Friday, January 11, 2019

எம்ஜிஆர் வழியில் தம்பிதுரை கலைஞர் வழியில் கனிமொழி தினமலரே வரலாற்றை திரிக்காதே!

எம்ஜிஆர் வழியில் தம்பிதுரை
கலைஞர் வழியில் கனிமொழி
தினமலரே வரலாற்றை திரிக்காதே!



பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 1979 வரை 31% இருந்தது.
திடீரென அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் தவறாக ஆலோசனைகளால் வழிநடத்தப்பட்டு ஆண்டுக்கு 9000 ரூபாய் வருமானம் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு இனி இட ஒதுக்கீடு கிடையாது என்று அறிவித்தார்.

02.07.1979 அன்று 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை தமிழக அரசு பிறப்பித்தது. சமூகநீதியான இடஒதுக்கீட்டில் தேவையின்றி பொருளாதார அளவுகோலை கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர்.

திராவிடர்கழகம் 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை நாடு முழுவதும் கொளுத்தியது.
சின்னஞ்சிறுவனாக அறியாப்பருவத்தில் அரசாணை எரிப்பு போராட்டத்தில் எனது தந்தையுடன் கலந்து கொண்டது என் நினைவுகளில் நிலழாடுகிறது.

அனைத்து கட்சிகளும் போராடிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் 1980 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.
எவராலும் வெல்லமுடியாதவர் என்று வர்ணிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். இரண்டு இடங்களை மட்டும் பெற்று படுதோல்வியை சந்தித்தார்.

அதிர்ச்சியடைந்த எம்.ஜி.ஆர் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தார்.
இது நீதிக்கட்சி காலத்திலிருந்து சமூகநீதி செழித்து வளர்ந்த பெரியார் மண் என்ற உண்மையை உணர்ந்தார்!

உடனடியாக 24.01.1980அன்று
9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை ரத்து செய்தார்.
ரத்து செய்ததோடு நிறுத்தியிருந்தால் உத்தரவை ரத்து செய்த முதல்வராக மட்டுமே இருந்திருப்பார்.

ஆனால் தான் உணர்ந்த உண்மையை செயல்படுத்தினார்...
பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடாக இருந்த இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தி வரலாற்றை படைத்தார்.

அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த
டாக்டர் கலைஞர் 1989ல்
மிக பிற்படுத்தப்பட்டோருக்கு அதில் 20 விழுக்காடு பிரித்துக் கொடுத்தார்.

இவர்களது இந்த அரிய முயற்சியினால்தான் இன்று நம் பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று உயர்நிலைக்கு வரத் துவங்கியிருக்கிறார்கள்.
ஆனால் பார்ப்பன தினமலர் பத்திரிக்கை எம்ஜிஆருக்கு விரோதமாக தம்பிதுரையும், கலைஞருக்கு விரோதமாக கனிமொழியும் செயல்படுவதாக அப்பாவி மக்களையும், அறியாத் தொண்டர்களையும் குழப்பி வரலாற்றை திரிக்கிறது.

தினமலர் கும்பல் யாரை நோக்கி நஞ்சை கக்கினாலும் அவர்கள் நமக்கானவர்கள் என்ற புரிதல் நம்மவர்களுக்கு வரவேண்டும்.

எம்ஜிஆர் வழி நின்று தம்பிதுரையும்,
கலைஞர் வழி நின்று கனிமொழியும் பொருளாதார அளவுகோலை முறியடிக்க குரல் கொடுக்கிறார்கள்!
அதிமுகவின் தம்பிதுரை அவர்களையும், திமுகவின் கனிமொழி அவர்களையும் கட்சி பேதமின்றி ஆதரித்து நிற்பது நமது கடமை என்பதை உணரவேண்டும்.

No comments: