Saturday, November 19, 2022

இங்கு யாருமே இந்தி பேசுவதில்லை

 *“தமிழ்நாட்டில் எல்லாம் நன்றாக இருக்கிறது.*

*எங்களுக்கு எல்லாம் பிடித்திருக்கிறது.*

*ஒன்றைத்தவிர.*


 இங்கு யாருமே இந்தி பேசுவதில்லை.


 ஏன் உங்கள் ஊரில் யாரும் இந்தியை பேசுவதில்லை” என்று கேட்டான். 


நான் அவனிடம் “உன் மாநிலம் எது?” என்று கேட்டேன். 


 “மத்தியப் பிரதேசம்” என்று சொன்னான். 


“உங்கள் மாநில மொழி எது?”  


அவன் “இந்தி” என்று பதிலளித்தான்.


 “அது தான் உங்கள் ஊரில் பேசுகிறார்களா?” என


 “ஆம்” என்று உறுதியாக தலையாட்டினான். 


ஆனால் “உங்கள் ஊருக்கென்று ஒரு மொழி இருக்குமே?” என்று கேட்டேன். 


அவன் நெடு நேரம் யோசித்துவிட்டு, “மால்வி?”


 “எங்க வீட்டில் உள்ள பெரியவர்கள் பேசுவார்கள். அது எங்க ஊர் கிராமப்புறங்களில் பேசும் மொழி.” என்று சொன்னான். 


அதற்குப் பின் அவன் மேல் பரிதாபம் ஏற்பட்டதே தவிர எந்தக் கேள்வியும் எனக்கு எழவில்லை.


 “உன் தாய் மொழி ‘இந்தி’யா? ‘மால்வி’யா?” என்று நான் கேட்டால் அவனுக்கு அது புரியுமா என்று கூட எனக்குத் தெரியவில்லை. 


அந்த இளைஞனுக்கு மட்டுமல்ல. அவர்கள் ஊரில் உள்ள பலருக்கும் இது தெரியாது. 


மத்தியப் பிரதேசத்தில் 1941 ஆங்கில அரசின் புள்ளி விவரக்கணக்குப் படி மால்வி மொழி பேசிய மக்களின் எண்ணிக்கை 16,லட்சத்து 7

8, ஆயிரத்து 087 பேர். 


ஆனால் அதே ஆண்டு 

இந்தி மொழி பேசிய மக்கள் எவ்வளவு பேர் தெரியுமா..? 

14 லட்சத்து ,40,906 பேர்கள் மட்டும் தான். 


அதாவது 

மத்தியப் பிரதேசத்தில் இந்தி மொழி பேசியவர்களை விட மால்வி மொழி பேசிய மக்களின் மக்கள் தொகை அதிகம். 


1951லேயே நிலைமையை தலைகீழாக மாற்றியது.


 இந்திய அரசின் மக்கள் தொகை கணக்குப் படி மால்வி பேசு வோர் 

5 லட்சம், என்றும், 

இந்தி பேசுவோர் எண்ணிக்கை 

58 லட்சம் என்றும்.


பஞ்சாபில் இந்தியை ஆட்சி மொழி(?)யாக்கும் சுற்றறிக்கையை அந்த மக்களுக்கு இந்தி தெரியாது(?) என்பதால் மக்கள் பேசிக்கொண்டிருந்த(!) உருது மொழியில் அச்சடித்து கொடுக்கும் அளவிற்கு இந்திமயம் வேகமாக நடந்தது. 


அதனால்தான் அடுத்த 

10 ஆண்டுகளில் இந்தி பேசும் மக்கள் தொகை 40 விழுக்காடு என்ற கதை ஆனது. 


இதன் விளைவு மால்வி போன்ற மொழிகளின் இன்றைய நிலைதான்.


தன் தாய்மொழியையே அவனுக்குத் தெரியாமல் மறக்கடிக்கும் அளவிலான கொடூரத்தின் அடிமை அடையாளம் தான் அந்த இளைஞன். 


 அவன் மட்டுமல்ல. 


தாங்கள் இந்திக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும்

 வட இந்தியாவைச் சேர்ந்த 90 விழுக்காடு மக்களின் நிலையும் கூட இதுதான்.


 80க்கும் மேற்பட்ட உங்கள் மொழிகளை முற்றிலும் அழித்து, அதன் இரத்த வெள்ளத்தின் மீது கட்டப்பட்ட பெரும் கோட்டை தான் நீங்கள் கொண்டாடும் இந்தி என்பதை அவர்களிடம் 

யார் போய் சொல்வது..? 


அல்லது அது நமக்கும் தான் தெரியுமா..?


இந்தி பெல்ட் என்று சொல்லும் மாநிலங்கள் எல்லாவற்றிற்கும் தனித்த மொழி இருக்கிறது. 


ஆனால் அவற்றை நாம் கூட இந்தி பெல்ட் என்றே பொதுப் புத்தியிலிருந்து அழைக்கிறோம்.


 இராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் இவற்றோடு சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்டவைகளையும் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். 


ஆனால் மேற்கண்ட எல்லா மாநிலங்களுக்கும் இராஜஸ்தானி, பஞ்சாபி, பீகாரி, மராத்தி, குஜராத்தி என்று தனித்த மொழிகள் இருக்கின்றன. 


 இவற்றில் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களை முழுவதும் இந்தியை தாய் மொழியாக கொண்ட மாநிலங்கள் போல் இன்று வரை 

ஒரு பிம்பத்தை கட்டி உருவாக்கி வைத்துள்ளார்கள்.


 ஆனால் அதுவும் கூட போலி பிம்பமே என்பதை 70 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு நமக்குச் சொல்கிறது.  


இந்திய விடுதலைக்கு முன்பு வரை மேற்கண்ட இந்தி பெல்டுகளில் மட்டும் பேசப்பட்ட மொழிகளாக பிரிட்டிஷ் அரசு பட்டியலிட்டுள்ள மொழிகள் இந்தி, உருது, இராஜஸ்தானி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளோடு இந்துஸ்தானி, மைதிலி, பிரசு பாஷா, பக்ரி, மேவாரி, ஜெய்புரி, சட்டிஸ்காரி, மார்வாரி, பந்தேலி, ஆஜ்மீரி, தம்தி, ராகோ பான்சி, பலாகி, லோடி, கிராரி, மிர்கனி, பைகனி, பாண்டோ, ஸ்வதி, அதுகுரி, பாடு, இராஜ்காடி, நுனியா, பங்கி, கோசாவி, பர்தேசி, கலாரி, அபு, பர்பி, கோசங்கா, பாடி, பஸ்தாரி, சடி, போவாரி, மகேசுரி, போபாலி, மாதுரி, சடாரி, போஜ்புரி, உத்கேதி ௲ போலி, கோரக்பூர், முசல்மானி, பூலியா, புவானி, பரத்பூரி, கங்காபாடி, உத்தாரி, லோதாந்தி, சங்கலி, வாணி, கோத்யானி, இராஜபுதானி, ஆக்ராவாலி, சார்மாலி, பாமி, கோர்க்காலி, குர்சார், மராரி, ஓகி, நிமாதி, மிர்சாபுரி, கோட்வாரி, கங்கேரி, தேவநாதரி, கோர்த்தி, பான்சாரி, கந்தால், பிரதாப்காடி, அகரி, பான்சாரி, பூலி, குருமாலி, போயாரி, இரிவை, மேர்வாரி, இரங்கடி, கால்பீ என்று

 80க்கும் மேற்பட்ட மொழிகளை பட்டியலிடுகிறது. 


இவை ஒன்றும்

சமஸ்கிருதம் போல் சில நூறு பேரின் தாய்மொழி அல்ல. 


ஒவ்வொரு பகுதியிலும் லட்சக்கணக்கான மக்கள் பேசிய மொழிகள் ஆகும். 


ஆனால் இவற்றின் நிலை என்ன என்பது தான் நம் கேள்வியே. 


ஒரு மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல.


 அது அந்த மண்ணின் பண்பாட்டை, மக்களின் வரலாற்றை தாங்கியுள்ளது. 


மொழியை அழித்தால் அந்த மக்களை முழுவதும் அடிமையாக்கலாம் என்பதற்கு இந்தி பெல்டுகளே சாட்சி. 


 அந்த இளைஞனின் 

சொந்த மாநிலமான மத்தியப்பிரதேசம் நர்மதை - சோன் பள்ளத்தாக்குகளுக்குள் இருக்கிறது.


 பழைய, மத்திய, புதிய கற்காலம் மற்றும் இரும்புக் காலங்கள் முதல் மத்தியப்பிர தேசத்தின் வரலாறு தொடங்குகிறது. 


பிம்பேத்திகாவில் உள்ள 

600 குகைகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கும் சுமார் 500 குகைகளில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அவர்களின் வாழ்க்கை முறையையும் பதிவு செய்திருக்கின்றன. 


சாகர்களும் குஷானர்களும் 

மத்தியப் பிரதேசத்தை உள்ளடக்கிப்

 பெரும் இராஜ்ஜியமாக மவுரியர்களும் ஆட்சி செய்துள்ளார்கள். 


வடக்குப் பகுதியில் சாதவாகனர்களும், 

மற்றப் பகுதிகளைச் சத்ரபதிகளும் பின்னர் தென்னிந்திய மன்னர் கவுதமி புத்திர சதாகாரணியும ஆதிக்கம் செலுத்தி யுள்ளார்கள். 


அவருக்குப் பிறகு குப்தர்கள்,

 ஹூனர்கள், 

யசோதர்மன், 

ஹர்ஷர், 

ராஷ்ட்டிரகூடர்கள், 

பராமார்கள், 

பண்டல்கண்ட் சாண்டெலாக்கள், கோண்டு ராஜ்ஜியம், 

டெல்லி, 

துருக்கி, 

குஜராத் சுல்தான்கள், மொகலாயர்கள், 

மராட்டியர்கள்,

ஹோ ல்கர்கள், 

மஹாகோசர்கள், 

சிந்திக்கள், 

போபாலை ஆண்ட 

ஆப்கானிஸ்தான் அரசர் 

தோஸ் மொகமது கான் என 

அந்த மண்ணை எண்ணற்ற மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். 


 கொடுங்கோன்மை மிக்க முடியாட்சி காலத்திலும், 

ஆங்கில ஆட்சிக் காலத்திலும்கூட அங்கு இந்தி ஆட்சி மொழியாக இருந்ததில்லை. 


மால்வி, 

நிமதி, 

பகேலி உள்ளிட்ட அந்த மண்ணின் மக்களின் மொழிகளே அங்கு கோலோச்சியுள்ளன. 


ஆனால் முடியாட்சி, 

அடிமையாட்சி நீங்கி நம்மை நாமே ஆண்டு கொள்ளும் ஜனநாயக ஆட்சி முறை நிலைபெற்றுள்ள இந்த 

70 ஆண்டுகளில் தான்

 அந்த மக்களின் மொழிகள் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளன என்பது வரலாற்று முரண். 


ஏன் இது நிகழ்ந்தது? 


இதற்குப் பின் வெறும் 

மொழி அரசியல் தான் உள்ளதா? என்றால் இல்லை. 


இது ஒரு சித்தாந்த அரசியல்.  


கிபி 1340 இல் தில்லியில் 

நிலை பெற்ற

முகமதுபின் துக்ளக் ஆட்சி அங்கு அப்போது மக்கள் பேசிவந்த சிதைந்த பிராகிரத மொழியை பார்த்தது. 


அது அப்போது ஒரு சீரான மொழியாக இல்லாத போது, 

அதில் தங்களின் அரபு மொழியை கொண்டு 

பாரசீக அரபு கலப்பால் ஒரு சீரான மொழியாக உருது மொழி உருவாக்கப்பட்டது. 


உருது எனும் சொல்லுக்குப் பொருள், பாசறை, பாடி அல்லது படைவீடு என்பதாகும். 


அதன் பின் உருது மொழி இந்தியாவில் அவர்களின் அரசு மொழியாக இருந்தது. 


இந்தி மொழியானது ‘லல்லு ஜிலால்’ என்பவரால் உருது மொழியிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டதாகும்.


 உருது மொழியில் இருந்த 

அரபுச் சொற்களை நீக்கிவிட்டு

அந்த இடத்தில் சமஸ்கிருத மொழிச் சொற்களை மிகுதியாக சேர்த்து இந்தி மொழியைப் புதிதாய் உண்டாக்கினார். 


இவ்வாறு அவரால் உருவாக்கப்பட்ட இந்தி மொழிக்கும், 

அதற்கு முன்பாக வடநாட்டு மக்களால் பல இடங்களில் பேசப்பட்ட சிதைந்த பிராகிருத மொழிக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. 


இந்தி மொழி என்பதே 

இந்து சனாதனத்தின் 

தாய் மொழியாக அவர்கள் கருதும் சமஸ்கிருதத்திலிருந்து உருவாக்கப்பட்டது.  


அதனை நன்கு உணர்ந்தவர்கள் உருவாக்கிய சித்தாந்தமே இந்தி, இந்து, இந்தியா என்பதாகும். 


அந்த கொடூர சித்தாந்தத்தை காங்கிரசிற்குள் இயங்கிக்கொண்டிருந்த வலதுசாரிகளின் துணை கொண்டு அரங்கேற்றினார்கள். 


அவர்கள் கனவு கண்ட இந்து தேசியத்தின் பலி பீடத்தில் 

பலி கொடுக்கப் பட்டுள்ள மாநிலங்கள் தான் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட இந்த இந்தி பேசும் மாநிலங்கள். 


இது தான் இன்றைய இந்துத்துவ அரசியலின் கேந்திரமான பகுதிகளாகவும் இருக்கின்றன என்பதை நாம் பிரித்துப் பார்க்கக்கூடாது. 


‘‘ஏன் தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கிறீர்கள்” என்ற அந்த இளைஞனை போன்ற சிலர் நம்மூரிலும் கேட்கிறார்கள்.


 அவர்களுக்கு இதுவரை கிடைக்காத அந்தக் கேள்விக்கான விடை இப்போது கிடைத்திருக்கும் என்றே நம்புகிறோம். 


3000 ஆண்டுகளுக்கு நிகரான நாகரீக சமூகத்திற்கான தொல்லியல் சான்றுகளோடு இருக்கும் 

தமிழ் மண்ணை போலி தேசியத்தின் பலி பீடத்தில் வைத்து காவு கொடுக்க நாங்கள் முட்டாள்களா என்ன?


 உலகின் பல்வேறு நாடுகளில் 

ஆட்சி மொழியாக இருக்கும் தமிழை இந்தியாவைத் தாண்டி எங்கும் இல்லாத இந்தியைக் கொண்டு அழித்துவிட முடியுமா என்ன..?


 “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயரிய சித்தாந்தத்தை கொண்ட தமிழ் மண் 

நான்கு 

வர்ணக் கோட்பாட்டை முன்னிறுத்தி உள்ளே வரும் வைதீகத்தின் 

மொழி வடிவத்தை ஏற்றுக் கொள்ளுமா என்ன..?


“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற, 

அதிகாரத்திற்கு எதிரான முழக்கத்திற்கு சொந்தக்காரர்களான தமிழ் மண் ஆங்கிலேய ஆட்சியானாலும், 

காங்கிரஸ் ஆட்சியானாலும், 

சங்பரி வாரத்தின் 

நேரடி ஆட்சியானாலும் 

யாருக்கும் அஞ்சாமல் 

மொழி உரிமைப்போரில் 

இந்தித் திணிப்பிற்கு எதிராக 

அதே கம்பீரத்தோடு எதிர்த்து நிற்கும் தானே.


 1937லும், 1948லும் 1965லும் 1986 லும் தமிழகம் மட்டுமே இந்தி மொழித் திணிப்பிற்கு எதிராக தனித்துப் போராடியது. 


ஆனால் இன்று நிலைமை அவ்வாறு இல்லை. 


*நமக்கு தோளோடு தோள் கொடுக்கும் தோழமைகளாக கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மராத்தியம் என்று பல்வேறு மாநிலங்களும் களத்தில் குதித்துள்ளன.*


இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் இந்திய நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதற்கான போராட்டம். 


இந்தச் சூழலில் ஒன்றிய அரசு உருவாக்கிய அலுவல் மொழி ஆய்வுக்குழு பரிந்துரை போன்ற 

எந்த வடிவில் 

இந்தியை திணிக்க நினைத்தாலும் அதை முற்றாக புறந்தள்ளுவதே இந்திய நாட்டின் பன்மைத்துவத்திற்கும், ஒற்றுமைக்கும் நல்லதாகும்.

Sunday, October 30, 2022

பிள்ளைகளை கொத்தடிமைகளாக மாற்றும் கேடு கெட்ட திட்டம்

 “உங்க கம்பனில 12வது முடிச்சவங்களுக்கு ஒரு வருசம் ட்ரைனிங் கொடுத்து வேலைக்கு சேர்த்துக்கு வாங்கலாமே, அந்த ப்ரோக்ராம் எப்படி?”



“அருமையான ப்ரோக்ராம். காலேஜ் எல்லாம் வேஸ்ட். இதுல சேர்ந்தா ஸ்கூல் முடிச்சு ஒரே வருசத்துல ஐடி கம்பெனில வேலை. கை நிறைய சம்பளம். சின்ன வயசுலயே வாழ்க்கைல செட்டில் ஆகிடுவாங்க”


“உங்க பையன் இந்த வருசம் தான 12வது பாஸ் செஞ்சான். இந்த மாதிரி ட்ரைனிங் ப்ரோக்ராம்ல தான் சேர்த்து விட்டிருக்கீங்களா?”


“ச்சேசே! என் பையன BE கம்ப்யூட்டர் சயின்ஸ்ல தான் சேர்த்துவிட்டேன்”


“ஏன் சார் உங்க கம்பனி ட்ரைனிங் ப்ரோக்ராம் நல்லதுன்னு இப்போ தானே சொன்னீங்க. அப்புறம் ஏன் அதுல சேர்க்காம காலேஜ்க்கு அனுப்புனீங்க?”


“அதெல்லாம் இல்லாத வீட்டு பிள்ளைகளுக்கு. நம்ம புள்ளைக்கு BE முடிச்சுட்டு அமெரிக்காவுல MS செஞ்சு H1B விசா வாங்கி அங்கேயே செட்டிலாகுற பிளான் வச்சுருக்கேன்”


12வது முடித்தவர்களுக்கு ஐடி கம்பனில ட்ரைனிங் அப்புறம் வேலை என்பது விவரம் அறியாத பெற்றோரை ஏமாற்றி அவர்கள் பிள்ளைகளை கொத்தடிமைகளாக மாற்றும் கேடு கெட்ட திட்டம்.

Sunday, October 09, 2022

மாடு அல்லாத ஒட்டகம் அல்லாத அனைத்தும் கழுதை

 வெள்ளைக்காரன்: மாடு அல்லாத ஒட்டகம் அல்லாத அனைத்தும் கழுதை.


நரி : நல்லவேளை நம் அனைவருக்கும் வெள்ளைக்காரன் கழுதை என்ற ஒரு பொதுப்பெயரைக் கொடுத்தான். இல்லையெனில் நாம் நரியாகவோ நாயாகவோ இருந்திருப்போம்.


யானை: என்னை எப்படிடா நீ கழுதைன்னு சொல்லலாம்.


எலி: அப்ப நீ என்ன மாடா... ஒட்டகமா... நீயும் என்னைப்போல கழுதைதான்.


யானை: எலிப்பயலே ஒரே மிதியா மிதிச்சு நசுக்கிப் புடுவேன். உனக்கு கழுதை என்பது பெருமையாக இருக்கலாம். நீ கழுதையாகவே இருந்துக்கோ. ஆனா என்ன ஏண்டா உன்கூட சேர்க்கிற.


எலி: வெள்ளைக்காரனே நாம் எல்லோரும் கழுதைன்னு சொல்லிட்டான்.! காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் தங்களை கழுதைன்னுதான் சொல்லுது.! தடிப்பயலே, உனக்கு என்ன திமிரு இருந்தால் திரும்பத் திரும்ப நீ யானைனு சொல்லுவ.!


இங்க இருந்தா கழுதையா இரு. இல்லேன்னா பாகிஸ்தானுக்கு ஓடிப்போ.!

Saturday, October 08, 2022

மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள்- களப்பிரர்கள்!

 களப்பிரர் காலம் இருண்ட காலம் ஏன்?மறைக்கப் பட்ட உண்மை????


©️இறுதி மனிதர்கள்

©️களப்பிரர் ஆட்சி


மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள்- களப்பிரர்கள்! 


களப்பிரர் ஆட்சி ஏறக்குறைய (கி.பி.250-கி.பி 600) 350 ஆண்டுகளும் தமிழகம் பார்ப்பனியத்திலிருந்து விடுபட்ட காலகட்டம்.


இவர்களுடைய ஆட்சியில் பார்ப்பனியம் அடங்கி ஒடங்கிபோனது. 


தங்களுக்கு தாங்களே உயர்வு கற்பித்துக்கொண்டு, அந்த கற்பிதத்தை வலிந்து திணிக்கும் விதமாக புராணங்களையும் இதிகாசங்களையும் எழுதிக்கொண்ட பார்ப்பனியம் கி.மு.1700 -கி.மு.1500-களில் தமிழகத்திற்குள் நுழைந்தது. 


தமிழுக்கும், தமிழ் சமூகத்துக்கும் கேடுகாலம் இந்த காலகட்டத்தில்தான் தொடங்கியது. 


மூவேந்தர்களும் எந்த விதமான எதிர் கேள்வியும் இல்லாமல் பார்ப்பனியத்தின்  ஆட்டங்களுக்கும்,யாகங்களுக்கும் தங்களின் அறிவை தொலைத்ததோடு சேர்த்து தமிழ் சமூகத்தையும் அழிவிற்கு உள்ளாக்கினார்கள்.


தமிழர்களின் மதம், கலை, கலாச்சாரம், வானியல், சோதிடம், மருத்துவம், மொழி அனைத்தும் வெகு விரைவாக ஆரிய சமஸ்கிருத மயமாக்கப்பட்டன. 


ரிக் வேத ஆரிய முனிகள் தமிழர்களின் கண்டு பிடிப்புகளுக்கு உரிமை கொண்டாடினார்கள்.


தமிழ் கல்வி பிராமணர்களின் ஏகபோக உரிமையானது. 


உதாரணம்: சங்க இலக்கியங்களுக்கு பிற்காலத்தில் உரை எழுதிய அனைவரும் பிராமணர்களே. திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரும் பிராமணரே.


இதன் விளைவு சங்க இலக்கியங்கள் அனைத்திலும் திருக்குறள் உட்பட எல்லாவற்றிலும் பார்ப்பனியத்தை திணிக்கும் வேலைகள் சுதந்திரமாக நடந்தது.


இதை தட்டி கேட்க வேண்டிய மூவேந்தர்களும் யாகங்களில் மூழ்கி கிடந்தார்கள்.


தங்களுக்கு எதிரான அனைத்தையும் விழுங்கி செரித்து விடுவது பார்ப்பனியத்தின் சிறப்புகளுள் ஒன்று. 


வட இந்தியாவில் சமணமும், பௌத்தமும் பார்ப்பனியத்தால் விழுங்கப்பட்டன. 


இந்தியாவில் தோன்றிய பௌத்தம் இந்தியாவில் பரவாததற்கு காரணம் இதுவே.


மூவேந்தர்களும் போட்டி போட்டுகொண்டு வைதீக பார்ப்பனியத்தை ஆதரித்தார்கள்.


பிராமணர்களுக்கு உள்ளூர் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது. 


மனு போன்ற பிராமணியத்தின் பிரத்தயேக தர்மங்கள் பொது மக்களிடையே திணிக்கப்பட்டன.


பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் வழங்கப்பட்டன.


பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் என்றால் என்ன ?


பிராமணர்களுக்கு என்று ஒரு ஊரை உருவாக்கி, அந்த ஊரில் வசிக்கப் போகும் ஒவ்வொரு பிராமணருக்கம் அந்த ஊரை சுற்றி விவசாய நிலங்களை ஏற்படுத்தி, அந்த நிலங்களில் உழைப்பதற்கு வேலையாட்களையும் கொடுப்பதற்கு பெயர் பிரம்மதேயம் மற்றும் சதுர்வேதி மங்களம். 


இந்த ஊர்களில் வசிக்கும் பிராமணர்களிடமிருந்து எந்தவிதமான வரியும் வசூலிக்கப்படாது. இவர்களின் விவசாய நிலங்களுக்கும் வரிகள் கிடையாது.


எந்த தகுதியின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டும் இத்தகைய ஆதிக்க சலுகைகள் என்று அன்றைய தமிழ் சமூகத்திற்கும், அன்றைய மூவேந்தர்களுக்கும் கேட்க வேண்டும் என்று தோன்றாத நிலையில்தான் களப்பிர புரட்சியாளர்கள் தமிழகத்திற்குள் நுழைந்தார்கள்.


ஒடுக்கப்பட்ட விவசாய மற்றும் வணிக வர்கத்தின் கூட்டே களப்பிரர்கள். 


சமூக சீரழிவிற்கு துணைபோன மூவேந்தர்களும் ஆட்சி அதிகாரங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள்.


இந்த விரட்டியடிப்பு கி.பி.150 ஆம் ஆண்டுகளிலேயே தொடங்கிவிட்டது. 


கி.பி. 250 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் களப்பிர புரட்சியாளர்களின் முறையான ஆட்சி தொடங்கியது.


தமிழகமும் பார்ப்பனியத்தின் பிடியிலிருந்தது மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.


பார்ப்பனியம் மற்றும் பிராமணர்கள் பக்கம் களப்பிர புரட்சியாளர்களின் பார்வை திரும்பியது. 


பிரம்மதேயங்களும் சதுர்வேதி மங்களங்களும் பிராமணர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டன.


பிராமணர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்த சொத்துகள் அனைத்தும் களப்பிர ஆட்சியாளர்களால் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டன.


பிராமணர்களின் மேலாதிக்கம் அடக்கி ஒடுக்கப்பட்டது.


பிராமணர்கள் உழைக்கும் வர்கத்திற்கு அடங்கி இருக்க வேண்டிய நிலையை களப்பிர புரட்சியாளர்கள் ஏற்படுத்தினார்கள். 


இந்தியாவில் தோன்றிய பேரரசுகளில் பார்ப்பனியத்திற்கு எதிரான வலுவான நடவடிக்கை எடுத்த ஒரே ஒரு பேரரசு களப்பிர பேரரசு மட்டுமே. 


பார்ப்பனியத்தை அடக்கி ஒடுக்கி உட்கார வைத்த காரணத்திற்காகவே இன்று களப்பிரர் ஆட்சி இருண்ட காலமாக வருணிக்கப்படுகிறது.


களப்பிரர் கொள்ளையர்கள் என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள்.


நேர்மையான எந்த வரலாற்று ஆராய்ச்சியாளரும் களப்பிர ஆட்சி காலத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணியக் கூட மாட்டார்கள்.


அனைவரும் அனைவருக்கும் சமம் என்று போதிக்கின்ற சமண மதமும், பௌத்த மதமும் களப்பிரர்களின் அரசாங்க மதமாக இருந்தது. 


களப்பிர புரட்சியாளர்களின் காலத்தில் காஞ்சிபுரமும், காவிரிபூம்பட்டினமும் மிக மிக முக்கியமான பௌத்த நகரங்களாக இருந்தன. 


ஆரிய கலப்பற்ற மிகச் சிறந்த பௌத்த தமிழ் இலக்கியங்கள் களப்பிரர் ஆட்சி காலத்திலேயே எழுதப்பட்டன. சீவகசிந்தாமணி, நரிவிருத்தம், கிளிவிருத்தம், பெருங்கதை போன்ற இலக்கியங்கள் இதற்கு உதாரணம்.


சங்கமித்திரர், புத்ததத்தர், புத்தமித்திரர், போதிதருமர் (ஏழாம் அறிவு புகழ்) போன்ற மிகச் சிறந்த பௌத்த மத துறவிகள் களப்பிர அரசர்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். 


இதில் சங்கமித்திரர் இலங்கையில், பௌத்த தத்துவத்தின் ஒரு பிரிவான மகாயன பௌத்தத்தை பரப்பி புகழ் பெற்றவர்.


போதிதருமர் தென்கிழக்காசியாவில் பௌத்த தத்துவத்தின் தியான பிரிவான ஜென் தத்துவத்தை பரப்பி புகழ் பெற்றவர்.


இன்றைய வரலாற்று நூல்கள் சித்தரிப்பது போல் களப்பிரர் ஆட்சி காலம் இருண்ட காலமாக இருந்திருந்தால் இவர்களால் இத்தகைய சாதனைகளை செய்திருக்கவே முடியாது.


உண்மை வரலாற்றை திரிப்பதும், மறைப்பதும் இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் தருமம்.


அதுவும் ஆரிய வர்ணம் தூக்கலாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதும்,

அதற்கு எதிரான அனைத்தையும் சிறுமைபடுத்துவதும், கேவலப்படுத்துவதும், எதிர்ப்பு குரல் எழுப்புபவர்களை துரோகிகளாக சித்தரிப்பதும் இவர்களின் செயல்கள்.


கி.பி. 250 முதல் தமிழகத்தை ஆரிய ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்த களப்பிரரின் ஆட்சி 350 வருடங்கள் கழித்து கி.பி.600-ல் முடிவிற்கு வந்தது. 


தெற்கில் பாண்டியன் கடுங்கோனும், வடக்கில் பல்லவன் சிம்மவிஷ்ணுவும் களப்பிரரை வீழ்ச்சியடைய செய்தார்கள். 


பிடுங்கபட்ட பிராமணர்களின் ஆதிக்கச் சலுகைகள் மீண்டும் அவர்களுக்கு கிடைத்தது.

Friday, October 07, 2022

இந்தியாவில் எல்லா நபரும் வரி செலுத்துபவர்தான்!!

 இந்தியாவில் எல்லா நபரும் வரி செலுத்துபவர்தான்!! 


சில கட்சிகள் வருமான வரியை மட்டும் கணக்கில் கொள்ளும். கட்டணமில்லா சேவைகளை/சலுகைகளை இலவசங்கள் என்றும், அவைகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக கூறும். அவைகளை புறக்கணிப்போம். 


பிறப்பு முதல் இறப்பு வரை நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும்/பெறும் சேவைகளிலும் வரி (ஜிஎஸ்டி) செலுத்துகிறோம். 


அரசின் சலுகைகள் நம் வரிப்பணத்தின் ஒரு பகுதி நமக்கு திருப்பிக் கிடைக்கும் வழி. 


பெண்களுக்கான கட்டணமில்லா உள்ளூர் பேருந்து பயணத்தை பெண்கள் உரிமையோடு மேற்கொள்ள வேண்டும்!

காலநிலை மாற்றங்கள்! வளர்ச்சித் திட்டங்கள்!

 நிலை 1: நம் ஊர் பெரிதாக வேண்டும். எல்லா வசதிகளும் அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.


எங்கள் வீடுகளை, நிலங்களை அரசு திட்டங்களுக்குத் தர மாட்டோம். அது எங்கள் வாழ்வாதாரம்.


பக்கத்து ஊரை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் நிலங்களின் மதிப்பு கூடிவிடும்!


நிலை 2: என் வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்குகிறது. என்னால் இங்கு வாழ முடியவில்லை. எங்கேயோ வடிகால் அடைபட்டிருக்கிறது. உடனே அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.


வீட்டைச் சுற்றி நீர் தேங்கினாலும் என் வீடு ஆக்கிரமிப்பு கிடையாது. அரசு என் வீட்டை இடிக்கக் கூடாது. பக்கத்து வீட்டை இடித்தால் நீர் வடிந்துவிடும்.


நிலை 3: நிலத்தடி நீரை சட்டத்திற்கு புறம்பாக உறிஞ்சும் நிறுவனங்களால்தான் என் நிலத்தில் நீர் கிடைக்கவில்லை. உடனே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மூன்று நாள்களாக தொடர்ந்து குடிக்க கேன் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறோம். ஒரு கேனுக்கு 100 உரூபாய்! அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


காலநிலை மாற்றங்கள்! வளர்ச்சித் திட்டங்கள்!

நூல் அளவுதான் வித்தியாசம்

 எங்கோ ஒரு கோட்சே என்ற பார்ப்பனன் மகாத்மாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்காக


எங்கோ ஒரு TT கிருஷ்ணமாச்சாரி என்ற ஒன்றிய அமைச்சர் கொள்ளையடித்தார் என்பதற்காக


எங்கோ ஒரு IPS அதிகாரி சபேசன் கொள்ளையடித்தார் என்பதற்காக


எங்கோ ஒரு ராணுவ அதிகாரி KR ராகவன் கொள்ளையடித்தார் என்பதற்காகஎங்கோ ஒரு ஜெயலலிதா மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் ஒரு லச்சம் கோடி கொள்ளையடித்தார் என்பதற்காக


எங்கோ ஒரு தேவநாதன் குருக்கள் 

கோவில் கருவறையில்

காமலீலை செய்ததற்காக,


எங்கோ ஒரு கோவில் குருக்கள் 

கோவிலில் சிறுமியை வன்புணர்ச்சி செய்ததற்காக, எங்கோ ஒரு ராஜப்பா குருக்கள்

100 கிலோ தங்கத்தை திருடியதற்காக.


 எங்கோ ஒரு சித்ரா ராமகிருஷ்ணன் பிராமணாள் பங்கு சந்தையில் பலகோடி ஊழல் செய்ததற்காக 


ஒட்டு மொத்த பார்ப்பனரையும்

தவறாகப் பேசக்கூடாது.


ஆனால்...


எங்கோ ஒரு முஸ்லிம்

குண்டு வைத்ததற்காக,

ஒட்டு மொத்த முஸ்லிம் எங்கோ ஒரு முஸ்லீம் குண்டு வைத்ததற்காக முஸ்லீம் சமுதாயத்தையும் குற்றம் சொல்லலாம்.


எங்கோ ஒரு திமுக காரன்

பியூட்டி பார்லர் கடையை உடைத்தற்காக,

ஒட்டு மொத்த திமுக காரனையும்

பழி சொல்லலாம்.


ஏனெனில், நியாயம் நீதி இரண்டு வகைப்படும். 

அது இரண்டுக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம்...

Thursday, October 06, 2022

இந்தியாவில் எல்லா நபரும் வரி செலுத்துபவர்தான்!!

 இந்தியாவில் எல்லா நபரும் வரி செலுத்துபவர்தான்!! 


சில கட்சிகள் வருமான வரியை மட்டும் கணக்கில் கொள்ளும். கட்டணமில்லா சேவைகளை/சலுகைகளை இலவசங்கள் என்றும், அவைகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக கூறும். அவைகளை புறக்கணிப்போம். 


பிறப்பு முதல் இறப்பு வரை நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும்/பெறும் சேவைகளிலும் வரி (ஜிஎஸ்டி) செலுத்துகிறோம். 


அரசின் சலுகைகள் நம் வரிப்பணத்தின் ஒரு பகுதி நமக்கு திருப்பிக் கிடைக்கும் வழி. 


பெண்களுக்கான கட்டணமில்லா உள்ளூர் பேருந்து பயணத்தை பெண்கள் உரிமையோடு மேற்கொள்ள வேண்டும்!

எதை பற்றியும் தெரியாமல் ஒரு காலத்தில் நான் சீமான் பின்னால் சுற்றி கொண்டு இருந்தேன்

 

India Today பத்திரிக்கை வருடா வருடம் இந்திய மாநிலங்களை தரப்படுத்தி வெளியிடும். அதை நூலகத்திலோ, இணையத்திலோ தேடி படித்து பாருங்கள். அதில் ஒவ்வொரு முறை திமுக ஆட்சில இருக்கும் பொழுதும் தமிழ் நாடு முதல் மூன்று இடங்களில் இருக்கும். ஆனால் அதிமுக வரும் பொழுது எல்லாம் கீழே இறங்கி விடும். அதிலும் OPS முதல்வராக இருந்த பொழுது கடைசி இடதுக்கு தள்ளப்பட்ட கேவலமும் நடந்தது.

குறிப்பாக 96-01 திமுக ஆட்சி இன்றைய நவீன தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட பொற்கால ஆட்சி என்று திமுக பிடிக்காத பார்ப்பன பத்திரிகைகளே ஒத்து கொண்ட விடயம். I.T துறை முதல், சாலை மற்றும் போக்கு வரத்து விரிவாகம் வரை தமிழ் நாடு நாட்டிலேயே உச்சதுக்கு போக காரணம் திமுக தான். EPS வந்து எல்லா இடத்துக்கு MGR பேரை வச்சிட்டு வெற்று தம்பட்டம் அடித்து கொண்ட கொள்ளைகாரன்/ கொலைகாரன்.

(MGR ஆண்ட 10 வருடங்கள் தமிழ் நாட்டில் எந்த பொருளாதார வளர்ச்சியில் இல்லை, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடியாது என்று அப்ப வந்த CAG அறிக்கை காறி துப்பி விட்டது. ஆனா சினிமா மோகத்தை வச்சி மக்களை ஏமாற்றி, கடைசில் A1 கொள்ளைகாரி கிட்ட தமிழ் நாட்ட விட்டுட்டு போய்ட்டாரு.)

Bonus for those interested in facts and not inane bullsh!t:

இந்தியாவிலேயே தமிழ் நாடு இன்று முன்னேறிய மாநிலமாக இருக்க காரணம், கலைஞர் தான். 1971 இல் SIPCOT மற்றும் SIDCO உருவாக்கி மாபெரும் தொழிர்ச்சாலைகள் & வேலைவாய்ப்புகள் உருவாகினார். பிறகு 1977இல்ல ELCOT தொடங்கி அதான் மூலம் மின்னனு தொழிர்ச்சாலைகள் உருவாக்கி தொழிர்ரபுரட்சியை தமிழ் நாட்டில் தொடங்கினார். பிறகு 1991இல் நிதி அமைச்சர் மன்மோகன் சிங் உலகமயமாக்கள் இந்தியாவிற்கு கொண்டுவந்த பின், கலைஞர் 1997இல் இந்தியாவில் முதன் முதலாக I.T policy உருவாக்கினார். பிறகு 1999இல் அப்போதைக்கு ஆசியாவின் மிக பெரிய I.T பூங்காகளில் ஒன்றாக TIDEL park உருவாக்கினார்.

இன்று அதில் உட்கார்ந்து கொண்டு தான் சில தற்குறிகள் “திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவே”னு போன்ல பதிவு போடுதுங்க. அப்பலாம் இங்க I.T னா என்னன்னே பெரும்பாலும் மக்களுக்கு தெரியாமல் இருந்த பொழுது அதான் எதிர்காலத்தை உணர்ந்து I.T துறையை உருவாக்கி, கணினி கல்வியை கொண்டுவந்தார். மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ் நாட்டின் பங்கு 1995-96இல் வெறும் 0.2% இருந்தது, அதை 2000 எட்டும் பொழுது 13% மாற்றி காட்டினார்.

ஜெயலலிதா எத்தனை I.T park அமைத்தார்னு யாராவது சொல்ல முடியுமா. சொல்லப்போனா ஓசூர் கிட்ட அமையவிருந்த I.T park திட்டத்தை திமுக போட்ட திட்டம்னு கிடப்பில தான் போட்டாங்க. (இப்ப திமுக மதுரையில ஒரு பெரிய I.T park மைக்கும் திட்டத்தை PTR அறிவித்திருக்கார்.)

இந்தியாவின் Detroit என தமிழ் நாடு புகழ் பேரும் வகையில் கார், பைக் தொழிர்சாலைகள் கொண்டுவந்தார். சேலம் இரும்பு ஆலையையும் கொண்டுவந்தவர் கலைஞர் தான்.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு சாலை போக்குவரத்து infrastructure உருவாக்கியது 1996-01 கலைஞர் தான். முதன் முதலில் சிறு சிறு தெருக்களுக்கு கூட சிமன்ட் சாலை, குக்கிராமங்களுக்கு மினி பேரூந்து தொடங்கினார். பேரூந்து கட்டணங்களை தொடர்ந்து இந்தியாவிலேயே மிக மலிவாக வைத்துகொண்டார். கோயம்பேட்டில் அப்போதைக்கு ஆசியாவின் மிக பெரிய பேரூந்து நிறுத்தம், கிட்டத்தட்ட 100 சிறு மற்றும் பெரு அணைகள், அரசு ஊழயர்களின் குடும்பத்துக்கு அனுதாப தொகை இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கியது, சென்னை மெட்ரோ, தமிழ் நாடு முழுக்க ஆரம்ப சுகாதார நிலையங்கள் (அம்மா கிளினிக் போல வெறும் ஒரு பாத்ரூம் கட்டி பலகை தொங்க விட்டவரல்ல), என்று இன்னும் பல.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர் சந்தை, Tamil Nadu Civil Supplies Corporation போன்றவற்றை கொண்டுவந்தார்.

கை ரிக்க்ஷாகள் ஒழித்தார், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி, இந்தியாவில் முதன் முதலில் பெண்களுக்கு சொத்து உரிமை கொடுத்தவர், குடிசை மாற்று வாரியம் அமைத்து குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக வித்திடவர். இன்று தமிழ் நாட்டில் 75% பேர் சொந்த வீடு வைத்துள்ளனர். Backward class/தாழ்த்தபட்டோர் என்பதை நீக்கி பிற்படுத்தப்பட்டோர் என்ற பதம் உருவாக்கினார். அது போல் ஊனமுற்றோர் என்ற பாதத்தை நீக்கி, மாற்றுத்திறனாளி என்ற பதத்தை கொண்டுவந்து, அவர்களுக்கு 3% இடஒதுக்கீடும் கொண்டுவந்தார். இன்னும் நூற்று கணக்கில் திட்டங்களை, infrastructure என்று உருவாக்கி தமிழ் நாட்டின் தலைஎழுத்தை மாற்றியவர்.

It's these things that gave common people a chance to improve their lives become determiners of their lives. Not random selection of rich men with caste backing as ministers.

ஆனால் இது எதை பற்றியும் தெரியாமல் ஒரு காலத்தில் நான் சீமான் பின்னால் சுற்றி கொண்டு இருந்தேன், பிறகு அரசியல் தெளிவு ஏற்பட்ட பின் வெளி வந்து விட்டேன். இங்கு கலைஞரை திட்டி பதிவு போடுபவர்கள் நாளை உணர்வார்கள்.

Friday, September 30, 2022

தேவதாசி


 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

 இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.

இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.

அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.
 
அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்

அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.
இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்.. நீங்களும் புண்ணியம்  சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.

இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.

இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

#பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா..?

Sunday, September 04, 2022

பிரபல தீஸிஸ் திருடனின் பிறந்தநாள் ஆசிரியர் தினமா.!?

 பிரபல தீஸிஸ் திருடனின் பிறந்தநாள் 

ஆசிரியர்_தினமா.!? 


ஜாதுநாத் சின்ஹா கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1915ல் இளங்கலை தத்துவவியல் முடித்து, புகழ்பெற்ற ஃபிலிப் சேமுயல் ஸ்மித் மற்றும் க்ளின்ட் நினைவு பரிசுகளையும் வென்று, 1917ல் முதுகலையும் முடிக்கிறார். உடனடியாக கல்கத்தா ரிப்பன் கல்லூரியில் தத்துவவியல் துறை துணை பேராசிரியராக தேர்வாகி பணி செய்கிறார் 


கல்கத்தா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பிரேம்சந்த் ராய்சந்த் மாணவர் கல்வி உதவித்தொகைக்காக 1922ம் ஆண்டு, “இந்திய உளவியல் ஞானம்” என்ற தலைப்பில் தொகுதி 1 மற்றும் 2 என்ற இரண்டு ஆராய்ச்சி ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க தொடங்குகிறார். அதற்கு தேர்வாளராக பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார். ஆராய்ச்சியின் ஒவ்வொரு வகுப்பீடும் தேர்வாளர் பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடம் சமர்பிக்கப்படுகிறது. 1923ம் ஆண்டு ஜாதுநாத் சின்ஹாவுக்கு புகழ்பெற்ற க்ரிஃப்ஃபித் பரிசும் மௌஅத் பதக்கமும் வழங்கப்படுகிறது. 1925ல் ஆராய்ச்சியின் முழு அறிக்கையும் சமர்பிக்கப்படுகிறது. இதற்கிடையில் ஜாதுநாத் சின்ஹா தனது ஆராய்ச்சி ஆய்வறிக்கையின் சாறுகளை மீரட் கல்லூரி இதழில் 1924 மற்றும் 1926ம் ஆண்டுகளில் வெளியிடுகிறார். 


ஜாதுநாத் சின்ஹாவினுடைய ஆராய்ச்சி ஆய்வறிக்கையின் பெரும்பகுதியை திருடி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தனது இந்திய தத்துவம் புத்தகத்தின் இரண்டாம் தொகுதியில் பதிந்து வெளியிட்டிருப்பதை நவம்பர் 1928ல் கண்டுபிடிக்கப்பட்டது.


சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் இந்த பதிப்புரிமை மீறல் தொடர்பாக, 20.12.1928 தேதியிட்ட புகார் கடிதம் ஒன்றை மாடர்ன் ரிவ்யூவ் இதழுக்கு அனுப்புகிறார் ஜாதுநாத். 1929 பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் புகார் கடிதங்களை அனுப்புகிறார். அவை அதே இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவை பலனிக்காதததால், 1929 ஆகஸ்ட் மாதம், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மீது தனது ஆராய்ச்சி ஆய்வறிக்கையை திருடிவிட்டதாக, கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்குகிறார் ஜாதுநாத்.


சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் நடவடிக்கையால் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மானம் கப்பலேறுவதை சகிக்க முடியாமல், சக பேராசிரியர்களின் துணையோடு, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு பேச்சுவார்த்தை நடத்தி மே 1933ல் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. 


பிறகு 1952ல் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், தனது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி, 1954ல் பாரத ரத்னா விருதையும் வாங்கிக் கொண்டார். 


பின்பு 13.05.1962ல் இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், அதன் பிறகு வந்த தனது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாட அவரே வற்புறுத்தினார். அதன் விளைவாக 05.09.1962ம் ஆண்டு முதன்முதலாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. 


இப்படி தனது மாணவனின் ஆராய்ச்சி அறிக்கையைத் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு, பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி பாரத ரத்னா விருது வாங்கிய சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது வரலாற்றுப் பிழை


நியாயமாக பார்த்தால் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் பூலேவின் பிறந்தநாளான ஜனவரி 3 தான் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட வேண்டும்.

Tuesday, June 14, 2022

Marshall நேசமணி

 "1810 வரை தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட, சேரர் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், அதன் பிறகு, சனாதன தர்மத்தை கொள்கையாகக் கொண்ட சமஸ்கிருத மலையாள மன்னராட்சியின் கட்டுப்பாட்டுக்கு சென்றது.
ஏறத்தாழ 146 ஆண்டுகள் இந்நிலப்பரப்பு அடிமைப்பட்டுக் கிடந்தது. தீண்டாமை, காணாமை, தோள் சீலை அணியும் உரிமை மறுப்பு, கோவிலுக்குள் நுழையத் தடை, தலைப்பாகை அணியக்கூடாது, நல்ல பெயர்களை சூட்டக் கூடாது, வரிச்சுமை.. இன்னும் பற்பல அடக்குமுறைகள் தமிழ் குலத்தினர் மீது ஏவப்பட்டது!!

கன்னியாகுமரி தமிழர்கள் மீண்டும் தமிழ்நாட்டுடன் சேராமல் இருக்க சமஸ்கிருத மலையாள ஆட்சியாளர்கள், இந்நிலப்பரப்பை மலையாளமயமாக்கினர்; தமிழ் கற்கும் உரிமை மறுக்கப்பட்டது. தமிழர்களை அடக்கி ஒடுக்கினர். 1948 - 1956 காலகட்டத்தில், மொழி வழியில் மாநிலங்களை பிரிக்க இந்திய அரசு ஆய்வு நடத்திய போது, கேரளத்தோடு குமரி மாவட்டத்தை சேர்க்க அரசு முடிவு செய்தது. இவற்றையெல்லாம் எதிர்த்து, தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து நடத்திய போராட்டமே, தெற்கெல்லை விடுதலைப் போராட்டமாகும்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்ற வீரஞ்செறிந்த போராட்டங்களில் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் 36 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் நாடார் சமூகத்தினர். காவல்துறையின் கொடூரமான தாக்குதல்களில், நூற்றுக்கணக்கானோர் உடல் ஊனமுற்றனர். எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும், தமிழ்நாட்டோடு இணைந்தே தீருவது என்ற மன உறுதியோடு மக்கள் போராடினர்.

போராடிய மக்களின் தலைவராக இருந்து வழிநடத்தியவர் தான் குமரித் தந்தை Marshall நேசமணி. வர்ணாஸ்ரமதர்மத்தால் ஒடுக்கப்பட்ட நாடார் சமூகத்தில் பிறந்தவர். வழக்கறிஞரான இவர், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில், ஆதிக்க ஜாதி வழக்கறிஞர்களுக்கும் ஒடுக்கப்பட்ட வக்கீல்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையை உடைத்து, அனைவருக்கும் பொதுவான ஒரே பானையை வைத்தவர்.

தான் நீதிமன்றம் சென்ற முதல் நாளன்றே,  ஒடுக்கப்பட்டடோருக்கு (நாடார், தேவர், பறையர், முக்குவர், ஈழவர், புலையர்......), தீண்டாமை காரணங்களுக்காக போடப்பட்டிருந்த "தனி" ஸ்டூலை காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்தவர். தமிழர்களை ஒன்றுதிரட்டி, அரசுக்கு எதிராக பல கிளர்ச்சிகளை முன்னின்று நடத்தியவர். அதேபோல,  தாய்மொழிக்கல்வி மறுக்கப்பட்ட தமிழர்களின் மொழி உணர்வுக்கும் விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும், வேளாளர்கள் முன்னெடுத்த தமிழ் சங்கங்களும், கருத்தரங்குகளும் பெரிதும் பயன்பட்டன.

துப்பாக்கி சூடுகள், தடியடிகள்,  ஆதிக்கவாதிகளின் அரிவாள் வெட்டுக்கள், சொத்து பறிப்புகள், தியாகங்கள், உயிரிழப்புகள் ஒருபுறம் அதிகரித்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பலகட்ட போராட்டங்கள் நடந்தன‌.  "வீட்டுக்கு ஒரு தமிழன், நாட்டை காக்க புறப்படு" என்று நேசமணி முழங்கினார். ஒரு கட்டத்துக்கு மேல், இந்திய அரசால் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், வேறு வழியில்லாமல், விருப்பம் இல்லாமல், கன்னியாகுமரி மாவட்டத்தையும், தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை தாலுகாவையும், தமிழ்நாட்டோடு இணைத்தது அரசு. (1956)

நேசமணி எழுதிய நூல்கள்:
1. Inside Travancore, Tamil Nadu
2. Rule of Steel and Fire in Travancore Cochin
3. "திங்கள்" என்ற இதழையும் நடத்தினார்.

தன் இறுதிக் காலத்தில், Church of South India (CSI) - கன்னியாகுமரி மறைமாவட்ட துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்தார். (1968). மன்னராட்சியில் ஜாதிகளால் பிளவுபட்டிருந்த, பிளவுபடுத்தி வைக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி தமிழர்கள் (நாடார், மீனவர், பறையர், வேளாளர்,  ....), மொழி & பண்பாட்டின் அடிப்படையில், ஒன்று திரண்டெழுந்த வீரவரலாற்றுக்கு சொந்தக்காரரான Marshall நேசமணியின் பிறந்தநாள் இன்று ⚔️⚔️⚔️"

படி..படி..படி...

 படி..படி..படி...
படிக்காம ஜெயிச்சவன் ஒருத்தர் இரண்டுபேர காட்டலாம் படிச்சு ஜெயிச்சவன் லட்சம் பேர என்னால காட்டமுடியும் .. படிக்காம ஜெயிக்கலாம் அப்படி எவனாவது சொன்னா நம்பாதே ..
இவர்களெல்லாம் முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில்  தவறான பாதையை காட்டும் சூழ்ச்சி ..
தமிழ்நாட்டின் தலைவன்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்

M. K. Stalin
Chief Minister of Tamil Nadu
..
ஆம்
படிக்காம விவசாயம், பண்ணு ஆடு வளர்க்க போ.. லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம் .. IPS வேலைய ராஜினாமா பண்ணிட்டு ஆடு வளர்த்தேன்  என படிக்க  நினைக்கிறவன் மனதில் விசத்தை விதைக்கிற "பசுமைவிகடன்" விவசாயம் பண்ணி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இன்ஜினியர் என மயக்கும் வார்த்தைகளை நம்பாமல் படியுங்கள் .. படிப்பு மட்டுமே ஒருவனின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் ..
..
எங்கே படிச்சு மேல வந்துடுவானோ என்கிற அச்சம் பன்நெடுங்காலமாய் கல்வி மறுக்கபட்டவன் உயரத்தை நோக்கி வரும் போது அவனை திசைமாற்றும் சதி.. அதை நம்பாமல் கல்வி ஒன்றே குறையாத செல்வம் .. எப்படியாவது படித்துவிடு என முதலமைச்சர் கவலைக்கொள்கிறார் .. எக்கேடுகெட்டால் என்ன மாட்டு மூத்திரமும் புல்டோசரும் முஸ்லிம்களும் இருக்கும் வரை நம்மை அசைக்கமுடியாதென மக்களை மடையர்களாக வைத்திருக்க நினைக்கும் காலத்தில் படி என்கிறார் திராவிட மாடல் முதல்வர் ..
..
காலையில படி மாலையில விளையாடு என பாரதி பாட்டை பாடமாக்கி அவர்கள் மட்டும் எல்லா நேரமும் படித்துக்கொண்டிருக்க பாவேந்தர் தான்
"காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி"..
படி படி படி என பாடினார் ..
..
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் தான் திராவிடத் தலைவர்கள் படித்த சமுதாயம் உருவாக வேண்டுமென பாடுபட்டார்கள், பாடுபடுகிறார்கள் ..  
மிக முக்கியமான காலகட்டத்தில்
வரலாற்றை மாற்றி எழுத துடிக்கும் சனாதனசக்திகள், தமிழகத்தின் விடுதலை வரலாற்றை கூட மறைக்க முயலும் பாசிச சக்திகள், சாதிமத துவேசத்தை எளிதாக நம்மிடையே கடத்த முயலும் இக்காலகட்டத்தில் .. மிகப்பெரிய மாற்றம் என்ற பெயரில் பொய்புரட்டு புராணத்தை புகழ்ந்து கல்வியில் திணிக்க முயலும் வேளையில், எதையும் ஆய்ந்தறிந்து சரியானதை தேர்வு செய்து மாணவச் செல்வங்களின் நெஞ்சில் நல்லதை விதைக்க சரியானவரிடம் அதிகாரம் வந்திருப்பதும் அதை அவர் மிக சாதூர்யமாக கையாள்வதும் மகிழ்வை தருகிறது "எண்ணும் எழுத்தும்"..
..
இந்திய ஒன்றிய அரசு (எல்லாமாநிலத்திற்கும்) ஒதுக்கியதை விட அதிகமாக நிதியை ஒதுக்கி வலுவான கல்வி கட்டமைப்பை தருகிறார் .. நம் பிள்ளைகளை படிக்க வைக்கவேண்டும்..
ஆம் அப்போது தான் இச் சமூகத்தில்
 சிறந்தவர்களாக பண்பாளர்களாக, நல்லொழுக்கமுள்ளவர்களாக, சாதிமதவெறியெனும் சாக்கடையில் மூழ்காமல் எதையும் அறிவுக் கொண்டு சிந்திக்கும் நல்லவர்களாக உருவாக்குவோம் ..
..
நல்லதை விதைப்போம்
வருங்காலம்  நன்மையே பயக்கும்

லார்டு மெக்காலே வை பார்ப்பனர்கள் வில்லனாக சித்தரிப்பதன் காரணம் என்ன?

 “1813 துவங்கி 1833 வரை கிழக்கிந்திய கம்பனி, இந்தியாவில் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, வருடம் தோறும் வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் மானியம் என்ன ஆயிற்று? என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற குழு ஆய்வு நடத்தியது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, 20 லட்சம் ரூபாய் என்றால் இன்றைய மதிப்பில் எத்தனை பில்லியன் என்று பாருங்கள்!

அவ்வளவு பணமும் இந்திய பொதுமக்களுக்கு போய் சேரவில்லை. கல்வியோ, பொது அறிவோ, முக்கியமாக அறிவியலோ வளரவே இல்லை. அந்த இருபது லட்சத்தையும் வேத பாட சாலை நடத்தி சமஸ்கிருதம் வளர்க்கவும், மதராசாவில் அரபி கற்பிக்கவும் தான் செலவாயிற்று என்று தெரிய வந்தபோது அது பிரிட்டிஷாருக்கு அதிருப்தியைத் தந்தது.

காரணம்
பிரிட்டனில் கல்வி என்பது மதசார்பற்றது,
எல்லா மனிதருக்கும் பொதுவானது,
முக்கியமாய் பிரிட்டனில் பெண்களும் படிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆனால்
//இந்தியாவில் பெண்களை விடுங்கள், பிராமணரைத் தவிற வேறு எந்த வர்ணத்தை சேர்ந்த ஆண்களுமே கல்வி‌ கற்கவே கூடாது என்கிற விதி இருந்தது//

இந்தியாவின் இந்த விசித்திரமான வழக்கத்தை ஆய்வு செய்யும் பணி தாமஸ் பாபிங்டன் மெக்கலே எனும் ஆங்கேலேய அதிகாரிக்கு வழங்கப்பட்டது.

யார் இந்த தாமஸ் மெக்கலே?

அவர் ஒரு எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், பல மொழி வித்தகர், அடிமை முறைக்கு எதிரானவர், முற்போக்கு கருத்தளர்,  பெண்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்கிற கொள்கை உடைய பிரிட்டிஷ் அதிகாரி.

இந்த லார்ட் மெக்கலே இந்தியாவிற்கு விஜயம் ஆனார். சமஸ்கிருதமும் பர்ஷியனும் கற்றுக்கொண்டார்.  அவருக்கு ஏற்கனவே கிரேக்கமும், லத்தீனும் அத்துப்படி என்பதால், அதே வேர் சொற்களை கொண்ட சமஸ்கிருதம் அவருக்கு எளிதில் புரிந்துபோனது.

அவருடைய ஆழமான ஆய்விற்கு பிறகு, 1835 ல் “இந்தியாவில் கல்வி” எனும் அவருடைய குறிப்புக்களை வெளியிட்டார். இந்த
Minutes  on Indian Education எனும் உரை, பிறகு Macaulay's Minutes என்று பிரசித்தி பெற்றது.

அதில் மெக்காலே சொன்னது என்னவென்றால்?

1. சம்ஸ்கிருத நூல்களில் இருக்கும் குறிப்புகளை அனைத்தையும் ஒன்று திரட்டிப்பார்த்தாலும்,
அவை பிரிட்டிஷ் ஆரம்ப கல்வி நூல்களை விட குறைவான தகவலே கொண்டுள்ளன.

2. இந்தியாவில் இது வரை சமஸ்கிருதத்திலும் அரபிக்கிலும் கற்பிக்கப்பட்டு வந்த பாடங்கள் அறிவியலுக்கு உகந்ததாக இல்லை

3. இந்தியர்கள் இதனாலேயே பிற்போக்கான, காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள்

4. அதனால் இந்திய மொழிகளில் பாடம் நடத்துவது வீண் செலவு.  அது அனைவருக்கும் போய் சேரவில்லை.

மெக்காலேவின் எண்ணம்
“எல்லோருக்கும் கல்வியில் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்,
இந்தியர்கள் அனைவரும் வெளித்தோற்றத்தில் பழுப்பு நிறத்தவராய் இருந்தாலும், எண்ணத்திலும் நாகரீகத்திலும், நேர்த்தியிலும், ரசனையிலும் பிரிட்டிஷாரை போல முற்போக்காய் இருக்க வேண்டும்,
சமத்துவ நிலையை அடைய வேண்டும்,
அதற்கு ஆகும் செலவை மனிதாபிமான அடிப்படையில் பிரிட்டிஷ் அரசே மேற்கொள்ள வேண்டும்”
என்றார்.

//சில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இது ஆபத்தான போக்காக தோன்றிற்று. இந்தியர்களை தமக்கு சமமான நாகரீக நிலைக்கு கொண்டு வர முயல்வது வேண்டாத வீண் செலவு என்றே அவர்கள் நினைத்தார்கள்//

ஆனால்
*தாமஸ் மெக்கலே பிரிட்டிஷ் வரலாற்று நூல் எழுதியவர் என்பதால் அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்.  மிக சிறந்த அறிஞர், நாணயமிக்கவர், மனிதாபிமானி, அப்பழுக்கற்ற அறச்சிந்தனையாளர் என்பதால் யாராலும் அவரை நேரடியாக எதிர்க்கமுடியவில்லை*

இதற்கு இடையில் 1833 ல் இந்தியாவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அது வரை சில பிரெசிடென்சிகளை மட்டுமே ஆண்டுவந்த கிழக்கிந்திய கம்பெனிக்கு
ஒட்டுமொத்த இந்திய நிலபரப்பை ஆளும் அதிகாரம் அளிக்கப்பட்டது.

லார்ட் வில்லியம் பெண்டிங் ஒருங்கிணைந்த இந்திய பிரதேசத்தின் முதல் கவர்னர் ஜெனரலான பொறுப்பேற்றார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு இயற்றிய முதல் சட்டம்:

பெங்கால் சதி தடை சட்டம்.

ஆங்கிலேயருக்கு இந்தியாவில் ரொம்பவே பிடிக்காத காட்டுமிராண்டுத்தனம் ஒன்று உண்டு என்றால் அது “சதி ஏறுதல்” எனும் மிகவும் கொடூரமான சம்பிரதாயம்.

இங்கிலாந்தில் கணவன் இறந்துவிட்டால்,
மனைவி விரும்பினால் மறுமணம்  செய்து கொள்ளலாம். அல்லது தனி பெண்ணாய் தன் பிள்ளை குட்டியை வளர்த்து ஆளாக்கி சுயமாய் வாழலாம்.

ஆனால் இந்தியாவிலோ கணவன் இறந்தால்,
அதற்கு மேல் பெண்ணுக்கு மறுமணம் செய்தாரில்லை. அந்த பெண்ணை சுயமாக வாழ விட்டாரும் இல்லை. அந்த பெண், கணவனின் சிதையில் தானும் குதித்து செத்தே ஆக வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருந்தார்கள்.

பிள்ளைகுட்டி இருக்கிற பெண், இப்படி பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு சதியில் குதிப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது?  
அந்தப் பெண் உயிரோடு இருந்தால் தானே அவள் குழந்தைகளுக்கு அனுகூலம்!  
அப்போது தானே அவள் மரபணுக்களுக்கு லாபம். அவள் கணவனுடைய மரபணுக்களுக்கும் லாபம்.

இதை விட்டுவிட்டு ஆரோக்கியமான ஓர் இளம் பெண் இறந்து போவதில் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும்??

ஆனால் லாபம் இருப்பதாகவே இந்தியர்கள் நம்புவிக்கப்பட்டார்கள்!
என்ன லாபம் தெரியுமா?
கணவன் அவனுடைய ஈரேழு ஜென்மங்களில் செய்த அத்தனை பாவமும் போய்,
அடுத்த ஜென்மத்தில் புனித க்ஷேத்ரமான காசியில், புனித நதியான கங்கையின் கரையில், புண்ணியாத்மாவான பிராமணனாக பிறக்கும் நல்வாய்ப்பை பெறுவான்.
அதனால் தன் கணவனுக்கு இந்த பாக்கியம் கிடைக்க வேண்டி கற்பில் சிறந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது அவசியம்!!

அந்த பெண்ணுக்கு வலிக்குமே?
ஆங்! உண்மையான கற்புக்கரசிக்கு வலிக்காது! எல்லாருக்கும் கிடைக்குமா இந்த பாக்கியம்!  அதுக்கெல்லாம் கொடுப்பனை வேண்டும்!....
என்று சொல்லி,
அழகு போட்டி என்று சொல்லி பெண்களை அரைநிர்வாணமாய் நிற்க வைத்து ஆண்கள் கண்களாலேயே வேட்டையாடுவது போல, கற்புக்கரசிக்கான போட்டி- கற்புள்ளவளுக்கு வலிக்காது என்று கதைகட்டி விட்டார்கள் கருட புராணம் எழுதிய பிராமணர்கள்.

இந்த கதைகளை எல்லாம் இந்தியாவில் படிப்பறிவில்லாத முட்டாள்கள் நம்பி, ஷத்திரிய பெண்களையும், வைஷிய பெண்களையும் மானாவாரியாக உடன்கட்டை ஏற்றி கொன்றுவிட்டார்கள்!

ஆனால் சூத்திர பெண்கள் அதிகமாக உடன்கட்டை ஏறவில்லை. காரணம் சூத்திர பெண்கள் வேலைக்கு போனார்கள். அவர்கள் ஊதியம் ஈட்டினார்கள்.
உழவு, நெசவு, கொசவு, பூ தொடுத்தல், அரண்மனையில் வேலை செய்வது என்று சூத்திர பெண்கள் குடும்பத்திற்கு தங்கள் வருவாயை கொண்டு வந்ததால், அவர்களை யாரும் உடன்கட்டை ஏற்ற தயாராக இல்லை.

பிராமண, ஷத்திரிய, வைஷிய பெண்கள் வீட்டு வாசற்படியை தாண்டாமல், பொருளாதாரத்தில் பங்கே எடுக்காமல் இருந்ததால், அவர்களுக்கு சமூக மதிப்பு இல்லை. அதனால் அந்த பெண் சதி ஏறி செத்தால், அவளுடைய பிள்ளைகளை தவிற வேறு யாருக்கும் எந்த இழப்பும் தெரிந்திருக்கவில்லை.

இந்தியர்கள் இந்த கருட புராண பொய்களை நம்பி இப்படி இளம் பெண்களை கொல்வதை பார்த்த ஆங்கிலேயருக்கு அறச்சீற்றம் பீறிட்டது.
அவர்களுக்கு கங்கை புனித நதி இல்லை,
காசி புனித தளம் இல்லை,
ஈரேழு ஜென்மம் எனும் நம்பிக்கை இல்லை.
பிராமணர் உயர்ந்தவர் என்றோ,
பிராமணருக்கு தக்‌ஷனை கொடுத்தால் தான் புண்ணியம் என்றோ அவர்கள் நம்பவில்லை.

//பிராமணர் எழுதிய சமஸ்கிருத நூல்கள் பலதை அவர்கள் படித்தார்கள். அந்த நூல்களில் இருந்த அப்பட்டமான சுயநலமும், தந்திரமும், ஏமாற்றுத்தனமும் அவர்களுக்கு அருவருப்பாக இருந்தது//

இந்த சமஸ்கிருதம் வளர்க்க நாம் வேறு இருபது ஆண்டுகளாக மானியம் வழங்கி ஏமாந்திருக்கிறோமே என்கிற காட்டம்!

சதியை தடை செய்யும் சட்டத்தை இயற்றிய கையோடு, லார்ட் மெக்கலேவின் அறிவுரையின் படி,
அடுத்த அதிரடி சட்டத்தை இயற்றினார் லார்ட் பெண்டிங்:

//இனி பிரிட்டிஷ் இந்தியா முழுக்க,
ஆங்கிலமே கல்விக்கான மொழி!
ஒரே ஒரு சாராருக்கான சமஸ்கிருதத்தை இனி ஊக்குவிப்பதில்லை, எனும் ஆங்கிலவழி கல்வி சட்டம் 1835 முதல் அமலானது//

இதனோடு, நீதி துறையின் அலுவல் மொழியாக அது வரை இருந்த அரபிக்கை நீக்கி, ஆங்கிலத்தையே சட்ட துறையின் அலுவல் மொழியாக அறிவித்தார்.

குருகுலம், வேத பாட சாலை, மதார்சா எனும்
மத கல்விக்கு அதற்கு மேல் பிரிட்டிஷ் காசு
செல்வழிக்காமல், நேரடியாக பொதுமக்கள் பயன்பெறும் விதமாய், பிரிட்டிஷ் தரத்தோடு, பிரிட்டனில் இருக்கும் அதே பாட திட்டத்தோடு இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்தார்கள்.

ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், அறம், உடல் பயிற்சி என்று சர்வதேச தரம் வாய்ந்த கல்வி இந்தியர்களுக்கு இலவசமாய் கிடைக்க ஆரம்பித்தது.

1835 ல் கல்கத்தாவில் ஒரு மருத்துவ கல்லூரி,
அடுத்த ஆண்டே கல்கத்தாவில் பொது நூலகம்,
1847ல் ரூர்கியில் இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி.
1848டில் கல்கத்தாவில் பெண்களுக்கான பிரத்தியேக தனிப்பள்ளி

1835 முதல் ஆங்கில பள்ளிகளில் கற்றுந்தேர்ந்த மாணவர் கல்லூரிக்கு போக வேண்டுமே?
அதனால் 1858 ல் கல்கத்தா, சென்னை, மும்பாய் ஆகிய நகரங்களில் பல்கலைகழகங்கள் துவக்க பட்டன.....

//இரண்டாயிரம் ஆண்டுக்கால இடைவெளிக்கு பிறகு இந்தியர்களுக்கு கல்வி எனும் ஆயுதம் கிடைத்தது//

இப்போது சொல்லுங்கள்,
இத்தனைக்கும் காரணமான அந்த தாம்ஸ் பாபிங்டன் மெக்காலே ஹீரோவா வில்லனா?”
Lord Macaulay, சரசுவதி & Statistics*

நவராத்திரி விழா முடிவில் சரசுவதி பூசையும் சேர்த்து கொண்டாடப்படும். எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் மிகவும் பக்தியுடன்  கல்விக்கான கடவுள் என்று குறிப்பிட்டு சரசுவதியை கும்பிடுவார்கள். இந்த வழிபாடுகளில்  முதன்மையான பங்கு வகிப்பவர்கள் பெண்கள்.

ஆம்
சரசுவதி கல்விக்கடவுள்.
அதிலும் பெண் கடவுள்.
இதுவெல்லாம் புராணங்கள் நமக்கு கூறும் செய்திகள்.

கல்விக்கடவுள் பெண். எனவே கல்வியைக் கற்பித்தலில் பெண்களுக்கு முன்னுரிமை தந்து அவர்களின் சமூக மேம்பாட்டிற்கு துணை நிற்க வேண்டியவர் சரசுவதி.

ஆண்களுக்கும் கல்வி என்றாலும், பெண் கடவுள் கல்விக்கு தலைமை ஏற்பதால், பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது நியாயமே என்று எண்ணுவது இயல்பு.

வரலாறு தரும் Statistics நமக்கு சொல்லும் உண்மை என்ன?

1881ல்  

இந்தியர்களின் எழுத்தறிவு 4.32%.  
ஆண்கள் மட்டும் 8.10%.
பெண்கள் வெறும் 0.35%.  

2011ல்  

இந்தியர்களின் எழுத்தறிவு 74.04 %  
ஆண்கள் 82.14 %   
பெண்கள்  65.46%.

அதாவது கல்விக்கடவுளாக பெண்ணே இருக்கும் நாட்டில் 1881 வரை ஒரு விழுக்காடு பெண்கள் கூட படிக்க வில்லை.

ஒட்டுமொத்தமாகப் படித்தவர்களே 4.32% தான்

இதையெல்லாம் கல்விக்கடவுள் சரசுவதி ஆய்வு செய்து சீர் செய்தாரா என்றால் இல்லை.

ஆனால் இப்போதோ எழுபது, எண்பது, அறுபது என்ற நிலை.

இதற்கு காரணம் யார்?

Lord Thomas Babington Macaulay

WhatsApp வந்த காலத்தில்
அவர் நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகம்.

இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையை சிதைத்து, வெள்ளைக்காரனுக்கு பியூன் வேலைப்பார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன் என்று தான் பல Forward Messages சுற்றியது.

யாரிந்த மெக்காலே என்ற தேடலும் அங்கிருந்து தொடங்கியது தான்.

Macaulay இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அந்தக் காலத்திலேயே நிறவேற்றுமைக்கு எதிராக குரல் எழுப்பியவர்.

இந்தியாவிற்கு வந்தபோதும் அதே செக்யூலரிசத்தை இங்கும் பரப்பியவர்.

அது வரை இந்தியாவில் கல்வி என்றால்:
1) வேத பாட சாலை
2) இஸ்லாமிய மதராசா
3) கிறுஸ்துவ மிஷினரி
தந்தால் மட்டுமே உண்டு.

இந்த மூன்றும் வெறும் மதக்கல்வியை மட்டுமே கற்பித்தவை. இதற்கு இங்கிலாந்து அரசு செலவு செய்வது பொது மக்களுக்கு போய் சேரவில்லை. வெறும் மூடநம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது...என்று முதன் முதலில், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல், தாய்மொழி என்கிற ஐந்துவித பாடங்களை உள்ளடக்கிய பொதுக் கல்வியை திட்டமாக கொண்டு வந்தவர் மெக்காலே.

♦️ கல்வி ஆங்கிலேயர்களால் பரவலாக்கப்பட்ட பிறகே

♦️ அவரவர் தாய் மொழியிலும் கல்வி கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டப் பிறகே

♦️ கல்வி நிலையங்கள் அவரவர் இருப்பிடம் அருகில் அமைந்த பிறகே

இந்தியர்கள் படித்தார்கள்.

இதற்கு அடுத்து அவர் எடுத்துக்கொண்ட பிராஜெக்ட் இன்னும் சிறப்பானது.

அது வரை இஸ்லாமியருக்கு ஷரியா சட்டம், இந்துக்களுக்கு மனுஸ்மிருதி என்றிருந்த சட்டத்தை, அனைவருக்குமான “இந்தியன் பீனல் கோடு” என்று மாற்றி IPC யை கொண்டு வந்தவர் இதே லார்ட் மெக்கலே தான்.

அந்த Lord Macaulay அவர்கள்

அவர் திருமணம் ஆகாதவர். அவருக்கு Genetic சந்ததியினர் இல்லை.

நாம எல்லாரும், குறிப்பா இந்தியப் பெண்கள் அவருடைய Memetic வாரிசுகள்!

Friday, December 24, 2021

சீமான் மாமனார் காளிமுத்து வேளாண் ஊழல்!

 ஜெயா  போலவே ஊழல் குற்றவாளி சீமான் மாமனார் காளிமுத்து


வேளாண் ஊழல்!


எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், வேளாண்துறை அமைச்சராக இருந்தார் காளிமுத்து. வேளாண்துறை நிதியை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வதாகவும், அதற்குக் கைம்மாறாக அவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமெனவும் ரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, 1982-83-ம் ஆண்டில் வேளாண்துறை நிதி வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டது.


காளிமுத்துவின் சிபாரிசில், அவரது நண்பர்கள் ராபின் மெயின், சாகுல் அமீது, சோமசுந்தரம் உள்ளிட்ட சிலர் ஒன்றரை முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் பெற்றனர். அந்தப் பணத்தில் 15 லாரிகள் மற்றும் டிராக்டர்கள் வாங்கியதாகவும் வங்கியில் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் தவணைத் தொகையை முறையாகச் செலுத்தவில்லை. எனவே, அவர்கள் வாங்கிய வாகனங்களைப் பறிமுதல் செய்ய முயன்ற வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடன் பெற்றவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பது உறுதிசெய்யப்பட, சி.பி.ஐ-யிடம் புகார் செய்யப்பட்டது. 


1984-ம் ஆண்டு இந்த வேளாண் ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காளிமுத்து மற்றும் அவரின் நண்பர்கள், அதிகாரிகள் உட்பட 32 பேர் இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். காளிமுத்துவின் நண்பர் ராபின் மெயின் சி.பி.ஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட, தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. நாளிதழ் தலைப்புகளைத் தினமும் அதுவே ஆக்கிரமித்தது.


இந்த ஊழல் குற்றச்சாட்டுகளைவிடவும் பெரிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. `ஜெயலலிதாதான் (அப்போதைய அ.தி.மு.க கொள்ளைப் பரப்புச் செயலாளர்), இந்த ஊழல் புகாரை பரப்பியிருக்கிறார். இதன் பின்னணியில் இந்திரா காங்கிரஸ் வேலை செய்கிறது' என பகீர் புகார் ஒன்றை வெளியிட்டார் காளிமுத்து. இந்த வேளாண் ஊழல் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஜி.ஆர். மீண்டும் அவரது அரசு தொடர்ந்த நிலையில், இந்த ஊழல் புகார் அ.தி.மு.க ஆட்சிக்குத் தலைவலியாகவே இருந்தது. இந்த ஊழல் குறித்து எம்.ஜி.ஆர் புலம்பியதும் உண்டு. இந்நிலையில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா அணியில் சேர்ந்தார் காளிமுத்து. பிறகு, தி.மு.க-வில் சேர்ந்தவர் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார். 2001-ம் ஆண்டு தன் ஆட்சிக்காலத்தில் காளிமுத்துவை, சபாநாயகராக ஆக்கினார் ஜெயலலிதா. 


காலங்கள் ஓடினாலும், இவ்வழக்கு `விடாது கறுப்'பாக தொடர்ந்தது. 2005-ம் ஆண்டு இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காளிமுத்துவுக்கு சம்மன் அனுப்பியது உச்ச நீதிமன்றம். `காளிமுத்து பதவி விலகவேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப, `ராஜினாமா செய்யத் தேவையில்லை' என்றார் ஜெயலலிதா. இவ்வழக்கினால் உடல்நிலைப் பிரச்னைகளை எதிர்கொண்ட காளிமுத்து, 2006-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். 


32 ஆண்டுகள் நடைபெற்ற இவ்வழக்கில், 2016-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. அப்போது, காளிமுத்து உட்பட இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட 16 பேர் உயிருடன் இல்லை. மற்ற 16 பேரில், 5 பேருக்கு மட்டும் சிறைத்தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.


இதில் ஹய்லைட்டே அவர் ஊழல் செய்தது விவசாய துறையில் ( அண்னனின் சின்னம் 😃)

Thursday, December 23, 2021

கஜினி முகமதுவை சோமநாதபுரம் கோயிலைக் கொள்ளையடிக்க அழைத்து வந்தது யார்?

 கஜினி முகமதுவை சோமநாதபுரம் கோயிலைக் கொள்ளையடிக்க அழைத்து வந்தது யார்?

ஆனால் 17 முறை படையெடுத்து 18 வது முறை கொள்ளையடித்து சென்றது எப்படி என்பதைத் தான் யோசிக்கவேண்டும்.

பெயர் முகமதுதான்.கஜினி என்ற பகுதியை ஆண்டதால் கஜினி முகம்மது.இந்தப்பதிவில் சொல்லப்போகும் கருத்துகள் எனது கருத்தல்ல.யார் இதைச் சொன்னார்கள் என்று இறுதியாகச் சொல்கிறேன்.அப்பொழுது மிகவும் வியப்பில் ஆழ்ந்துவிடுவீர்கள்.

"இன்றைய குஜராத் அந்தக்காலத்தில் ஆறு அரசர்களால் ஆளப்பட்ட பகுதி.இங்குள்ள சோமநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது.அதற்குக் காரணம் இந்தக்கோவிலின் லிங்கம் எந்தப்பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியதுதான்.

இதன் சிறப்புக்காரணமாக ஏராளமான பக்தர்களை அந்தக்கோவில் ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை.எனவே சொல்லமுடியாத அளவு செல்வம் கோவிலில் பக்தர்களால் குவிந்தது.

குஜராத்தின் ஆறு அரசர்களும் அந்தக்கோவிலின் போஷகர்களாக இருந்தனர்.கோவிலின்
அர்ச்சகர்கள் எத்தனைபேர் தெரியுமா?11,000 பேர்.

எந்நேரமும் பரபரப்பாக இருந்த இந்தக்கோவிலில் கோடிக்கணக்கான சொத்தும் சேர்ந்து இருந்தது

கஜினி படையெடுத்து வந்தபோதெல்லாம் குஜராத்தின் ஆறு அரசர்களும் ஒன்றுசேர்ந்து அவனைத் தடுத்து தோற்று ஓடச்செய்தனர்.கி.பி 997 முதல் 1030 வரை 33 ஆண்டுகாலம் கஜினி தன் முயற்சியை கைவிடவில்லை.
பரீட்சையில் தோற்கும் மாணவர்களுக்கு கஜினியே இன்றும் உந்துசக்தியாக இருக்கிறார்.

பதினெட்டாவது முறையாக 25,000 போர்வீரர்களுடன் சோமநாதபுரத்திலிருந்து எட்டு மைல் தூரம் முகாம்போட்டு
காத்திருந்தான் கஜினி...

கஜினி படையெடுத்து வந்ததை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரசர்கள் ஆறுபேரும் கோவிலின் தலைமை அர்ச்சகரிடம்
போய் ஒரு கோரிக்கைவைத்தனர்.நம்மிடம் நாலரை லட்சம் வீரர்கள் உள்ளனர்.கஜினியிடம் 25,000 பேர் மட்டுமே உள்ளனர்.எளிதில் விரட்டிவிடலாம் என்று அனுமதி கேட்டனர்.ஆனால் தலைமை அர்ச்சகர் அதற்கு உடன்படவில்லை.

அர்ச்சகர் என்றால் சும்மாவா?அரசனுக்கும் மேலே உள்ளவன்.அர்ச்சகர் சொல்கிறார் கேளுங்கள்.மிலேச்சன் படையெடுத்து வருவதை கணேசனும்,காளியும் கனவில் வந்து தன்னிடம் சொன்னதாகவும்,ஆனால் விசேஷமாய் ஹோமங்களும்,அன்னதானம்,சுவர்ணதானம்,கன்னிகாதானம்,ஆகியவை நடத்த வேண்டுமென கூறியதாகவும் சொல்லி,அரசர்களிடம் அதைச்செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.ஏன் இப்படிச் செய்தார்?

இந்த அரசர்களுக்கு வரவர புராணங்களிலும், பிராமனங் களிலும்,நம்பிக்கை குறைந்து வருவதால்தான் இப்படிப் பட்ட இடையூறுகள் தொடர்ந்து வருவதாக அர்ச்சகர் அரசர்களைக் கடிந்துகொண்டார்.இனிமேலாவது பிராமணர்களின் அறிவுரை கேட்டு நடக்கும்படியும்,யுத்தத்திற்கு ஆகும் செலவை பிராமணர்களுக்கு தானம் கொடுத்துவிடுமாறுகட்டளையிட்டு,யாகசாலை நிறுவும் பணியில் ஈடுபட்டார்.

தனது ஒற்றர்கள் செய்திக்காக கஜினி காத்திருக்க, சோமநாதபுரத்திலோ 1008 யாகசாலைகள் நிறுவி,குழிகளில் நெருப்பு வளர்த்து,நெய்,கோதுமை,சந்தனம் முதலானவை எரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.பல நூறுபேர் மிலேச்சனிடம் இருந்து காப்பாற்றவேண்டி கழுத்தளவு தண்ணீரில் நின்று தவம் செய்தார்கள்.போர் வீரர்கள் நமக்கு என்ன என்று தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
கஜினிக்கு இந்தத் தகவல் போய் சேர்ந்தது.

யாகசாலைகளில் நெருப்பு எரிவதையும்,ஆயிரக்கணக்கான குழிகளில் புகைவருவதையும்,நூற்றுக்கணக்கான தலைகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்த கஜினியின் ஒற்றர்கள் பயந்து போனார்கள்.அவர்களுக்கு இது ஏன் என்று புரியவில்லை.இதை கஜினியிடம் சொன்னார்கள்.

கஜினி தனது மதகுருவான மவுல்லியிடம் ஆலோசித்தான்.
மவுல்லி உடனே இது காபரினுடைய ஜின்னுகளின் (சாத்தான்கள்)வேலை என்று சொல்லி,நான் குரான் வாசித்தால் ஜின்னுகள் ஓடிவிடும் நீங்கள் படையை நகர்த்துங்கள் என்று கட்டளையிட்டார்.

கஜினியின் படைகள் வரும்சேதி தெரிந்ததும்,11000 புரோகிதர்களில் தலைமை அர்ச்சகர் உட்பட எண்ணூறு புரோகிதர்கள் தவிர மற்ற புரோகிதர்களும்,மேலும் பலரும்
அகப்பட்டதை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தலைமை அர்ச்சகர் தமது முத்துப்பல்லக்கை நன்றாகச் சிங்காரித்து சீடர்களையும்,கோவில் தாசிகளையும் கஜினியை எதிர்கொண்டு வரவேற்று அழைத்துவர அனுப்பிவைத்தார்.

முத்துப்பல்லக்கை தனது ஒட்டகத்தின் மீது போடவைத்து, அதன் மீது ஏறி அமர்ந்து கஜினி கம்பீரமாக சோமநாதர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தான்.கோவிலின் உள்ளே கஜினி அமர சிங்காதனம் போடப்பட்டிருந்தது.அந்த சிங்காதனத்தின் பெயர் வியாசபீடம் என்பதாகும்.இந்த சிங்காதனத்தின் அன்றைய மதிப்பு 50 லட்சம் ரூபாய் ஆகும்.

கஜினி கோவிலில் போடப்பட்ட வியாசபீடத்தில் கம்பீரமாய் அமர, தலைமை அர்ச்சகர் கஜினியிடம் "இங்கு போலி ராஜாக்கள் தங்களைப்பற்றி என்னென்னவோ சொன்னார்கள்.ஆனால் நான் அவர்களை எல்லாம் அடக்கி வைத்தேன்"என்று கூறிவிட்டு,விஷ்ணு அல்லாதவன் அரசனாய் இருக்கமுடியாது.(நா விஷ்ணு ப்ருத்வீ பதி) என்று வேதங்கள் சொல்கிறது.

எனவே விஷ்ணுவின் அவதாரமான தங்களின் நேர்மையான ஆட்சி எங்களை ரட்சிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துவிட்டு,எங்களுக்கு எந்த இடையூறும் செய்ய வேண்டாம் என்று கூறி 3 கோடி ரூபாய் காணிக்கை தருவதாகக் கூறினார்.

யாரையும் ரட்சிக்க நான் வரவில்லை.சொத்துக்கள் எங்கே இருக்கிறது காட்டுங்கள் என்று கஜினி கூற,அர்ச்சகர் கொண்டு வந்து கொடுக்க,அதை கணக்கிட்டுப் பார்த்தால் கேள்விபட்டதற்க்கும்,கிடைத்த சொத்திற்கும் சம்பந்தமே இல்லை.

அர்ச்சகரே என்னிடம் இந்த வேலை ஆகாது என்று கஜினி கூறிவிட்டு,அர்ச்சகரின் இரு கைகளிலும் எண்ணெய்யால் தோய்க்கப்பட்ட துணிகளைச் சுற்றி கொளுத்துமாறு கட்டளையிட்டான்.மிரண்டு போன பார்ப்பான் சொத்து இருந்த எல்லா இடத்தையும் காட்டிக்கொடுக்கிறார்.

தலைமைகுருவின் தலைமையில் கோவில் இடிக்கப் படுகிறது.இடிக்க இடிக்க செல்வங்கள் கொட்டிக்கொண்டே இருக்கிறது.கோவில் சாயத்துவங்க,அதுவரை காந்தக்கற்களின் உதவியோடு அந்தரத்தில் நின்ற லிங்கமும் விழுந்து நொறுங்குகிறது.

நொறுங்கி விழுந்த லிங்கத்தின் உள்ளிருந்தும் நவரத்தினங்கள் கொட்ட வாரிவாரி அள்ளிப்போட்டுக் கொண்டு 800 புரோகிதர்கள்,5000 ஆண்கள்,6000 பெண்களை கைதிகளாகப் பிடித்துக்கொண்டு கஜினி சென்றான்.

இன்னும் இருக்கு....
இவ்வளவு சுவாரஸ்யமாக நடந்த சம்பவங்களை சொல்லியது யார்?என்ன ஆதாரம்?அப்புடின்னு கேப்பீங்க.

இந்த விபரங்கள் சுவையான கதைபோல தோன்றலாம்.அதீதமான கற்பனை என்றும் நினைக்கலாம்.
குஜராத்தி,உருது மொழியிலுள்ள நூல்களில் தேடி எடுத்து
நூலாக எழுதியவர் வேறு யாருமல்ல.வேதங்களை நோக்கி திரும்புமாறு இந்திய மக்களை அறைகூவி அழைத்த, ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதிதான்.

சுவாமி தயானந்த சரஸ்வதி குஜராத் மாநிலம் டன்காரா எனுமிடத்தில் பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர்.1875 ல் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்.1883 அக்டோபர் 30 இறந்தார்

அவர் இந்தியா முழுமையும் சுற்றி மதுராபுரியில் எழுதி வெளியிட்ட
"சத்தியார்த்தப் பிரகாசம்" என்ற நூலில் 11 வது அத்தியாயத்தில் கஜினி படையெடுப்பு குறித்து விலாவாரியாக எழுதியுள்ளார்.இதுவரை தெரிவித்தக் கருத்துகள் அவர் நூலின் விளக்கம்தான்.இப்போது இதிலிருந்து எளிதாக புரிந்துகொள்வது இதுதான்.

1.ஆறு அரசர்களிடமும் இருந்து பார்ப்பனர்கள் கோவிலைக் கைப்பற்ற சதி செய்துள்ளனர்.

2.கஜினியை உள்ளே கொண்டுவந்து அரசர்களை விரட்டிவிட்டு, கஜினிக்கு தொகை கொடுத்து ஒதுக்கிவிடலாம் என்ற அவாள் பருப்பு அங்கு வேகவில்லை.

3.கோவிலை இஸ்லாமியரான கஜினி இடிக்கவில்லை.பார்ப்பனர்களே இடித்தது தெளிவாகிறது.

4.விஞ்ஞானம் சார்ந்த நுட்பத்தைப் பயன்படுத்தி,லிங்கம் அந்தரங்கத்தில் தொங்குவதாய் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

5.இந்துக்களை பார்ப்பனர்கள் ஏமாற்றிப் பிழைப்புநடத்துகிறார்கள் என்ற நிகழ்வு வெளிச்சத்திற்கு வருகிறது.

மேலும் நீங்கள் நிரப்பிக்கொள்ளலாம்.

சொன்னது சுவாமி தயானந்த சரஸ்வதி என்பதால் அரை டவுசர்கள் அங்கு போய் தாக்குதல் நடத்தலாம்.இஸ்லாமியர்கள் மேல் பலி போடுவது நியாயம் அல்ல.

கஜினி மற்றும் முகலாய மன்னர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் இந்துக்களை வதைப்பதே அவர்கள் வேலை என்றும் RSS பிரச்சாரம் செய்கிறது.ஏன் இந்தப் பிரச்சாரம்? உண்மை என்ன?

முகலாயச்சக்கரவர்த்திகளுக்கு முன்னால் பல முஸ்லிம் ஆட்சியாளர்கள் இங்கு ஆண்டுள்ளனர்.கி.பி.1192 ல் முகமது கோரியும்,கி.பி 1206ல் குதுப்-உத்-தீனும்,கி.பி.1296 ல் அலாவுதீன் கில்ஜியும்,கி.பி.1325 ல் முகமது -பின்-துக்ளக்கும்,கி.பி.1414 முதல் கி.பி.1450 வரை டெல்லியில் சையதுகளின் ஆட்சியும்,கி.பி 1451ல் ஆப்கானிஸ்தான் வம்சத்தின் பஹ்லுல் லோடியும்,அதைத் தொடர்ந்து லோடி வம்ச ஆட்சியை பானிபட் போரில் வீழ்த்தி கி.பி 1526 ல் பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார்,

இவ்வளவு காலப்பகுதியில் ஆட்சி புரிந்த முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாத்தை பரப்புவதற்கான வேலையை கடுமையாகச் செய்திருந்தால் இங்கு இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக இருந்திருக்க மாட்டார்கள்.முஸ்லிம் மன்னர்கள் அதிக காலம் ஆண்டாலும்,பெரும்பாலான மக்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பதை மறைக்க முடியுமா?

அவர்களின் நோக்கம் மதம் பரப்புவதல்ல.
சாதியை ஒழிப்பதல்ல
அதை வைத்து அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதே
ஆளும் வர்க்க அரசியலே.

மன்னர்களுக்கு அதிகாரத்தை நிலைநிறுத்த அனைவரும் தேவைப்பட்டார்கள்.RSS சும் இந்து மதத்தை வளர்ப்பதையா நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்லாமியரைப் பகைவராகக் காட்டி பார்ப்பனியத்தின் செல்வாக்கை தக்கவைப்பதே நோக்கம் என்பதை அப்பாவி இந்து மக்கள் புரியவேண்டும்.

இருப்பினும் இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களின் பால் எத்தகைய அணுகுமுறை கொண்டிருந்தார்கள் என்பதற்கு பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு 11.1.1529 ல் எழுதிவைத்த உயில் மூலம் அறிவோம்.

இந்துக்கள் குறித்த அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என பாபர் தனது மகன் ஹிமாயூனுக்கு 11--1--1529 ல் எழுதிவைத்த உயில் இதுதான்.

அருமை மகனே! பல வகையான மதங்களைப் பின்பற்றும் மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் அல்லா உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி சொல்லவேண்டும்.ஆகவே.

உன் குடிமக்களின் மத சம்பந்தமான மென்மையான உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளித்து வரவேண்டும்.

மற்ற சமூகத்தின் வழிபாட்டுத்தளங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தலாகாது.

அடக்குமுறை எனும் வாளைவிட இந்துக்களின் அன்பு மற்றும் நன்றிக்கடன் என்ற தூண் மூலம் இஸ்லாமைப் பரப்பு.

ஷியா மற்றும் சன்னிப் பிரிவினரிடையே நிலவும் உட்பூசலை அலட்சியம் செய்.

குடிமக்களிடம் காணப்படும் வேறுபாடுகளை பருவ காலங்களுக்கு இடையேயான வித்தியாசம் போல் கருதி ஒதுக்கிவிடு.

இப்படிப்பட்ட அறிவுரைகளைக் கூறிய பாபரின் பேரன் அக்பர் இன்னும் ஒருபடி மேலேபோய் மதவேறுபாடுகளற்ற ஒரு புதிய மார்க்கத்தையே "தீன் இலாஹி"என்ற பெயரில் முன் வைத்தார்.

இப்படிப்பட்ட முகலாய அரசர்கள் மீது அவதூறுப் பிரச்சாரத்தை RSS-BJP செய்வதன் நோக்கம் அவதூறுகளின் பால் உண்மையா,பொய்யா என்ற முடிவுக்கு வருவதல்ல.மாறாக..

இப்போது வாழ்ந்துவரும் இஸ்லாமியர்கள்மீது பகையை வளர்த்து,அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அருவருப்பான சிந்தனை தவிர வேறொன்றுமில்லை.

பார்ப்பனியமும் மனுவும் உருவாக்கிய கேடுகெட்ட கொள்கைகளுக்கு எதிராக இந்திய மண்ணில் ஏராளமான இந்து சமய சீர்திருத்த வாதிகள் உருவானார்கள்
சுவாமி தயானந்த சரஸ்வதி
சுவாமி விவேகானந்தர்
இராஜாராம் மோகன்ராய்
தேவேந்திரநாத் தாகூர்
கேசப் சந்திர சென்
லாலா ஹன்ஸ் ராஜ்
நாராயண குரு
அய்யன் காளி
குருபிரசாத்
குருநானக்
குருசாயி
ஐயா வைகுண்டர்
ராமானுஜர்
இன்னும் இன்னுமாய் பட்டியல் நீளும்.

ஒரே கேள்வி தான்
இத்தனை இந்து சமய சீர்திருத்த வாதிகள்
போராடினார்களே எதற்கு?

பார்ப்பனியம் உருவாக்கிய சீரழிவுகளுக்கு எதிராகத் தானே?

1925 ல் சித்பவன பார்ப்பனர்களால் நாக்பூரில் தொடங்கப்பட்ட ஆர் எஸ் எஸ் இந்து சமூகத்தில் செய்த சீர்திருத்தம் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
கலவரம் செய்ததைத் தவிர வேறென்ன?

Wednesday, December 22, 2021

சண்முகநாதன்

 ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் தமிழகத்தை ஆண்டுக்கொண்டு இருந்த போது திராவிட முன்னேற்ற தலைவர்கள் மேடையில் பேசுவதை குறிப்பிடுப்பதற்கு உளவுத்துறை போலீசார் மக்களோடு மக்களாக அமர்ந்து குறிப்பிடுப்பார்கள்!

ஏதேனும் வன்முறை தூண்டும் வகையில் பேசினால் வழக்கு தொடுக்க எடுக்கப்படும் குறிப்பு அது!

ஒரு தரம் பேராசிரியர் அன்பழகனும்,கலைஞர் அவர்களும்  ஒரு மேடையில் பேசியதை வைத்து அவர்கள் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது!

"நாம என்ன அப்படி தவறாக பேசினோம்"என யோசித்த கலைஞர் எதற்காக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது,நாங்கள் பேசியது என்ன என்பதை போலீசாரிடம் வாங்கி பார்த்து இருக்கிறார்!

அவரும்,அன்பழகனும் பேசிய வார்த்தைகள் ஒரு வரிகள் விடாமல் அழகான கையெழுத்துடன் எழுதப்பட்டு வழக்கு பதியப்பட்டு இருக்கிறது!

அதை பார்த்த கலைஞர் அசந்து போனார்!கோர்ட்டிலும் தாங்கள் பேசியது உண்மைதான் என ஒத்துக்கொண்டார்!

இந்த குறிப்பெடுத்த காவலர் யார் என விசாரிக்கிறார்!அவர் பெயர் சண்முக நாதன்!

பின்பு அறிஞர் அண்ணா அமைச்சரவையில் அமைச்சர் ஆனபோது தனக்கு உதவியாளராக சண்முக நாதனை வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு,அவரை அழைக்க ஆள் அனுப்புகிறார்!

பயந்து கொண்டே தன்னை காணவந்த சண்முகநாதனிடம் விசயத்தை சொன்னதும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்!

 

கிட்டதட்ட ஐம்பது ஆண்டு காலம்,கலைஞர் நிழல் போல் பயணித்தவர் சண்முக நாதன்!

Friday, December 17, 2021

முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர் அவுரங்கசீப்

 அவுரங்கசீப் பற்றி எதுவும் தெரியாமல் வரலாற்றை புரட்டும் சங்கிக்கும்பல் கண்ணில் படும் வரை ஷேர் செய்யுங்கள்.. 


முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர் அவுரங்கசீப், நவ., 3, 1618ல் மும்பையிலுள்ள, 'டாஹோட்' என்ற இடத்தில் பிறந்தார். 'சக்ரவர்த்தி' என்ற சொல்லுக்கு முற்றிலும் பொருத்தமானவர் இவர்.


அவுரங்கசீப் மிகவும் பொல்லாதவர். தந்தையே சிறை வைத்தவர்; மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர்; மதம் மாற்றியவர் என்று தான் வரலாறு சொல்கிறது. ஆனால், அவரது உண்மை முகமே வேறு.

தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி, அதன்படி வாழ்ந்தவர்; மிகவும் நேர்மையானவர்.

ஷாஜஹானின் கடைசி காலத்தில், அவுரங்கசீப் அவரை கவுரவமான அரண்மனை சிறையில் வைத்திருந்தாரே தவிர, கொடுமை படுத்தவில்லை.

ஷாஜஹானின் உடல், உரிய மரியாதையுடனே அடக்கம் செய்யப்பட்டது. அதுவும், தாஜ்மஹாலில், அவரது பிரியத்துக்குரிய மும்தாஜ் உடலுக்கு அருகிலேயே வைக்கப்பட்டது.


அவுரங்கசீப், 24 மணி நேரத்தில், மூன்று மணி நேரம் மட்டுமே உறங்குவார். வேலை தவிர, மீதமிருந்த ஓய்வு நேரங்களில் இஸ்லாமிய மார்க்க நூல்களை படிப்பதில் செலவிடுவார்; தரையில் தான் படுப்பார்; மாமிசம் உண்ணாதவர்.

அரசாங்க கஜானா பணம் மக்களுக்கு உரியது. அரச குடும்பத்தினர் செலவழிப்பதற்காக அல்ல என்பதில், மிகவும் உறுதியாக இருந்தார் அவுரங்கசீப். 


தன் சொந்த செலவுகளுக்காக, ஒருபோதும், அவர் கஜானாவை உபயோகித்ததில்லை.

எப்போதும் எளிமையான உடைகளையே அணிவார். ஆபரணங்களை அணியாதவர்; பொன், பொருள் மேல் ஆசையில்லாதவர். வெள்ளி, தங்க பாத்திரங்களை கூட உபயோகிக்க மாட்டார்.


பொதுவாக, மன்னர்கள் தங்கள் பிறந்த நாளில் தகதக உடையணிந்து, உடல் முழுவதும் ஜொலிஜொலிக்கும் நகைகள் அணிந்து மக்களுக்கு காட்சி கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருந்தனர். ஆனால், எளிமை விரும்பியான அவுரங்கசீப், தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களை எல்லாம் அனுமதிக்கவில்லை. அன்றைய தினத்தையும், சாதாரண தினமாகவே எடுத்து கொண்டார்.

அவுரங்கசீப்புக்கு குல்லா தைப்பதில் ஆர்வம் உண்டு. அதே போல, குர்-ஆனை தன் கைப்பட எழுதுவதில், அதீத விருப்பம் கொண்டவர். அந்த இரண்டையும் விற்று, கிடைக்கும் பணத்தில் தான், தனிப்பட்ட செலவுகளை பார்த்து கொண்டார்.


மதுவை, வெறுத்தவர். தன் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் மதுவை தடை செய்தார்; அதே போல கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடினார்; உல்லாச நிகழ்ச்சிகள் நடத்த கூடாதென்று உத்தரவிட்டார்; போதைப் பொருள்களையும் ஒழித்தார்.


அன்றைய காலகட்டத்தில், இறந்த கணவனின் சடலத்தை எரிக்கும்போதே, அதே நெருப்பில், மனைவியும் குதித்து, தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும், 'உடன் கட்டை' ஏறும் பழக்கம் இந்துக்களிடையே இருந்தது. குறிப்பாக, ராஜபுத்திரர்களிடையே அதிகமாக இருந்தது.

ஒருமுறை, போர்க்களத்தில் இறந்த ஒரு வீரனின் உடலை எரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவன் மனைவியை அந்த நெருப்பில் குதிக்க சொல்லி, சுற்றியிருந்தவர்கள் கட்டாயப்படுத்தினர்.

அங்கு வந்த அவுரங்கசீப், அந்த செயலை தடுத்தார். தங்கள் மத விஷயத்தில் தலையிடக்கூடாதென்று அங்கிருந்தவர்கள் வாதம் செய்தனர். ஆனால், அவுரங்கசீப் விடவில்லை.

'இது அநியாயம். இனி இத்தகைய கொடுமைகள் முகலாயப் பேரரசில் நடக்கக்கூடாது. இந்த சடங்கை தடை செய்கிறேன்...' என்று உத்தரவு பிறப்பித்தார். அதற்காக பல்வேறு பிரிவினரிடமிருந்து எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்த சட்டத்தை செயல்படுத்தினர்.


'நவுரோஸ்' என்ற பண்டிகையை அக்பர் உருவாக்கியிருந்தார். மிகவும் உல்லாசமான திருவிழா அது. வண்ணமயமான கொண்டாட்டங்கள் நிறைந்தது. அந்த திருவிழாவின் இறுதியில் பேரரசரின் எடைக்கு சமமான பொன், வைர ஆபரணங்களை மக்களுக்கு கொடுக்கும் வழக்கமிருந்தது.

வீணாக அரசாங்க பணத்தை கேளிக்கைகளுக்காக செலவழிக்க விரும்பாத அவுரங்கசீப், நவுரோஸ் பண்டிகையை தடை செய்தார்.

ஒரு பேரரசராக இருந்தாலும், மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். 


அவ்வளவு செலவு செய்து, தன் தந்தை, தாய்க்காக தாஜ்மஹால் கட்டியதையே விரும்பாதவர். ஏனெனில், தாஜ்மஹால் கட்டுவதற்கு மக்களிடமிருந்த பணமெல்லாம் உறிஞ்சப்பட்டது; இக்கட்டட வேலையில் மக்கள் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர்; உயிரிழப்புகளும் ஏற்பட்டன; அரசு கஜானா படுமோசமாகி போனது.

ஆனால், ஷாஜகானுக்கு மக்கள் முக்கியமாக தெரியவில்லை. தன் மனைவிக்காக கட்டும் கட்டடம் மட்டும் நினைவில் இருந்தது. 1632-ல் ஆரம்பித்த தாஜ்மஹாலின் கட்டடப் பணிகள், 1648ல் தான் நிறைவடைந்தன. தன்னுடைய அன்பு மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சந்தோஷத்தில், கண்ணீர் வடித்தார் ஷாஜஹான்.

எளிமை விரும்பியான அவுரங்கசீப்பின் கண்களுக்கு, தாஜ்மஹால், அழகாக தெரியவில்லை; துயரமாகவே தெரிந்தது.

அதனால், இன்னொரு கருஞ்சலவைக்கல் மாளிகை கட்டுவதற்காக, ஷாஜஹான் எடுத்த முயற்சிகளை தடுத்தார். 


இருப்பினும் சில முக்கியமான நினைவு சின்னங்களை கட்டினார் அவுரங்கசீப்.

லாகூரில், 'பாட்ஷாய் மஸ்ஜித்' என்ற மிகப்பெரிய மசூதியை கட்டினார். மெக்காவுக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய வெளிப்புற வழிபாட்டு தளத்தை கொண்டது இந்த மசூதி.

டில்லி செங்கோட்டை வளாகத்தில், மோடி மஸ்ஜித் என்ற சிறிய மசூதி ஒன்றையும் கட்டினார். லாகூர் கோட்டையை சுற்றி யிருக்கும், 13 நுழை வாயில்களில் ஒன்றான, ஆலம்கீர் என்ற பிரம்மாண்டமான கட்டடம் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டது தான்.


அவர் எழுதிய உயில்:

நான் இறந்த பின், எனக்கு நினைவு சின்னங்கள் எதுவும் கட்ட கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்க கூடாது. நான் குல்லாக்கள் தைத்து, விற்று சேர்ந்த பணம் கொஞ்சம் இருக்கிறது. அந்த பணத்தை பயன்படுத்தி என் இறுதி சடங்குகளை செய்யுங்கள்.

அந்த பணத்துக்கு மேல் செலவழிக்க கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்த வித ஆடம்பரமும் கூடாது. இது போக, திருக்குர்-ஆன் எழுதி, விற்று சேர்ந்த பணத்தை என் பையில் வைத்துள்ளேன். அது புனிதமான பணம். அதை ஏழை மக்களுக்கு தானமாக கொடுத்துவிடுங்கள். இவ்வாறு எழுதி இருந்தார்.


அஹ்மத் நகரில், 1707 மார்ச், 3ல் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில்படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

அவுரங்கசீப்பின் இரண்டாவது மகன் பகதூர் ஷா, அடுத்து ஆட்சியில் அமர்ந்தார். மிகப்பெரிய பேரரசைக் கவனிக்க அவருக்கு திறமையில்லை. அவுரங்கசீப் காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்றுக் கொண்டிருந்த மராட்டியர்கள், அவரது மறைவுக்குப் பின், கொஞ்சம் கொஞ்சமாக முகலாயர்களின் இடங்களை கைப்பற்ற ஆரம்பித்தனர். அதனால், முகலாயர்களின் ஆட்சி கலைந்தது.


எளிமையாகவும், நிர்வாகத்தில் கண்டிப்பாகவும் இருந்ததால் தான், அவுரங்கசீப்பால், முகலாயப் பேரரசை கட்டி காக்க முடிந்தது. அவை இல்லாததால் தான் அவருடைய வாரிசுகள் பேரரசை இழந்தனர்.

ஒரு மனிதரின் இன்னொரு பக்கம் இத்தனை இனிமையானதா என்று ரொம்ப ஆச்சர்யமா இருக்கு இல்ல.. யாரையும் மனிதர்களின் ஒரு முகத்தை மட்டும் பார்த்து அவர்களை எடை போடாதீங்க; அவர்களது இன்னொரு முகத்தையும் பாருங்க... சரியா!


- நன்றி Dinamalar

ஓளரங்கஜேப்பின் உண்மை வரலாறு

 மோடி அடிக்கடி மேற்கோள் காட்டும் ஓளரங்கஜேப்பின் உண்மை வரலாறு என்ன?


கேள்வி...

காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்தது அவ்ரங்கசீப்னு சொல்றாங்க உண்மையா ?


#இதுபற்றிய_வரலாறு_என்ன..?


அதிர்ச்சிகளின் அணிவகுப்புக்கு தயாராகுங்கள் சகோஸ்..!


அதிர்ச்சி 1


ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.


அதிர்ச்சி 2


மேலும், அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.


அதிர்ச்சி 3


அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் முகலாய படையில் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?


அதிர்ச்சி 4


இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.


அதிர்ச்சி 5


ஒளரங்கசீப் ஒரு முஸ்லிம் என்பதால், "உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு" என்னும் இஸ்லாமிய கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் கட்டாய மத மாற்றத்தை இவர் செயற்படுத்தவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும். 


அதிர்ச்சி 6


அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினார். "அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன்" என்று அந்த இந்து அரசியே சொன்னபோது... அதனை ஏற்றுக் கொள்ளாது மறுத்தவர் ஒளரங்கசீப்.

 


அதிர்ச்சி 8


தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது. 


அதிர்ச்சி 9


''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.


இனி, #காசி_கோயில்_பற்றிய_அதிர்ச்சியோ_அதிர்ச்சி 10

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து சிற்றசர்கள் மற்றும் தளபதிகள் வாரணாசியில் மொகலாய படை ஒரு நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.


தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இராணியை மட்டும் திரும்பவே இல்லை. 


இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த அரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் திடீரென வெளிப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் அரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.


நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இராணி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க மாமன்னர் ஒளரங்கசீப்பை வேண்டினர். 

மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், #கற்பக்கிரகத்தின்_புனிதம்_அழிந்துவிட்டதாகக்கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டு, கர்பக்கிரக சாமி சிலை இல்லாத #தோஷம்பட்டக்கட்டிடம் (அந்தக்கோயில்) இந்து அரசர்கள் ஆதரவோடு அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மாமன்னர் ஒளரங்கசீப்பின் ஒப்புதலுடன் இடிக்கப்பட்டது.


இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் ஆதாரமாக தரப்பட்டுள்ளது.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மையான வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற பொய்யான வரலாறு வேறு. 


நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?


ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். அப்படியான ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

-----முனைவர் அ. தஸ்தகீர்.

(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)

வரலாற்று ஆதாரம்: 

பிஷம்பர் நாத் பாண்டே,

சரித்திர ஆய்வாளர் மற்றும் முன்னாள் ஒரிசா மாநில கவர்னர்

'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'

Page : 70,71

மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.


P.N.Pande

“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”

P.N.Pande, Islam And Indian Culture, Page 55

இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

Wednesday, December 15, 2021

ஒற்றை பார்ப்பான்

 இந்தியாவில் இருந்த யவான் சாங் தன் புத்தகத்தில், சமணர்களை கொல்ல பாண்டிய மன்னனை வெகுவாக வற்புறுத்திய ஒரு இந்து இராணியை பற்றி தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.


பார்பனர்கள் சமணர்களை அதிகஅளவில் அடையாளம் காட்டி கொன்றதில் இருந்து தான்


“வெளியே செல்லும் போது ஒற்றை பார்பானை பார்த்தல் நல்லதல்ல”


என்ற சகுனம் பார்க்கும் முறையே ஏற்பட்டிருக்கவேண்டும், ஏனெனில் அந்த காலத்தில் ஒரு சமணர் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எதிரில் பார்பானை பார்த்தால் அவன் வீடு திருப்ப முடியாது, பின் தொடர்ந்து வரும் பார்பான் எங்காவது ஒரு வீரனிடம் அவனை சமணன் என்று அடையாளம் காட்டி அவன் கைது செய்யப்பட்டு கழுவில் ஏற்றப்படுவான்,  பின் பார்ப்பானே தன்னை பற்றி கேவலமாக ஒரு பழமொழியை சொல்லிக்கொள்வானா.  



சமணம் பார்த்தல் என்ற வார்த்தையே பிற்காலத்தில் சகுனம் பார்த்தல் என்று மாற்றம் அடைந்திருக்கும், இன்றும் நெல்லை குமரி மாவட்டங்களில் வயதானோர் சமணம் பார்த்தல் என்ற சொல்லாடலை பயன்படுத்துவதை பார்த்துள்ளேன்.



இதே ஞானசம்பந்தன், தன் உடன் மதம் பரப்ப வந்த நாவுக்கரசரை, பார்பனர் அல்ல என்பதால் அவரை தன் பல்லக்கை தூக்கும்படி செய்தது, செல்லும் வழியில் வயாதான முதியவர் நாவுகரசறை காலால் எட்டி உதைத்தது, நாவுக்கரசர் கடைசி காலத்தில் சமண மதம் திரும்பியது போன்ற சம்பவங்களை வேறு ஒரு பதிவில் காண்போம்      



ஆக நரசிம்மபல்லவன்,  சுந்தர பாண்டியனை வாதாபிக்கு சண்டை போட  அழைத்து சென்றிருந்தால், 63 நாயன்மார்களில் மூன்று பேர் குறைந்திருப்பார்கள்