பிராமணர்கள் மட்டுமே முற்பட்ட பிரிவினர் கிடையாது ப்ரோ..
அது எங்களுக்கும் தெரியும் ப்ரோ, ஆனா, பிராமணர்களுடன், பிற முற்பட்ட சாதிகளை ஒரே பிரிவாக சேர்த்து எத்தனை ஒதுக்கீடு கொடுத்தாலும், அத்தனையும் பிராமணர்களுக்கே செல்லும்.. முற்பட்ட பிரிவிலுள்ள மற்றவர்கள் நாக்கை தான் வழிக்க வேண்டும்..
முற்பட்ட பிரிவிலுள்ள எல்லா வகுப்புகளும் ஒரே சமூக & கல்வி நிலையில் கிடையாது.. பிராமணர்கள், வட மாநில ராஜ்புத் தாகூர் & வைசியர்கள் ஒரு நிலையிலும், விவசாய வேளாண்மை சார்ந்து இருக்கும் சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், வட மாநிலங்களில் இருக்கும் ஜாட், குஜ்ஜர், பூமிஹார், படேல், மராத்தா போன்ற வகுப்புகள் வேறு நிலையிலும் இருகிறார்கள்.
தற்போதைய நிலையில் மத்திய அரசு பணிகள் & கல்வியில் 68% சதவீதத்தை பெற்று ஆதிக்கம் செலுத்துவது பிராமணர்கள், வட மாநில ராஜ்புத் தாகூர் & வைசியர்கள் தான்.. அதே முற்பட்ட பிரிவில் வரும் சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், வட மாநிலங்களில் இருக்கும் ஜாட், குஜ்ஜர், பூமிஹார், படேல், மராத்தா போன்றவர்கள் கல்வி & வேலைகளில் மிக குறைவாக இருகிறார்கள்.. மேலும், இட ஒதுக்கீடு வேண்டும் என பல ஆண்டுகளாக போராடிவருபவர்கள் இவர்கள் தான்.
இவர்கள் அனைவரையும் ஒரே தளத்தில் வைத்து 10% ஒதுக்கீடு கொடுத்தால், அதை அப்படியே பிராமணர்கள், வட மாநில ராஜ்புத் தாகூர் & வைசியர்கள் மட்டுமே எடுத்துக்கொள்வார்கள்.. மக்கள் தொகையில் 15% சதம் இருக்கும் முற்பட்ட பிரிவில், இவர்கள் 5% சதவீதம் தான், மீதம் 10% சதவீதம் இருப்பவர்கள் சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், வட மாநிலங்களில் இருக்கும் ஜாட், குஜ்ஜர், பூமிஹார், படேல், மராத்தா போன்றவர்கள்.. இவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது.
எப்படி முன்னர் தனி MBC பிரிவு இல்லாமல், BC பட்டியல் மட்டும் இருந்தபோது, சில வகுப்பினர்களுக்கு உரிய பங்கு கிடைக்காமல், தனி MBC ஒதுக்கீடு தேவை என போராடினார்களோ, அப்படி முற்பட்ட பிரிவினர்களுக்கு இடையே பிரச்னை வரும்.
No comments:
Post a Comment