உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டா? எழுபது எண்பதுகளில் நாமெல்லாம் ஒரு பூச்சி
புழுக்களை போல பயந்து பதுங்கி இருந்தோம் .. வவுனியா தாண்டி விட்டால்
ரெயிலில் எல்லாம் தமிழ் பத்திரிகைகளை படிக்க மாட்டோம் அப்புறம் வருடா
வருடம் அடி .. அது பூதாகரமாகி பேயடி பிசாசடி .. உலகத்தில் எந்த
நாட்டுக்கும் இது ஒரு பெரிய பிரச்சனையாக தெரியவில்லை . ஒரு சின்னஞ்சிறு
நாட்டின் உள்நாட்டு குழப்பம் என்ற அளவில் மட்டுமே இது பார்க்கப்பட்டது!..
அடுத்த அடி எப்போது எங்கிருந்து என்று நடுங்கி கொண்டிருந்ததோம் . அந்த
காரிருள் நாட்களில் ஒரு வெளிச்சமும் எமக்கு தெரியவில்லை .. எந்த திசையில்
இருந்தும் அபய அளிக்கும் குரல் கேட்கவில்லை .. அந்த நீண்ட நெடிய இரவை
கிழித்து கொண்டு ஒரு செய்தி வந்தது பிபிசி மூலம் கேட்டது . தமிழ்நாட்டில்
கலவரம் ..ஆர்ப்பாட்டம் ... கருணாநிதி ஆர்ப்பாட்டம் ..கருணாநிதி கோரிக்கை
மத்தியரசு செவி சாய்க்கவேண்டும .. கருணாநிதி உண்ணாவிரதம் .கருணாநிதி மனித
சங்கிலி .. கருணாநிதி சாலை மறியல் .. கருணாநிதி ரெயில் மறியல் ... எங்கள்
ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொருவர் வாயிலும் ஒரு மந்திர சொல் போல
உச்சரிக்கப்பட்ட அந்த வார்த்தை கருணாநிதி . அதுவரை எந்தவித நிதானமும்
இன்றி சிங்களதேசம் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் கருணாநிதி என்ற
சொல்லுக்கு செவி சாய்த்து பதிலளித்தார் இந்திரா காந்தி அம்மையார் ..
நரசிம்ம ராவை அனுப்பினர் . நரசிம்ம ராவ் கட்டுநாயக விமான நிலையத்தில் வந்து
இறங்கினார் ,, முதல் முதலாக ஸ்ரீ லங்கா அறிந்து கொண்டது இனி தமிழர்களை
தாக்க முடியாது ,, பக்கத்தே இருப்பது தமிழ்நாடு .. அங்கே இருக்கிறார்
கருணாநிதி ! அன்றில் இருந்து கருணாநிதி என்ற சொல் முழு சிங்கள
தேசத்திற்கும் கெட்ட சொல்லானது . அது முதல் நாங்கள் அதிகம் கேட்ட
வார்த்தை அந்த அந்த கெட்ட வார்த்தை .. கருணாநிதி!
No comments:
Post a Comment