ரஜினியும் பூர்ணம் விஸ்வனாதனும்
ரஜினியின் இந்த பேட்டியைப் பார்த்து விட்டு அதிர்ச்சி அடைபவர்களைப் பார்த்தால் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இதுதான் ரஜினி ! இந்த வகையான ஆளுமையைத்தானே அவர் இவ்வளவு நாளும் வெளிப்படுத்தி வந்தார் ! இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது ? ரஜினி இப்படித்தான் பேசுவார். “உளறுவார்” என்றுதான் எழுத நினைத்தேன் !
ஆக அதிர்ச்சி அடைபவர்கள் ,அவரிடம் பெரிதாக ஏதோ எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள் போல
ரஜினி என்பவர் உங்கள் அப்பா , என் அப்பா போன்ற ஒரு மிடில் கிளாஸ் மனோபாவம் கொண்ட வயது முதிர்ந்த பெரியவர். லௌகீக வாழ்வின் அனைத்து லக்ஷணங்களையும் ஒருங்கே பெற்றவர்.
மகள்களுக்கு கல்யாணம் கட்டிக்கொடுத்து கண்ணீர் மல்க ஆசி வழங்குபவர். பேரன் மூஞ்சில் மூத்திரம் அடிப்பதை ரசித்து நெகிழ்ந்து மகிழ்பவர்.
பூர்ணம் விஸ்வநாதனைப் பற்றி என்ன நினைப்பீர்கள் ? அவர் இப்படித்தானே பேசுவார்? சினிமாவில் அவரது கதாபாத்திரத்தை வைத்து அந்த முடிவுக்கு வருவோம். நேரில் அவர் எப்படி என்று தெரியாது.பெரிய புரட்சிக்காரராக கூட இருக்கலாம்.
ரஜினி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் , வாழ்வில் அவர் ஒரு சினிமா பூர்ணம் விஸ்வநாதன் தான்.அவர் அதை பலமுறை நிரூபித்து இருக்கிறார். பூர்ணம் விஸ்வநாதனாக இருப்பது கேவலம் ஒன்றும் இல்லைதான்.
இவரைப்போன்றவர்களின் கருத்துக்கள் எப்படி இருக்கும் ?
மிலிட்டிரி ஆட்சி வந்தாதான் நாடு உருப்படும் ….
சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே ! (சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று சொல்வது கூட தனி மனித கருத்து , ஏன் சீறும் பாம்பை நம்ப வேண்டும்
பெரும் பணக்கார்ர்கள் , பண்ணையார்கள் , ஜமீன் தார்கள் எல்லோரும் நல்லவர்கள். ஏழைகள் தான் கிரிமினல்கள்.
பிக் பாக்கெட் அடிப்பவனை தூக்கில் போட வேண்டும், பெண்கள் மூடி மறைத்துக்கொண்டு , ரேப்பிஸ்ட்டுக்கு கற்பழிக்க மூடு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இப்படி வண்டி வண்டியாக போகும் இவர்கள் கருத்துக்கள்.
உயர் ரக குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்து கொண்டு , கார் பார்க்கிங்க் பிரச்சனைக்காக போலீஸ் கமிஷனரை அழைக்கக் கூடிய ஒரு மிடில் க்ளாஸ் சிவில் சொசைட்டி மனோபாவத்தின் பின்னணியில் இருந்து வருபவர்தான் ரஜினி காந்த்.
இதனால் ரஜினி கெட்டவர் கிடையாது. அவருக்கு வாய்த்த்து அதுதான். ஒரு வயதான மிடில் க்ளாஸ் தந்தையின் மனோபாவம் தான் இது. ரஜினி மட்டுமா இப்படி இருக்கிறார் ? தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான வயசாளிகள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
”எதுக்கெடுத்தாலும் போராட்டம் , நாடு எப்படி சார் உருப்படும் ? இவனுங்களை எல்லாம் குருவி சுட்றது மாதிரி சுடணும் சார் “
இதுதான் மிடில் கிளாஸ் குடும்பத்தலைவர்களின் மனோபாவம். இதைத்தான் ரஜினியும் வெளிப்படுத்தினார். என்ன எழவு மற்றவர்கள் எல்லாம் அரசியலுக்கு வராமல் குடும்பத்துக்குள் உளறிக்கொண்டு உள்ளனர். ரஜினி , முதல்வர் ஆகும் ஆசையுடன் பொதுவெளியில் உளறுகிறார்.
எப்படி ரஜினிக்கு இப்படி உளறிக்கொட்டும் துணிச்சல் வந்தது ? ஏன் தமிழக அரசியல் களம் தொடர்ந்து கோமாளிகளையும் , அபத்த நாடகங்களையுமே சந்த்தித்து வருகிறது ?
நாம் தான் காரணம்.
எப்போது கொள்கை , அரசியல் கலாச்சாரம் என அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு ஜனரஞ்சக கவர்ச்சி அரசியலுக்கும் , தனிமனித துதி சார்ந்த , தனிமனித சாகச உணர்வு சார்ந்த அரசியலுக்கு நாம் ஆசை ஆசையாக மாறினோமோ , அப்போதிலிருந்து ஆரம்பித்த்து இந்த வீழ்ச்சி!
அந்த வீழ்ச்சியின் உச்சமாக ஜெயலலிதா அரசைப் பார்த்தோம். அவரது மறைவுக்குப் பிறகு இப்போது நடந்து கொண்டிருக்கும் அபத்த அரசாட்சியைக் கண்டு கொண்டு இருக்கிறோம். இதையும் தாண்டி தூக்கி அடிப்பது போல அடுத்து நாம் காண இருப்பது ரஜினி – கமல் அரசியல்.
ரஜினி அப்போதே அரசியலுக்கு வந்து இருந்தால் , அரசியல் மேடையில் சிகரட்டை தூக்கிப்போட்டு பிடித்து இருப்பார். மக்கள் கை தட்டி ஓட்டு போட்டு இருப்பார்கள். இதுதான் நம்முடைய அரசியல் சுரணை.
மற்ற மாநிலங்களைப் பாருங்கள் , அரசியல் கூத்துக்கள் அங்கும் நடந்தாலும் , அரசியல் கலாச்சாரம் என்பது அங்கே இருக்கும். இதைப்போன்ற வெற்று தனிநபர் சார்ந்த கோமாளிக்கூத்துக்களோ , அதற்கு நாம் கொடுக்கும் அளவுக்கு முக்கியத்துவமோ இருக்காது.
இங்கே பெரும்பாலான தமிழ் ஆண்கள் தனக்கான பர்/ஸ்னாலிட்டி இல்லாத வெற்றுடம்புகள். ஐடெண்டிட்டி இல்லதவர்கள். இவர்களுக்கு எவனையாவது பிடீத்து தொங்கிக்கொண்டு இருக்க வேண்டும். அவனது அடையாளமே இவர்களது அடையாளம். அவனைப்பற்றி ஏதேனும் சொன்னால் “வெறி” வந்து விடும். நண்பனாவது , மனைவியாவது , குதறி விடுவார்கள்.
இந்த சைக்கலாஜிக்கல் பிரச்சனையால்தான் இங்கே மற்ற மாநிலங்களை விட ஹீரோ வொர்ஷிப் அதிகமாக இருக்கிறது. இந்த பின்னணியில் தான் கோமாளிகள் , சைக்கோக்கள் , அரை மெண்டல் எல்லாம் அரசியலுக்கு வரமுடிகிறது, ஆட்சியில் அமரவும் , அதிர்வை உண்டாக்கவும் முடிகிறது.
இவர்களுக்கு சொம்படிக்க , முட்டுக்கொடுக்க என்ற பலரை நேர்ந்து விட்டிருக்கிறார்கள்.
அதாவது ரஜினி நல்லவர்தான். அவருக்கு சொல்லிக்கொடுப்பவர்கள் சரியில்லையாம். இப்படிதான் சசிகலாவை பலிகடாவாக்கி , ஜெயல்லிதாவை புனிதப் படுத்தினார்கள். இப்போது ரஜினிக்கும் அதே ஃபார்முலா !
அதாவது ரஜினி நல்லவர்தான். அவருக்கு சொல்லிக்கொடுப்பவர்கள் சரியில்லையாம். இப்படிதான் சசிகலாவை பலிகடாவாக்கி , ஜெயல்லிதாவை புனிதப் படுத்தினார்கள். இப்போது ரஜினிக்கும் அதே ஃபார்முலா !
இந்த “சொல்லிக்கொடுக்கும் “ முண்டக்கலப்பைகள் யாரு? அதுங்க மொகரைங்களை பார்த்து , அதுங்களோட அறிவு எத்தனை மரக்கான்னு தெரிஞ்சிக்கணும்.
வேற எதெல்லாம் முண்டக்கலப்பைகளா தலைவருக்கு “சொல்லிக்” குடுக்கறீங்க ?இப்ப தலைவரு பெருசா தப்புத் தண்டாவுக்கு போறதில்லை….இல்லைன்னா நினைச்சுப் பார்த்தாலே கொடூரமா இருக்கு !
ஏன் பெருவாரியான மிடில் க்ளாஸ் மனோபாவம் கொண்டவர்கள் , ரஜினி உட்பட போராட்டங்களை வெறுக்கிறார்கள்?
போராட்டங்கள் என்பதை இவர்களுக்கு எதிராக பார்க்கிறார்கள். இவர்களுக்கு ஒரு வீடு , சோறு , கார் , குடி , குட்டி என அனைத்தும் கிடைத்து ஒரு மாதிரி சிஸ்டம் ஒழுங்காக போய்க்கொண்டு இருக்கிறது. இந்த சிஸ்ட்த்தை ஒழுங்காக கொண்டு செல்பவர்கள் போலீஸும் ராணுவமே என்பது இவர்களின் முதல் ஆழ்மன நினைப்பு.
அதனால் தான் போலீஸ் மற்றும் ராணுவத்தின் மேல் கை வைத்தால் இவர்கள் பதறுவார்கள். போலீஸும் இவர்களிடம் மரியாதையாக ஸ்நேகமாக நடந்து கொள்வதை கண்டிருக்கலாம்.
இந்த சுயநலமான ”சிஸ்ட்த்தை கலைத்து” விடப்போகிறார்களே என்பது முதல் பயம்.
அடுத்தது , போராட்ட்த்திற்கு அழைப்பு விடுப்பவர்கள் , தலைமைப் போராளிகள்.
தமிழகத்தின் அடுத்த சீ எம் ரேஸில் ரஜினியும் கமலும் இருந்தால் , போராளி ரேஸில் மட்டும் என்ன சேகுவேராவும் , சுபாஷ் சந்திர போஸுமா இருப்பார்கள் ?
அங்கும் பஃபூன்களுக்கும் கோமாளிகளுக்கும் பலத்த போட்டி !
தலைவர்களுக்கான எந்த தகுதியும் , பின்புலமும் இல்லாமல் , அவர்களும் திடீரென்று பாஸ்ட் ஃபுட் போராளிகள் போல தோன்றி உளறிக்கொட்டி காமடி செய்து கொண்டு இருப்பதால் போராட்ட்த்திற்கான மரியாதையே போய் விட்ட்து.
இவர்களிடமும் எந்த கொள்கை மண்ணாங்கட்டியும் கிடையாது. எதை எடுத்தாலும் எதிர்ப்பார்கள். மாற்று வழியோ , ஆக்கபூர்வமான யோசனைகளோ , பெரும் மக்கள் கூட்ட்த்திற்கான அரசியல் கோஷமோ ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
எல்லா போராளிகள் மெனுவிலும் தமிழ்நாடு இரண்டாம் இடம் தான். ஈழம் தான் முதல் இடம். எங்களை தயவு செஞ்சி விட்டுடுங்கடா என்று ஈழ மக்கள் கெஞ்சி கதறி பார்த்து விட்டார்கள். இவர்கள் விடுவதாக இல்லை. மொத்தமாக ஒழித்து விட்டுத்தான் விடுவார்கள் போல. இது என்ன மாதிரியான காண்டிராக்ட் என்று எனக்கும் புரிபடுவதில்லை.
இதைப்போன்ற கோமாளி போராளித் தலைவர்களினால்தான் போராட்டம் அதற்குண்டான வலிமையையும் , வீரியத்தையும் இழந்த்து.
ெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தது.
ெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தது.
போராட்ட்த்தில் கலந்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல.மற்ற மக்களுக்காகவும் ஒருவன் களத்தில் இறங்கி போராடுகிறன் என்பது எவ்வளவு மகத்தானது ?
ஆனால் இதைப்போன்ற லட்சக்கணக்கான மகத்தான மக்கள் கலந்து கொண்ட போராட்டங்களை வழி நடத்த தெரியாமல் , அந்த மக்கள் போராட்ட்த்தின் வெளிப்பாட்டை , உணர்வுகளை மொத்தமாக திரட்டி அதிகாரத்தின் முன்னால் கொண்டு சென்று உணர்த்தி , அரசியல் பேசி , தீர்வை உருவாக்கும் அளவுக்குத் தலைவர்கள் இல்லை , போராளிகள் இல்லை, அதற்குண்டான திராணியும் போராளித் தலைவர்களுக்கு இல்லை.
மக்கள் ஓட்டு வீணாகிப்போவது போல , மக்களின் போராட்டங்களும் வீணாகிப்போகின்றன.
அதனால்தான் ,தங்கள் வாழ்வைக் காக்க ஜனநாயக ரீதியில் மக்கள் போராடும் போராட்டத்தின் மீதே மிடில் கிளாஸ்களுக்கு வெறுப்பு வருகிறது. அதனால் தான் அரசு தைரியமாக சுடுகிறது. அதனால் தான் ரஜினி தைரியமாக , போராட்டம் போராட்டம்னா நாடு சுடுகாடாய்டும் என்று சொல்கிறார்.
“சமூக விரோதிகள் “ என்று கண்டு பிடித்து ஜாடையாக மக்களைச் சொல்கிறார். அவரைப் பொறுத்தவரை போலீஸ் மீது கல்லெறிந்தவர்கள் சமூக விரோதிகள்.அவர்கள் கல் எறிந்த்தால்தான் போலீஸ் சுட்டார்கள்.
மக்கள் சாவு ரஜினிக்கு அடுத்த பிரச்சனை.. போலிஸ் மீது கல்லடி பட்ட்துதான் ரஜினிக்கு பிராதான பிரச்சனை. ஏனென்றால் அது சிஸ்ட்த்தின் மீது விழுந்த அடி !
ரஜினி மக்களுக்கு முதல்வராக விரும்பவில்லை. இந்த சிஸ்ட்த்தின் உயர்பதவியில் சென்று அமர விரும்புகிறார். இந்த சிஸ்ட்த்தின் முதல்வர் ஆக விரும்புகிறார்.
No comments:
Post a Comment