பாளர் யூசுப் இதனால் அவன் பலமுறை கண்ணீர் விட்டு சீமான் அலைபேசி எண் கேட்டான் என்னிடம் ......ஒருவர் முக அமைப்பை வைத்து ஏளானம் செய்யும் இந்த ஈழிவான வேட்பாளர் கீழ் தொகுதியில் இருக்க எங்களுக்கு விருப்பமில்லை..
20. திருப்போரூர் தொகுதியில் இரண்டு முக்கிய பொறுப்பாளர்கள் அடுத்த தேர்தலில் வேட்பாளராக நிற்கும் தகுதியில் வளர்ந்து விட்டனர் அடிக்க தலைமையகம் சென்று வருவதனால் அவர்களை திட்டமிட்டு யூசுப் ஒதுக்கியும் வருகிறார் வேட்பாளர் பதவி வெறிக்காக..
21. சீமான் நாடார் பக்கத்து தொகுதி ராஜன் நாடார் எங்க தொகுதியில் அடிக்கடி தலைமையகம் செல்லும் அந்த நபரும் நாடார் அடுத்த முறை எனக்கு வேட்பாளர் பொறுப்பு கிடைக்காதோ என உறுப்பினர் முன்னிலையிலும் யூசுப் கூறியிருக்கிறார். இவர்தான் தத்துவத்தை சார்ந்து கட்சிக்கு வந்தவரா நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
திருப்போரூர் தொகுதியை வளர்க்க வேட்பாளர் யூசுப் எந்த முயற்சியையும் எடுக்கபடவில்லை மேலும் இவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இத்தொகுதியின் வளர்ச்சி மீது தலைமை கவனத்தை செலுத்தவும் கேட்டு கொள்கிறேன்...
............................................................
பக்கத்து தொகுதியில் வேலை செய்தால் எனக்கு துரோகி பட்டம்
பக்கத்து தொகுதி வேட்பாளரிடம் பழகுவதால் எனக்கு துரோகி பட்டம்
பக்கத்து தொகுதி கூட்டத்தை நேரலை போடுவதால் துரோகி பட்டம்...
தொகுதியில் கணக்கு கேட்டதாக துரோகி பட்டம்...
வேட்பாளரை எதிர்த்து பேசுவதால் துரோகி பட்டம்.
வேட்பாளர் யூசுப் மேடையில் பேசுவதை முகநூல் நேரலை போட்டதால் துரோகி பட்டம்..
யூசப்பை மேடை பேச்சை நேரலையில் போட செயலாளரை விட்டு மிரட்டுகிறார்
2008 அக்டோபர் 18 இயக்குனர் சீமானின் ராமேஸ்வரம் பேச்சை கேட்டு காதல் தோல்வி மூன்று முறை தற்கொலை முயற்சி அந்த சீமானின் பேச்சால் இனப்படுகொலை வலி பற்றி தெரிந்து கொண்டு நாம் தமிழர் இயக்கம் 2010 தொடஙகிய போது இனைந்தேன்
நான் இந்த கட்சிக்காகவும் என் தொகுதி காகவும் 1% கூட வேலை செய்தது கிடையாது
ஆனால் கடந்த ஆறுவருடமாக சீமான் அண்ணா கலந்து கொண்ட எல்லா போராட்ட களத்திலும் பொதுகூட்டங்களிலும் நான் கலந்து கொண்டேன் 100% இன் உணர்வுடன்....
2017 கிருட்டிணகிரி மாவீரர் கூட்டத்தில் அண்ணன் வேதனையுடன் பேசியது சிந்தனையில் உள்ளது
கூடவே என் பின்னால் பயணிப்பான் ஆனால் கட்சிக்காக தொகுதிக்காக எதுவும் செய்ய மாட்டான். கேவலமான
உதாரணம் நான்...
கட்சியில் இருப்பான் ஆனால் கட்சிக்கு ஆள் சேர்க்காமல் தனக்கு ஆள் சேர்ப்பார் கேவலமான உதாரணம் திருப்போரூர் தொகுதி வேட்பாளர் யூசுப்... நாங்கள் இருவருமே இக்கட்சியில் இனிபயணிக்க தகுதியற்றவர்கள் .....
செங்கை தொகுதி சஞ்சீவிநாதன் அண்ணா 2015 திருச்சி இன எழுச்சி மாநாடு அன்று அறிமுகமாகி உங்களுடன் பயணிக்கிறேன் என்னை எல்லா போராட்ட தளங்களுக்கும் அழைத்து சென்று என் இன உணர்வை வளரச்செய்யது நீங்களும் ஒருவர் உங்களுக்கு நிறைய நன்றி கடன் பட்டுள்ளேன்
ஆவடி நல்லதம்பி நண்பன் அதிம் பார்த்து வியந்திருக்கிறேன். வறுமையில் இருந்தாலும் இந்த கட்சிக்காக இவன் செய்யும் அற்பணிப்பு ஆளப்பெரியது இவனை முன்னுதாரணமாக யூசுப் எடுத்து கொள்ள வேண்டும் ....
இதை முகநூலில் பதிவிட்டதாக மன்னிக்கவும் ஒன்பது வருடமாக முகநூலும் என் எழுத்தும் மட்டுமே ஆயுதம்..... தலைமை அலுவலகம் செல்லவோ தலைமையிடம் முறையிடவோ நிலையில் இல்லை நான் இந்த கட்சியில் பயணிக்கும் சாதாரண தொண்டன்... எனக்கு கொலைமிரட்டல் விடுக்கும் திருப்போரூர் தொகுதி வேட்பாளர் யூசுப்
தொகுதி பதவி வெறி செயலாளர் மோகன்ராஜ் எதிர்த்து போராடும் நிலையில் நான் இல்லை....
நாம் தமிழர் கட்சியில் இருந்து முழுவதும் விலகி கொள்கிறேன் இனி சமாதானம் ஆகும் நிலையில் நான் இல்லை
துரோகி பட்டம் இது போதும்...
மேலும் முகநூலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகவும் சீமானின் கொள்கையையும் தத்துவத்தையும் ஏற்று பயணிப்பேன் ....
மேலும் திருப்போரூர் தொகுதி மீது முழு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்னை போல மூன்றாண்டுகளாக பாதிக்கப்பட்ட பலரும் இருக்கிறார்கள்
வெளியேறியும் போய்விட்டார்கள்...
கணக்கு கேட்டாதாக திருப்போரூர் தொகுதி ஈன வேட்பாளர் யூசுப் என்மீது சுமத்திய குற்றச்சாட்டுடனும்
பிரபாகரன் பெயரை வைத்து கொண்டு துரோகி பட்டத்துடன் இத்தொகுதியில் மண்டியிட்டு பயணிக்க விரும்பவில்லை
மேலும் எங்கள் உயிருக்கும் ஏதேனும் நடந்தால் அது திருப்போரூர் தொகுதி வேட்பாளர் யூசுப் மற்றும் செயலாளர் மோகன்ராஜ் மட்டுமே முழுகாரணம் என்பதையும் பதிவு செய்கிறேன்
மேலும் நான் இந்த கட்சிக்கு எதிராகவோ கட்சியின் பங்கத்திற்கு எதிராகவோ
கட்சியின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவிருப்பதாக நினைத்தால் என் மீது உரிய நடவடிக்கை எடுக்க கட்சி முற்படலாம் எனவும் கேட்டு கொள்கிறேன்...
செ பிரபாகரன்
மற்றும்
வேல்முருகன்......
திருப்போரூர் தொகுதி...
.காஞ்சி மாவட்டம்


No comments: