மும்பையில் வசித்த அண்ணல் அம்பேத்கரை சந்திக்க அன்று பெரும் பதவி வகித்த சி.பி.ராமசாமி ஐயர் நேரில் வந்துக்கொண்டிருந்தாக தகவல் வருகிறது, உடனே தன் உதவியாளரை அழைத்து அண்ணல் தான் எப்போதும் வாசித்த பின்பு பழைய தினசரிகளில் கத்தரித்து வைத்த காகிதங்களை ஒரு குறிப்பிட்ட பையில் இருப்பதை உடனே எடுத்து வரச்சொல்கிறார். அது 12 வருடத்திற்கு முந்தைய நாளிதழில் கத்தரித்த துண்டு அது.அதில் இருந்த செய்தி என்னவெனில்,கோயில் நுழைவு போராட்டத்தை எதிர்த்தும்,தீண்டாமையை ஆதரித்தும் அன்றைய காலகட்டத்தில் சி.பி.ராமசாமி ஐயர் பேசிய பேச்சு அது.மேற்கண்ட ஐயர் அண்ணலின் வீட்டுக்கு வந்தவுடன் அவரிடம் அந்த நாளிதழ் கத்தரிப்பை அவரிடமே காட்டி தீண்டாமையை ஆதரிக்கும் உங்களிடம் பேச எனக்கு ஒன்றுமில்லை முகத்திற்கு நேராக கூறி திருப்பி அனுப்பி கடுமையாக பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்த்தவர் வடக்கின் அறிவாசான் புரட்சியாளர் அம்பேத்கர்,
தாழ்த்தப்பட்ட மக்கள் கூலி உயர்வு கேட்ட ஒரே காரணத்திற்காக பலர் உயிரோடு எரிக்கப்பட்ட நிகழ்வான கீழ்வெண்மணிப் படுகொலைகள் நடந்த பின் அதனை முன்னின்று நடத்திய கோபாலகிருஷ்ண நாயுடு பெரியாரை தேடி அவரின் வீட்டுக்கு வந்தபோது அந்த கேடுகெட்ட மனிதனை சந்திக்க மறுத்து உன்னை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என திருப்பி அனுப்பியவர் தெற்கின் அறிவாசான் தந்தை பெரியார்.
இருவரும் எந்தவித தகவல் தொடர்புகள் அற்ற அந்த காலகட்டத்தில் வெகுதூரத்தில் இருந்தாலும் ஒத்த கருத்தோடு ஆதிக்கத்திற்கு எதிராக எந்தவித தயவுமின்றி துரத்தியடித்தது வரலாற்று சிறப்பு மிக்க துணிவான செயல்களே.
இன்று அந்த இருவரையும் தான் பல வழிகளிலும் துண்டாட துடிக்கிறது பார்ப்பனிய சக்திகள்.
No comments:
Post a Comment