Friday, January 05, 2018

இந்த சைக்கிள் புதுசுதாங்கோ...ரொம்ப பழசெல்லாம் இல்லை...



மிழா நம் முன்னோர்களின் விஞ்ஞானம் பார்...வெள்ளைகாரன் சைக்கிள் ஓட்டும் முன்பே அதாவது 1300 வருடத்திறக்கு முன்பே சைக்கிள் ஓட்டினோம் என இந்த அய்யாவின் சைக்கிள் இணையதளங்களில் ரெக்கை கட்டி ஓடி கொண்டு இருக்குறது ..இதுல தமிழா ஷேர் பண்ணு வேற..

உண்மை என்ன ...

இது உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் உள்ள சிற்பம் தான்..

கோவில் பழமையானது தான்...ஆனால் இந்த சிற்பம் புதுசு...

சுவாமி சுயம்பு லிங்கம்..

உதங்க முனிவருக்கு ஈசன் ஐந்து காலங்களில் ஐந்து நிறங்களில் காட்சி நல்கிய தலம்..

உதங்க முனிவர் தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார். உதங்க முனிவர் வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால், அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவி இழந்தமையால் பித்துபிடித்தவரானார். பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வைர லிங்கமாகவும் மற்றும் அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.

உதங்க முனிவருக்கு இறைவன் ஆடிப்பவுர்ணமியில் இந்த ஐந்த வண்ணம் காட்டியதால் இறைவனை ஆடிப்பவுர்ணமியில் தரிசிப்பது சிறப்பாகும்.

கோட்செங்க சோழனின் மாட கோவிலாகும்...

ஐந்து வேளையும் நிறம் மாறகூடியவர் தான்..சம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம்...இத்தனை பெருமைகள் உடைய கோவில்...

ஆனால் நாம் காண்பது சமீபத்திய கட்டுமானம் ..அதாவது சுமார் நூறு ஆண்டுகளுக்குள்ளான கால கட்டத்தை சேர்ந்தது.இத்தகைய திருப்பணி முறைக்கு “நகராத்தார் திருப்பணி” அல்லது “செட்டியார் திருப்பணி” என்று பெயர்.அந்த வகையில் இந்த சைக்கிள் சிற்பம் சமீபத்திய படைப்பு தான்..

இன்னும் உதாரணம் வேண்டுமென்றால் திருவையாறு ஜயாறப்பர் கோயில் அம்பாள் சன்னதி முன் மண்டப தூண்களில் காந்தி, நேரு போன்றவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன....
அப்ப இவங்க வருவாங்க என 1000 வருடங்களுக்கு முன்னாடியே தமிழனுக்கு தெரிஞ்சுடுச்சோ..

ஆக இந்த சைக்கிள் புதுசுதாங்கோ...ரொம்ப பழசெல்லாம் இல்லை...

தமிழா என ஆரம்பித்து தமிழா என முடித்தால் அது எதுவாக இருந்தாலும் உடனே ஷேர் பண்ணிடுவாங்களோ..

No comments: