Wednesday, January 09, 2019

உயர் ஜாதியில் ஏழைகளுக்காகப் பொங்குபவர்களே!

உயர் ஜாதியில் ஏழைகளுக்காகப் பொங்குபவர்களே!
உயர்ஜாதியினரை யாராவது படிக்கக்கூடாது என்று சொன்னார்களா?
எங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.
நீங்கள் படித்தால் நாக்கை அறு என்று சொன்னார்களா?
எங்களைச் சொன்னார்கள்.
நீங்கள் படிப்பதைக் காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொல்லி இருக்கிறார்களா? எங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.
படிப்பதை நெஞ்சில் தேக்கி வைத்திருந்தால் நெஞசைப்பிள என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களுக்கு யாராவது கல்வி கற்றுத் தர மாட்டோம் என்று சொன்னார்களா?
எங்களுக்குச் சொன்னார்கள்.
உங்களைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுத்தார்களா? எங்களுக்கு மறுத்தார்கள்.
உங்களைப் பள்ளி இருக்கும் தெருவில் நடக்க அனுமதி மறுத்தார்களா? எங்களுக்கு மறுத்தார்கள்.
உங்களுக்குப் படிப்பு வராது என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
நீங்கள் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களைத் தொட்டால் தீட்டு என்று யாராவது சொன்னார்களா?
எங்களைச் சொன்னார்கள். உங்களைப் பார்த்தால் பாவம் என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களை வீதியில் நடக்கக் கூடாது என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களைக் காலில் செருப்புப் போடக் கூடாது என்று சென்னார்களா?
எங்களைச் சொன்னார்கள்.
உங்களை உயர் கல்வி கற்க அனுமதி மறுத்தார்களா? எங்களுக்கு மறுத்தார்கள்.
உங்களுக்கு தகுதி திறமை இல்லை என்று சொன்னார்களா? எங்களைச் சொன்னார்கள்.
உங்களைப் பள்ளியில் தனி இடத்தில் அமர வைத்தார்களா? எங்களை அமர வைத்தார்கள்.
உங்களுக்கு தாகத்திற்குத் தண்ணீர் தர மறுத்தார்களா? எங்களுக்கு மறுத்தார்கள்.
நீங்கள் சொத்து வைத்துக் கொள்ள வேண்டாம் என்று யாராவது சொன்னார்களா? எங்களுக்குச் சொன்னார்கள்.
நீங்கள் சொத்து வைத்திருந்தால் யாராவது பறித்துக் கொண்டார்களா? எங்கள் சொத்தைப் பறித்துக் கொண்டார்கள்.
உங்களிடம் கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்று சொன்னார்களா?
எங்களுக்குச் சொன்னார்கள்.
அப்படி இருக்க எங்களுக்குக் கொடுக்கும் இட ஒதுக்கீட்டை உங்களுக்கும் கேட்கிறீர்கள்?
கொஞ்சமாவது உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? சிந்தித்துப் பாருங்கள்.
எதற்காக உங்களுக்கு இட ஒதுக்கீடு?
பெல் ம.ஆறுமுகம்

No comments: