Friday, January 11, 2019

அன்புள்ள இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினரும் அமமுக நிறுவனருமான தினகரனுக்கு வணக்கம்!

அன்புள்ள இராதாகிருஷ்ணன் நகர் என்கிற, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும், அமமுக என்கிற கட்சியின் நிறுவனருமான அண்ணண் தினகரனுக்கு வணக்கம்!..

உங்கள் மீது எங்களுக்கு ஓரளவுக்கு மரியாதை இருந்தது!..

ஏன் தெரியுமா?!..

எடப்பாடி மற்றும் பன்னீர் போன்ற அடிமைகளை எதிர்த்து இயக்கம் கண்டது. மேலும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதம், பேட்டி கொடுக்கும் விதம், பேசும் விதம், என கண்களுக்கு வித்தியாசமாகவே தெரிந்தீர்கள்!..

இப்போது நிலைமையே வேறு!..

எங்கள் உயிருக்கு நிகரான என் தலைவனை நீங்கள் விமர்சித்த விதம் எங்களை கோபத்தின் உச்சாணி கொம்பில் ஏற்றிவிட்டது!..

நீங்கள் பேசியது முறையா?!..

1949 ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திமுக எனும் மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டபோது கார் வைத்திருந்தவர் எங்கள் தலைவர்!..

நெடுஞ்செழியன் தெரியுமா? சின்னப்பையன் சார் நீங்க,
சரி கேளுங்க!..

நெடுஞ்செழியன் வீட்டு திருமணத்திற்கு அண்ணா தலைமை. நேரம் ஆகிக்கொண்டே போகிறது. கொஞ்ச நேரத்தில் அண்ணா வருகிறார். நெடுஞ்செழியன் கேட்கிறார் என்ன தாமதமாக வந்துள்ளீர்கள் என்றவுடன்,,,

ஏம்ப்பா நம்ம இயக்கத்தில் கார் வைத்துள்ளவர் தம்பி கருனாநிதிதானே. அவர் வருவதற்கு தாமதமாகிவிட்டது என்று பேரறிஞர் அண்ணா சொன்னது இன்றும் வரலாறு. அதற்கப்புறம் நடந்த கதையெல்லாம் வரலாறு!..

சரி மேட்டருக்குள் போவோம்!..

சரி சார்! நீங்கள் போடுகின்ற சட்டைகளின் காலர் யாரை பார்த்து தைக்க ஆரம்பித்தீர்கள்? ஏனென்றால் எங்கள் தளபதி 89ஆம் ஆண்டே அப்படியான சட்டைகளை போட்டவர். இன்றும் போடுகிறார்!..

89இல் நீங்கள் எங்கு இருந்தீர்கள்?
சொல்ல முடியுமா?
நல்ல சட்டை உண்டா?
நல்ல உணவு உண்டா?
நல்ல வீடு உண்டா?
நல்ல சைக்கிள் இருந்ததா? இல்லை, நீங்கள் என்ன மைசூர் மகாராஜா குடும்பமா?!..

சரி! அடிக்கடி சிறைக்கு போனேன் என்கீர்களே?!..

மிசா கைதியாகாவா?
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகினீர்களா?
சட்ட எரிப்பு போராட்டத்தில் கைதாகினீர்களா?
ஈழ ஆதரவு போராட்டத்தில் கைதாகினீர்களா?
ரயில் மறியல் போராட்டத்தில் கைதாகினீர்களா?
சாலை மறியல் போராட்டத்தில் கைதாகினீர்களா?
அரசுக்கு எதிரான போராட்டத்தில் கைதாகினீர்களா?
மத்திய மாநில அரசு அலுவலக முற்றுகை போராட்டத்தில் கைதாகினீர்களா?..

உங்களால் சொல்ல முடியுமா?!..

வாருங்கள்! உங்க முதல் சிறைவாழ்க்கை பற்றி தெரிந்து கொள்வோம்!..

தன்னை படு கேவலமாக தொடர்ந்து சித்தரித்து கொண்டிருந்த #சன் டிவியால் பெரும் பாதிப்புக்குள்ளான  ஜெயலலிதா உங்களிடம் நாமமும் ஒரு டிவி தொடங்க வேண்டும் என்ற விருப்பத்தை சொல்ல, உடனே ஜெஜெ டிவி ஆரம்பிக்க பட்டது!..

உண்மையா?!.. இல்லையா?!..

ஜெஜெ டிவிக்காக வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்ட மின்னனு சாதனங்களில் வரி ஏய்ப்பு செய்ததை கண்டுபிடித்து எப்படி போர்பேர்ஸ் ஊழலில் சோனியா காந்தியை பணிய வைத்தாரோ அதே போல்
ஜெயலலிதாவை பணிய வைக்க  நரசிம்மராவினால் போடப்பட்ட வழக்கு தான் #பெரா கேஸ்!..
உண்மையா?!.. இல்லையா?!..

சரிங்க இந்த நரசிம்மராவ் பையன் வந்து நக்மா கூட இருட்டறையில் முரட்டு குத்து குத்தும் போது ரூமுக்கு வெளியே நின்றீர்களா? அல்லது விளக்கு பிடித்தீர்களா?

அரசிலுக்கு வருவதுக்கு முன்பே இந்த பெராவினால் ஜெயலலிதாவுக்காக சுமார் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்தார் நீங்கள்!..

உண்மையா?!.. இல்லையா?!..

ஊரை அடித்து உலையில் போட்டு கைதாகிவிட்டு சிறையில் இருந்ததை பெருமையாக பேசும் போது வெட்கமாக இல்லையா?!..
சரி! உங்களுக்கு தோல் தடிமனாக இருக்கும் போல!..

வாருங்களேன் மஞ்சப்பை கதைக்கு போவோம்!..

எங்கள் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால்,,,
தன் மூளையை திருவாரூரில் அழுக்கு தேய்த்து குளிக்கும் குளமான கமலாலயத்தில் தூக்கி போட்டுவிட்டா வந்தார்?!..

நீங்கள் சொல்ல மறந்தது,,,

அந்த மஞ்சள் பையில் ஒரு பேனாவும், அப்பேனாவில் முழுவதுமாக நிரப்பப்பட்ட  இங்க் மற்றும் புரட்சிகர கருத்துக்களும், நிறைய கைப்பட எழுதிய கதைகளும்  இருந்தது என சொல்லியிருக்கலாம்!.. நமக்கெல்லாம் இல்லாத மூளையும் அவருடன் வந்தது என சொல்லியிருக்கலாம்!..

சரி அவராவது மஞ்சள் பை எடுத்துவந்தார் அவர் கையால் மஞ்சள் தாலி கட்டிக்கொண்ட உங்கள் குடும்பம் எந்த கலர் பை கொண்டுவந்தது?!..

வாய்மை விரும்பி நாஞ்சில் சம்பத் அவர்களின் உருட்டுப் புரட்டு வசனங்களில் பேசியதையும், கண்ணதாசன் தன்னால் முடியவில்லையே என்ற பொறாமை எண்ணத்தோடு எழுதிய வனவாச புத்தகத்தை படித்தும்,  ஒற்றை கண் பெங்களூர் புகழேந்தியின் அறிவுரையை ஏற்று நடக்கும் நீங்கள் சொல்லுங்கள்!..

ஜாஸ் சினிமாஸ்,
பீனிக்ஸ் மால் தியேட்டர்கள் இது எல்லாம் யாருடையது சார்?!..

இந்த லட்சணத்தில் ஊடகங்களில் அறிவுஜீவிகள், சமூக அக்கறையுள்ள ஊடக நெறியாளர்களின் விவாதங்களாய் உங்களை பற்றி பேசுகின்றனர் எவ்வளவு கொடுத்தீர்கள்?!..

வாருங்கள் தினகரன் சார்! உங்கள் ஊழல்கள் பற்றி உலாவருவோம்!..

நீங்கள் ஊழல் சேற்றில் ஊறியவர்தான் என்பதை பட்டியல் சொல்வதை பார்ப்போம்!..

ஒரு காலகட்டத்தில் நீங்கள் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தீர்கள். நீங்கள் செய்த முறைவாசல் வேலைக்கு சன்மானமாக மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், அதிமுக பொருளாளர் என ஏராளமான பதவிகளை ஜெயலலிதா வாரி வழங்கினார்!..

ஜெயலலிதா முறைகேடான வழிகளில் குவித்த சொத்துக்களை வெளிநாடுகளில் முதலீடு செய்வதுதான் உங்களின் முதன்மைப் பணியாக இருந்தது!..

1991 & 96 ஆட்சிக்காலத்தில் 62,61,313 அமெரிக்க டாலரை (ரூ.40 கோடி) இங்கிலாந்தின் விர்ஜின் தீவுகளில் உள்ள டிப்பர் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் பெயரில் இங்கிலாந்தின் சட்டன் நகரில் உள்ள பார்க்லேய்ஸ் வங்கியில் முதலீடு செய்தது தொடர்பான வழக்கில் உங்களுக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது!..

உண்மையா?!.. இல்லையா?!..

இந்த வழக்கில் நீங்கள் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அன்னிய செலாவணி மேல்முறையீடு வாரியம் அபராதத்தை ரூ.28 கோடியாக குறைத்தது. அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் மேல்முறையீடு செய்தீர்கள் . உங்கள் வீரதீர செயலை எண்ணி அபராதம் ரூ.25 கோடியாக குறைக்கப்பட்டது. அந்த அபராதத்தை நீங்கள்  இதுவரை செலுத்தாமல் தாமதித்து வருகிறீர்கள்!

உண்மையா?!.. இல்லையா?..

பார்க்ளேய்ஸ் வங்கியில் டிப்பர் இன்வெஸ்மென்ட் நிறுவனத்தின் கணக்கில் 1,04,93,313 அமெரிக்க டாலரை (ரூ.67 கோடி) முதலீடு செய்தது தொடர்பான வழக்கு 21 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் பொருளாதார விவகாரங்களுக்கான நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது!

உண்மையா?!.. இல்லையா?!..

இந்த வழக்கில உங்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், சாட்சிகள் விசாரணை முடிந்து ஓரிரு மாதங்களில் தீர்ப்பளிக்கப்படவுள்ளது. ஆனால், இந்த வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காக இதில் சம்பந்தப்பட்ட 17 சாட்சிகளை மீண்டும் குறுக்குவிசாரணை செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நீங்கள் மாறி மாறி மேல்முறையீடு செய்து வருகிறீர்கள்!

உண்மையா?!.. இல்லையா?!..

இந்த வழக்கில் உங்களுக்கு 2 ஆண்டுகளோ அல்லது அதற்கும் கூடுதலாகவோ சிறைத்தண்டனை
கிடைக்க வாய்ப்பு இருக்கிறது!

உண்மையா?!.. இல்லையா?!..

வாருங்கள்! உங்கள் ஊழல் குடும்பம் பற்றி அலசுவோம்!..

ஜெயலலிதாவின் 5 ஆண்டு பதவிக்காலத்தில் செய்த ஊழல் பணத்திலிருந்து சுமார் ரூ.107 கோடியை நீங்கள்  வெளிநாடுகளில் முதலீடு செய்ததாக ஆதாரங்களோடு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படியானால், அந்த 5 ஆண்டுகளில் நீங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்த ஒட்டுமொத்த தொகையின் மதிப்பு எவ்வளவு?..

அடுத்தடுத்த ஆட்சிக்காலங்களில் நீங்கள் முதலீடு செய்த தொகை எவ்வளவு? என்பதையெல்லாம் யூகித்துப்பார்த்தால் நீங்கள் எந்த அளவுக்கு காந்தியவாதி என்பது தெரிகிறது!..

நீங்கள் மட்டுமின்றி, உங்கள்  குடும்பத்தினர் பலரும் ஊழலுக்காக தண்டிக்கப்பட்டவர்கள்தானே?..

வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்!..

உண்மையா?!.. இல்லையா?!..

வருவாய்க்கு மீறிய வகையில் சுமார் ரூ.4 கோடி சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் உங்கள் சகோதரி ஸ்ரீதளா தேவியும், அவரது சகோதரர் ரிசர்வ் வங்கி பாஸ்கரனும் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.20 லட்சம் அபராதமும், ஸ்ரீதளா தேவிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் அண்மையில் உறுதி செய்தது!..

உண்மையா?!.. இல்லையா?!..

வாருங்கள்! முள்ளிவாய்க்கால் குட்டி சுவர் நடராஜனுக்கு தண்டனை பார்ப்போம்!..

வெளிநாட்டில் இருந்து லக்சஸ் கார் இறக்குமதி செய்ததில் ரூ.1.62 கோடி வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான வழக்கில் உங்கள் சித்தி சசிகலாவின் கணவர் நடராஜன், உங்கள் சகோதரர் பாஸ்கரன் உள்ளிட்ட நால்வருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது!..

உண்மையா?!.. இல்லையா?!..

சிறுதாவூர் பங்களாவுக்காக 2 ஏக்கர் இடத்தை மிரட்டலுக்குப் பணிந்து பறிகொடுத்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்குத் தெரியாமலேயே பத்திரம் மாற்றிப் பதியப்பட்டுள்ளது!..

உண்மையா?!.. இல்லையா?!..

தஞ்சாவூரில் தனது 10 ஏக்கர் நிலத்தை உங்க சித்தியின் அண்ணணிடம் ஒருவர் இழந்தார். அந்த நிலத்தின் உரிமையாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கே 2 ஆண்டுகள் போராடி மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் என்று பலரை சந்தித்தும் பலன் இல்லாது போகவே உயரநீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்து ஆணை வாங்கிய பின்னரே முதல் தகவல் அறிக்கை பதியப் பட்டது. வழக்கு இன்னும் இழுவையில் உள்ளது!..

உண்மையா?!.. இல்லையா?!..

இப்படி,
ஊழலில் பிறந்து,
ஊழலில் வளர்ந்து,
ஊழலில் திளைத்த குடும்பம் உங்கள் குடும்பம்!..

அதிமுக என்ற ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக ஜெயலலிதா இருக்க அந்த சாம்ராஜ்ஜியத்தை ஆட்டிப்படைத்தவர்கள் சசிகலாவும், நீங்களும்தானே!..

எந்த வித சுயகூச்சமும் இன்றி  எப்படி எங்கள் தலைவரை குற்றம் சொன்னீர்கள்?!..

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நீங்கள் எப்படி எங்கள் தலைவர் மீது குற்றம் சொன்னீர்கள்?!..

வாங்க திருப்பி தலைவர் கலைஞர் கதைக்கு போவோம்!..

1944ல் தன் இருபதாவது வயதில் ஜூபிடர் பிக்சர்ஸ்ல் கதாசிரியராக வேலைக்கு சேர்ந்து விட்டார்!
1957ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவி.  ஒருவர் அரசாங்க உத்யோகத்தில் சேர்த்தால் அதிக பட்சமாக 42 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம்!..

1957ல் அரசாங்க சம்பளம் வாங்க ஆரம்பித்த இவர் தன்  இறுதிக்காலம் வரை கிட்ட தட்ட அரை  நூற்றாண்டுகள் கடந்தும் 60 வருடங்களாக அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டுள்ளார்.
இதில் ஐந்து முறை முதல்வராக சட்டமன்ற சம்பளத்தில் அதிகப்படியான சம்பளம் வாங்கியுள்ளார்!..

இவர் வாங்கும் அரசாங்க சம்பளம் என்பது இன்று ஐடி துறையில் பணி செய்வோர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம். ஒரு வருடத்தில் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களே உடனே ஒரு கார், சொந்தவீடு என சுபிட்சமாக இருக்கும் போது 56 வருடங்கள் அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டு இருக்கும் இவர் கோடீஸ்வரனாக இருக்க கூடாதா என்ன?!..

சரி போகட்டும்!..
உங்களுக்குதான் அறிவே இல்லையே,,,

நாம இப்படிக்கா போவோம்,,,

அரசாங்க உத்யோகம் இவருக்கு கைகூடும் முன்னர் என்ன செய்தாரெனில் தன் 20வது வயதில் திரைத்துறைக்கு வந்து தன் 24வது வயதில் ராஜகுமாரி என்னும் படத்துக்கே வசனம் எழுத ஆரம்பித்து விட்டார். அது தான் உங்கள் தொப்பிக்கு முதல் படம்!..

தன் 28வது வயதில் இவர் எழுதிய பராசக்தி படம் திரையுலகில் ஒரு திருப்புமுனை படம். அந்த படத்தின் சம்பளம் எல்லாம் வாங்கி எல்லாம் முடிந்த பின்னர் அதன் வசனங்களை மட்டும் சிறிய புத்தகமாக போட்டு விற்பனை செய்யலாம் என ஏ வி எம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்தார்!..

அதற்கு அந்த மஞ்சள் பையுடன் பேசி அனுமதி கேட்டபோது அதற்காக கேட்ட தொகை பத்தாயிரம் ரூபாய். அப்போது ஒரு சவரன் 20 ரூபாய்!..

இப்பபொழுது சொல்! மஞ்சள்பை உழைச்சு சம்பாரிச்சதா இல்லையா?!..

அப்போது ப்யூக் கார் விலையே 7000 ரூபாய் மட்டுமே. அப்போதே கார் வாங்கி விட்டார்.
எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோர் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருந்த போதே அவ்வளவு சம்பளம் வாங்கியது இல்லை!..

1957ல் சட்டமன்ற உறுப்பினர் ஆகும் முன்னரே 30000 (முப்பதாயிரம் ரூபாய்)க்கு தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார்!..

இவர் திரைத்துறையில் சம்பாதிக்க பணம் எடுத்துக்கொண்டு  திருவாரூரில் இருந்து வரவேண்டும் என்பதில்லையே?!..

தலைவர் கலைஞர் திரைத்துறையில் பணியாற்றினார் என்று மட்டுமே தெரிந்த நமக்கு
அவர் எத்தனை திரைப்படங்களில்  நடித்துள்ளார் என்னும் விபரத்தை சௌம்யா தியேட்டர்ஸ் உரிமையாளரும், வசனகர்த்தா, பாடலாசிரியர், சினிமா தயாரிப்பாளர், நாடக நடிகர், பத்திரிக்கையாளர் என பன்முக திறமையாளர் அய்யா திரு. டி. வி. ராதாகிருஷ்ணன் 8 பாகங்களாக தன் வலைப்பூவில் எழுதி அதை, "அகநாழிகை" பதிப்பகத்தால் புத்தகமாக தலைவர் கலைஞரின் 87ஆம் அகவையில் வெளியிடப்பட்டு, செம்மொழி மாநாட்டில் அகநாழிகை பதிப்பகத்தாரால் பலருக்கு இலவசமாக வழங்கப்பட்டது!..

நீங்கள் ஆர்.கே.நகரில் 20ரூபாய் டோக்கன் கொடுத்து ஒட்டு வாங்கியது போல் வாங்காமல் 
உண்மையான 20 ரூபாய் கொடுத்து புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளவும்!..

கிடைக்குமிடம்,,,
"அகநாழிகை பதிப்ப்கம்",
33, மண்டபம் தெரு,
மதுராந்தகம்,
பின்: 603 306 ,
போன்: 999 4541010...

இனி இது போல் எங்கும் பேசி உங்கள் மரியாதையை குறைத்து கொள்ளாதீர்கள்!..

உங்களுக்கு எங்கும் மரியாதை இல்லை எனபது தெரியும் இருந்தாலும் நீங்களும் மனிதன்தானே!..

ஜெயலலிதா போல் நாயே  என்று சொல்ல மாட்டோம்!..

காரணம் நாங்கள் நல்ல ஆசானிடம் பாடம் பயின்ற மாணவர்கள்!..

உங்க நல்லநேரம் ஒருத்தர் திமுகவில் இல்லை, இருந்திருந்தால் இந்நேரம் வாயில் ரத்தம் வந்திருக்கும்!..

No comments: